GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 30 ஜூன், 2016

பகுதி நேர ஆசிரியர்கள் - பணிக்கு வராத நாட்களை ஈடு செய்தல் மாநில திட்ட இயக்குனரின் சுற்றறிக்கை

பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கு வராத நாட்களை ஈடு செய்தல்  மாநில திட்ட இயக்குனரின் சுற்றறிக்கை 
  

வாட்ஸ்-அப் செயலிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

வாட்ஸ்-அப் செயலிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வாட்ஸ் அப் உள்ளிட்ட பயன்பாட்டுச் செயலிகளுக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

கல்வி உதவித்தொகை பெற 'ஆதார்' எண் கட்டாயம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு கட்டாயம், 'ஆதார்' எண் இருக்க வேண்டும்' என, மத்திய பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலை தேர்வு இன்று 'ரிசல்ட்' வெளியீடு

 சென்னை பல்கலையின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.

சென்னை போலீசார் இரவு ரோந்து செல்ல சைக்கிள்

சென்னை போலீசார் இரவு ரோந்து செல்ல சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, இன்று தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.
சென்னையில், சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 'போலீசார் இரவு ரோந்து செல்லாததே, குற்றங்கள் அதிகரிக்க காரணம்' என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TNPSC 'குரூப் - 2 ஏ' தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2 ஏ' பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.  

'அடிப்படை சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் வழங்க மறுத்த, மத்திய அமைச்சரவை முடிவை எதிர்க்கிறோம்; திட்டமிட்டபடி, வேலைநிறுத்தத்தில் இறங்குவோம்,'' என, தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்க பொதுச் செயலர்

''அடிப்படை சம்பளம், 26 ஆயிரம் ரூபாய் வழங்க மறுத்த, மத்திய அமைச்சரவை முடிவை எதிர்க்கிறோம்; திட்டமிட்டபடி, வேலைநிறுத்தத்தில் இறங்குவோம்,'' என, தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்க பொதுச் செயலர் கண்ணையா கூறினார்.

கடைகள், தியேட்டர்கள், வங்கிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை, 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான, புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

புதுடில்லி:கடைகள், தியேட்டர்கள், வங்கிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை, 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான, புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை, நேற்று அனுமதி அளித்தது.

7 வது சம்பள கமிஷன் பரிந்துரை -70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை

7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

புதன், 29 ஜூன், 2016

நலவாரிய நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தை களுக்கு கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

நலவாரிய நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தை களுக்கு கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை களைய வேண் டும். அடிப்படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக மக்களின் கருத்தை கேட்டுப் பெற வேண்டும்: பொதுப் பள்ளிக்கான மேடை வலியுறுத்தல்

பொதுப்பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னை யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம், புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாதத் தலைப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளி யிட்டது. நாடு முழுவதும் இது தொடர்பாக கருத்துக் கேட்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற் றோர்கள், ஆசிரியர்களிடம் பேசியபோது, பெரும்பாலா னோர் புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களுக்கு தெரியாது என்றுதான் தெரிவித்தனர். அப்படி யானால், இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட வர்கள் யார்? எங்கு கூட்டங்கள் நடைபெற்றன? தெரிவிக்கப்பட்ட கருத்துகள் என்ன? என்ற தகவல் களை அரசு வெளியிட மறுக்கிறது.

குடிநீர் விழிப்புணர்வு வாரம்: தமிழகம் முழுவதும் நீராதாரங்களின் குடிநீர் தரம் ஆய்வு செய்யப்படும் - ஜூலை 1-ல் தொடங்குவதாக அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் அனைத்து நீராதாரங்களின் நீர் மாதிரிகள் ஜூலை 1 முதல் 3-ம் தேதி வரை சேகரிக்கப்பட்டு, நீரின் தர விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

ஒரே மாதிரியான பெயர்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

ஒரே மாதிரியான பெயர்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் விவரத்தை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விரிவுரையாளர் பணி விண்ணப்பங்கள், ஜூலை, 15ம் தேதி முதல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும். ஜூலை, 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சி.இ.ஓ., அலுவலகங்களில் மட்டுமே வழங்க வேண்டும்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணியாற்ற, 272 விரிவுரையாளர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர்.இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஐ.டி.ஐ., நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதா மாதம் உதவித்தொகை பஸ் கட்டண சலுகை,

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.

தமிழகத்தில் சித்தாஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்இன்று துவங்குகிறது. 

சுற்றுச்சூழல் பொறியாளர் பணிக்கு, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பொறியாளர் பணிக்குபொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செவ்வாய், 28 ஜூன், 2016

'நதிநீர் இணைப்புக்காக, , ஒரு கோடி ரூபாயை நடிகர் ரஜினிகாந்த் 'டிபாசிட்'

 ''நதிநீர் இணைப்புக்காக, ஏற்கனவே சொன்னபடி, வங்கியில், ஒரு கோடி ரூபாயை ரஜினி, 'டிபாசிட்' செய்து விட்டார். பணிகள் துவங்கியதும், ஒப்படைக்கப்படும்,'' என, ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா தெரிவித்தார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான 'ரேண்டம்' எண்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான 'ரேண்டம்' எண்ணை, பல்கலைக் கழக துணைவேந்தர் மணியன் வெளியிட்டார்.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை நிறைவு செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது

மிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை நிறைவு செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மாணவர் எண்ணிக்கை குறைவது ஏன்? : பள்ளிக்கல்வி செயலர் பதிலால் குழப்பம்

'மத்திய அரசு கணக்கெடுப்பில், தமிழகத்தில், 8ம் வகுப்புக்கு பின் படிப்போரின் எண்ணிக்கை குறைய, வயது பிரச்னையே காரணம்' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.

ஏழாவது ஊதியக் கமிஷன் அறிக்கை, விரைவில்

 நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும்,  நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும், ஏழாவது ஊதியக் கமிஷன் அறிக்கை, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இந்நாள் வரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை உடன் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனை

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் தொடக்க பள்ளிகளைநடுநிலை பள்ளிகளாகவும்நடுநிலை பள்ளிகளை,உயர்நிலையாகவும்உயர்நிலை பள்ளிகளை,மேல்நிலையாகவும் தரம் உயர்த்தமத்திய அரசின் பல திட்டங்களில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளில்மத்திய அரசு அளித்த நிதி உதவியும்அனுமதிக்கப்பட்ட திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை எனமத்திய அரசு பல்வேறு விளக்கங்களை தமிழக பள்ளிக்கல்வி செயலரிடம் பெற்றுள்ளது. இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான திட்டங்களையும்அதற்கான நிதியையும் அறிக்கையாக அளித்துமத்திய அரசிடம் தமிழக அரசு நிதி உதவி கேட்டுள்ளது.
இதை பரிசீலித்த மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின்அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட பிரிவுதமிழகத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நிபந்தனைகள் என்ன?
தமிழக அரசு அனுமதி கேட்ட திட்டங்களும்நிதியும்மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு முடிவு செய்யப்படும். ஆனால்மாநில அரசின் திட்ட பங்கீடு சரியாக வழங்கப்படும் என்றுதமிழக அரசு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும். 
ஒவ்வொரு பள்ளியிலும்பெற்றோர்கல்வியாளர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழு கண்டிப்பாக அமைத்துஅவர்களது பெயரில் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அந்த கணக்கில் பள்ளியின் வளர்ச்சி நிதி வழங்கப்படும்.
கடந்த கல்வி ஆண்டில்மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் நிறைவு சான்றிதழை அளித்த பிறகேமுதல் கட்டமாக நிதி ஒதுக்கப்படும். இரண்டாவது தவணை நிதியானதுமாநில அரசின் பங்கு தொகை ஒதுக்கிய பிறகேமத்திய அரசிடமிருந்து வழங்கப்படும். இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஞாயிறு, 26 ஜூன், 2016

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்புக்கு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் கடந்த, 23ல் துவங்கியது. முதல் நாளில், விளையாட்டு பிரிவு
மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. நேற்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. நாளை முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கும்; ஜூலை, 23, 24ம் தேதிகளில்
தொழிற்கல்வி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. மொத்தம், 524 கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக, மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம்

தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக, மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில், பல்வேறு கல்வித் திட்டங்களை கிடப்பில் போட்டு, அலட்சியமாக இருந்த தால், பள்ளிக் கல்வி செயலர் சபிதாவை, சமீபத்தில் டில்லிக்கு அழைத்து, மத்திய மனித வள அமைச்சக அதிகாரிகள் கண்டித்து உள்ளனர்.

மத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான

கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' ,

ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு வழங்க, சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெற வேண்டிய அவசியம் இல்லை' என,
பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில், 2002 முதல் பல்வேறு கட்டங்களில் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி

ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகள் பணி முடித்த பின், தேர்வு நிலை பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

சென்னையில், 1,366 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று துவக்கி வைத்தார்.

சென்னையில், 1,366 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று துவக்கி வைத்தார்.
அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நகரங்களை ஏற்படுத்த, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக, 100 நகரங்கள் தேர்வாகி உள்ளன. முதல்கட்டமாக, 20 நகரங்களில் இந்த திட்டத்தை, புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். புனேயில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் கந்தசாமி, மாநகராட்சி சிறப்பு திட்டங்கள் துறை செயற்பொறியாளர்கள் பாபு,
ஜெயகாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண், திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது

பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண், திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும், ஓராண்டு பி.எட்., படிப்பு, இந்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 690 கல்லுாரிகளில்,

70 ஆயிரம் பி.எட்., மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ், பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்

முறை குறித்து, கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 15 விதமான செய்முறை தேர்வுகளுக்கு, 200 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்பனா சாவ்லா விருது பெற விரும்புவோர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

 மதுரை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விரும்புவோர்விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பள்ளிச்சீருடை இல்லாமல் பஸ்சில் பயணம் செய்தால்,அவர்களது பஸ் பாஸ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிச்சீருடை இல்லாமல் பஸ்சில் பயணம் செய்தால்,அவர்களது பஸ் பாஸ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவுப்படி பள்ளி மாணவர்கள்பள்ளி செல்ல வசதியாக அனைத்து மாணவர்களுக்கும்இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

கூலி தொழிலாளி மகளின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டதுடன், முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கூலி தொழிலாளி மகளின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டதுடன்முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10லட்சம் ரூபாய் வழங்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

பள்ளிக் கல்வித் துறை செயலர், செப்., 2ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்துஇரு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்காவிட்டால்பள்ளிக் கல்வித் துறை செயலர்செப்., 2ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனசென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னைமணலிசடையான்குப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டட கூரைசீரமைப்புப் பணியின் போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில்ஒரு மாணவனும்ஒரு மாணவியும் காயமடைந்தனர். கடந்த, 2014ல் நடந்த இச்சம்பவத்தில்காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பின் சென்னை பிரிவு செயலர் வி.கார்த்திகேயன் என்பவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சி படிப்பு தேர்வுக்கான, ஹால் டிக்கெட்டை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சி படிப்பு தேர்வுக்கானஹால் டிக்கெட்டைஇன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ பயிற்சிக்கான,இரண்டாம் ஆண்டு தேர்வுஜூன் 30ல் துவங்கிஜூலை 15 வரையிலும்முதலாம் ஆண்டு தேர்வுஜூலை1ல் துவங்கிஜூலை 16 வரையிலும் நடக்கிறது. 
இதில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள்தத்கல் திட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும்www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி மூலம்இன்று முதல்ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளிகளில் மொபைல் போனுக்கு அனுமதி

பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வருவதற்கான தடை நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பள்ளிக்குள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோல்கட்டாவில் உள்ள 3 பள்ளிகளில் மட்டும் தற்போது மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் எதிர்ப்பும்ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதனால் கோல்கட்டா வில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.
பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்து வரலாம்பயன்படுத்தலாம். ஆனால் மொபைல் போனை சைலன்ட் மோடில் தான் வைத்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.aÇ

சனி, 25 ஜூன், 2016

கல்வியில் பின்தங்கியுள்ள 3,000 மாணவர்களை தத்தெடுத்திருக்கும் அமெரிக்கத் தமிழர்களின் தமிழ்நாடு அறக்கட்டளை

தமிழகத்தில் பின்தங்கிய சுமார் 3,000 மாணவர்களை தத்து எடுத்து அவர்களின் அடிப்படைக் கல்வியை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா வாழ் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு அறக்கட்டளை.
அமெரிக்கா வாழ் தமிழர்களில் 4 குடும்பங்கள் கைகோர்த்து 1974-ல் அமெரிக்காவில் ‘தமிழ்நாடு அறக்கட்டளை’யை உருவாக்கினார்கள். தொடக்கத்தில் இதன் அங்கத்தினர்கள் தங்களுக்குள் நிதி திரட்டி தமிழகத்தில் தங்களது சொந்த ஊரில் ஏழைகளின் படிப்பு, பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு உதவினார்கள். இதைத் தொடர்ந்து 1984-ல் சென்னையிலும் ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ தொடங்கப்பட்டது. அமெரிக்க தமிழர்களால் அனுப்பப்படும் நிதியானது இதன் வழியாக உரிய திட்டங்களுக்குச் செலவிடப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 'தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில், பொது மக்கள் வந்து செல்லும் இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, போலீஸ் டி.ஜி.பி., அனுப்பிய கடிதம் அடிப்படையில், பொது இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த அனுமதி அளித்து, 2012 டிச., 14ல் அரசாணை வெளியிடப்பட்டது.
'பொது கட்டடம் என்றால், பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக கருதப்பட வேண்டும்' என, விதிமுறையில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். நுாறு பேருக்கு மேல் தங்கியிருக்கும் விடுதிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மருத்துவமனை, தாய் - சேய் நல விடுதி, மருத்துவ கிளினிக், திருமண மண்டபம், வங்கி, ஏ.டி.எம்., மையம், இன்சூரன்ஸ் நிறுவனம், வணிக வளாகம், பெட்ரோல் பங்க், தொழிற்சாலைகள், பஸ் நிலையம், பஸ் நிறுத்தம், ஓட்டல், கிளப் போன்றவற்றிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. இவ்விதிகளில், அரசு மேல்நிலைப் பள்ளிகள் என்பதை மாற்றி, 'பள்ளிகள்' என, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, இம்மாதம், 21ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

மாணவர் சிறப்பு திட்டத்தில்(எலைட்) பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் 10 பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.

 ராமநாதபுரத்தில் மீள் திறன் மாணவர் சிறப்பு திட்டத்தில்(எலைட்) பயின்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் 10 பேர் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 450க்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறும் நோக்கில் சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய கலெக்டர் நந்தகுமார் ஏற்பாட்டில் மீள்திறன் மாணவர் சிறப்பு பயிற்சி வகுப்பு(எலைட்) துவங்கப் பட்டது. ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளியில் நடந்த எலைட் வகுப்பில் பயின்று 2014-15 கல்வி ஆண்டில் மருத்துவம்,

அரசு பள்ளிகளில் கலைக்கப்படும் என்.சி.சி., படை?

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்வசதி படைத்த மாணவர்கள் மட்டுமேதேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,யில் சேர முடியும் என்பதால்அதன் செயல்பாடுகூடாரத்துடன் காலியாகி வருகிறது. 
மத்திய அரசின் தேசிய மாணவர் படை என்ற தன்னார்வ திட்டம்ராணுவம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு தனியாக ராணுவ அதிகாரிகள்ஐ.பி.எஸ்.அதிகாரிகள் போன்றோர் நியமிக்கப்பட்டுமாவட்ட வாரியாகவும்மண்டல வாரியாகவும் நிர்வாகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இந்த திட்டம் அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்,தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. 

மதுக்கடையில் குடித்து விட்டு, வகுப்புக்கு வந்த மாணவனை பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்தார்.

அரசுப்பள்ளி மாணவர் குடிபோதையில் தள்ளாடியபடி,வகுப்புக்கு வந்த கொடுமை அரங்கேறியுள்ளது. 
அந்த மாணவனைபள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்தார். மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்திமக்களும்மாணவர்களும் போராட்டம் நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. தற்போதுபடிப்படியாக அமல்படுத்துவதாக, 500 கடைகளை அரசு மூடியுள்ளது. அதிலும்பள்ளிகல்லுாரிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை மூடவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், அழைப்பு கடிதத்தை காட்டினால், அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை

இன்ஜி.கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள்அழைப்பு கடிதத்தை காட்டினால்அரசு பஸ்களில், 50 சதவீத கட்டண சலுகை வழங்க,போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும் என,மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. 
இது தொடர்பாகஅதன் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்குதரவரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் நடக்கும் இடம்ஜூன் 27ம் தேதிwww.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும்,கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதமும்அதே இணையதளத்தில், sws 2016 - 17 என்ற இணைப்பில்,விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு மருத்துவ கல்லூரிகளில், மூன்று ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம்

அரசு மருத்துவ கல்லூரிகளில்மூன்று ஆண்டுகள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில்மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம்நேற்று துவங்கியது. 
தமிழகத்தில்அரசு மருத்துவ கல்லூரிகளில்எம்.எஸ்., - எம்.டி.படிப்புகளை முடித்தோருக்கானடி.எம்.,மற்றும் எம்.சி.எச்.என்றமூன்று ஆண்டு உயர் சிறப்பு மருத்து படிப்புகளுக்கு, 76 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில்சேர்க்கைக்கான முறையான அறிவிப்பைதமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளியிட்டு உள்ளது. 

வெள்ளி, 24 ஜூன், 2016

கவிஞர். கண்ணதாசன் பிறந்தநாள்: சாதாரண மனிதன் விழித்திருக்கும்போதும் தூங்குகிறான் ! சாதனை மனிதன் தூங்கும்போதும் கூட விழித்திருக்கிறான் !!...

2016-17 கல்வி ஆண்டு சனிக்கிக்கிழமை வேலை நாள்கள் தொடக்க நடுநிலை பள்ளிகள் (1- 8th std)

DEE DIARY : 2016-17 Academic year

                       DEE DIARY:
2016-17 கல்வி ஆண்டு சனிக்கிக்கிழமை வேலை நாள்கள்  தொடக்க நடுநிலை பள்ளிகள் (1- 8th std)

*ஜூலை           23.07.16
*ஆகஸ்ட்      27.08.16
*செப்டெம்பர்  17.09.16
*நவம்பர் 19.11.16
*ஏப்ரல்          22.04.17

Exam Time Table

*முதல் பருவத் தேர்வு          -  19.09.16 to 23.09.16
*இரண்டாம் பருவத்தேர்வு  -  19.12.16 to 23.12.16
*மூன்றாம் பருவத் தேர்வு   -  24.04.17 to 28.04.17

சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா?

இதனைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், "கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை அறிந்து கொண்டால் மிக இலகுவாக நீங்களே புரிந்து கொள்வீர்கள். ”சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந் த ஆவணத்தில் கையெழுத்து போட் டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து. உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்.


வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரண்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரண்டி கையெழுத்தின் சாராம்சம்.

கேரண்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக் கிறது. ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார். சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை. (நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவணத்தில் கையெழுத்து போடுகையில் விதி விலக்கு உண்டு) சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்? நில அபகரிப்பு மோசடி வழக்கு தொடுக்கபடும் போது, இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது. அல்லது பு ரோநோட்டை எழுதி கொடுத்தவர் அ தில் உள்ள கையெழு த்தை மறுக்கும் போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச் சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கை யெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற் பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும்!
‪#‎ஆர்‬.சையத் பஷீர் (நிறுவன தலைவர்)
ஊழலுக்கு எதிரான அமைப்பு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு:ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு:ஜூலை 18 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (சி.டி.இ.டி.) ஆன்-லைன் மூலம் விண்ணப்பப் பதிவு புதன்கிழமை முதல் தொடங்கியது. ஜூலை 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர் நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் தொழிற்பயிற்சிகளில் சேர வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் தொழிற்பயிற்சிகளில் சேர வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் மாணவ,  மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர்க்கென இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி  பயிற்சி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி , பிளஸ்2 தேர்ச்சி  தோல்வி மற்றும் பட்டப்படிப்பு முடித்த  மகளிர்களுக்கு கணிணி இயக்குபவர் மற்றும் திட்ட உதவியாளர்., டெஸ்க் டாப் பப்ளிசிங்  ஆபரேட்டர் ஆகிய இரு தொழிற்பிரிவுகளில்  ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர வயது வரம்பு கிடையாது.
பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி,  புத்தகங்கள், சீருடை, காலணி  மற்றும் கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.  ஓராண்டு பயிற்சி நிறைவு செய்தபின் மத்திய அரசால் தேர்வு நடத்தி தேசிய தொழில்சான்று வழங்கப்படும்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், மின்சாரப் பணியாளர், கம்மியர்,  பொருத்துநர் போன்ற தொழிற்பிரிவுகளிலும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கம்பியாள் தொழிற்பிரிவிலும் தொழிற்யிற்சி அளிக்க கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த தொழிற்பயிற்சிகளில் சேர ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பயிற்சி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), பரமத்தி சாலை, தட்டாங்குட்டை, நாமக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04286-267976 என்ற தொலைபேசி எண் அல்லது  9443328279 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 25) நிறைவடைகிறது.
 வியாழக்கிழமை நிறைவுபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 555 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
 2016-2017-ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னையில் ஜூன் 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
 வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக்கு 757 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். 722 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அவர்களில் 519 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 225 பேருக்கும், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 15 பேருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
 இதுதவிர சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 233 பேருக்கும், அரசு பிடிஎஸ் இடங்கள் 46 பேருக்கும் ஒதுக்கப்பட்டது.
 மூன்று நாள் கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 555 இடங்களும், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 197, அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 36 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் 970 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் மீதம் உள்ளன.
 முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 23-ஆம் தேதி நிறைவடையும். வெள்ளிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வுக்கு கட்- ஆஃப் மதிப்பெண் 196-லிருந்து 195.25 வரையுள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, விருதுநகரில் மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு

தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, விருதுநகரில் மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளின் படி,தனியார்சுயநிதி பள்ளிகளில் அறிமுக வகுப்பில்25 சதவீதம் நலிவுற்ற மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு அறிவித்தது. அதற்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்திடம் அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டது. 
அதன்படி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுஇந்த ஆணையில் உள்ள அட்டவணையின் படி சேர்க்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் திருச்சிவிழுப்புரம்,திருவாரூர்காஞ்சிபுரம்விருதுநகர் என ஐந்து மாவட்டங்களில் உள்ள தனியார்சுயநிதி பள்ளிகளில் 25சதவீதம் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா என மத்திய அரசு அலுவலர்கள் குழு ஆய்வு செய்கிறது.
இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் தனியார்சுயநிதி பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அலுவலர் குழு விருதுநகர் வந்துள்ளது. நேற்று (ஜூன் 22)முதல் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் இந்த குழுதனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு குறித்த ஆவணங்களை பார்வையிட்டது. பள்ளி தலைமையாசிரியர்களை அழைத்து இடஒதுக்கீடு குறித்து கேட்டறிந்தனர்.

அரசு பாடப்புத்தகங்களை விலைக்கு விற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ரூ 4 லட்சம் மதிப்பிலான அரசு பாடப்புத்தகங்களை பழைய விலைக்கு விற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம்கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் பகுதியில் தொடக்கப்பள்ளிகளுக்கு கடந்த கல்விஆண்டில் வழங்கப்பட்டது போக மீதமுள்ள பாடப்புத்தகங்கள் புல்லுக்கட்டுவலசையில் உள்ள ஒரு பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய வகுப்புகள் துவங்கிய போது அவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்கஅதிகாரிகள் கேட்டபோதுஅங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை காணவில்லை. மொத்தம் 6 ஆயிரத்து 900 புத்தகங்களாகும்.
இவற்றின் மதிப்பு சுமார் 4 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கும்தமிழக தொடக்க கல்வி இயக்குநருக்கும் புகார்கள் அனுப்பின. அதில்கீழப்பாவூர் யூனியன் உதவி தொடக்க கல்வி அலுவலரான அம்புரோஸ்,
புத்தகங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்துவிட்டார் என புகார் கூறியிருந்தனர். இதுகுறித்து மாநில தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நிர்மலா ஜேசு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். 
புத்தகங்களை விற்பனை செய்த உதவி தொடக்க கல்வி அலுவலர் அம்புரோஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவருக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்துள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

சென்டாக் தரவரிசை பட்டியலில் சிறிது மாற்றம் இருக்கும்.

ஆன்-லைன் பதிவின்போது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலின் பதிவெண்ணை மாற்றி குறிப்பிட்ட மாணவர்களால் சென்டாக் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏற்பட உள்ளது.
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் 17ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பி.டெக்.பி.பார்ம். நர்சிங்.பிசியோதெரபிஎம்.எல்.டி.மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து எம்.பி.பி.எஸ்.பல் மருத்துவ படிப்புகளுக்கு தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 2118 பேர் விண்ணப்பித்தனர். பின்புஇவை இரண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டது.
ஆன்-லைன் பதிவின்போதுதங்களுடைய பிளஸ் 2 பதிவெண்ணை மாற்றிக் குறிப்பிட்ட மாணவர்களின் பெயர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் காரணமாக புதிய தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது. இதனால் சென்டாக் தரவரிசை பட்டியலில் சிறிது மாற்றம் இருக்கும்.

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல்

தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் பணப் பலன்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
தமிழகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் 40 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். இவர்களுக்கு 2006 ஜூன் 1ல் காலமுறை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரே நிலையில் பத்தாண்டுகள் பணிபுரிந்தால்தேர்வு நிலை&'யும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தால் சிறப்பு நிலை தகுதிகளும் வழங்கப்பட்டது. ஆறு சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான ஆசிரியர்களுக்குஅவர்கள் பணிபுரியும் பள்ளிகள் மூலம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு உண்மை தன்மை சான்றிதழ் விபரங்கள் அனுப்பப்பட்டன. தொடக்க கல்வித்துறையில்உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்றிதழ் இல்லாத காரணத்தால் விபரங்களை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பாமல் தலைமை ஆசிரியர்கள் தாமதப்படுத்தினர். இதனால் ஆசிரியர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கவில்லை. இயக்குனரகம்விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இந்த முகாம்கள் திண்டுக்கல்,தேனிராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவில்லை.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: தமிழகத்தில் மாவட்டத்திற்கு தலா 900 தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணப்பலன்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்என்றார்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை கேரள மாணவி முதலிடம் பிடித்தார்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வெளியிட்டார்.

இதில்கேரள மாணவி முதலிடம் பிடித்தார். கேரள மாநிலம்மூவாட்டுப்புழாவில் வசிக்கும் மாணவி அபூர்வா தர்ஷினிமுதலிடம் பிடித்தார்.இவர்மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் பள்ளியில்கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த முதல் பாடப்பிரிவில்பிளஸ் 2படித்துள்ளார்.

பொதுத்தேர்வில், 1,198 மதிப்பெண் மற்றும் 200க்கு200 கட் - ஆப் மதிப்பெண் பெற்றுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்,இரண்டாமிடம் பெற்றுள்ளார். ஈரோடுஐடியல் பள்ளியில் படித்த இவர்மருத்துவ தரவரிசையில் இரண்டாவது இடம் பெற்றுசென்னை எம்.எம்.சி.கல்லுாரியில் சேர்ந்ததால்இன்ஜி.படிப்பில் சேரவில்லை எனதெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு இன்ஜி.தரவரிசையில்முதல், 10 இடம் பிடித்தவர்களில்நான்கு பேர் மட்டுமேதமிழகத்தில் படித்தவர்கள். மருத்துவ தர வரிசையிலும்கேரளாவில் படித்தஆர்த்தி என்ற மாணவிதமிழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 ஜூன், 2016

தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் நேரடியாக தேர்தல் இல்லாமல் மறைமுக முறை மூலம் மேயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சட்டத் திருத்த மசோதாவை உள்ளாட்சி-ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் புதன்கிழமை அறிமுகம் செய்தார்.

தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் நேரடியாக தேர்தல் இல்லாமல் மறைமுக முறை மூலம் மேயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான சட்டத் திருத்த மசோதாவை உள்ளாட்சி-ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் புதன்கிழமை அறிமுகம் செய்தார்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படும்போதே, மேயர் பதவிக்கான தேர்தலும் நடத்தப்படும். இப்போது, மேயர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு முடிவு செய்துள்ளது. இதற்கான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை தாக்கல் செய்தார்.

பள்ளி மாணவர்களின் சாதிச் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் சாதிச் சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் சாதி, இருப்பிடச் சான்றுகள் பெறுவது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் கல்வி உதவித் தொகை பெறுவது ஆகியவற்றில் கால தாமதம் ஏற்படுவதாக பெருமளவில் புகார்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழில் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

கல்விக் கடன் வசூலில் எஸ்பிஐ வங்கியின் அணுகுமுறை ஆபத்தானது: அன்புமணி

ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து உடனடியாக கிடைக்கும் ரூ.54 கோடிக்காக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாரத ஸ்டேட் வங்கி சூனியமாக்கி விடக்கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கல்விக் கடன் வாங்கி உயர் கல்வி படித்த மாணவர்கள் வேலை கிடைக்காமல் வாடும் நிலையில், அவர்களிடமிருந்து கல்விக் கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி மிகவும் கொடூரமான வழிமுறையை கையில் எடுத்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்களில் தவணை தவறிய கடன்களை தனியார் நிறுவனத்திடம் அடிமாட்டு விலைக்கு விற்று, முழுத் தொகையையும் மாணவர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது. ஸ்டேட் வங்கியின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது, எந்த நேரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்? அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.
விளையாட்டுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வை தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது, எந்த நேரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்? என்ற பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதன்மூலம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு நாள், நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.
கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது. மாணவர்கள் அழைப்புக்கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை நோட்டீஸ் வழங்காமல் பிடித்தம் செய்யக்கூடாது என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஊதியம் கணக்கிடும் போதுசிலருக்கு தவறுதலாக கூடுதல் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த குளறுபடி தணிக்கையின் போது கண்டறியப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக வழங்கிய தொகையை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்,ஆசிரியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தர விடப்படுகிறது. 
திடீரென ஊதியத்தை பிடித்தம் செய்ய துறை அலுவலர் உத்தரவிடுவதால்சிலர் நீதி மன்றத்தில் தடையாணை பெறுகின்றனர். இதனால் கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதையடுத்து தணிக்கை விபரம் குறித்து சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கிய பின்பேஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும்என நிதித்துறை அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. 
அதன்படி ஆசிரியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை நோட்டீஸ் வழங்காமல் பிடித்தம் செய்யக்கூடாது எனபள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

செவ்வாய், 21 ஜூன், 2016

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் இலவச பஸ் பாசை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு: பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பது அதிகரித்துள்ளது. இதனால், விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதை தடுப்பது அவசியம். மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என ஆசிரியர்கள் விளக்க வேண்டும். 
முதல் முறையாக படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து இந்த தவறை செய்தால்இலவச பஸ் பாசைபள்ளி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.