GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

கல்வி கண்காட்சி தொடர்பான விண்ணப்பங்களை, கலெக்டர்களே சரிபார்த்து அனுமதி வழங்கலாம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், தனியார்கள் நடத்தும் பொருட்காட்சி, கண்காட்சிக்கு, அரசிடம் உரிய அனுமதி பெற்றே நடத்த வேண்டும். கல்வி கண்காட்சி, விழாக்கள் போன்றவற்றுக்கு அனுமதி கேட்டு, அரசுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், காலதாமதம் ஏற்படுகிறது. விழாவுக்கு, பத்து நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்து, அனுமதி கேட்கும் சூழ்நிலை உள்ளது.இவற்றை தவிர்க்க, அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு, அரசு அனுமதி வழங்கி உள்ளது. கல்வி கண்காட்சி தொடர்பான விண்ணப்பங்களை, கலெக்டர்களே சரிபார்த்து அனுமதி வழங்கலாம். சம்பந்தப்பட்டவர்கள், அரசுக்கு விண்ணப்பித்து, கால நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த நடைமுறை, தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஆசியாவின் சக்தி வாய்ந்த, 50 பெண் நிர்வாகிகளில், ஆறு இந்தியர்கள்

 ஆசியாவின் சக்தி வாய்ந்த, 50 பெண் நிர்வாகிகளில், ஆறு இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.
பாரம்பரிய ஆணாதிக்க துறைகளின் சுவரை துளைத்து, வெற்றிப் பாதையில் முன்னேறி வரும் அந்த பெண்களின் பட்டியல் விவரம்: 


அருந்ததி பட்டாச்சார்யா, 58, தலைவர், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' : இந்திய வங்கித் துறையின் முதல் பெண்மணி' என அழைக்கப்படும் இவர், 18 லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ள வங்கியையும், 22.50 கோடி வாடிக்கையாளர்களையும் நிர்வகித்து வருகிறார்.


சந்தா கோச்சார், 53, தலைமை செயல் அதிகாரி, .சி..சி.., பேங்க்: அருந்ததி பட்டாச்சார்யாவைத் தொடர்ந்து, வங்கித் துறையில் சக்தி மிக்க இரண்டாவது பெண் என்ற சிறப்பை பெற்றவர். 6 லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ள வங்கியை, கடந்த ஆறு ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார். இளைய சமுதாயத்தினரின் வங்கிச் சேவைக்கு, பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.


கிரண் மசூம்தார் ஷா, 61, தலைவர், நிர்வாக இயக்குனர், பயோகான்: நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு, குறைந்த விலையில் உயிரி மருந்துகளை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர். 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்கிறார்.


ஷிகா ஷர்மா, 56, தலைவர், ஆக்சிஸ் பேங்க்: தனியார் துறையில் மூன்றாவது இடத்தில் உள்ள வங்கியின், 4 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி, வங்கியின் மொத்த டிபாசிட்டை, 2.76 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்த பெருமை இவருக்கு உண்டு. இவரது தலைமையில், முதன் முறையாக கடந்த நிதியாண்டில், வங்கியின் நிகர லாபம், 600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


உஷா சங்வன், 56, நிர்வாக இயக்குனர், லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்: இந்தியாவின், மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் முதல் பெண் நிர்வாக இயக்குனர் என்ற சிறப்பை பெற்றவர். எல்..சி.,யின் மூன்று நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான இவர், வீட்டு வசதி கடன் துறையில், துணை நிறுவனமான எல்..சி., ஹவுசிங் பைனான்ஸ்-, மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றியவர்.


அகிலா ஸ்ரீனிவாசன், நிர்வாக இயக்குனர், ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் / ஸ்ரீராம் கேபிட்டல்: 79,800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கொண்ட ஸ்ரீராம் குழுமத்தில், 29 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர். 10 ஆண்டுகளில், தனியார் காப்பீட்டு துறையில், முதல் ஐந்து இடங்களில் ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தை இடம் பெறச் செய்தவர்

வியாழன், 26 பிப்ரவரி, 2015

ப்ளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களில் தற்காலிக மார்க் சீட் வழங்கப்படும்

ப்ளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களில் தற்காலிக மார்க் சீட் வழங்கப்படும் எனவும், இந்த மார்க் சீட்கள் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் எனவும் சென்னையில் நடைபெற்ற பள்ளிகல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு காலதாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த தற்காலிக மார்க் சீட் வழங்கப்பட உள்ளதாகவும், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் மார்க் சீட்கள் வழங்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால், உடனே விடைத்தாள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பித்த ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா் நகல் கிடைக்கும். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.

புதன், 25 பிப்ரவரி, 2015

உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் விரைவில் பணியிட மாற்றம்

மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும், விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களையும், உபரி ஆசிரியர்கள் பட்டியலையும், 25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உபரி பட்டியலில் இடம்பெறும் ஆசிரியர்கள், கலந்தாய்வின்படி பிற ஒன்றியங்கள், மாவட்டத்துக்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், சரியும் மாணவர்கள் எண்ணிக்கை, விதிமுறைகள் மீறி, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் வழங்கப்படும் இடமாறுதல்கள் காரணமாகவே, உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்தந்த ஆண்டு துவக்கத்தில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்தினால், உபரி, பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும்" என்றார்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

B.Ed கல்வியியல் படிப்பு காலம் தமிழ்நாட்டில் அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் 2016–17–ம் ஆண்டுகளில் 2 வருட படிப்பாக மாற்றி அமைக்க கருத்துரு...

சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:– தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி உள்பட மொத்தம் 689 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. ஓராண்டு படிப்பாக இருப்பதை 2 ஆண்டு படிப்பாக நீட்டிக்க தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் 2 வருட படிப்பாக மாற்றி அமைக்க சொல்லியிருந்தது. இதை அமுல்படுத்த கட்டிட வசதி, கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை உள்ளது. இதனால் இந்த ஆண்டு இதை செயல்படுத்த முடியாது என்றும் இதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் 2016–17–ம் ஆண்டுகளில் இதை தமிழ்நாட்டில் செயல்படுத்தலாம் என்றும் கருத்துரு அனுப்பி உள்ளோம். எனவே உடனே இதை அமுல்படுத்த வாய்ப்பில்லை. சுயநிதி கல்வியியல் கல்லூரி கூட்டமைப்பின் சார்பில் கோர்ட்டில் ஏற்கனவே தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு ஏற்ப அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார் 

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரதமர் மோடி .......

தேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ள வேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
‘மன்கிபாத்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக ரேடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் பேசி வருகிறார்.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரதமர் மோடி பேசியதாவது: மாணவர்கள் தேர்வை சுமையாக கருதாமால், வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ள வேண்டும். தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
படிபடி என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெருக்கடி தராமல் , மற்றவர்களை விட நம் குழந்தைகள் சிறந்த படிப்பாளியாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அணுக வேண்டும். தேர்வுக்கு தயாராக இருக்கும் மாணவர்களின் இலக்கும் சிந்தனையும் தெளிவாக இருக்க வேண்டும்.
குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடுவது அவர்களுக்கு நெருக்கடியை தரும். குடும்பத்தினர் தரும் நெருக்கடி குழந்தைகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் தேர்வு எழுதும் மாணவர்கள் அழுத்தத்திற்கு ஆளாக கூடாது. தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியம். ஆனால் இதனை சுமையாக கருதக்கூடாது.
வாழ்க்கையில் போட்டி சிறந்ததாக அமையும். நாளைய வாழ்க்கை சிறப்பாக அமைய இப்போதே இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். சில நேரங்களில் நமது நடவடிக்கைகள் குழப்பத்தை தரும். நமது சாதனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் சாதனையாளராக மாற வேண்டும் என விரும்புகிறேன். உங்களுடனே நீங்கள் போட்டியிடுங்கள். மற்றவர்களுடன் அல்ல. உங்களுக்கு சகோதரி இருந்தால், அவர் தாயாருக்கு உதவி செய்து கல்வி கற்பதை காணலாம், என கூறினார்.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

தமிழக பள்ளிகளில் தாய்மொழி தினம் கொண்டாடப்படுவது கேள்விக் குறி?

ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த சர்வதேச தாய்மொழி தினம், சி.பி,எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பிப்., 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவு கிடைக்காததால், தமிழக பள்ளிகளில் தாய்மொழி தினம் கொண்டாடப்படுவது கேள்விக் குறியாகி உள்ளது. தமிழக அரசிடமிருந்து தகவல் இல்லாததால், பள்ளிக்கல்வித் துறையும் இதில் முனைப்பு காட்டவில்லை. 'தமிழக அரசு, இவ்விஷயத்தில் மெத்தனமாக இருக்க, அமைச்சர்கள் அனைவரும், தங்கள் துறை தொடர்பான பணியில் ஈடுபடுவதை விட, அரசியலில் அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது' என, தமிழ்மொழி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை சார்பில், பிப்., 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடுகளிலும், கல்வி நிறுவனங்களில் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிப்., 21ம் தேதி, தாய்மொழி தினத்தை (மாத்ரி பாஷா திவாஸ்) கொண்டாட, அனைத்து சி.பி,எஸ்.இ., பள்ளிகளுக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றிக்கை அனுப்பி உள்ளது. எனவே, தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத் தனியார் பள்ளிகளில், தாய்மொழியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாட்டுப்பாடுதல், வேறு மொழி (ஆங்கிலம், இந்தி) கலப்பின்றித் தமிழ் மொழியில் பேசுதல், பேச்சுப் போட்டி போன்ற, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தில் அரசின் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், மாநில, மாவட்ட மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில், தாய்மொழி தினம் கொண்டாட, எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. பல பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில், தாய்மொழி தினம் கொண்டாட தயாராக உள்ளனர். ஆனால், தாய்மொழி தினம் கொண்டாடுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை இதுவரை முறையான அறிவிப்பு செய்யவில்லை. எனவே, தமிழகத்தில் தாய்மொழி தினக் கொண்டாட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் கேட்ட போது, 'தமிழக அரசிடமிருந்து முறையான தகவல் வந்தால் மட்டுமே, நாங்கள் பள்ளிகளுக்கு அறிவுறுத்த முடியும். தற்போது வரை, எங்களுக்கு தாய்மொழி தினக் கொண்டாட்டம் குறித்து, அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை' என்றனர். இதுகுறித்து, தமிழ்மொழி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், 'தனியார் பள்ளிகளில், தமிழ் படிப்பதே அபூர்வமாகி விட்டது. இதை தாய்மொழியாகக் கொண்டாடும் வகையிலாவது, இதன் மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை. தனியாக மாநாடு நடத்திச் செலவழித்து, காசை வீணடிப்பதை விட, இது போன்ற உபயோகமான நிகழ்ச்சிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டுவதை விட, அரசியலில் ஆர்வம் காட்டி, அமைச்சர்கள் பொழுதைக் கழிக்கின்றனர்' என்றனர்.

புதன், 11 பிப்ரவரி, 2015

சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன.

சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன.
சென்னை நகரிலுள்ள எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை. இப்பள்ளிகளில் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அவை இரண்டு நாட்களுக்கு திறந்திருக்கும்.
இதன்மூலம், பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளுக்கான விண்ணப்பங்களை வாங்கி, ஆன்லைனில் பூர்த்திசெய்ய முடியும். மேலும், சில பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் 25% ஒதுக்கீட்டு சேர்க்கை விண்ணப்பங்களுக்காக, கவுன்டர்கள், 2 நாட்களுக்கும் மேலாக திறந்திருக்கும்.
இந்த புதிய நடைமுறையின் மூலமாக, பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் தரப்பில் கூறுப்படுவதாவது: புதிய ஆன்லைன் முறையால், விண்ணப்ப நடைமுறைகளுக்காக, பள்ளியில் வந்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், இந்த புதிய நடைமுறை, பழைய முறையைவிட வெளிப்படையாக இருக்கிறது மற்றும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை போன்ற குறைபாடுகள் இதன்மூலம் களையப்பட முடியும். அதுமட்டுமின்றி, வெளியூர்களில், வெளிமாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட, அட்மிஷனில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிகள் தரப்பில் கூறப்படுவதாவது: விண்ணப்ப நடைமுறைகள், ஆன்லைன் முறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், பணிகள் எளிதாகியுள்ளன. இதன்மூலம், தரவுகளை(data) எளிதாக டவுன்லோடு செய்து, அவற்றை சரிபார்க்க முடியும்.
ஒரு குழந்தை சேர்க்கை பெற்றவுடன், அக்குழந்தையினுடைய அனைத்து விபரங்களையும், ஒரே கிளிக் செய்வதன் மூலமாக, பள்ளி registry -ல் பதிவேற்றம் செய்து வைத்துக்கொள்ள முடியும். இதுதவிர, 25% இடஒதுக்கீட்டு சேர்க்கையையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்த இந்த புதிய ஆன்லைன் முறை உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு அறிவித்தும், 1,001 பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், மாணவ, மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1,074 துவக்கப் பள்ளிகள், 302 நடுநிலைப் பள்ளிகள், 147 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,621 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் உத்தரவிட்டது. 1,001 பள்ளிகளில் இல்லை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தினார். ஆனால், அரசு உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளிகளில் இதுவரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. குறிப்பாக, தற்போது, மாவட்டத்தில், 620 பள்ளிகளில் மட்டுமே, மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பள்ளிகள் சுத்தமான முறையில் குடிநீர் வழங்கவில்லை. இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் காலரா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து, எடுக்கும் விதிமுறைகளை, அரசு பள்ளிகளில் மேற்கொள்ளாதது, மாணவ, மாணவியர்களின் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும்... இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் பள்ளிக்கு வழங்கப்படும் நிதியால், அரசு பள்ளிகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு முடியாமல், நாங்கள் திணறி வருகிறோம். சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு மற்றும் ஊராட்சிகளின் துணையோடு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்" என்றார். இதுகுறித்து, பள்ளி கல்வி துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை பராமரிப்பு நிதி வழங்கி வருகிறோம். இந்த நிதி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்.

அரசு அறிவித்தும், 1,001 பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், மாணவ, மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,074 துவக்கப் பள்ளிகள், 302 நடுநிலைப் பள்ளிகள், 147 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,621 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் உத்தரவிட்டது.
1,001 பள்ளிகளில் இல்லை
தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தினார்.
ஆனால், அரசு உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளிகளில் இதுவரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. குறிப்பாக, தற்போது, மாவட்டத்தில், 620 பள்ளிகளில் மட்டுமே, மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பள்ளிகள் சுத்தமான முறையில் குடிநீர் வழங்கவில்லை.
இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் காலரா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து, எடுக்கும் விதிமுறைகளை, அரசு பள்ளிகளில் மேற்கொள்ளாதது, மாணவ, மாணவியர்களின் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும்...
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் பள்ளிக்கு வழங்கப்படும் நிதியால், அரசு பள்ளிகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு முடியாமல், நாங்கள் திணறி வருகிறோம். சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு மற்றும் ஊராட்சிகளின் துணையோடு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்" என்றார்.
இதுகுறித்து, பள்ளி கல்வி துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை பராமரிப்பு நிதி வழங்கி வருகிறோம். இந்த நிதி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்.யாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 1,074 துவக்கப் பள்ளிகள், 302 நடுநிலைப் பள்ளிகள், 147 உயர்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,621 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் உத்தரவிட்டது.
1,001 பள்ளிகளில் இல்லை
தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், சுத்தமான, சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தினார்.
ஆனால், அரசு உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளிகளில் இதுவரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. குறிப்பாக, தற்போது, மாவட்டத்தில், 620 பள்ளிகளில் மட்டுமே, மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள பள்ளிகள் சுத்தமான முறையில் குடிநீர் வழங்கவில்லை.
இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் காலரா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து, எடுக்கும் விதிமுறைகளை, அரசு பள்ளிகளில் மேற்கொள்ளாதது, மாணவ, மாணவியர்களின் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும்...
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் பள்ளிக்கு வழங்கப்படும் நிதியால், அரசு பள்ளிகளின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு முடியாமல், நாங்கள் திணறி வருகிறோம். சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு மற்றும் ஊராட்சிகளின் துணையோடு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்" என்றார்.
இதுகுறித்து, பள்ளி கல்வி துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆண்டுதோறும் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை பராமரிப்பு நிதி வழங்கி வருகிறோம். இந்த நிதி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும்.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, அரசு ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதியுதவி வழங்கினால் மட்டுமே, பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எங்களால் வழங்க முடியும்.

வியாழன், 5 பிப்ரவரி, 2015

நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறியால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழுபறியால், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி, கல்வி வயதுடைய அனைவரும் கட்டாயம் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்; போக்குவரத்து வசதியின்மையை காரணம் காட்டி, கல்வியை தொடராமல் இருக்க கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வாகனம் மற்றும் வழித் துணையாளர் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வால்பாறை, கொடைக்கானல் உட்பட மலைக் கிராமங்கள், வனப்பகுதி நிறைந்த மாவட்டங்களில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
பஸ் வசதி இல்லாத மலை கிராம மாணவ, மாணவியரை பள்ளிகளுக்கு அழைத்து வர, தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு மாணவனுக்கு 300 ரூபாய் வீதம், வாடகை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.
வாகனங்கள் சென்று வர முடியாத, அடர்ந்த வனப் பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியரை பாதுகாப்பாக பள்ளிகளுக்கு அழைத்து வர, ஐந்து மாணவ, மாணவியருக்கு ஒரு வழித்துணையாள் வீதம் நியமித்து, அவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்க அனுமதியளிக்கப்பட்டது.
இதனால், வனப்பகுதி மற்றும் மலைக் கிராம மாணவ, மாணவியர் பலர் ஆர்வமுடன் பள்ளிக்கு வரத் துவங்கினர். நீலகிரியில் மட்டும், 3,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனடைந்தனர். கடந்த ஐந்து மாதங்களுக்கான வாடகை தொகை, பள்ளிகளுக்கு வழங்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதித்துள்ளது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி முருகேசன் கூறியதாவது: வாகனம், வழித்துணையாளர் வசதியால், மாநிலம் முழுக்க, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயன் பெறுகின்றனர். ஊராட்சிப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், நிதி ஒதுக்கீடு சீராக இல்லை.
இதனால், வாகன ஓட்டுனர்கள், வாகனங்களை இயக்க தயங்குகின்றனர். மாணவர் எண்ணிக்கை குறைந்து விடக்கூடாது என்ற நோக்கில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை வாடகையாக கொடுத்து, மாணவர்களின் வருகையை உறுதிபடுத்தி கொண்டிருக்கின்றனர். இத்திட்டம் முறையாக செயல்பட, நிதி ஒதுக்கீட்டை தடையின்றி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறுகையில், "துறை ஒப்புதல் கிடைத்தவுடன், பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டு விடும்" என்றனர்.

ஜாதி சின்னங்களை அணிந்துவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என நெல்லை கலெக்டர்

ஜாதி சின்னங்களை அணிந்துவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என நெல்லை கலெக்டர் எச்சரித்தார்.
நெல்லை, தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே ஜாதிய மோதல்கள் ஏற்படுகின்றன. மாணவர்கள் ஜாதி தலைவர்களின் படத்துடன் உடையணிவது, கைகளில் பச்சை குத்திக்கொள்வது, ஜாதிசங்க கொடிகளின் வண்ணங்களில் ரிப்பன் அணிந்து வருவது, திருநீறு, பொட்டு வைப்பதில் கூட ஜாதிகளை வெளிப்படுத்தும் விதங்களில் நடந்து கொள்கிறார்கள்.
இதனை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். போலீஸ் உதவி கமிஷனர் மாதவன் பேசுகையில், "நெல்லையில் ஜாதி என்னும் களையினால் மாணவர்கள் என்னும் பயிர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நெல்லையில் கடந்த 6 மாதங்களில் 65 மாணவர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறேன். எனக்கே இது வருத்தத்தை தரும் விஷயம். எனவே, மாணவர்கள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது" என்றார்.
கலெக்டர் கருணாகரன் பேசுகையில், "ஜாதிய அடையாளங்களை அணிந்துவரும் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் முதலில் ஆலோசனை வழங்கி திருத்த முயற்சிக்கலாம். இல்லையெனில் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

"மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம், இந்த உழைப்பு தான் உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்லும்"என பள்ளி கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன்

"மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம், இந்த உழைப்பு தான் உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்லும்,&'&' என பள்ளி கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.
ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலை பள்ளி, மஞ்சம்மாள் நினைவு துவக்கபள்ளி ஆண்டுவிழாவில் தலைமை வகித்து அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம். இந்த உழைப்பு தான், ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். எல்லாவற்றிற்கும் முயற்சி இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியே வெற்றிக்கு அடித்தளம்" என்றார்.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

ரயில்வே குரூப் - சி பணிகளுக்கு இனி குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ் 2!

 இதுவரை, எழுத்தர், டிக்கெட் கலெக்டர், கமர்சியல் எழுத்தர், கணக்கு எழுத்தர் உள்ளிட்ட குரூப் - சி பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 என, கல்வித் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வித் தகுதியை உயர்த்தி, ரயில்வே வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவு, புதிய பணி நியமனங்களுக்கு பின்பற்றப்படும்.
கடந்த டிசம்பர் 27ம் தேதிக்கு முன் வெளியான குரூப் - சி பணி நியமன அறிவிப்புகளுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்வே துறையில், 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர். இதில், குரூப் - சி, குரூப் - டி பணிகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ள, சென்னை ரயில்வே தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும் 21 வாரியங்கள் உள்ளன.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தினமும் நாளிதழ்!

 தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தினமும் நாளிதழ் வாங்குவதன் அவசியம் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் அன்றாட தமிழ் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் வாசிப்பு பின்பற்றப்படுகிறது. நூலகத்தில் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் உத்தரவு உள்ளது. பத்திரிகை வாங்குவதற்கென பள்ளி மானிய நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை செலவிடவும் அனுமதி உண்டு.
இந்நிலையில் காலையில் செய்தி வாசிப்பது பெரும்பாலான பள்ளிகளில் கடைபிடிப்பது இல்லை. கிராமப்புற பள்ளிகளை காரணம் காட்டி,சில தலைமை ஆசிரியர்கள் தங்களது வீடுகளில் காலையில் நாளிதழ்களை வாங்குவதோடு, அவற்றை பள்ளிக்கு எடுத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "தலைமை ஆசிரியர்கள் விரும்பினால் பிற செலவினை குறைத்து நாளிதழ்களை வாங்கி, வாசிப்புத்திறனை மேம்படுத்தலாம். படிக்க,படிக்க தான் கிராமப்புற மாணவர்களுக்கு வாசிப்பு திறன் அதிகரிக்கும். 9ம் வகுப்பு மாணவருக்கு கூட, வாசிப்பு திறன் குறைபாடு இருப்பதை அறிய முடிகிறது. நாளிதழ் வாங்காத பள்ளிகள் வாங்க வலியுறுத்தப்படும்" என்றார்.

அங்கன்வாடி ஊழியர்கள் நியமன விசாரணை பெஞ்ச்சிற்கு மாற்றம்

 தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில், விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவிட்டார்.
திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப 2014ல் அறிவிப்பு வெளியானது. சில வழிகாட்டுதல்களை பின்பற்றி நியமனம் மேற்கொள்ள 2013 ஆக., 28ல் அரசு உத்தரவிட்டது.
அதில், மாவட்ட வாரியாக, நேர்காணல் மூலம் மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும் என உள்ளது. தற்போதைய பணி நியமன நடைமுறையில் மாவட்டந்தோறும் எத்தனை பணியாளர்கள் நியமிக்க உள்ளனர்? இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா? என தெளிவுபடுத்தவில்லை.
பொது அறிவிப்பு மூலம்தான் அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதை பின்பற்றவில்லை.மேலும் அந்தந்த இடத்தில் வசிப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்பது இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரானது. அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பணி நியமனம் மேற்கொள்ள 2014 நவ.,18ல் தனி நீதிபதி தடை விதித்தார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்.
நீதிபதி: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை வசிப்பிடம் அடிப்படையில் நியமனம் மேற்கொள்வது தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கு இதே கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் நிலுவையில் உள்ளது. அத்துடன் இவ்வழக்கையும் சேர்த்து விசாரிக்க, அங்கு மாற்றப்படுகிறது.