GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 12 மார்ச், 2015

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி, பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.

‘பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தற்போது வேண்டாம்’: தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரிஆசிரியர் கழகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்துகொண்டிருக்கும் போதே அம்மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தேர்வுப்பணியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்,’ என, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ல் துவங்கின. மொழிப்பாடத்திற்கான தேர்வுகள் நேற்றுமுன்தினம் முடிந்தன. மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும்பணி தமிழகம் முழுவதும் மார்ச் 16,17ல் நடக்கிறது. அரசு தேர்வுகள்துறையின் நடவடிக்கையால் தேர்வுப்பணியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக விருதுநகர்மாவட்ட செயலர் மூர்த்தி கூறுகையில், ‘பிளஸ் 2 தேர்வுப்பணியில் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர் போன்றவற்றில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அதற்கான பயிற்சி பெற்றதால் தேர்வுகள் பிரச்னையின்றி நடக்கின்றன.
இந்நிலையில் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்த தேதி அறிவிக்கப்பட்டதால் அவர்களில் பலரை அப்பணியில் இருந்துவிடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குப்பதிலாக புதிய ஆசிரியர்களை போதுமான பயிற்சியின்றி நியமிக்கும் போது தேர்வுப்பணியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். இனிதான் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்க உள்ளன. அனைத்து தேர்வுகளும் முடிந்தபின்னர் விடைத்தாள்களை திருத்தும்பணியை துவங்க தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.

சென்னை அரசுப் பள்ளியில், பிளஸ் 2 பிரிவில், ஐந்து பாடங்களுக்கு, ஓர் ஆண்டாக ஆசிரியர் இல்லாத தகவல் அம்பலமானதை தொடர்ந்து, கல்வித்துறை விழிப்படைந்துள்ளது.

சென்னை அரசுப் பள்ளியில், பிளஸ் 2 பிரிவில், ஐந்து பாடங்களுக்கு, ஓர் ஆண்டாக ஆசிரியர் இல்லாத தகவல் அம்பலமானதை தொடர்ந்து, கல்வித்துறை விழிப்படைந்துள்ளது. பொதுத் தேர்வு துவங்குவதற்கு, இரண்டு நாட்களுக்கு முன், இரு பாடங்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, எழும்பூரில் வடக்கு மற்றும் தெற்கு கல்வி மாவட்ட அதிகாரி அலுவலக வளாகத்தில், அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பிரிவில், 200 மாணவர்கள், ஐந்து பிரிவுகளில் படித்து வருகின்றனர். பிளஸ் பொதுத் தேர்வு ஏற்கனவே துவங்கி விட்டது. இப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலம் பாடத்தின், இரண்டு வினா தாள்களிலும், வினாக்கள் எளிமையாக இருந்தும் சரியாக எழுதவில்லை.
இதுகுறித்து, மாணவர்களிடம் விசாரித்த போது, ’எங்கள் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு ஆங்கிலம், கணக்குப் பதிவியல், பொருளாதாரவியல், வணிகவியல் மற்றும் கணினிப் பிரிவுக்கு, ஓராண்டாக ஆசிரியர்களே இல்லை’ என்றனர். ஆசிரியர் இல்லாமல், பாடமும் நடத்தாமல், என்ன பாடம் என்றே தெரியாமல், தேர்வு எழுதும் நிலைக்கு ஆளாகி உள்ளோம் என, அவர்கள் புலம்பினர்.
இதுகுறித்து, ’தினமலர்’ நாளிதழில், கடந்த, 10ம் தேதி செய்தி வெளியானது. உடனடியாக விழித்துக் கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று கள ஆய்வு நடத்தினர். முக்கியப் பாடத் தேர்வுக்கு, இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், நேற்று, இரண்டு சிறப்பு ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வணிகவியல் மற்றும் கணினி பிரிவுக்கு ஆசிரியர்கள் வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டு, நேற்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இன்றும் நடத்தப்பட உள்ளது. இந்த, இரண்டு நாட்களில், 400 பக்கங்களுக்கு மேல் உள்ள இரண்டு, ’வால்யூம்’ புத்தகத்தின் பாடங்களை, ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு புரிய வைக்க ஆலோசித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக, சில முக்கிய வினாக்களை மட்டும் குறித்துக் கொடுத்து, அவற்றை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு, மனதளவில் மாணவர்களும் தயாராகி விட்டனர். ஆசிரியர்களை அரசு நியமிக்காததால், தங்களுக்கு மட்டும், ’பாஸ் மார்க்’ போட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இருப்பதாக சில மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். தற்போது செய்தி வெளியான பின், சுறுசுறுப்பாகியுள்ளனர். இதனால், இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை’ என, வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் சட்டதிருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை

 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் 

சட்டதிருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் 

நிறைவேறியது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ்\

 உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. 

இதையடுத்து மசோதா குரல் ஓட்டெப்பின் மூலம்

 நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதா 

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது 

குறிப்பிடத்தக்கது.

கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்து தேர்வு, மார்ச், 15ல் நடத்தப்படுகிறது

"சேலம் மாவட்டத்தில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்து தேர்வு, மார்ச், 15ல் நடத்தப்படுகிறது. சேலம் கலெக்டர் மகரபூஷணம் விடுத்துள்ள அறிக்கை:
கற்கும் பாரதம் எழுத்தறிவு திட்டம், 2009 முதல் அமலில் உள்ளது. இத்திட்டத்தின்படி, 14 முதல், 35 வயதுக்கு உட்பட்ட எழுத படிக்க தெரியாத பெண்களுக்கு, எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சேலம், தர்மபுரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், இத்திட்டம் அமலில் உள்ளது. சேலம் மாவட்டத்தில், 3.51 லட்சம் பெண்களுக்கு, எழுத்தறிவு பயிற்சி வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எழுத்தறிவற்றோருக்கு பயிற்சி வழங்குவதற்காக, ப்ளஸ் 2 முடித்த இளைஞர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பயிற்சி பெற்றவரின் திறன் அறிய, ஆண்டு தோறும் மார்ச், ஆகஸ்ட் மாதங்களில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடத்தப்படுகிறது.மார்ச், 15ம் தேதி அடிப்படை எழுத்து தேர்வு நடக்கிறது. இதில், 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். கற்கும் பாரதம் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், காலை, 10 மணி முதல் மாலை, 5 மணி வரை கற்போர்களுக்கு வசதியான நேரத்தில் வந்து, மூன்று மணி நேரம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தேர்வுக்கு தேவையான விடைத்தாள், பேனா ஆகியவை இலவசமாக வழங்கப்படும், சேலம் மாவட்டதில் இத்தேர்வு எழுத இதுவரை, 86 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.அடிப்படை எழுத்தறிவுத் தேர்வை, மத்திய அரசின் சார்பாக தேசிய திறந்த வெளி பள்ளியும், தேசிய எழுத்தறிவு இயக்கமும் இணைந்து நடத்துகின்றன. இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படும்.

பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சான்றோர் பேரவை நிர்வாகிகள் ஆத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சான்றோர் பேரவை நிர்வாகிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நரசிங்கபுரம் நகராட்சி, விநாயகபுரம் பகுதியில், உதவி தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது. நேற்று, காலை 10 மணி முதல், மதியம் 2 மணி வரை, பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சான்றோர் பேரவை சார்பில், 64 பேர், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பந்தல் அமைத்து, "தர்ணா' போராட்டம் நடத்தினர்.ஆத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்து இறந்த ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோரின் காலியிடத்தை நிரப்ப வேண்டும்.நீதிமன்ற உத்தரவு பெற்ற, 19 பேருக்கு, ஊதிய நிர்ணயம் செய்து, மாநில கணக்காயருக்கு அனுப்பாமல், காலதாமதம் செய்யப்படுகிறது. 25 ஆண்டு பணி முடித்தவருக்கு, 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படவில்லை. 30 ஆண்டு பணி முடித்த, ஒன்பது பேருக்கு, நிலுவைத் தொகை வழங்கவில்லை. பணிக்கால நிலுவை, சரண்டர் தொகை வங்காமல் அலைகழிப்பு செய்யப்படுகிறது.
கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்றபோது, உதவி தொடக்க கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, 30 நாட்களில் நிறைவேற்றுவதாக, பிப்ரவரி, 13ம் தேதி, எழுத்து மூலம் உறுதியளித்தார். ஆனால், இதுநாள் வரை, கோரிக்கை மீது நடவடிக்கை இல்லை என, கோஷம் எழுப்பினர்.
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் பேரவை தலைவர் சீனிவாசன், செயலாளர் சிரோன்மணி, நிர்வாகிகள் கபீர்தாஸ், முத்துசாமி, பழனியப்பன், சின்னப்பிள்ளை, செல்லப்பிள்ளை, பஞ்சலிங்கம், சந்தோசம், ராமசாமி, சேக்சிலார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 11 மார்ச், 2015

கல்வி மூலம் உயர்பதவிக்கு செல்ல பழங்குடியின மாணவர்களுக்கு வாய்ப்பு

கல்வி மூலம் உயர்பதவிக்கு செல்லும் வாய்ப்பு பழங்குடியின மாணவர்களுக்கு உள்ளதால், பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்" என, கலெக்டர் ராஜாராமன் கூறினார்.
ராஜபாளையத்தில் நடந்த ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் உண்டு உறைவிட விடுதி ஆண்டுவிழாவில் அவர் பேசுகையில், "பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்று உயர்பதவி பெற வாய்ப்பு உள்ளது. பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். மலைவாழ் மக்கள் கல்விக்கு அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது. இதை பயன்படுத்திகொள்ள வேண்டும்" என்றார்.