GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 25 ஜூன், 2016

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்

தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும் என,மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. 
இது தொடர்பாகஅதன் இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்குதரவரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் நடக்கும் இடம்ஜூன் 27ம் தேதிwww.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும்,கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதமும்அதே இணையதளத்தில், sws 2016 - 17 என்ற இணைப்பில்,விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
அனைவருக்கும்,ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரைஅனைத்து மாவட்டங்களிலும்மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாவட்ட மையங்களானடயட் அலுவலகங்களில் நடக்கும். 
ஆங்கிலம்தெலுங்குஉருதுசிறப்பு பிரிவினருக்குஜூலை 4; தொழிற்பிரிவுகலைப்பிரிவுஅறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டும்ஜூலை 5; தொழிற்பிரிவு மாணவியருக்குஜூலை 7; கலைப்பிரிவு மாணவியருக்குஜூலை 8; அறிவியல் பிரிவு மாணவியருக்குஜூலை 9ம் தேதியில் கவுன்சிலிங் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.