தமிழ்நாடு நர்சுகள் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சில் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு
வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், தமிழ்நாட்டில் நர்சிங் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான tamilnadunursingcouncil.com
மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் உரிம எண்கள் (License Number) சரிபார்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..
அங்கீகாரம் பெற்ற முக்கிய நர்சிங் படிப்புகள்:
- Certificate Course in Auxiliary Nursing-Midwifery (2 வருடம்)
- Diploma in General Nursing & Midwifery (3 வருடம்)
- B.Sc., Nursing (4 வருடம்)
“Nursing”, “Nursing Assistant Training” போன்ற பெயர்களில் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும், அவை அரசு அங்கீகாரம் பெற்றவை அல்ல என்றும் கவுன்சில் எச்சரித்துள்ளது.
மேலும், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சேர்க்கைக்கு முன் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் உரிம எண்ணை சரிபார்க்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பதிவு மற்றும் வெளிநாட்டு பணியமர்த்தல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், போலியான நர்சிங் பயிற்சி மையங்களை நடத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு நர்சுகள் மற்றும் மிட்வைவ்ஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.