GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 31 அக்டோபர், 2017

சனி, 7 அக்டோபர், 2017

08.10.2017 அன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

08.10.2017 அன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் (special camp) அந்த அந்த வாக்குச் சாவடி மையங்களில் காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 நடைபெறஉள்ளது. 18 வயது முடிந்தவர்கள் வாக்காளராக சேர தகுதியுடையவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்க FORM - 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க FORM - 7, வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம் மற்றும் புகைபடம் மாற்றம் போன்ற திருத்தங்கள் செய்ய FORM - 8.  ஓரே தொகுதியில் பாகம் மாற்ற FORM - 8A, கொடுத்து மாற்றம் செய்து கொள்ளலாம், R. முருகன் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பாகம்-51 தேவண்ணகவுண்டனூர்.
சங்ககிரி

இணைக்க பட வேண்டிய ஆவணங்கள்,
FORM - 6      1. குடும்ப அட்டை நகல், 2. ஆதார் அட்டை நகல், 3. மாற்று சான்றிதழ் (TC) நகல் வயதிற்கு. மாற்றுச் சான்று இல்லாதவர்கள்  மருத்துவர் சான்று நகல் 4. கடவு சீட்டு (Pass port)நகல்,

FORM - 8,                            1. பெயர் திருத்தம் எனில் - மாற்று சான்று நகல், ஆதார் அடையாள அட்டை நகல்,                   2. பெயர் மாற்றம் எனில் அரசு இதழின் நகல்,      3. முகவரி திருத்தம் மற்றும் மாற்றம் -           அ) வீட்டு வரி ரசீது நகல் ஆ) கடவு சீட்டு நகல்         இ) கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு அசல் சான்று புகைபடத்துடன்,                 ஈ) அஞ்சலக அலுவலகத்தில் விலாச அட்டை. (Post Office Address Card). இவற்றில் ஏதோ ஒன்று, 4. பிறந்த தேதி திருத்தம் எனில் -              அ) மாற்று சான்று (TC) நகல், மாற்று சான்று இல்லாதவர்கள் மருத்துவர் சான்று                                ஆ) கடவு சீட்டு (Pass port)  நகல். இவைகளில் ஏதோஒன்று,                       4) பாலினம் மாற்றம்  -     அடையாள அட்டை நகல் 5. புகைப்படம் மாற்றம் - சமீபத்தில் எடுத்த புகைப்படம்  கொடுத்து திருத்தம் செய்து கொள்ளலாம்

FORM - 7.   1. இறந்தவரை நீக்க வேண்டும் எனில் இறப்பு சான்று நகல் மற்றும் குடும்ப உறுப்பினரின் விண்ணப்பம்,                    2. இரட்டை  பதிவு இருப்பின் நீக்க வேண்டிய வாக்காளர் அட்டை  அசல்

FORM - 8A                            பாகம் மாற்றம் இருப்பின் -                          அ) தற்பொழுது குடியிருக்கும் வீட்டு வரி ரசீது (அ) கிராமநிர்வாக அலுவலர் குடியிருப்பு சான்று அசல் புகைப்படத்துடன்               ஆ) மாற்றம் செய்ய வேண்டிய  பாகத்தை (part no)  சரியாக குறுப்பிட வேண்டும். கொடுத்து பாகம் மாற்றிக் கொள்ளலாம்

மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

*மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.* இத்திட்டத்தில், துாய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், துாய்மை பள்ளி விருது பெற, செப்., 1ல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது. அக்., 31 வரை, பதிவு செய்யலாம் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், துாய்மை பள்ளி விருதுக்கு, புகைப்பட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர், நந்தகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 13 கட்டளைகளை, பொதுப்பணித்துறை பிறப்பித்து உள்ளது

வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 13 கட்டளைகளை, பொதுப்பணித்துறை பிறப்பித்து உள்ளது.இது தொடர்பாக, முதன்மை பொறியாளர், மண்டல தலைமை பொறியாளர் அலுவலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கட்டடங்களை, உதவி பொறியாளர்கள் உடன் சென்று, உதவி செயற்பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
 அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்
 அரசு கட்டடங்களில், தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அங்கு, மழைநீர் தேங்காத அளவில் பணிகளை செய்ய வேண்டும்
 அரசு மருத்துவமனைகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும். தண்ணீர் வழியாக நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டும்
 கட்டடங்களின் மேற்கூரைகளிலும், டைல்ஸ் மீதும் மழைநீர் தேங்குவதை தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
 பருவ மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இருக்க வேண்டும்
 கடற்கரை பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். இது போன்று, 13 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.