GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 17 மே, 2024

CBSE பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் மறு கூட்டல் விடைத்தாள் பெறுதல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு இணைய வழியே விண்ணப்பம் அனுப்பலாம்

இந்த இணைப்பின் மூலம் சரிபார்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

 சரிபார்ப்புக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

 Apply for Re-Evaluation, You need to follow all these 3 steps.

Step 1) *Verification of Marks:*(Re-totalling)

Date: 17/05/2024 to 21/05/2024

Step 2) *Obtaining photocopy of answer booklet:*

Date: 01/06/2024 to 02/06/2024

Step 3) *Re-evaluation of answers:*

Date: 06/06/2024 to 07/06/2024

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் கவனத்திற்கு.......அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு TNPSC டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு உடனே விண்ணப்பம் செய்யுங்கள்...

சட்டக் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனர் போக்குவரத்து கழகங்களில் உதவி மேலாளர்கள் போக்குவரத்து கழகங்களில் உதவி மேலாளர்கள் சட்டப்பேரவையில் ஆங்கிலம் தமிழ் பிரிவு செய்தியாளர்கள் சிப்காட் நிறுவன உதவி மேலாளர் உட்பட 20 பதவிகளில் 118 இடங்கள் காலியாக உள்ளன இந்த காலியிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் மூலம்
 
TNPSC JOBS CLICK HERE 

 விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும் விண்ணப்பங்களில் ஜூன் 19 முதல் 21க்குள் திருத்தம் செய்யலாம் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 தேர்வுக்கான கல்வி தகுதி உட்பட எதிரா தகுதிகள் அனைத்தையும் தேர்வு அறிவிக்கியில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு விழா பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அடைந்த 1761 அரசு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உயர் அலுவலர்களை சென்னைக்கு அழைத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்முறையாக பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
 
இந்த சீர்மிகு பாராட்டு விழாவில் sslc plus 2 பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த 43 மாணவர்கள் மாணவிகளும் கௌரவிக்கப்பட உள்ளனர். 

இந்த விழாவின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் ஐந்து தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும் 
100% தேர்ச்சி இலக்கை எட்டிய தலைமை ஆசிரியருடன் கலந்துரையாடல் செய்து கருத்துக்கள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது 

செவ்வாய், 14 மே, 2024

பிளஸ் -1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (14.05.2024)வெளியீடு

 தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று 14.05.2024 காலை 9.30 மணி அளவில் வெளியாகிறது பிளஸ் ஒன் தேர்வு எழுதிய மாணவர்கள் 



இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ் எம் எஸ் வாயிலாக அனுப்பப்படும் அதேபோல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

ஞாயிறு, 12 மே, 2024

அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்



தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை அரசு கவின் கலை கல்லூரிகள் Government (College of fine arts Chennai and Kumbakonam)சென்னை மற்றும் கும்பகோணம் மாணவ மாணவியர் சேர்க்கை அறிவிப்பு

சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரிகளில் இளம் கவின் கலை (நான்கு வருடம்) முது கவின் கலை (இரண்டு வருடம்) பட்டப்படிப்புகளுக்கு மாணவ மாணவியர் செயற்கைக்கு  இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.


Bachelor of fine arts degree and master of fine arts degree course admissions CLICK HERE

BFA AND MFA COURSES
Visual communication design 
Painting 
Sculpture 
Industrial design in ceramic 
Industrial design in textile 
Printmaking 

மேற்கண்ட பட்டப்படிப்புகளை தமிழ்நாடு அரசு கவின் கலை கல்லூரிகளில் மேற்கொள்ள பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு:1. 7. 2024 அன்று 23 வயது நிறைவு பெறாதவர்களாக இருக்க வேண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 26 வயது நிறைவு செய்யாதவர்களாக இருக்க வேண்டும் 

முதுகலை பட்டப் படிப்பிற்கு வயது வரம்பு இல்லை 

விண்ணப்ப கட்டணம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூபாய் 50 இதர பிரிவினருக்கு ரூபாய் 100 
தொடர்புடைய வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட வேண்டும்
 தொகை செலுத்திய செலுத்துசீட்டு மற்றும் உரிய கல்வி சான்றிதழ் உடன்  விண்ணப்பத்தினை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் 

சென்னை அரசு கவின் கலை கல்லூரியில் பயில விண்ணப்பிப்பவர்கள் கீழ்கண்ட கணக்கில் செலுத்த வேண்டும் 

The principal Government College of fine arts Chennai 
account number 23200 10000 7608 
IFSC code IOB a 002320 
bank Indian overseas Bank branch veperi Chennai 

கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் பயில விண்ணப்பிப்பவர்கள் கீழ்கண்ட கணக்கில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும் 

The principal Government College of fine arts Kumbakonam 
account number 933 781 64
 IFSC code IDIB 000095 
Bank Indian Bank 
branch Mela Kaveri Kumbakonam 


பிளஸ் -1 தேர்வு முடிவுகள் 14ஆம் தேதி வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வருகிற 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு வெளியாகிறது .சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் www.tnresult.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

 அதேபோல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ் எம் எஸ் வாயிலாக அனுப்பப்படும்

சனி, 11 மே, 2024

பத்தாம் வகுப்பு தேர்வுகள் எழுதி தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு துணை தேர்வுகள் நடைபெற உள்ளது. மற்றும் அறிவியல் செய்முறை பயிற்சி பாடத்தில் தோல்வி அடைந்த தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு செய்முறை பயிற்சிக்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது ,துணைத்தேர்வு கால அட்டவணை குறித்து அறிந்து கொள்ளுங்கள்

நடைபெற உள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த தேர்வர்களிடமிருந்தும்/ விண்ணப்பிக்க தகுதியுள்ள தனி தேர்வர்களிடமிருந்தும்/ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது 


பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை

 ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.5.2014 வியாழக்கிழமை முதல் 1.6.2024 சனிக்கிழமை வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்களாக) காலை 11:00 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

 ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணை தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்ர்களும் மற்றும் ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத வருகை புரியாத தனித்தேர்ர்களும் 16 அஞ்சு 2024 வியாழக்கிழமை முதல் 1 6 2024 சனிக்கிழமை வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்களாக காலை 11:00 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் 

அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முறை

ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தேர்வர்களும் முதன் முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத விரும்புபவர்கள் ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் மற்றும் ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அறிவியல் பாட செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் ஆகியோர் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர 16/5/2014 முதல் 24/5/2024 ஞாயிற்றுக்கிழமை நீங்களான நாட்களில் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் ரூபாய் 125 பணமாக செலுத்தி  பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் 
இந்த அனுமதிச்சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்



                        SSLC துணைத்தேர்வு கால அட்டவணை 



+2 தோல்வியடைந்த மாணவர்களுக்கும், தனி தேர்வர்களுக்கும் சிறப்பு துணைத்தேர்வு எப்போது? எங்கே? எவ்வாறு? விண்ணப்பிக்கலாம் ? பிளஸ் டூ துணை தேர்வுகள் கால அட்டவணை


பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்


            2024 ஆம் ஆண்டு மார்ச் மேல்நிலை முதலாம் ஆண்டு +1, மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத அல்லது பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத படங்களை மீண்டும் எழுத *அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று* 16.5 .2024 முதல் 1. 6. 2024 வரை  நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்களாக காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் 

            ஜூன் ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணை தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்ர்களும் மற்றும் மார்ச் 2024 மேல்நிலை முதலாமாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித் தேர்வுகளும் பதினாறு அஞ்சு 2024 முதல் 1 6 2024 வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்களாக காலை 11:00 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் 





துணைத்தேர்வு கால அட்டவணை 


துணைத்தேர்வு கால அட்டவணை