GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 17 அக்டோபர், 2015

அரசு பள்ளிகளில், மனித உரிமை மன்றத்திற்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

தர்மபுரி அரசு பள்ளிகளில், மனித உரிமை மன்றத்திற்கான ஒரு நாள் பயிற்சி முகாம், நேற்று நடந்தது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும், கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை சார்பாக, மனித உரிமை குறித்து பயிற்சி அளிக்க,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருங்கால துாண்களான மாணவ, மாணவிகள் மூலம், மனித உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் ஜாதி, மத வேறுபாடு தடுப்பது, குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள், பெண் சிசு கொலை தடுப்பு, இவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். 
குழந்தை திருமணம், சிசு கொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில், மனித உரிமை மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பென்னாகரம் தாலுகாவை சேர்ந்த இளைஞர்கள், தங்களது பள்ளிகளுக்கு உட்பட்ட பகுதி மற்றும் தங்களது கிராமத்திற்கு உட்பட பகுதிகளில், மனித உரிமை மீறல்கள், புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் குறித்து, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.