GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 27 ஆகஸ்ட், 2016

''இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும்,'' என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். 

''இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படும்,'' என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். 

அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி நிரவல்

அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட உள்ளனர். தமிழக அரசின் பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை விட, 2,500க்கும் மேலான ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இவர்களை, பணி நிரவல் என்ற பெயரில், வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யும் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

l பள்ளியில், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, முறையே தலா, ஒரு ஆசிரியர் என, ஐந்து பேர் இருக்க வேண்டும். வகுப்புகளில், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒருவர் என, கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.

l ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வகுப்புக்கு, 35 மாணவர்கள் வீதம், 105

மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் பணியில் இருப்பர். மாணவர்கள் அதிகம் இருந்தால்,

35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக நியமிக்கப்படுவார்.

கூடுதல் ஆசிரியர்களில், ஒரே பாடத்தில் இரு ஆசிரியர்கள் இருந்தால், அவர்களில் கடைசியாக பணியில் சேர்ந்தவர் மாற்றப்படுவார். பின், தமிழ் ஆசிரியர், அடுத்து ஆங்கில ஆசிரியர்களும், அடுத்தடுத்து மாற்றப்பட உள்ளதால், மொழி புலமை பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்

தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், இளநிலை தடய அறிவியல் அதிகாரி பதவி

தமிழக அரசின் தடய அறிவியல் துறையில், இளநிலை தடய அறிவியல் அதிகாரி பதவிக்கு, 30 இடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் குற்றவியல் ஆகியவற்றில், ஏதாவது ஒரு முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், செப்., 16ல் நடக்கிறது; விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.

வாக்காளர் பட்டியலில் இருந்து, 3.75 லட்சம் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலில் இருந்து, 3.75 லட்சம் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, ஜூலையில் துவங்கியது. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டன. வாக்காளரின் பெயர், தந்தை பெயர், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தனி பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவர்களின் புகைப்படங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன; அதன்பின், இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்துள்ள வாக்காளர்கள், 3.75 லட்சம் பேர் இருப்பது தெரிய வந்தது. களப்பணியாளர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு இப்பட்டியலுடன் சென்று, அவர்களின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விபரத்தை தெரிவிப்பர்; தற்போதுள்ள முகவரி தவிர, மற்ற இடங்களில் உள்ள பெயர்களை நீக்குவர். அடுத்த மாதம், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி துவங்க உள்ளதால், ஓரிரு நாட்களுக்குள் கள ஆய்வுப் பணியை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. அடுத்த வாரம், எத்தனை வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளன என்ற விபரம் வெளியிடப்படும்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர்.

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர்.

புதன், 24 ஆகஸ்ட், 2016

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்ற பிரிவில், 'தாயெனப்படுவது தமிழே' என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.


தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக் கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள, தமிழ் புத்தக பாடல்களின் வீடியோவை, இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த தொழில்
நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

செயல்வழி கற்றல், கணினி வழி கற்றல் போன்ற பல திட்டங்களில், மொழியை எளிதாக கற்று கொடுக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

முதற்கட்டமாக,10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள்,தங்களின் அறிவியல் பாடபடங்க ளை, நான்கு பரிமாணத்தில் பார்த்து படிக்கும், புதிய, 'சிடி' கடந்த மாதம் வெளியானது. இந்த வீடியோ படம், தமிழ்நாடு கல்வித்துறை என்ற பெயரில், 'யூ- டியூப்'பில் இணைக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 'கூகுள் பிளே ஸ்டோர் ஆப்' மூலம், புதிய அப்ளிகேஷன் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, தொடக்கக் கல்வியில், தாய்மொழியை எளிதாக படிக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்ற பிரிவில், 'தாயெனப்படுவது தமிழே' என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஒரு வாரத்தில், அதை, 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 35 ஆயிரம் தொடக்க பள்ளி
களுக்கு, இலவசமாக இந்த, 'சிடி' அனுப்பப்பட உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறினார்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். இந்தாண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. ஆங்கில வழி வகுப்பு களிலும், மாணவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட வில்லை. இதனால் மாணவர் - ஆசிரியர் விகிதாசாரம் அடிப்படையில், மாநில அளவில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

''நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

''நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு, 5,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் நேற்று, 110 விதியில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
நடப்பாண்டு, ஐந்து புதிய தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும்; மூன்று தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாகவும்; 19 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், தரம் உயர்த்தப்படும்

பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அறிமுகம்

பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அறிமுகம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ல் நடக்கும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 2ல் நடக்கும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது என, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.


சங்க பொது செயலர் பார்த்திபன் கூறியதாவது: மொத்தம், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில், செப்., 2ல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில், வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த, 12 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். உதவியாளர் முதல் தாசில்தார் வரை யாரும் பணிக்கு செல்ல மாட்டார்கள். அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வருவாய் துறையில், மாநில அளவில், 5,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கூடுதல் பணிச் சுமை
ஏற்பட்டுள்ளது. பணியிடங்களை மாநில அரசு விரைந்து நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.


தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

* மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்கள், அரசு பள்ளி கட்டடங்கள், அரசு உதவிபெறும் மற்றும் பிற பள்ளி கட்ட டங்கள், அரசு கட்டடங்களில், வாக்குச் சாவடி களை அமைக்க வேண்டும். சட்டசபை தேர்த லில், வாக்குச்சாவடியாக பயன்படுத்திய கட்டடங் களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க,வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்களுக்கு, ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு, அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தேதியை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை கிருஷ்ண ஜெயந்தி மற்றும், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆறு நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி செய்யாமல், 'ஓபி' அடிப்பதை தடுக்கவும், வகுப்புகளுக்கு மட்டம் போடும் மாணவர்களை திருத்தவும், பள்ளிகளில், 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது; இதற்கான அறிவிப்பை, சட்டசபை யில் நேற்று, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அரசு பள்ளி மாணவர்கள், மாநில, 'ரேங்க்' பெற வில்லை. ஆசிரியர்களின் கவனக்குறைவு; முறையாக பாடம் நடத்தாமை; 'டியூஷன்' நடத்துதல்; அதிகாரிகள் பெயரைச் சொல்லி பள்ளிக்கு வராமல், 'ஓபி' அடித்தல்; வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, .
சொந்த வேலையைப் பார்க்கச் செல்வது காலை, மாலை சிறப்பு வகுப்புகளை நடத்தா மல் இருப்பது போன்றவையே, தேர்ச்சி சதவீதம் குறைய காரணம் என தெரிய வந்தது.

எனவே, ஆசிரியர்களின் பள்ளி வருகையை யும், பள்ளியில் இருப்பதையும் உறுதிப்படுத் தவும், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேடு முறைக்கு, கடந்த ஆண்டே கல்வித் துறை திட்டமிட்டது.

தேர்தலால் இந்த அறிவிப்பு தள்ளி போடப்பட்டு, சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தால், ஆசிரியர்கள், 'ஓபி' அடிக்கும் முறை தடுக்கப்படும். உயர் அதிகாரிகளின் வேலையை பார்க்கச் செல்வதாகவும், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம் செல்வதாகவும் கூறி ஆசிரியர்கள் வெளியே சுற்றுவது இனி குறையும். அதிகாரிகளும், தங்கள் சொந்த வேலைகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவது தடுக்கப்படும்.

மேலும் பயோ மெட்ரிக் பதிவு பயன்படுத்தப்பட உள்ளதால், பள்ளிக்கு வருவதாகக் கூறி வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு, சினிமா

தியேட்டருக்கும், ஊர் சுற்றவும் செல்லும் மாணவர்கள் இனி மாட்டிக் கொள்வர். மாணவர்களின் வருகை குறித்த ஆதாரத் துடன், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டமும் நடத்த முடியும் என்பதால் இதற்கு, கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

அதே நேரம், பயோ மெட்ரிக் கருவியில், வருகையை பதிவு செய்து விட்டு, ஆசிரியரோ, மாணவரோ,பள்ளியிலிருந்து வெளியே சென்று விட்டு, மாலையில் வந்து மீண்டும் பதிவு செய்ய வாய்ப்புள்ளது.இதுபோன்ற விதி மீறலுக்கும், முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50 கோடி மதிப்பில் சர்வதேச ஆராய்ச்சி மையம்

உயர் கல்விக்கு 12 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஜெயலலிதா
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உயர்கல்வித் துறையை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50 கோடி மதிப்பில் சர்வதேச ஆராய்ச்சி மையம் உட்பட 12 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அறிவிப்புகளின் விவரம்:
"உயர்கல்வித் துறையில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய பொறியியற் பணித் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில், அதற்கான பயிற்சி மையங்கள் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
2. பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில் வெளி நாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.
இது போன்ற வாய்ப்பு அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.
எனவே, ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இத்திட்டம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
3. உலக அளவில் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை கேட்டு மாணாக்கர்கள் பயன் அடையும் வகையில் காணொலிக் காட்சி ஒலி ஒளியக மையம் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நிறுவப்படும். இம்மையம் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த உரைகளை காணொலி மூலம் வழங்கும். இத்திட்டம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
4. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை சிதைக்காமல் மதிப்பீடு செய்யும் முறை, பொருள் சேதமில்லா தரச்சோதனை எனப்படும்.
இந்த சேதமில்லா தரச்சோதனை பயிற்சி அளிக்கும் வகையில், மதுரையில் உள்ள தமிழ்நாடு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். இங்கு ஆண்டொன்றுக்கு 100 பேருக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.
5. கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் மற்றும் மலைவாழ் மாணாக்கர்கள் 40 முதல் 50 கி.மீ. வரை பயணம் செய்து, கோயம்புத்தூர் அல்லது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் உயர்கல்வி பயில வேண்டியதைத் தவிர்க்கும் பொருட்டு, மேட்டுப்பாளையத்தில் ஒரு அரசு கலை மற்றும், அறிவியல் கல்லூரி சுமார் 8 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு துவங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் திட்டத்தின் கீழ் 20,376 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் +2 வகுப்பில் 4,269 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனவே, பெரும்பாக்கத்தில் 8 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த ஆண்டு துவங்கப்படும்.
6. அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைவுக் கல்லூரிகள் மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பலவித சேவைகள் வழங்கப்படும். இம்மையம் 160 கோடி ரூபாய் செலவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டு, இச்செயல் திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
7. தமிழகம், மோட்டார் வாகன தொழில் வளர்ச்சி மற்றும் வாகன உபரி பொருள் உற்பத்தி ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளது.
எனவே, எரிபொருள் செலவு மற்றும் கரியமில வாயு வெளியீட்டினை குறைக்கவல்ல வாகனம் சார்ந்த ஆராய்ச்சி மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம் ஒன்று மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும்.
8. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு மாநில, தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, 5,000 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு பெருங் கூட்டரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
9. அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்படும். காப்பீடு உரிமை சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும் காப்பீடு உரிமை பெற தேவையான அனைத்து உதவிகளையும் இம்மையம் ஒருங்கிணைக்கும்.
சிறந்த திட்டங்கள் காப்பீடு உரிமை பெறவும் இம்மையம் உதவி புரியும். நவீன கண்டுபிடிப்புகள் சார்ந்த தகவல்கள், அடைகாக்கும் மையம் பற்றிய விழிப்புணர்வு; தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் ஆகிய அனைத்தும் இம்மையத்தின் மூலம் அளிக்கப்படும். இந்த மையம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
10. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்டு வரும் கல்விச் சேவையை மாணவர்கள் எளிதில் பெறும் பொருட்டும், நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், இரண்டு புதிய மண்டல மையங்கள் விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
11. தற்போது தேசிய ஆசிரியர் கல்வியியல் மன்றம் 15 புதிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் 4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட். / பி.எஸ்.சி. பி.எட்.. பாடப் பிரிவுகள் அடங்கும்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட். / பி.எஸ்.சி. பாடப் பிரிவுகள் இந்த ஆண்டு முதல் கல்வியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
12. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 77 துறைகளைக் கொண்டு சிறப்புடன் இயங்கி வருகிறது. சுமார் 1.20 லட்சம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்கள்.
இப்பல்கலைக்கழகத்தில் நலவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இம்மையத்தினை பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 4 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும், மாணாக்கர்கள் நலனை கருத்தில் கொண்டு, விளையாட்டு உள்அரங்கம் மற்றும் நூலகம் ஆகியவை 6 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
சூரிய மின்ஒளி மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், கம்பியில்லா தொடர்பு வசதி ஆகிய வசதிகள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தித் தரப்படும். இதைத் தவிர, விடுதிகள் மேம்பாட்டு பணிகள் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

செய்தி மக்கள் தொடர்புத் துறை முகநூல் (Facebook) பக்கத்தைத் தொடங்கி உள்ளது

அரசின் ஆக்கபூர்வமான பணிகளையும், முதல்வரின் அறிவிப்புகளையும் பொது மக்களிடம் உடனுக்குடன் கொண்டுசெல்வதற்காக செய்தி மக்கள் தொடர்புத் துறை முகநூல் (Facebook) பக்கத்தைத் தொடங்கி உள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள், முதல் வரின் அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள்குறித்த செய்திகள், புகைப்படங்கள் ஆகிய வற்றை மக்கள் தெரிந்துகொள்வதற்காக செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகள், செய்தி முகமைகள், காலமுறை இதழ்கள், திரையரங்குகள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

மேலும், தமிழக அரசின் திட்டங்கள், முதல்வரின் அறிவிப்பு கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இணையதளமான HYPERLINK http:/www.tndipr.gov.in மற்றும் அரசு இணையதளமான HYPERLINK http://www.tn.gov.in ஆகியவற்றின் மூலமாகவும் தினமும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் வளர்ச்சி காரணமாக அரசின் அனைத்து செயல்பாடுகளும் நொடிப் பொழுதில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் முகநூல் (Facebook) மூலம் முதல்வரின் அறி விப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை உடனுக்குடன் பதிவிட்டு வெளியிட செய்தி மக்கள் தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ‘TN DIPR’ என்ற முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன்மூலம் அரசின் ஆக்க பூர்வமான பணிகளையும், முதல்வரின் அறிவிப்பு களையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை செய்தி மக்கள் தொடர்புத் துறை மேற்கொண்டு வருகிறது என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சனி, 20 ஆகஸ்ட், 2016

இன்ஜினியரிங் படிப்பில், நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பாடம்

இன்ஜினியரிங் படிப்பில், நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பாடம் நடத்தி, அதை, 'யூ டியூபில்' வெளியிட, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், 41 அரசு பாலிடெக்னிக் உட்பட, 494 பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1.12 லட்சம் மாணவர்கள் டிப்ளமோ இன்ஜி., படிப்பை படிக்கின்றனர்.

புதிய திட்டத்தின் படி, அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும், வார இறுதி நாட்களில், வீடியோ கான்பரன்ஸ் முறையில், சென்னையில் இருந்தும், மற்ற முக்கிய கல்லுாரிகளில் இருந்தும், பாடம் நடத்தும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இவை முழுவதும், வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. தற்போது, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூ., சயின்ஸ் போன்ற முக்கிய பாடங்களுக்கு பாடம் நடத்தப்பட்டு, அந்த பதிவுகள், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் இணையதளத்திலும், யூ டியூபிலும் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதை, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், வீடு, விடுதிகளில் இருக்கும் போதும், இணையதளத்தில் பார்த்து படிக்க முடியும்.

குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்ற, 79 பேருக்கு, நேற்று பணி நியமன உத்தரவு

குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்ற, 79 பேருக்கு, நேற்று பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அரசு துறையில் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிகவரி துணை கமிஷனர் போன்ற, குரூப் - 1 பதவிகளில், 79 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், முதல்நிலை தேர்வில், 70 ஆயிரம் பேர் பங்கேற்று, 4,282 பேர் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர்; அவர்களில், 163 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்; 79 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

இதில், சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த வித்யா, ஜெயப்ரீதா மற்றும் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முதல், 10 இடங்களை பிடித்தனர்.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி

 ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., பதவிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற, சென்னை ராணிமேரி கல்லுாரி மற்றும் மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில்,

இலவச பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில், நடப்பாண்டு பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஆக., 8 என, அறிவிக்கப்பட்டிருந்தது; தற்போது, 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விபரம் அறிய, 044 - 2844 4995; 0452 - 2534 988 ஆகிய டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள் : டி.இ.டி., தேர்வு நடக்காத பின்னணி என்ன

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள் : டி.இ.டி., தேர்வு நடக்காத பின்னணி என்ன
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.

தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது. 2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்தி விரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்: 23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்

என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.

சிக்கலுக்கு தீர்வு என்ன: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:

சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.

23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும், என்றார்.

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி 

புதன், 17 ஆகஸ்ட், 2016

உள்ளாட்சி தேர்தல், உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தேர்தல் ஆணையர்

உள்ளாட்சி தேர்தல், உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் கூறினார்.

நிருபர்களிடம் சீத்தாராமன் கூறியதாவது: உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. தேவையான போலீசாரை நியமிப்பது, பதற்றமான ஓட்டுச்சாவடிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வார்டுகளை பிரிக்கவும், வரையறை செய்யவும், இம்மாத இறுதிக்குள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி வாக்காளர்களை கண்டறிந்து களைய தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், பணிகள்


குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், பணிகள் மேற்கொள்ளுதல்

சுலப வர்த்தகத்திற்காக, தொழிலாளர் நல சட்டங்களை எளிதாக்குவதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்

மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்து, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை, சமூக பாதுகாப்பு திட்டங்களில், அதிக எண்ணிக்கையில் கொண்டு வருதல்

தொழிலாளர் நலச் சட்ட வழக்குகளை கண்காணிக்க, 'இணையதள வழக்கு மேலாண்மை' முறையை அறிமுகப்படுத்துதல்

தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் மூலம், கட்டு மானத் தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளித்தல், திறன் மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே அறிந்திருக்கும் திறன்களை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்குதல் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் முக்கிய கட்டமான, பணி நிரவல் என்ற கட்டாய இடமாற்றம், நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், நாளையும், நாளை மறுதினமும், பணி நிரவல் கவுன்சிலிங் நடக்கிறது. தொடக்க பள்ளிகளில், ஆசிரியர் - மாணவர் விகிதத்திற்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிக்கு மாற்றுவர். இந்த கட்டாய இடமாற்றத்தில், ஒவ்வொரு ஆண்டும், பல தில்லுமுல்லுகள் நடப்பது உண்டு. அதனால், பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும். இந்த ஆண்டு, எந்த பிரச்னைக்கும் வழியின்றி, பணி நிரவலை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.