இக்னோ மதுரை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்துள்ளதாவது:
உயர் கல்வியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த, அப்பிரிவு மாணவர்களுக்கு கட்டண சலுகை அறிவித்துள்ளது.
இதன்படி பி.ஏ., பி.எஸ்சி., இளநிலை சமூக அறிவியல், சுற்றுலா படிப்புகளுக்கு ஜூலை மற்றும் ஜனவரி சுற்றுகளுக்கு சேர விருப்புவோருக்கு பொருந்தும். இதன் விவரம் www.ignou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க ஆக.,17 கடைசி தேதி. மேலும் விவரங்களுக்கு 0452 - 2380 733 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.