GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

MBBS மாணவர் சேர்க்கை 2026 தரவரிசை பட்டியல் வெளியீடு தகவல்

நீட் தேர்வு 2026 தேர்வு எழுதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தமிழக தரவரிசை பட்டியல் நாளை 10 8 2026 வெளியிடப்படும் என மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் தனது பேட்டியில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

சித்தா, ஆயுர்வேத படிப்புகள் நாளை முதல் விண்ணப்பம்

*சித்தா, ஆயுர்வேத படிப்புகள் நாளை முதல் விண்ணப்பம்*

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நாளை (13/07/2026) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை www.tnayushselection.org

 தளத்தில் தொடங்குகிறது.

ஆயுஷ் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூலை 31ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் ஆயுஷ் படிப்புகளுக்கு உள்ள 5 அரசுக் கல்லூரிகளில் 320 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

320 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்களும், 272 இடங்கள் மாநில அரசுக்கும் உள்ளன.

29 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,920 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புக்கும் நாளை முதல் விண்ணப்பம்.

வெள்ளி, 10 ஜூலை, 2026

ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 31 வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தடை


நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்டமாக சுய கணக்கெடுப்பு, வீட்டு பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் ஜூலை 17-ஆம் தேதி தொடங்க உள்ளன.
இந்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதுடன், அவர்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கக் கூடாது என மத்திய அரசு ஏற்கனவே மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் சுமுகமாக நடைபெறுவதற்காக, ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 31 வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், கணக்கெடுப்புப் பணிகளில் எந்தவித நிர்வாகச் சிக்கலும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

திங்கள், 29 ஜூன், 2026

2026–2027 கல்வியாண்டு MBBS & BDS சேர்க்கை விண்ணப்பங்கள் – தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு



தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME), 2026–2027 கல்வியாண்டிற்கான MBBS மற்றும் BDS பட்டப்படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்

  • தமிழ்நாடு அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள்.
  • சுயநிதி மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.
  • சுயநிதி மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் NRI ஒதுக்கீட்டு இடங்கள்.

முக்கிய அறிவுறுத்தல்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன், தகுதிகள், விதிமுறைகள், தேர்வு நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் குறிப்பேட்டை (Prospectus) கவனமாகப் படித்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப இணையதளம்

www.tnmedicalselection.org

CLICK HERE

முக்கிய தேதிகள்

  • இணையவழி விண்ணப்பம் தொடக்கம்: 29.06.2026 மதியம் 12.00 மணி
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

மூலம்:
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME),
சென்னை – 10.



ஞாயிறு, 7 ஜூன், 2026

பொறியியல் சேர்க்கை 2026–27 : டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. மாணவர்களுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு (Lateral Entry) விண்ணப்பப் பதிவு தொடக்கம்

பொறியியல் சேர்க்கை 2026–27 : டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. மாணவர்களுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு (Lateral Entry) விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE), சென்னை, 2026–27 கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ./பி.டெக். (Lateral Entry) சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. படிப்பை முடித்த மாணவர்கள், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு பி.இ./பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்ப இணையதளம்: www.tnlea.com
  • CLICK HERE
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பிரிவு கட்டணம்
OC / BC / BCM / MBC & DNC ₹500
SC / SCA / ST ₹250

கட்டணம் செலுத்தும் முறைகள்

  • Debit Card
  • Credit Card
  • Net Banking

முக்கிய தேதிகள்

📅 விண்ணப்ப பதிவு தொடக்கம் : 07.06.2026

📅 விண்ணப்ப பதிவு நிறைவு : 07.07.2026

மாணவர்கள் கவனத்திற்கு

  • விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களை சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • சேர்க்கை தொடர்பான முழுமையான வழிமுறைகள் மற்றும் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
  • விண்ணப்பிக்கும் முன் "Information and Instructions to Candidates" என்ற வழிகாட்டி புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

தொடர்புக்கு

📞 04565-230801
📞 04565-224528

டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. முடித்த மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேரலாம்.

– GSKALVIPURATCHI  செய்தி

சனி, 30 மே, 2026

2028 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி, மே 30: ஆசிரியர் பணியில் நியமனம் பெறவும், பணியுயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆசிரியர் நியமனம் மற்றும் பணியுயர்வுக்கு தகுதித்தேர்வு கட்டாயமா என்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆசிரியராக நியமிக்கப்படுபவர்கள் கட்டாயம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் 20 அல்லது 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு தகுதித்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் பணியுயர்வு பெற விரும்பினால் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இந்தச் சட்ட விதிகள் பொருந்தாது என வாதிடப்பட்டது.

மனுக்கள் நிராகரிப்பு

மறு ஆய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிதாக முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் நிராகரித்தது. அதே நேரத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை 2 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக நீட்டித்தது.

அதன்படி, 2028 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகளை மாநில அரசுகள் விரைந்து நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இனிமேல் தகுதித்தேர்வு எழுதுவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

வியாழன், 28 மே, 2026

சேலம் மாவட்ட அரசு கலைக் கல்லூரிகள் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் & சேலம் மாவட்ட அரசு ITI களில் சேருவதற்கு இலவச உதவி மையம்

+2 முடித்துள்ள சேலம் மாவட்ட அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்

 சேலம் மாவட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள்

சேலம் மாவட்ட அரசு பாலிடெக்னிக் & சேலம் மாவட்ட அரசு ITI களில் சேருவதற்கு 

உதவி தேவைப்பட்டால்

Salem Collector office Room number 4 ல் செயல்படும்

உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை எண்கள் Higher Education Control Room 

04272452202 or 9788858931 ஆகிய எண்களை அழைக்கலாம்.

குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்)பெற நாளைய தினம் விண்ணப்பிக்கலாம்


சேலம், மே 28:
தொழிலாளர் உதவி ஆணையாளர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்காக மாணவர் மற்றும் மாணவிகளின் பயிலும் பள்ளி, கல்லூரியின் கல்விச் சான்றிதழ், நலவாரிய பதிவு அட்டை, குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் www.tnuwwb.tn.gov.in 

CLICK HERE 

என்ற இணையதள முகவரியில் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களை ஜூன் மாதம் முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வாய், 26 மே, 2026

அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் ஜூன் 4ஆம் தேதி திறப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் ஜூன் 4ஆம் தேதி திறப்பு

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2026–2027 கல்வியாண்டிற்கான பள்ளி திறப்பு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 01.06.2026 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 04.06.2026 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசிற்கு வந்தன. குறிப்பாக ஒரே குடும்பத்தில் பல்வேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், நிர்வாக வசதிக்காகவும் ஒரே தேதி அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஜூன் மாத முதல் வாரத்தில் தொடர்ச்சியான முன் பருவமழை, இடையிடையே மழை, அதிக ஈரப்பதம் மற்றும் வெப்ப நிலை போன்ற காலநிலை சூழ்நிலைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வளாகத் தயார்நிலை உள்ளிட்ட முன்னேற்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ராஜ் மோகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்:

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே நாளான வியாழக்கிழமை, 04.06.2026 அன்று திறக்கப்படும்.

மேலும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகள் திறப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஞாயிறு, 24 மே, 2026

எச்சரிக்கை:பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நர்சிங் பயிற்சியில் சேர நினைப்பவரா நீங்கள்? சேர்வதற்கு முன் அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்ற கல்லூரியா? என்பதை கீழே உள்ள இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளுங்கள் அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் படித்து ஏமாற வேண்டாம் தமிழ்நாடு நர்சுகள் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சில் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு

தமிழ்நாடு நர்சுகள் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சில் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு

வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தமிழ்நாட்டில் நர்சிங் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான tamilnadunursingcouncil.com 

CLICK HERE 

மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் உரிம எண்கள் (License Number) சரிபார்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..

அங்கீகாரம் பெற்ற முக்கிய நர்சிங் படிப்புகள்:

  1. Certificate Course in Auxiliary Nursing-Midwifery (2 வருடம்)
  2. Diploma in General Nursing & Midwifery (3 வருடம்)
  3. B.Sc., Nursing (4 வருடம்)

“Nursing”, “Nursing Assistant Training” போன்ற பெயர்களில் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அவை அரசு அங்கீகாரம் பெற்றவை அல்ல என்றும் கவுன்சில் எச்சரித்துள்ளது.

மேலும், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்க்கைக்கு முன் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் உரிம எண்ணை சரிபார்க்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பதிவு மற்றும் வெளிநாட்டு பணியமர்த்தல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், போலியான நர்சிங் பயிற்சி மையங்களை நடத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு நர்சுகள் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

சனி, 23 மே, 2026

நீங்கள் கால்நடை மருத்துவராக 2026-2027 கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்


மே 25-ந் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) சார்பில் வழங்கப்படும் கால்நடை மருத்துவம் மற்றும் தொடர்புடைய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கப்பட உள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் https://adm.tanuvas.ac.in

CLICK HERE  

என்ற இணையதளத்தின் மூலம் வரும் மே 25-ந் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 17-ந் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கல்வித் தகுதி, இடஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம், கலந்தாய்வு நடைமுறை உள்ளிட்ட முழு விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் தொடர்புடைய படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற உள்ளதால், மாணவர்கள் காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வியாழன், 21 மே, 2026

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க புதிய அறிவிப்பு

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க புதிய அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் (HM) வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.மேலும், dge.tn.gov.in

CLICK HERE

 மூலம் வெளியிடப்பட்டுள்ள 

இதற்கான நடவடிக்கைகளை வரும் 22-ம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூலம் வெளியிடப்பட்டுள்ள Notification-ஐ பின்பற்றி SSLC Provisional Mark Certificate-ஐ பதிவிறக்கம் செய்து வழங்குமாறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் மேல்படிப்பு சேர்க்கை உள்ளிட்ட தேவைகளுக்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ்நாடு அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு.

 அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிப்பு.*

செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம்.

போக்குவரத்துத்துறை - சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்

இந்து அறநிலையத்துறை - ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ்

உயர் கல்வித்துறை - மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன்

நிதித்துறை - ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சன்

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை - கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ்

மீன்வளத்துறை - தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத்

வனத்துறை - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார்

பால்வளத்துறை - குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி

கால்நடைத்துறை - அவிநாசி எம்.எல்.ஏ. கமலி

வேளாண் துறை - கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத்

சுற்றுச்சூழல்துறை - திருவாடானை எம்.எல்.ஏ. ராஜீவ்

வீட்டுவசதித்துறை - கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார்

கூட்டுறவுத்துறை - அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ்

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை - ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா

சமூக நலன், மகளிர் நலத்துறை - ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி

சுற்றுலாத்துறை - கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார்

கைத்தறி, ஜவுளித்துறை - ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை - ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

AI, தகவல் தொழில்நுட்பத்துறை - வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார்

வெளிநாடுவாழ் தமிழர் நலன் - ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார்

தொழிலாளர் நலத்துறை - அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ்

மனிதவளத்துறை - தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார்

புதன், 20 மே, 2026

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: துணைத் தேர்வு, மறுமதிப்பீடு / மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பத்திற்கான விவரம்.

*10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: துணைத் தேர்வு, மறுமதிப்பீடு / மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பத்திற்கான விவரம்.*

*தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.*

*தற்காலிக மதிப்பெண் பட்டியல்:22.05.2026 முதல்.*

*விடைத்தாள் நகலுக்கான விண்ணப்பம்: 22.05.2026 முதல் 27.05.2026 வரை.*

*துணைத் தேர்வு கால அட்டவணை: 08.07.2026 முதல் 15.07.2026 வரை.*

*துணைத் தேர்வுக்கான விண்ணப்பம்: 26.05.2026  முதல் 09.06.2026 வரை.*

*மறுமதிப்பீடு / மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பம்: 17.06.2026 முதல் 19.06.2026 வரை.*

CIPET மதுரை -பெட்ரோ இரசாயன தொழில்நுட்பக் கல்வியில் மூன்று ஆண்டு கால டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது:

சிப்பெட் மதுரை வளாகத்தில் 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்

இந்திய அரசின் இரசாயனம் மற்றும் பெட்ரோ இரசாயனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் (CIPET), மதுரை வளாகத்தில் 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ISO 9001:2015 சான்றிதழ் பெற்ற இந்நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோ இரசாயன தொழில்நுட்பக் கல்வியில் சிறப்பு பெற்றதாகும்.

டிப்ளமோ படிப்புகள்

மூன்று ஆண்டு கால அளவில் கீழ்க்கண்ட டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது:

  • Diploma in Plastics Mould Technology (DPMT)
  • Diploma in Plastics Technology (DPT)

இந்த படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ITI தேர்ச்சி பெற்றவர்களும் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போஸ்ட் டிப்ளமோ படிப்பு

ஒன்றரை ஆண்டு கால அளவில் கீழ்க்கண்ட Post Diploma படிப்பிற்கும் சேர்க்கை நடைபெறுகிறது:

  • Post Diploma in Plastics Mould Design with CAD/CAM (PD-PMD with CAD/CAM)

இந்த படிப்பிற்கு மெக்கானிக்கல், பிளாஸ்டிக்ஸ்/பாலிமர், டூல் & டை, பெட்ரோகெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் உள்ளிட்ட துறைகளில் 3 ஆண்டு முழுநேர டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவித்தொகை

SC/ST மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பம்

ஆர்வமுள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை திருவாதவூர் பகுதியில் உள்ள சிப்பெட் வளாகத்தை தொடர்புகொள்ளலாம்.

தொடர்புக்கு

தொலைபேசி எண்கள்: 9943032717, 9698662660, 9941404804
மின்னஞ்சல்: ltc-madurai@cipet.gov.in, atpdc.cipetmdutr@gmail.com

2025-26 கல்வியாண்டு10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

2025-26 கல்வியாண்டு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

இணையதளம், வாட்ஸ்-அப் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்

இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் www.tnresults.nic.in 

RESULT பார்க்க CLICK HERE

 www.dge.tn.gov.in 

Result பார்க்க CLICK HERE

மற்றும்  results.digilocker.gov.in

Result பார்க்க CLICK HERE

 ஆகிய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை காணலாம்.

வாட்ஸ்-அப் செயலி மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக 7845825252 என்ற எண்ணிற்கு “Hi” என அனுப்பி, அதன்பின் வழங்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி தேர்வு முடிவுகளை பெறலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்ததாவது: “மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு மற்றும் மறுகூட்டல் தொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14417, 104 மற்றும் 14416 ஆகிய உதவி எண்களை தொடர்புகொண்டு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 19 மே, 2026

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

*ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.*

ஆதார் அட்டையில் பொதுமக்கள் தங்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை myAadhaar இணையதளம் மூலம் புதுப்பிக்கும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது மத்திய அரசு.

2027 ஜூன் 14 வரை இந்த வித கட்டணமும் இன்றி ஆன்லைன் வாயிலாக விவரங்களை பொதுமக்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

+2 முடித்த மாணவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் எம்.ஏ. தமிழ் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு (எம்.ஏ. தமிழ்) ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு (எம்.ஏ. தமிழ்), தமிழ் மொழியியல் பட்ட வகுப்பு (பி.எச்.டி.) ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2026–2027 கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைத் தமிழ் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்கள் சேரலாம்.

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தேர்வின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்நிறுவனத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. மேலும், நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இணையதள வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை 

www.ulakaththamizh.in

CLICK HERE  

என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதுநிலை தமிழ் பட்டப்படிப்புக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனி நாதஸ்வரம் / தவில் இசைப் பயிற்சி நிலையம் – வேதவியாக பாடசாலை – அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி – ஓதுவார் பயிற்சிப் பள்ளிமாணவர் சேர்க்கை அறிவிப்பு 2026-2027

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி

நாதஸ்வரம் / தவில் இசைப் பயிற்சி நிலையம் – வேதவியாக பாடசாலை – அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி – ஓதுவார் பயிற்சிப் பள்ளி

மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2026-2027

தமிழகத்தின் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கீழ் செயல்படும் நாதஸ்வரம் / தவில் இசைப் பயிற்சி நிலையம், வேதவியாக பாடசாலை, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கல்வி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பயிற்சிகளுக்கான தகுதி, வயது வரம்பு மற்றும் பயிற்சி காலம் ஆகிய விவரங்கள் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப் பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதவியாக பாடசாலைக்கு 5ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியமாகும்.

விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும் பிற ஆண்டு மாணவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் நேரில் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.06.2026 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:

பாரம்பரிய இசை மற்றும் ஆன்மிகக் கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஞாயிறு, 17 மே, 2026

தமிழக அரசு இசைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2026–2027

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் செயல்படும் அரசு இசைக் கல்லூரிகளில் பல்வேறு இசை மற்றும் நடனப் பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இந்தக் கல்லூரிகளில் குரலிசை, வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், மிருதங்கம், கிராமியக் கலை, இசை ஆசிரியர், நாட்டுப்புறக் கலை, கடம், கஞ்சிரா மற்றும் முகர்சிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் Diploma, B.A., M.A. படிப்புகள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறப்படுகின்றன. 

CLICK HERE



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 26.06.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.1500 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சில பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இசையில் முனைவர் பட்டப்படிப்பிற்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: இயக்குநர்,
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி,
சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருவையாறு.

வெள்ளி, 15 மே, 2026

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-2027 மாணவர் சேர்க்கை அறிவிப்பு

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-2027 மாணவர் சேர்க்கை அறிவிப்பு

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ITI) 2026-2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் NCVT சான்றிதழுடன் கூடிய பல்வேறு தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு மாணவர்கள் மற்றும் மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் முக்கிய தொழிற்பயிற்சி படிப்புகள்

- எலக்ட்ரீஷியன்
- ஃபிட்டர்
- மெஷினிஸ்ட்
- டர்னர்
- வெல்டர்
- பிளம்பர்
- கோபா (COPA)
- டிஜிட்டல் போட்டோகிராபர்
- மோட்டார் வாகன மெக்கானிக்
- A/C மெக்கானிக்
- வயர்மேன் மற்றும் பிற தொழிற்பயிற்சி படிப்புகள்

கல்வித்தகுதி

பெரும்பாலான படிப்புகளுக்கு 8ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியாளர்களுக்கான சலுகைகள்

- மாத உதவித்தொகை வழங்கப்படும்
- இலவச பாடப்புத்தகங்கள்
- இலவச சீருடை மற்றும் காலணி
- அரசு விதிமுறைகளின்படி கட்டண சலுகைகள்
- தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உதவி
- வளாக நேர்முகத் தேர்வு (Campus Interview) வாய்ப்பு
- விடுதி வசதி

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
www.skilltraining.tn.gov.in

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

- 8ஆம் / 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- மாற்றுச் சான்றிதழ் (TC)
- ஆதார் அட்டை
- மொபைல் எண்
- மின்னஞ்சல் முகவரி
- இரத்த வகை விவரம்

தொடர்புக்கு

தொலைபேசி எண்கள்:
79043 15060
91500 62324
94452 25473
80728 56807

மேலும் விவரங்களுக்கு:
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
சேலம் – 636007.

BREAKING: நீட் மருத்துவ தேர்வு தேதி அறிவிப்பு NEET 2026தேர்வு மறு தேதி அறிவிப்பு

BREAKING: நீட் மருத்துவ தேர்வு தேதி அறிவிப்பு

நாடு முழுவதும் நடைபெறும் நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹால் டிக்கெட், தேர்வு வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

• தேர்வு தேதி : ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
• தேர்வு நடத்தும் நிறுவனம் : தேசிய தேர்வு முகமை (NTA)
• ஹால் டிக்கெட் : விரைவில் வெளியீடு
• மாணவர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க அறிவுரை

மேலும், தேர்வு தேதி தொடர்பான முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Regional Institute of Education (RIE), Mysuru – 2026-27 மாணவர் சேர்க்கை அறிவிப்பு


Regional Institute of Education (RIE), Mysuru – 2026-27 மாணவர் சேர்க்கை அறிவிப்பு

நிறுவனம் 2026-27 கல்வியாண்டிற்கான ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), நியூடெல்லி கீழ் செயல்படுகிறது. அனைத்து படிப்புகளும் University of Mysore-க்கு இணைக்கப்பட்டும் NCTE அங்கீகாரம் பெற்றும் உள்ளன.

வழங்கப்படும் படிப்புகள்

M.Sc.Ed. (6 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பு)

PUC / +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் Physics, Chemistry, Mathematics பாடங்களுடன் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B.Ed. (2 ஆண்டு படிப்பு)

B.A./B.Sc./M.A./M.Sc. பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

M.Ed. (2 ஆண்டு படிப்பு)

B.Ed./B.A.B.Ed./B.Sc.B.Ed. படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SC, ST மற்றும் மாற்றுத்திறனாளி (PWD) மாணவர்களுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்ப தேதி

ஆன்லைன் விண்ணப்பங்கள் 15.05.2026 முதல் 05.06.2026 வரை பெறப்படும்.

நுழைவுத் தேர்வு

Common Entrance Examination (CEE) நாடு முழுவதும் பல மையங்களில் 28 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

விண்ணப்பிக்க இணையதள முகவரி

cee.ncert.gov.in

click here


riemysore.ac.in

CLICK Here

உதவி எண்கள்

  • +91 8280337189
  • +91 8280337190

மின்னஞ்சல்:
ceesupport2026@riebbs.ac.in

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.


தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு


2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

  • B.F.Sc. (இளநிலை மீன்வள அறிவியல்)
  • B.Tech. (மீன்வள பொறியியல்)
  • B.Tech. (உயிர் தொழில்நுட்பவியல்)
  • B.Tech. (உணவு தொழில்நுட்பவியல்)
  • BBA (மீன்வள வணிக மேலாண்மை)
  • B.Voc. தொழில்சார் பட்டப்படிப்புகள்

ஆன்லைன் விண்ணப்ப பதிவு 15.05.2026 காலை 11.00 மணி முதல் 14.06.2026 மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

மேலும், இனவாரி ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் குடும்பங்கள், வெளிமாநில மாணவர்கள், NRI / NRI Sponsored / Foreign Nationals உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான சேர்க்கையும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்:

admission.tnjfu.ac.in

CLICK HERE

இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


வியாழன், 14 மே, 2026

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்அடுத்த மாதம் 5-ந்தேதி கடைசி நாள்

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அடுத்த மாதம் 5-ந்தேதி கடைசி நாள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2026–27 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற அரசு சட்டக் கல்லூரிகளிலும் மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளிலும் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும்) உள்ள 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை சட்டப் பல்கலைக்கழகத்தின்
www.tndalu.ac.in

CLICK HERE



என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

வியாழன், 7 மே, 2026

+2 பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியீடு.

+2 RESULTS அறிந்து கொள்ள கிளிக் செய்யவும்
+2 தேர்வு
முடிவுகளை
வாட்ஸ் ஆப்பில்
எப்படி அறிந்து கொள்வது?
இணையதளம் மூலம் முடிவுகளை அறியலாம்
https://results.digilocker.gov.in
மற்றும்
tnresults.nic.in
இணையங்களில் பதிவு எண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளிட்டு செய்து
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழி:
7845252525
என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு
‘Hi’ என்று குறுஞ்செய்தி
அனுப்பினால்
தேர்வு முடிவுகள் வரும்.

*NEET (UG) - 2026: தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு!*


*தேசிய தேர்வு முகமை (NTA) மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (NEET) தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்புகளை (Provisional Answer Keys) தற்போது வெளியிட்டுள்ளது.*

*தேர்வு நடைபெற்ற தேதி: மே 3, 2026.*

*மாணவர்கள் தங்களின் அனைத்துத் தொடர் (All series) வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.*

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

*அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.*

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்-கல்லூரி கல்வி ஆணையர்.

 tngasa.in என்ற இணையதளம் மூலம் மே 29 வரை விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால் மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி மையங்களை நாடலாம். 

181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன.

ஞாயிறு, 3 மே, 2026

+2 மாணவ மாணவிகளின் கவனத்திற்கு தமிழ்நாடு அரசுதமிழ்நாடு பொறியியல் சேர்க்கை – 2026தொழில் நுட்ப கல்வி இயக்ககம், சென்னை – 600 025 B.E./B.Tech./B.Arch. பட்டப்படிப்புகள் 2026 – அறிவிப்பு

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை – 2026
தொழில் நுட்ப கல்வி இயக்ககம், சென்னை – 600 025
B.E./B.Tech./B.Arch. பட்டப்படிப்புகள் 2026 – 27
விளம்பர அறிவிக்கை எண்: 8087/எம்2/2026
2026–27 ஆம் கல்வியாண்டில், முதலாம் ஆண்டு B.E./B.Tech./B.Arch. பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் கழக கல்லூரிகள் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களில் சேர்க்கை பெற தகுதியான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்றாறு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.tneaonline.org⁠�
அல்லது
https://www.dte.tn.gov.in⁠�
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TNEA Facilitation Centers – TFCs) அமைக்கப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
கட்டணம்:
OC / BC / BCM / MBC & DNC – ரூ. 500/-
SC / SCA / ST – ரூ. 250/-
விண்ணப்பக் கட்டணம் Debit Card / Credit Card / Net Banking / UPI ஆகிய முறைகளில் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.
இணையதளம் வாயிலாக பதிவு செய்ய இயலாத மாணவர்கள், “The Secretary, TNEA” payable at Chennai என்ற பெயரில் 03.05.2026 அன்று வரை வரைவோலை மூலம் செலுத்தலாம்.
கல்வித்தகுதி விவரங்கள், வயது மற்றும் பிற தகவல்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய:
ஆரம்ப நாள்: 03.05.2026
இறுதி நாள்: 02.06.2026
மாணவர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு, தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அந்த விண்ணப்பம் உறுதி செய்யப்படும்.
மேலும், மாணவர்கள் தேவையெனில் TFC மையத்திற்கு நேரில் சென்று உதவி பெறலாம்.
அனைத்து வகையான கல்வித்தகுதிகளுக்கும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
B.E./B.Tech. (Lateral Entry and Part Time) பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.
தொலைபேசி: 1800-425-0110
Email: tneacare@gmail.com
சென்னை – 343/வழக்கை/2026
செயலாளர், TNEA

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

ஆசிரியப் பணியிலுள்ளோருக்கான TNTET'2026 அறிவிக்கை சார்ந்த வினாக்களும் விடைகளும்


 இது 'சிறப்பு TET' அல்ல. அவ்வாறு அடையாளப்படுத்துவது தேவையற்ற சட்டச்சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதால் இது பணியிலுள்ளோருக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST  FOR WORKING TEACHERS) என்றே TRB குறிப்பிடுகிறது.


*யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு?*

இதுவரை TET தேர்ச்சி பெறாமல், 01.09.2025ற்கு முன்பே ஆசிரியப் பணியேற்று அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேர பணியில் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / அதனையொத்த ஆசிரியராக EMIS IDயுடன் பணியாற்றுவோர் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.


*யார் எந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்?*

D.T.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் SGT, Primary HM உள்ளிட்டோர் TNTET தாள் 1-ற்கு விண்ணப்பிக்கலாம்.

U.G + B.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன் பணியாற்றும் BT, BRTE, Special Edu. Teachers, MHM, (& HS.HM)  உள்ளிட்டோர் TNTET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு SGT / PHM பதவி உயர்விற்கான U.G + B.Ed.,  தகுதியுடன் இருப்பின் TET தாள் 2-ற்கு விண்ணப்பிக்கலாம்.

இரு தாள்களையும் எழுதுவோர் தனித்தனியே உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.


*எப்போது & எப்படி விண்ணப்பிப்பது?*

2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை http://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


*விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?*

SC, SCA, ST & மாற்றுத்திறனாளி எனில் ரூ.300/-

மற்றவர்களுக்கு ரூ.600/-

Net banking / Credit Card / Debit Card பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.


*Onlineல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?*

1. Mobile No.

2. E-mail ID

3. Passport size colour photograph (Jpg/Jpeg/Png : 40-60 KB)

4. Signature (Jpg/Jpeg/Png : 20-40 KB)

5. TRB வெளியிட்டுள்ள Service Certificate DEO / CEO counter sined உடன் (Pdf : 250-300 KB) 

6. Community Certificate  (Pdf : 250-300 KB)

7. S.S.L.C., Mark sheet  (Pdf : 250-300 KB)

8. H.Sc., Mark sheet  (Pdf : 250-300 KB)

9. D.T.Ed., Diploma Certificate  (Pdf : 250-300 KB)

தாள் - 2 எனில்,

9. U.G Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

10. B.Ed., Consolidated / All semesters Marksheets and Degree / Provisional Certificate (Pdf : 250-300 KB)

மாற்றுத்திறனாளி எனில்,

* Differently Abled Certificate  (Pdf : 250-300 KB)

(அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலைகள் இல்லை.)


*விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?*

2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.


*எப்போது - எங்கே - எப்படி தேர்வு எழுத வேண்டும்?*

தேர்வு மையத்தை TRB முடிவு செய்து Hall Ticketல்  குறிப்பிட்டு Onlineல் வெளியிடும். 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. இத்தேதி உறுதியானால் அதற்கு முன்னதாக Hall Ticket வெளியாகும். 

OMR Sheetல் விடைகளை நிரப்பி அளிக்கும் படியாக 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்களுடன் தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே நாம் முடிவு செய்து அளிக்கலாம்.


*TNTET தாள்-1ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

1. 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்

2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்

3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்

4. கணக்கு : 30 மதிப்பெண்

5. சூழ்நிலையியல் : 30 மதிப்பெண்

(5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)


*TNTET தாள்-2ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

1. 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்

2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்

3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்

4. Maths / Science பட்டதாரிகளுக்கு, கணக்கு & அறிவியல் : 60 மதிப்பெண்

5. History பட்டதாரிகளுக்கு, சமூகவியல் : 60 மதிப்பெண்

6. மற்ற பாட பட்டதாரிகள் மேலேயுள்ள 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்துகொள்ளலாம்.

(6 - 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)


*தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?*

SC / SCA / ST : 60 மதிப்பெண்கள்

BC / BCM / MBC / DNC : 75 மதிப்பெண்கள்

மற்றவர்களுக்கு : 90 மதிப்பெண்கள்

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_