GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 11 மார்ச், 2019

வில்லங்க சான்றிதழ் பெற திடீர் கட்டுப்பாடு


வீடு, மனை வாங்குவோர், அதற்கான வில்லங்க சான்றிதழ் கோரி, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வீடு, மனை வாங்கியவர்கள், புதிதாக வாங்குவோர், சொத்தின் முந்தைய பரிமாற்ற விபரங்களை அறிய, வில்லங்க சான்றிதழ் பெறுவது அவசியம். 'வில்லங்க சான்றிதழ்களை பெற, பொது மக்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பதிவுத்துறை அறிவித்தது.

ஆனால், ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை ஏற்பதில்,சார் பதிவக பணியாளர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தையே ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில், பதிவுத்துறை இறங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: பதிவுத்துறை அறிவிப்பின்படி, 1975ம் ஆண்டு முதல் பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்கள், வில்லங்க சான்றிதழில் இடம் பெற வேண்டும். ஆனால், பெரும்பாலான பகுதிகளில், 1987 முதல் பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

இதிலும், சொத்தின் சர்வே எண், அதன் இருப்பிடம், விண்ணப்பதாரர் குறித்த விபரங்கள் தான் அவசியம். ஆனால், தற்போது, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது, சொத்தின் பரப்பளவு குறித்த விபரம் கேட்கப்படுகிறது.இதுபோன்ற கட்டுப்பாடுகளால், சாதாரண மக்கள் குழப்பம் அடைகின்றனர். 

எனவே, ஆன்லைன் முறையில், வில்லங்க சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள், நேற்று அமலுக்கு வந்தன. நடத்தை விதிகள் விபரம்:

பல்வேறு இனம், ஜாதி, சமயம், சமூகத்தினர் மற்றும், மொழியினருக்கு இடையே இருந்து வரும் வேற்றுமைகள், வெறுப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளிலோ, பதற்றத்தை கூடுதலாக்கும் நடவடிக்கைகளிலோ, எந்த கட்சியும், வேட்பாளர்களும் ஈடுபடக் கூடாது


* அரசியல் கட்சிகள், மற்ற கட்சிகளை குறை கூறும்போது, அது, அக்கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள், முந்தைய சாதனைகள் மற்றும் பணிகள் குறித்ததாக மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை, தவிர்க்க வேண்டும்

* மற்ற கட்சிகள் மற்றும் தொண்டர்கள் மீதான, சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளையும், திரித்து கூறப்படும் செய்திகளையும், தவிர்க்க வேண்டும்

* தேர்தல் பிரசாரத்திற்கு, மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது

* ஊழல் நடவடிக்கை, வாக்காளர்களுக்கு லஞ்சம், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

* மற்ற கட்சிகளின் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில், தொண்டர்கள் ஈடுபடாமல் இருப்பதை, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு விதிகள்?

* அரசு அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக புகார் வராத வகையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்

* அமைச்சர்கள், தங்கள் அரசு அலுவல் பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது. அரசு இயந்திரத்தையோ, ஊழியர்களையோ, பயன்படுத்தக் கூடாது

* ஆளும் கட்சிக்கு ஆதரவாக அரசு விமானங்களையோ, வாகனங்களையோ, இதர அரசு இயந்திரங்களையோ, அரசு ஊழியர்களையோ பயன்படுத்தக் கூடாது

* ஓய்வு இல்லங்கள், விடுதிகள் மற்றும் இதர அரசு தங்கும் இடங்களை, எந்த கட்சியும் பிரசார அலுவலகமாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

தெரசா பல்கலையின் துணைவேந்தரை தேர்வு செய்ய, தனியார் கல்லுாரி முதல்வர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வி கட்டுப்பாட்டில், கொடைக்கானலில், தெரசா மகளிர் பல்கலை செயல்படுகிறது.இந்த பல்கலையின் துணைவேந்தர், வள்ளியின் பதவி காலம் முடிந்துள்ளது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, சென்னை, வேப்பேரியில் உள்ள சாந்தி விஜய் ஜெயின் கல்லுாரி முதல்வர், மாலதி தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில், கல்லுாரி கல்வி இயக்ககத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர், மஞ்சுளா; அழகப்பா பல்கலையின் முன்னாள் பேராசிரியர், பிரேமா ஆகியோர், உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.இந்த பல்கலையில் துணைவேந்தர் பதவிக்கு விருப்பம் உள்ள, தகுதியானவர்கள், ஏப்., 9, மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பங்களை தபாலிலோ, இ - மெயில் வழியாகவோ அனுப்பலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை சைனிக் பள்ளி, 2019 - 20ம் கல்வி ஆண்டில், சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் தற்காலிக தகுதி பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளிக்கு, 2019 - 2020ம் கல்வியாண்டில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல், நாடு முழுவதும் நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றும், உடல் நலத் தகுதியோடும், உடுமலை, அமராவதி நகர் சைனிக்பள்ளிக்கு தேர்வு செய்யபட்ட மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தற்காலிக தகுதி பட்டியல்,www.sainikschoolamaravathinagar.edu.inஎன்ற பள்ளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தகவலை, சைனிக் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, குறைந்தது, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேரும் அளவுக்கு, வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தரமான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக, ஒரு சிறிய பள்ளி கூட மூடப்படவில்லை.ஒரே ஒரு மாணவர் உள்ள பள்ளிகளாக, 33ம், ஒன்பதுக்கு கீழ் ஒற்றை படையில், மாணவர் எண்ணிக்கை கொண்டதாக, 1,234 பள்ளிகளும் உள்ளன. எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

சனி, 9 மார்ச், 2019

எஸ்.ஐ., தேர்வு அறிவிப்பு தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது


தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக காவல் துறையில், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் தாலுகா பிரிவுக்கு, போலீஸ், எஸ்.ஐ.,க்கள், 969 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, நேற்று, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள், மார்ச், 20 முதல், ஏப்., 19 வரை,www.tnusrbonline.orgஎன்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது

நாளை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும், நாளை, போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெறுகிறது. 


தமிழகம் முழுவதும், 70 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து போடப்பட உள்ளது. போலியோ தடுப்பு நடவடிக்கைகளில், அரசு சிறப்புக்கவனம் செலுத்தியதை தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, போலியோ பாதிப்பு இல்லாத நாடாக, இந்தியா உள்ளது. இந்த நிலையை தக்க வைக்கும் வகையிலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் முகாம், இரண்டு தவணைகளாக நடைபெற்று வந்தது.

இந்தாண்டு முதல், ஒரே தவணையாக, மார்ச், 10ல், முகாம்களை நடத்த, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ், ரயில் நிலையங்கள் உட்பட, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், போலியோ சொட்டு மருந்து போடும் முகாம், நாளை நடைபெற உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது. 'விடுபடும் குழந்தைகளுக்கு, அடுத்தடுத்த நாட்களில், வீடு வீடாக சென்று, போலியோ சொட்டு மருந்து போடப்படும்' என்றனர்.

வரும் கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டத்தை அமல்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வியில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்தது. மற்ற வகுப்புகளுக்கு, வரும் கல்வியாண்டில், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

ஆனால், 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இரண்டு, ஏழு, பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அறிமுகமாகும். மற்ற வகுப்புகளுக்கு, அதாவது, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, அடுத்த, 2020 - 21ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலாகும் என, கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புளுக்கும், ஜூன் மாதம் துவங்கும், கல்வி ஆண்டிலேயே, புதிய பாட திட்டம் அமலுக்கு வரும், பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.


தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது