GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 15 மார்ச், 2017

தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல்

தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் இன்று முடிகிறது.

 விடுபட்ட குழந்தைகளை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து, தடுப்பூசி போட சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஐந்து மாதங்களாக, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்

. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, 2016 ஜூலையில், விளம்பரம் வெளியிடப்பட்டது.

வெள்ளி, 10 மார்ச், 2017

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலிப் பணியிடங்களுக்கு தேர்வர்களை தேர்வு செய்வதற்கான இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்குகிறது.


இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விஏஓ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியானது.
இந்த நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 147

’டெட்’ தேர்வுக்கு, ’தாட்கோ’ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் தகுதிக்கான, ’டெட்’ தேர்வுக்கு, ’தாட்கோ’ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு, ஏப்., 29 மற்றும் 30ல் நடக்க உள்ளது. எனவே, ’டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழகமான, தாட்கோ மூலம், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது

தமிழகத்தில் புதிய ஓய்திய திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் காலம், பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.


தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா, அரசு பங்கு தொகை என, ஒன்பதாயிரம் கோடி ரூபாயை, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம், அரசு செலுத்தவில்லை. இதனால், ஓய்வூதிய பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை, எஸ்.பி.ஐ., 2012ல் ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை, ஏப்., 1 முதல் அமல்படுத்த உள்ளதாக, எஸ்.பி.ஐ., கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி, பெருநகரங்கள், நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக, முறையே, 5,000, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் இருப்பை, தங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டும்

பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன

பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.பத்தாம் வகுப்பு மாணவர்கள், உயர் கல்வி படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு தேசிய திறனாய்வு தேர்வு, மாநில அளவிலும், பின், தேசிய அளவிலும் நடத்தப்படுகிறது.மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல், தமிழகம் முழுவதும் நடந்தது. 6,580 பள்ளிகளை சேர்ந்த, 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவக்கி உள்ளது. 'தமிழகத்தில், மே மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவக்கி உள்ளது. 'தமிழகத்தில், மே மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்று, உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.

தமிழகத்தில், 2012 முதல், 2014 வரை, 'டெட்' தேர்வு முடித்தோர்க்கு பணி நியமனம் கிடைக்குமா? டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன.

'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன.

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேர், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேர், இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

போலியோ சொட்டு மருந்து முகாம், ஏப்., 2ல் நடத்தப்படுகிறது

ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தால் தள்ளி வைக்கப்பட்ட, போலியோ சொட்டு மருந்து முகாம், ஏப்., 2ல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஜன., - பிப்., மாதங்களில், சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும். தமிழகத்தில், தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்படுவதால், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்., 2ல், முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.

புதன், 8 மார்ச், 2017

தமிழக அரசின் உதவித்தொகை பெற விரும்பும், ஆதிதிராவிடர் எழுத்தாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் உதவித்தொகை பெற விரும்பும், ஆதிதிராவிடர் எழுத்தாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இதில், 10.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 2ல், பிளஸ் 2 தேர்வு துவங்கியது. மொத்தம், 2,434 தேர்வு மையங்களில், 9.33 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்கின்றனர்.

பிளஸ் 2 ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களிலும், ஏழு மதிப்பெண்களுக்கு, வினாத்தாள் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில், போனஸ் மதிப்பெண் தர, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 ஆங்கில தேர்வில், இரண்டு தாள்களிலும், ஏழு மதிப்பெண்களுக்கு, வினாத்தாள் முறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில், போனஸ் மதிப்பெண் தர, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 6 மார்ச், 2017

'தேசிய சட்டப் பள்ளி மற்றும் பல்கலைகளில் சேர விரும்புவோர், பொது சட்ட நுழைவுத் தேர்வு

: 'தேசிய சட்டப் பள்ளி மற்றும் பல்கலைகளில் சேர விரும்புவோர், பொது சட்ட நுழைவுத் தேர்வுக்கு, வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி துணைவேந்தர் கமலா சங்கரன் தெரிவித்துள்ளார்.

'டெட்' தேர்வுக்கு, இன்று முதல் , வரும் 22 வரை விண்ணப்பங்கள் வினியோகம்

ஆசிரியர் பதவி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் குறிப்பிட்ட பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.

ஞாயிறு, 5 மார்ச், 2017

அரசு ஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.

அரசு ஊழியர்கள் சம்பளத்தில், மாதந்தோறும், வருமான வரி பிடித்தம் செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: 'வருமான வரியை, 2018 பிப்ரவரியில், ஒரே தவணை யாக பிடித்தம் செய்யக்கூடாது. இந்த ஆண்டு மார்ச் முதல், மாதந்தோறும் தவறாமல் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருமான வரித் துறை அறிவுறுத்தி உள்ளது.எனவே, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதியான, ஜி.பி.எப்., சந்தா தொகையை, அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வரும், 8ம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 4 மார்ச், 2017

தமிழக உள்துறை முதன்மை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை செயல் 
அதிகாரியும், தமிழ்நாடு சாலை பிரிவு திட்ட இயக்குனருமான (பொறுப்பு) 
நிரஞ்சன் மார்டி, உள், மதுவிலக்கு மற்றும் கலால்வரித் துறையின் முதன்மைச்
 செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறாவிட்டால், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.'

'அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.'அரசு, உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் டி.இ.டி., தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.

வெள்ளி, 3 மார்ச், 2017

'வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், மாதாந்திர உதவித் தொகை பெற, ஜூன், 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

 'வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், மாதாந்திர உதவித் தொகை பெற, ஜூன், 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. வயது முதிர்த்த தமிழறிஞர்களுக்கு, மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகையை, தமிழக அரசு வழங்கி வருகிறது.