GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 25 டிசம்பர், 2014

குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன?T


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
இத்தேர்வில், எழுத்துத் தேர்வு முடிந்து அதில் தேர்வு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு என்பதால், அதிக ஆர்வம் இருக்கலாம். தவிரவும், ’அரைக்காசு என்றாலும் அரசு வேலை’ என்ற பழைய தமிழ் பழமொழி, எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் மனதில் நிலைத்து நிற்கிறது. இத்தேர்வு முடிவுகள் இன்னும் மூன்று மாத கால அவகாசத்தில் வெளியாகும். வழக்கப்படி உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் அடுத்த கட்டமாக அமையும். இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் உட்பட சில பதவிகள் கொண்ட இந்த குரூப் - 4 பணியாளர்களுக்கு, மாதச் சம்பளம் முதலில், 17 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பணியும் நிரந்தரமாகும். இத்தேர்வுக்கு, கல்வி அடிப்படை வரம்பு 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முன்னணி யில் இருக்கிறது. ஆகவே, பட்டதாரிகள், மற்ற தொழிற்கல்வி, கணினி கல்வி படித்த பட்டதாரி கள், அரசு வேலை என்பதால் ஆர்வமாக முயற்சித்திருக்கலாம். இத்தேர்வில், பெண்கள் ஆர்வமாக பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இனி, விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆயிரக்கணக்கானோர், கூடுதல் சதவீத மதிப்பெண் பெற்றோர் வரிசையில் இடம்பெற்று, கடைசி கட்ட பணியாளர் தேர்வு பரபரப்பாக அமையும். இன்று, அரசு நிர்வாக நடைமுறைகள் அதிகமாக மாறி, பணியாளர்கள் தங்களது பணியில் புதிய நடைமுறைகளை பின்பற்றியாக வேண்டிய நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக, உயர்மட்ட மேலதிகாரிகள் அதிக அளவில் பணி நேரத்தை செலவழித்து, கோப்பு களை முடிக்க வேண்டிய கட்டாயம் அமலாகிறது. அந்த பாதிப்பு, இவர்கள் மீது அதிகமாக இருக்கும். தமிழகத்தில் குரூப் - 4 பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் தேவை இருக்கிறது என்பதும், அதில் ஆர்வமாக பணியாற்ற, அதிக அளவு முதற்கட்ட தகுதியுள்ளவர்கள் உள்ளனர் என்பதையும் இத்தேர்வு காட்டுகிறது. இத்தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்கவில்லை. அவர்களில் பலருக்கு இப்பணியில் கிடைக்கும் மாத சம்பளத்தைவிட, தற்போது அதிகமாக இருக்கலாம் அல்லது அடுத்த பதவி உயர்வு மூலம் அதிக வேலைவாய்ப்பை பெறலாம் என்ற கண்ணோட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம். மேலும், வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு, முடிவின்றி பல ஆண்டுகள் காத்திருக்கும் நடைமுறை மாறி, எழுத்து தேர்வு, அதற்குப்பின் ஒளிவு மறைவற்ற நேரடித் தேர்வு, தகுதி அடிப்படையில் அரசு வேலை என்பது நல்ல அம்சமாகும். இத்தேர்வு முடிவுகளால், திறன்மிகுந்த பலர் அரசுப்பணியில் சேர்ந்தால், அரசு இயந்திரம் சற்று வேகமாக செயல்பட உதவிடும்.

ஜெயிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான். ஆனால், ஜெயிப்பதற்கு தேவையான முயற்சி எடுக்கிறோமா?

ஜெயிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான். ஆனால், ஜெயிப்பதற்கு தேவையான முயற்சி எடுக்கிறோமா?
‘முடிந்தவரை முயற்சிப்பது அல்ல முயற்சி‘ முடிக்கும்வரை முயற்சிப்பதே முயற்சி‘ உங்களிடமிருந்து வெளியே வாருங்கள்; நம்மில் பலர், நமக்குள்ளேயே வாழக் கற்றுள்ளோம். அதிலிருந்து வெளிவந்தால் வாழ்வில் சிறப்படையலாம், வெற்றி பெறலாம். முதலில் முயற்சி செய்யுங்கள். பிறகு, கடினமாக முயற்சி செய்யுங்கள். அதைவிட இன்னும் கடினமாக முயலுங்கள். அப்போது முயற்சியின் பயன் கூடும். கூடிக்கொண்டே போகும்... கூட்டு வட்டி எவ்வாறு அதிகமாக பெருகுகிறதோ, அதுபோல தொடர்ந்து செயல்படும் முயற்சியின் பயன்களும், அதிவிரைவில் அதிகரித்துக் கொண்டே போகும். முயலுதல் என்பது தொடர் பயணம். தொடர்ந்து பயணம் செய்தால், அதுதான் நமது வெற்றிப் பயணம். எது மகிழ்ச்சி? ‘ஒரு திறமை கூட இல்லாத மனிதன் யாரும் உண்டா?‘ இல்லை! ஒவ்வொரு மனிதனிடமும் விலைமதிக்க முடியாத வைரம் போன்ற சில திறமைகள் உள்ளன. நம் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்த வேண்டும். அதோடு நிற்காமல், அத்திறமைகளை சரியான நேரத்தில், சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். இன்றைய உலகம் ஒரே கிளர்ச்சிமயமாக இருக்கிறது. நாடுகளிடையே பிரச்சனைகள், மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள், இப்படி உலகம் முழுவதும் பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. பிரச்சனை இல்லாத உயிரினம் இருக்க முடியாது. பிரச்சனைகள்தான், நமது முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது! பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்பதில்லை. கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதுதான் மகிழ்ச்சி. தீர்வு என்ன? எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. உங்களுக்குள் என்ன இருக்கிறது? ஆராய்ந்து பாருங்கள். கல்வி என்பது ஆராய்ந்து அறியும் திறனை உங்களுக்கு கொடுக்கும். எனவே, கல்வியில் உயருங்கள். கல்வி உங்களை உயர்த்தும். உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை உணர்வுகளை எடுத்து குப்பையில் போடுங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை ஆராய்ந்து பாருங்கள். அந்த ஆற்றலைப் பெரிதாக வளருங்கள். உங்களுக்குள், தன்னம்பிக்கையும், தனித்திறமையும் அடங்கி இருந்தால், நிச்சயம் நீங்கள் மேலும் மேலும் உயருவீர்கள்! நீங்கள் விரும்பாததைப் பற்றி சிந்தித்து, ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள். தொடர் தோல்வி வந்தாலும் களங்காதீர்கள். ‘மிகவும் இருண்டு விடுகின்றபோது, நட்சத்திரங்கள் வெளிவருகின்றன. காரியத்தை செய்யுங்கள், சக்தி தானாக வரும். வானத்தில், வல்லூறுகளுடன் வட்டமிட்டுப் பறக்க ஆசைப்பட்டால், வான்கோழிகளோடு ஒட்டிக்கொண்டு இருக்காதீர்கள். உயரமாக நில்லுங்கள்... 

புதன், 24 டிசம்பர், 2014

வாஜ்பாய், மாளவியாவிற்கு பாரத ரத்னா : மத்திய அரசு கவுரவம்

வாஜ்பாய், மாளவியாவிற்கு பாரத ரத்னா




முன்னாள் பிரதமர் அடல் பீகாரி வாஜ்பாய் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் இந்து சமாஜ் இயக்க தலைவருமான மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வாஜ்பாயின் 90வது பிறந்த நாள் நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த விருதினை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
வாஜ்பாய், இரண்டு முறை பிரதமராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக சிறந்த பார்லிமென்ட்டேரியனாக பரிமளித்தவர். அரசியல் துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் பா.ஜ., தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத ரத்னா விருது பெறும் 42வது நபர் வாஜ்பாய். இவரது 90வது பிறந்த நாளை நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வாஜ்பாயை மேலும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா வழங்க, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டு வந்தது.
வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாய் மற்றும் மாளவியாவிற்கு பாரதரத்னா வழங்க ஒப்புதல் தெரிவித்தார்.
மதன் மோகன் மாளவியா, சுதந்திர போராட்ட வீரர் மட்டுமின்றி, இந்து மகாசபாவை தோற்றுவித்தவரும் ஆவார். 'மகாமன்னா' என அனைவராலும் போற்றப்பட்ட புகழ்பெற்ற கல்வியாளரும் கூட. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இருக்கும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவரும் மாளவியா தான். இதனால் ஆட்சி பொறுப்பேற்றதும் இவருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளிவித்திருந்தார். இதன்படி தற்போது மாளவியாவி்ற்குள் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் வரவேற்பு : வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாரபட்சமின்றி ஒருமித்த குரலாக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். தங்கள் குடும்பத்திற்கு கிடைத்துள்ள கவுரவம் என வாஜ்பாயின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.-பிரச்சனை பாடமொழியல்ல!


ஜி. ராமகிருஷ்ணன்
அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.மராட்டிய மாநிலத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலே, அதே மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க முன் னோடியான கோதாவரி பர்லேக்கர் ஆகியோர் எளிய குடும்பங்களின் குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நிறுவினார்கள்.மகாகவி ரவீந்திரநாத் தாகூர் துவக்கிய சாந்தி நிகேதன் கல்வி நிலையம் தற்போது இந்தியாலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.