GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 30 ஆகஸ்ட், 2014

வாழ்க ஜனநாயகம் - ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்குடெட்எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள் ளது.

கல்விக் கடன் வட்டியின்றி வழங்கப்படும்போதுதான், உயர் கல்வியில் அனைத்து சமூகத்தினரும் சமவாய்ப்புப் பெற முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

கல்விக் கடன் வட்டியின்றி வழங்கப்படும்போதுதான், உயர் கல்வியில் அனைத்து சமூகத்தினரும் சமவாய்ப்புப் பெற முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

மானுட மகிழ்ச்சிக்கு பயன்படுவதே உண்மையான கல்வி என அண்ணா மேலாண்மை மைய இயக்குநர் வெ.இறையன்பு கூறினார்.

மானுட மகிழ்ச்சிக்கு பயன்படுவதே உண்மையான கல்வி என அண்ணா மேலாண்மை மைய இயக்குநர் வெ.இறையன்பு கூறினார்.
 அவர் ஆற்றிய சிறப்புரை: பள்ளிகளில் பாடங்களைவிட மகிழ்வாக இருப்பதற்கு கற்றுத்தருவதே முக்கியம். நாம் எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நாம் கற்ற கல்வியாலும், பெற்ற செல்வத்தாலும் பயனேதுமில்லை.
மகிழ்வாக இருப்பதால் என்ன பயன் எனக்கேட்கலாம். மகிழ்வாக இருந்தால் மதிப்பெண் முதல் அனைத்தும் நம்மைத் தேடிவரும். படிக்கும் பள்ளியின் பெருமையை நினைத்து மாணவர்கள் தினமும் மகிழ்வுடன் வந்தால் படிக்கும் பாடமும் மனதில் தங்கும்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசளிக்கும் போது எழும் கைதட்டல்களை விட விளையாட்டில் பரிசு பெற்றவரை சிறப்பிக்கும்போது எழும் கைதட்டல்கள் அதிகமாக இருக்கும். கல்வியில் சிறந்தவர் தனக்காக படித்துள்ளார். விளையாட்டில் சிறந்தவர் பள்ளிக்காக விளையாடியுள்ளார். ஆகவே பொதுநலன் சார்ந்து செயல்படுவோர் என்றும் சிறப்படைவர். அவர்கள் தங்கள் செயல் மூலம் தானும் மகிழ்ந்து, தன்னைச் சார்ந்தோரையும் மகிழ்விப்பர்.
மகிழ்வின் வழியைக் கற்றுத்தருவதே சிறந்த கல்வி. ஆகவே மானுடம் மகிழ மாணவர்கள் பாடுபடவேண்டும்.
கற்ற கல்வியை மானுடம் மகிழ பயன்படுத்தவேண்டும். நாம் செய்யும் செயல்களை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்துச் செயல்பட்டால் அவை நம்மில் எளிதில் தங்கிவிடும். கற்கும் கல்வியைக் கூட வாழ்வோடு இணைப்பது எளிதில் மனப்பாடம் செய்ய உதவும் என்றார்.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

விநாயகர் சதுர்த்தி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

அனைவருக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டட்டும் என்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

புதன், 27 ஆகஸ்ட், 2014

ஆர்வமும், முயற்சியுமே வெற்றிக்கு அடிப்படை

ஆர்வமும், முயற்சியுமே வெற்றிக்கு அடிப்படை என இளம் வயதில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது பெற்ற சென்னை புட் கிங் கேட்டரிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.சரத்பாபு கூறினார்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

‘டிஜிட்டல் வழிக் கல்வி தான் எதிர்காலம்’- பிரதீக் மேத்தா, இயக்குனர் (கல்விப் பிரிவு), மைக்ரோசாப்ட் இந்தியா.

எதிர்காலத்தில் பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, பாடங்கள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தான் வழங்கப்படும் என்று பலரும் நம்புகின்றனர். அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேசமயம், அதில் சில சவால்களும் உள்ளன.

நல்ல சமுதாயம் உருவாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கங்களையும் போதிப்பது அவசியம்

நல்ல சமுதாயம் உருவாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கங்களையும் போதிப்பது அவசியம் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வலியுறுத்தினார்.பிள்ளைகளைப் பெற்றோர்கள் படிக்க வைத்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். பல்வேறு காரணங்களால் இளைய சமுதாயத்தினரின் கவனம் சிதறி இறுதியில் அவர்கள் ஒழுக்கமற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவற்றைப் போக்கி மாணவர்களை நற்குணங்கள் நிறைந்தவர்களாக உருவாக்க பள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.சிந்தனைத் திறனையும், நற்பண்புகளையும் வளர்த்து ஒவ்வொருவரையும் சொந்தக் காலில் நிற்கவைப்பதாக கல்வி இருக்க வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். இதைச் செயல்படுத்த பள்ளிகள் கல்வியை மட்டுமன்றி நல்லொழுக்கங்களையும் போதிக்க வேண்டும் என்றார் .

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும் என்று தமிழக அரசின் சிறுபான்மையினர் நல ஆணையர் அ.முகமதுஅஸ்லம் கூறினார்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

டி.இ.இ.ஓ பயிற்சி முடித்தும் பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி

மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், டி.இ.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட 'மாவட்ட கல்வி அலுவலர்' அந்தஸ்தில், மாநில அளவில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சங்ககிரி அருகேயுள்ள வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமிஅண்ணாதுரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கிப்பாராட்டு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள வடுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!


மன இறுக்கத்தைத் தளர்த்த 10 எளிய வழிகள்!
1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்
கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லைசத்தானஇயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறதுபதப்படுத்தப்பட்டடின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறதுஇதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.
2. 
நன்றாகத் தூங்குங்கள்
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம்பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றனதூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம்அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம்இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. 
நடங்கள்ஓடுங்கள்!தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம்இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்மனம் உற்சாகம் பெறும்ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும்மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்புபத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.


4. 
ஓய்வெடுங்கள்.பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள்ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்லகண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்துசற்று நிறுத்திமெல்ல விடுங்கள்கடினமானமிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும்அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலிஉடல் சோர்வு ஏற்படும்ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. 
சிரியுங்கள்
மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டுசிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாதுசிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும்எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும்அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

6. 
மனம்விட்டுப் பேசுங்கள்
மனம் விட்டுப்பேசுங்கள்உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும்எல்லோரிடமும்எல்லா நேரமும்தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள்யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. 
உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாதுஅது தேவையில்லாததும் கூடமலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாதுஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும்சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள்மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. 
தெளிவாகச் செய்யுங்கள்
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல்எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள்நிறுவனத்தை அல்லநிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும்ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்லநல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. 
விளையாடுங்கள்
உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள்கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார்விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. 
மற்றவர்களையும் கவனியுங்கள்
உங்கள் விருப்பங்களையும்உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள்அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும்நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாதுஉங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள்யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள்பிரதிபலன் எதிர்பாராமல்உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் !