GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 19 ஜூலை, 2016

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.

 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று பள்ளிகளில் துவங்கியது. மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்ட பள்ளிகளிலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில், 130 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல், ஆக., 3ம் தேதி நடைபெறும்'

'தமிழகத்தில், 130 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல், ஆக., 3ம் தேதி நடைபெறும்'

'உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்'

'உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடி 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணை

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக, 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 ஜூலை, 2016

அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள 3 ஓட்டுநர் பணியிடத்துக்குத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. பொதுப் பிரிவினர், பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 4 சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்ற, பார்வைத் திறன் 6-க்கு 6 பெற்ற 30 வயது நிரம்பிய பொதுப் பிரிவினர், 35 வயது நிரம்பிய பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), 32 வயது நிரம்பிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

தகுதியுடைய விண்ணப்பதாரர் தங்களின் பெயர், கல்வித் தகுதி, முகவரி, மருத்துவச் சான்று, புகைப்படத்துடன் கூடிய சுயவிவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை, சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையில் ""அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் செயலாளர், அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம், டிபிஐ வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6'' என்ற முகவரிக்கு வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சட்டப்படிப்புக்கு கவுன்சிலிங் அறிவிப்பு

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், ஏழு அரசு சட்ட கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், எல்.எல்.பி., படிப்புடன் இளங்கலை பட்டப்படிப்பும் சேர்த்து, ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாக நடத்தப்படுகிறது.

மொத்தம், 1,050 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதற்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, அம்பேத்கர் சட்டப்பல்கலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓ.சி., என்ற பொதுப்பிரிவினரின், 'கட் ஆப்' மதிப்பெண், 89.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு, 80.375; பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், 76.125; மிக பிற்படுத்தப்பட்டோர், 79.875; பட்டியலினத்தவர், 81; அருந்ததியர், 78.250; பழங்குடியினருக்கு, 68.750 என, 'கட் ஆப்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை, 21ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்கி, 24ம் தேதி முடிகிறது. இதற்கான பட்டியல், பல்கலையின் http:/tndalu.ac.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஜூலை 27 கலாமின் முதல் நினைவு நாள் : வீடுதோறும் நூலகம் திட்டம் அறிமுகம்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஒரு லட்சம் மரங்கள் நடவும், வீடுதோறும் நுாலகம் அமைக்கும் திட்டத்தையும், கலாம் அறக்கட்டளை துவங்க உள்ளது.

இதுகுறித்து, கலாமின் பேரனும், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலருமான ஷேக் சலீம் கூறியதாவது: அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள், ஜூலை, 27ம் தேதி, ராமேஸ்வரத்திலுள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில், அவரது கனவுகள், தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்படி, நினைவிடத்தில் மரக்கன்று நடப்படும். அவரது நினைவாக, குறைந்தது ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்படும்.

முதலாம் ஆண்டு நிகழ்ச்சியில், ராமேஸ்வரம் வருவோருக்கு மரக்கன்றுகள் இலவசமாக அளிக்க உள்ளோம். அதேநாளில், பாம்பன் பாலம் முதல் நினைவிடம் அமைந்துள்ள பேய்க்கரும்பு வரை, 5,000 மாணவர்கள், அப்துல் கலாம் போன்று முக கவசம் அணிந்து பேரணி நடத்துகின்றனர். அவர்கள், கலாமின், 2020 தொலைநோக்கு பார்வையின் முக்கிய அம்சங்கள் அடங்கிய பதாகைகள் சுமந்திருப்பர். அப்துல் கலாமின் கனவுத் திட்டங்களில் ஒன்றான, 'வீட்டுக்கு ஒரு நுாலகம்' அமைக்கும் திட்டத்தின் கீழ், பள்ளிகள், கல்லுாரிகள், அலுவலகங்கள், வீடுகள் போன்றவற்றில் நுாலகம் அமைக்க உதவி செய்வோம். நுாலகம் அமைப்போருக்கும் இலவசமாக புத்தகங்கள் வழங்குவோம். மேலும், 'அப்துல் கலாம் லேர்னிங் கிளப்' என்ற அப்துல் கலாம் வாசிப்பு சங்கம் துவங்கப்படும். இதில், யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அவர்களில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மூலம் பள்ளிகளில் இந்த சங்கத்தை துவக்கி, மாணவர்களுக்கு, கலாமின் தொலைநோக்கு பார்வை குறித்தும், மாணவர்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளன.

ஐந்து ஆண்டுகளாக...: தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப இடமாறுதல் செய்யப்படுகிறது. இதற்கு, மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்து, கவுன்சிலிங் என்ற கலந்தாய்வு, ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் கோடை விடுமுறை

யில் நடத்தப்படும். ஆனால், ஐந்து ஆண்டுகளாக, இந்த கலந்தாய்வு தாமதமாகவே நடத்தப்படுகிறது. இதனால், பள்ளிகள் துவங்கி, சில மாதங்களான பின், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்த கலந்தாய்வுக்கு பிறகே, காலியிடங்களில் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் இட மாறுதல் பெற முடியும். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு நடப்பு மாதம், மூன்றாவது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கலந்தாய்வுக்காக புதிய விதிகளை, பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

ஓரிரு தினங்களில்... : 'இந்த விதிகள், ஓரிரு தினங்களில் வெளியாகும்; முறைகேடு, தில்லுமுல்லுக்கு இடம் அளிக்காமல், அதிகாரிகள் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்பு, அதிகாரத்தை தள்ளி வைத்து விட்டு கலந்தாய்வு நடத்தப்படும்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

டிப்ளமோ இன் நர்சிங்' படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்

பிளஸ் 2 முடித்தோர், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளில் சேர முடியும்.

மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன

டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், பி.பார்ம்., படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 12ம்; 30 சுயநிதி கல்லுாரிகளில், 184 இடங்களும் உள்ளன.

'டிப்ளமோ இன் நர்சிங்' முடித்தோர், 'போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,' படிப்பில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 90ம்; 50 சுயநிதி கல்லுாரிகளில், 1,023 இடங்களும் உள்ளன.

இந்த, மூன்று படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், www.tnhealth.orgஎன்ற

இணையதளத்தில் நேற்று துவங்கியது. ஜூலை, 21 வரை பதிவிறக்கம் செய்யலாம்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

திங்கள், 11 ஜூலை, 2016

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு சேர்க்கை அடுத்த 10 நாள்களில் முடிவடைய உள்ளது

பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு சேர்க்கை அடுத்த 10 நாள்களில் முடிவடைய உள்ள நிலையில், 40,524 இடங்களே இதுவரை நிரம்பியுள்ளன.

இதனால் 1 லட்சத்து 44,772 பொறியியல் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.

பொதுப் பிரிவினருக்கான பொறியியல் சேர்க்கை ஜூன் 27-இல் தொடங்கியது. ஜூலை 21-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வு தொடங்கும்போது மொத்தம் 1 லட்சத்து 85,296 பி.இ. இடங்கள் இடம்பெற்றிருந்தன. ஞாயிற்றுக்கிழமை வரை அழைக்கப்பட்ட 58,175 பேரில், 40,524 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். 17,444 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 207 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.

அடுத்த 10 நாள்களில் இந்த பொதுப் பிரிவினருக்கான சேர்க்கை முடிவடைய உள்ள நிலையில், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 41,717 இடங்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 2,824 இடங்கள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 231 இடங்கள் என மொத்தம் 1,44,772 இடங்கள் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், கலந்தாய்வின் அடுத்த 10 நாள்களில் அதிகபட்சம் 40 ஆயிரம் இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு, ஜூலை 23, 24 தேதிகளில் பிளஸ் 2 தொழில்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, பின்னர் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சேர்க்கை நடத்தப்படும். இதில் அதிகபட்சம் 5 ஆயிரம் இடங்கள் நிரம்பிவிடும்.

எனவே, கடந்த ஆண்டுகளைப் போலவே ஒட்டுமொத்த கலந்தாய்வின் முடிவில் 1 லட்சம் பி.இ. இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் டி.எம்., எம்.சி.எச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர 189 இடங்கள்(82+107) உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு முடிவு ஜூலை 13

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் டி.எம்., எம்.சி.எச். ஆகிய உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேர 189 இடங்கள்(82+107) உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் கடந்த 1-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த படிப்பில் 50 சதவீத அரசு மருத்துவர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீதம் பிற மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, 50 சதவீதம் அரசு மருத்துவர்கள் அல்லாத மீதமுள்ள இடங்களில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

எத்திராஜ் கல்லூரியில் நடந்தது

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இந்த படிப்புகளுக்கு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்காக 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் உயர் மருத்துவ படிப்புகளான டி.எம்., எம்.சி.எச். ஆகியவற்றில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்தது.

தமிழகம் முழுவதுக்கும் ஒரே ஒரு மையம் இது மட்டும்தான். மொத்தம் இந்த படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுத 733 பேர் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடந்தது.

இந்த தேர்வை கூடுதல் மருத்துவக்கல்வி இயக்குனரும், மருத்துவ தேர்வுக்குழு செயலாளருமான ஜி.செல்வராஜன் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

13-ந்தேதி தேர்வு முடிவு வெளியீடு

நுழைவுத்தேர்வை மொத்தம் 733 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில் 610 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 123 பேர் பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள். இன்று (நேற்று) நடைபெற்ற இந்த தேர்வில் 56 பேர் பங்கேற்கவில்லை.

இந்த தேர்வு முடிவுகள் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது

ஆதார் விபரம் வழங்காமல் உள்ள வாடிக்கையாளருக்கு, செப்டம்பர் முதல், மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.

மத்திய அரசின், நேரடி மானிய திட்டத்தின் கீழ், வீட்டு காஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தொகையை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் நேரடியாக வரவு வைக்கின்றன.

இந்த திட்டத்தில் இணைய, வாடிக்கையாளரிடம் இருந்து, வங்கி அல்லது, 'ஆதார்' விபரங்களை, எண்ணெய் நிறுவனங்கள் வாங்கின. தற்போது, அனைவருக்கும், 'ஆதார்' விபரம் தருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆதார் விபரம் வழங்காமல் உள்ள வாடிக்கையாளருக்கு, செப்டம்பர் முதல், மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.

இந்நிலையில், 'காஸ் ஏஜன்சிகளிடம், உங்களின் ஆதார் விபரங்களை தராவிட்டால், மானியம் நிறுத்தி வைக்கப்படும். அதை சமர்ப்பித்தால், மானிய தொகை வழங்கப்படும்' என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., மூலம், வாடிக்கையாளர்களிடம் பிரசாரம் செய்து வருகின்றன. இதனால், ஆதார் விபரங்களை வழங்காதவர்கள், காஸ் ஏஜன்சிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு மெமோ: இணை இயக்குனர் பகிரங்க எச்சரிக்கை

மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால் ஆசிரியருக்கு மெமோ: இணை இயக்குனர் பகிரங்க எச்சரிக்கை

  ''ஆகஸ்டுக்கு மேல், ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, 'மெமோ' வழங்கப்படும்,'' என, இணை இயக்குனர் பாலமுருகன் பேசினார்.

சேலம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்த, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, நேற்று, சேலம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

இணை இயக்குனர் பாலமுருகன் பேசியதாவது: கடந்த ஆண்டு கூட்டத்தில், தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக அதிக தேர்ச்சியை வழங்குவோம் என, வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், அத்தனையும் தேர்தல் வாக்குறுதிகளாக மாறி விட்டது. தமிழகத்தில், சேலம் மாவட்டம், 19வது இடத்தில் உள்ளது. தேர்ச்சியை அதிகரிக்க பல மாற்றங்களை அறிவுறுத்தினோம். அதை, யாரும் பின்பற்றவில்லை. அன்பாக கூறி கேட்கவில்லை என்பதால், அடுத்து நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான். உங்களிடம் வரும் மாணவனை, 100 சதவீத மதிப்பெண் எடுக்க கட்டாயப்படுத்தவில்லை. 35 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வைக்க கூறுகிறோம். அதை கூட நிறைவேற்ற முடியவில்லை. அரசு பள்ளிகளில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளில், இடைநிற்றல் வரக்கூடாது என்பதற்காக, ஆல்பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஆசிரியர்கள் யாரையும் கற்பிக்க வேண்டாம் என கூறவில்லை. ஆகஸ்ட் வரை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், ஆய்வின்போது, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவனுக்கு வாசிக்க தெரியவில்லை என்றால், அந்த ஆசிரியருக்கு உடனடியாக, 'மெமோ' வழங்கப்படும். வகுப்பறையை ஆர்வத்துடன் வைத்திருப்பதை, ஆசிரியர்கள் முதல் கடமையாக நினைக்க வேண்டும். 

அதேபோல், தன் அறையில் அமர்ந்திருப்பது மட்டும் தலைமை ஆசிரியர் பணியல்ல. காலை இரு வகுப்புகள், மாலை இரு வகுப்புகளை கண்காணித்து, அந்த ஆசிரியர் நடத்தும் கற்பித்தல் முறையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டி திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்த, 13 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பத்தாம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி கொடுத்த, 60 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், கலெக்டர் சம்பத், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசு ஊழியர்களுக்கான, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், இறக்கும் அரசு ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகை, மூன்று லட்சம் என்பதை, ஏழு லட்சமாக உயர்த்த வேண்டும்,

''அரசு ஊழியர்களுக்கான, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், இறக்கும் அரசு ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகை, மூன்று லட்சம் என்பதை, ஏழு லட்சமாக உயர்த்த வேண்டும்,'' என, தமிழக பட்டமேற்படிப்பு அரசு டாக்டர்கள் சங்க தலைவர், டாக்டர் லெட்சுமி நரசிம்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், கூடுதல் பலன்களுக்கு வழி வகை செய்துள்ள, அதே நேரத்தில், ஊழியர்களின் சந்தா தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசு ஊழியர்களிடம் இருந்து, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்காக, 150 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை, 180 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு என்பது, நான்கு லட்சமாக உள்ள நிலையில், இறப்புக்கு, மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.அதை அதிதகரிக்க வேண்டும். அது மட்டுமின்றி, இந்த திட்டத்தில், அரசு ஊழியர்களின் பெற்றோருக்கு பயன் இல்லை. அதே நேரத்தில், 25 வயதை தாண்டிய மகன், மகளுக்கும் இத்திட்டத்தின் பலன் கிடைக்காது என, தெரிவித்து இருப்பது ஏற்கக் கூடியதாக இல்லை. அரசு ஊழியர்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த பெற்றோரை, கடைசி கட்டத்தில் காப்பாற்ற வேண்டியதும், அவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பும், அரசு ஊழியர்களுக்கு உள்ளது. மருத்துவ காப்பீட்டுக்கு, நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சில பல குறிப்பிட்ட நோய்களுக்கு, 7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அண்டவெளியில் 3 சூரியன்கள் கொண்ட விசித்திர உலகம்

அண்டவெளியில் 3 சூரியன்கள் கொண்ட விசித்திர உலகத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு மூன்று முறை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நிகழ்வதால் மனிதர்களின் ஆயுள் அதிகமாக இருக்கலாம் என்றும் அனு மானித்துள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்ட வெளியை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெச்.டி 131399ஏபி என்ற மிகப் பெரிய கிரகம் அண்டவெளியில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

பூமியில் இருந்து 340 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள அந்த கிரகத்தின் வயது சுமார் 1.6 கோடி ஆண்டு களாக இருக்கலாம் என்றும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இளம் கிரகங்களில், இதுவும் ஒன்று என்றும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

இது குறித்து அரிசோனா பல்கலைக்கழகத்தின் டேனியல் அபாய் கூறும்போது, ‘‘நேரடியாக காணும் சில கிரகரங்களில் இதுவும் ஹெச்.டி 131399ஏபி ஒன்று. இந்த கிரகத்தின் அமைப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது’’ என்றார்.

இந்த கிரகத்தை ஆய்வு செய்து வரும் கெவின் வாக்னர் கூறும்போது, ‘‘கிரகத்தின் சுற்று வட்டப்பாதைகளும், நட்சத்திரங் களும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. கிரகத்தின் பாதி சுற்றுவட்டப் பாதையே பூமியின் 550 ஆண்டு களை கொண்டதாகவும், அதன் வானத்தில் 3 நட்சத்திரங்கள் மின்னுவதாகவும் அமைந்துள்ளன’’ என்றார்.

சிலியில் உள்ள மிகப் பெரிய தொலைநோக்கியில் பொருத்தப்பட் டுள்ள ‘ஸ்பெக்ட்ரோ போலாரி மெட்ரிக் ஹை கான்ட்ரஸ்ட் எக்ஸோபிளானெட் ரிசர்ச் இன்ஸ்ட்ரூமென்ட்’ (ஸ்பியர்) என்ற கருவி மூலம் அண்டவெளியில் இருக்கும் விசித்திரமான கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகத்துக்கு 3 சூரியன்கள் இருப்பதால் பருவத்துக்கேற்றபடி 3 சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவை நிகழ்வதாகவும், இதன் மூலம் அங்கு மனிதர்களின் ஆயுட் காலம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் கள் கருதுகின்றனர்.

் இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதி நடைபெற உள்ள குருப்-1 முதன்மை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தள்ளிவைக்க வேண்டும்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மை (மெயின்) தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 17-ந் தேதி வெளியிட்டது. மேலும் நேர்முக தேர்வுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடந்தது. இதற்கான நேர்முகத்தேர்வு தேதிகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதன்மை தேர்வு இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கனவே எழுதிய தேர்வின் நேர்முக தேர்வுக்கு தயாராகுவதா? இல்லை முதன்மை தேர்வுக்கு தயாராகுவதா? என்ற குழப்பத்தை தேர்வு எழுதுபவர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து தேர்வுகள்

முதன்மை தேர்வினை தள்ளிவைத்து 2014-15-ம் ஆண்டுக்கான நேர்முக தேர்வினை முதலில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை வெளியிடுவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீண்டும் 2015-16-ம் ஆண்டுக்கான தேர்வு எழுதுவதில் இருந்து விலகுவார்கள்.

இதன் மூலம் முதன் முறையாக முதன்மை தேர்வு எழுதுவோர் பயன்பெறுவார்கள். இம்மாதம் 31-ந் தேதி பாரத ஸ்டேட் வங்கி பணிகளுக்கான முதன்மை தேர்வு, ஆகஸ்டு 7-ந் தேதி நடைபெற உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலை தேர்வு என அடுத்தடுத்து தேர்வுகள் உள்ளது.

தேர்வு தள்ளிவைக்க வேண்டும்

இந்த தேர்வுகளை பெரும்பாலானோர் எழுத உள்ளதால் இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதி நடைபெற உள்ள குருப்-1 முதன்மை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தள்ளிவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இடையே உள்ளது. இதற்கிடையே குரூப்-1 நேர்முக தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது கோரிக்கையுடன் கூடிய மனுவினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சமர்பித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி, ஒரு மாதம் ஆகி விட்டது. ஆனால், இன்னும் பாட புத்தகங்கள் வராமல், வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன

தமிழக பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி, ஒரு மாதம் ஆகி விட்டது. ஆனால், இன்னும் பாட புத்தகங்கள் வராமல், வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன; அத்துடன் பாடநுால் கழகத்தில், இது குறித்துக் கேட்கும் பெற்றோரை, அவமரியாதை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகள், பிளஸ் 1 வகுப்புக்கு வேகமாக மாணவர் சேர்க்கை நடத்தி, ஜூன் முதல் வாரமே பாடங்களை துவங்கின.

அதிகாரபூர்வமாக, ஜூன், 23ல் தான் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்; ஆனால், பல அரசு பள்ளி களிலும், ஜூன் முதல் வாரத்திலேயே, பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின.

அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளைச் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு, தமிழ்நாடு

பாடநுால் கழகம் சார்பில், பிளஸ் 1 புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில்,

பொருளியல், என்ற, 'எகனாமிக்ஸ்' புத்தகம் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.

தனியார் பள்ளி மாணவர்களுக்கோ, பல இடங்களில், 'காமர்ஸ்' என்ற வணிகவியல், 'எகனாமிக்ஸ்' என்ற பொருளியல், 'அக்கவுன்டன்சி' என்ற கணிதப் பதிவியல் புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் கிடைக்காத தால், பெற்றோரும், மாணவர்களும் தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை மையங்களை நேரடியாக அணுகினால், 'புத்தகம் இருப்பு இல்லை' எனக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். அதனால், வணிகவியல் மற்றும் பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில், தமிழ்நாடு பாடநுால் கழக தலைமை அலுவலகத்தில் இயங்கும் பாடநுால் கழக விற்பனை மையத்தில், பிளஸ் 1 புத்தக விற்பனைக்கு சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு

பாடப் புத்தகம் வாங்க செல்வோரை, அலுவலர்கள் தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: கேட்கும் பாடப் புத்தகம் இல்லாவிட்டால், 'இல்லை' என்று மட்டும் கூறுகின்றனர். 'எப்போது வரும்?' எனக் கேட்டால், கோபப்படுகின்றனர். எந்தெந்த புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன என்பதை, தினசரி இருப்பு விவர அறிவிப்பு வைத்தால், அதை பார்த்து விட்டு வரிசையில் நிற்க மாட்டோம். வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று பாடப் புத்தகம் வாங்க சென்றால், 'இருப்பு இல்லை' என, கூறி விடுகின்றனர். வரிசையில் நிற்கும் முன், 'புத்தகம் இருக்கிறதா' எனக் கேட்டால், 'வரிசையில் வாருங்கள்; சொல்கிறோம்' எனக்கூறி, நேரத்தை வீணடிக்கின்றனர். கல்வி சேவை வழங்கும் அரசு நிறுவனம் போல், இந்த மையம் செயல்படவில்லை. ஏதோ இலவச பொருளை வழங்குவது போல், முறை தவறி நடந்து கொள்கின்றனர். இதுகுறித்து, விற்பனை மையத்தின் மாடியில் இருக்கும் தலைமை அலுவலகத்தை அணுகினால், அங்கு உள்ளே யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை; வெளியே விரட்டி விடுகின்றனர். பாடநுால் கழக மேலாண் இயக்குனரை சந்திக்கவே முடியவில்லை. அவர் உயர் அதிகாரி என்றாலும், பெற்றோரின் குறைகளை கேட்க, தனியாக அதிகாரிகளை நியமிக்கலாம். அல்லது புகார் பதிவு மையங்களை திறக்கலாம். அது கூட இல்லாமல், பாடநுால் கழக நிர்வாகம் மோசமான நிலையில் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.