GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 30 செப்டம்பர், 2015

ஆசிரியப்பெரு மக்களே உஷார்!!! பள்ளிக் கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட 6 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.

 கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.

சென்னை பல்கலையில், வேலைவாய்ப்பு முகாம், அக்., 3ம் தேதி நடக்கிறது.

 சென்னை பல்கலையில்வேலைவாய்ப்பு முகாம்அக்., 3ம் தேதி நடக்கிறது. 
இதுகுறித்துபல்கலை வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடந்த, 2013 முதல், 2015க்குள் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கானவேலைவாய்ப்பு முகாம்வரும், 3ம் தேதி பல்கலை வளாகத்தில் நடக்கிறது. டெக்ரூட் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்துபல்வேறு தொழில் நிறுவனங்களில் உள்ள, 1,200 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முகாம் நடக்கும் இடத்தில்பெயர்முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 9551690630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வில், பத்தாம் வகுப்பு மற்றும்,பிளஸ் 2 மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த விபரங்களை சேகரித்து, இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவு

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில்பத்தாம் வகுப்பு மற்றும்,பிளஸ் 2 மாணவமாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த விபரங்களை சேகரித்துஇணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவ, மாணவியரின் கருத்துகளை கட்டாயம் பெற வேண்டும் என, பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவ, மாணவியரின் கருத்துகளை கட்டாயம் பெற வேண்டும் என, பள்ளி கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணைய வழி விண்ணப்பத்தில் நிரந்தரப்பதிவு எண் கடடாயம்

 

டி.என்.பி.எஸ்.சி.,; நிரந்தரப் பதிவு எண் கட்டாயம்செப்டம்பர் 30,2015,15:31 IST

எழுத்தின் அளவு :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணைய வழி விண்ணப்பத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை விருப்பத்தினடிப்படையிலிருந்த நிரந்தரப்பதிவு முறை கட்டாயமக்கப்பட்டுள்ளது. 

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வு

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறை மத்திய அரசு அறிமுகம்

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது

கொரிய மொழியில் திருக்குறள்

திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையிலும், கொரியாவில் தமிழர்களும், தமிழகத்தில் கொரியர்களும், வாழ்ந்து வருவதைக் கருதியும் பார்போற்றும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கென, முப்பத்தாறு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஓரடியில் உலக மக்களுக்கேற்ற எளிய அற நெறிக் கருத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியின் அற நெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்

அம்மா இலக்கிய விருது'

பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம் பேதைமை யற்றிடும் காணீர்! - என்ற பாரதியாரின் அமுத மொழிக்கேற்ப, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'அம்மா இலக்கிய விருது' என்ற புதிய விருது சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வழங்கப்படும். "அம்மா இலக்கிய விருது" பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும், தகுதியுரையும் வழங்கப்படும்.

பாரதிதாசன் பிறந்த நாள்,'தமிழ்க் கவிஞர் நாள்'

தமிழ்க் கவிஞர் நாள்'
பாவேந்தர் பாரதிதாசன் புகழைப் பரப்பிடும் வகையில் அவரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும். மேலும், இந்த ஆண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்,'தமிழ்க் கவிஞர் நாள்' என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு.

தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினர் வட மாநிலங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

பாரதியார் பல்கலை விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி துறை சார்பில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புக்கான பயிற்சி

மாநகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள், அடுத்த மாதம் வளாக நேர்காணல் வாயிலாக மாணவர்களை தேர்வுசெய்ய அதிக முனைப்பு காட்டிவருவதால், கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், வரும், 8ம் தேதி, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும்-ஜாக்டோ அறிவிப்பு.

தமிழகத்தில், வரும், 8ம் தேதி, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என, ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ அறிவித்து உள்ளது.

சி.பி.எஸ்.சி. தனித்தேர்வு விண்ணப்பிக்கலாம்

: சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2தேர்வுகளை, 2016 மார்ச்சில்தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள்,சி.பி.எஸ்.இ.இணைய தளத்தில்தங்களின் விவரங்களைஅக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும். தவறான தகவல்கள் தருவோர்உரிய கட்டணம் செலுத்தாதோர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை 3.5 இலட்சம் ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுய உதவிக் குழுக்களுக்கு "அம்மா கைப்பேசி திட்டம்'

சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, "அம்மா கைப்பேசி திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாஸா விண்வெளி அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது.

2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும்

அனைத்து மாநிலங்களிலும் 2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிறுவர்களுக்கு பாடம் போதிக்கும் அதிசய காவல் நிலையம்

 மக்கள்பாதுகாப்பிற்காக நாடும் காவல் நிலையம்ஆதரவற்ற சிறுவர்கள் பலருக்குபாடம் போதிக்கும் பள்ளிக்கூடமாகவும் திகழ்கிறது. டில்லி ரயில் நிலையத்தில் தான்இந்த அதிசய காவல் நிலையம் உள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 300 இன்டர்நெட் கேபிள் இணைக்கும் பணி துவங்கியுள்ளது.

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவியரின் தேவைக்காக16 லட்சம் ரூபாய் மதிப்பில், 300 இன்டர்நெட் கேபிள் இணைக்கும் பணி துவங்கியுள்ளது. 

அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து உள்ளதா?

அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இக்னோ (IGNOU )ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

 இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகமான இக்னோ (IGNOU )ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

திங்கள், 28 செப்டம்பர், 2015

எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆம் கட்டக் கலந்தாய்வில், 148 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பள்ளி கல்லூரிகளில் நவ., 26ம் தேதி அரசியல் அமைப்பு தினம்

 அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பல்கலைகல்லுாரிகளில் அரசியல் அமைப்பு பற்றிய கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,)அறிவுறுத்தியுள்ளது.
அம்பேத்கரின்125வது பிறந்த தினத்தை முன்னிட்டுகல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படிபல்கலைகல்லுாரிகளில் அரசியல் அமைப்பு பற்றிய கருத்தரங்கு நடத்த வேண்டும்னியார் பல்கலைகள் எஸ்.சி.,எஸ்.டி.பிரிவு மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டும் எனயு.ஜி.சி.,அறிவுறுத்தியுள்ளது.
மேலும்இன்றைய குடிமக்கள் இடையேகுறிப்பாக மாணவர்கள் இடையே அரசியல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டுஆண்டு தோறும் நவ.26ம் தேதி அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும்அன்றைய தினம்பள்ளிகல்லுாரிகளில் அரசியல் அமைப்பு குறித்து கருத்துகள் தெரிவிக்க வேண்டும் எனயு.ஜி.சி.தெரிவித்துள்ளது.
இதுகுறித்த நடவடிக்கைகளை, ambedkar.ugc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்குஅக்.15ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் எனஅனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கு யு.ஜி.சி.செயலர் ஜஸ்பல் சந்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

: அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள்இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்க வேண்டும்சில பள்ளிகளில்குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நிலையில்,அதிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சில பள்ளிகளில்அதிக மாணவர் இருந்தும்போதிய ஆசிரியர் இல்லாமல்கல்வித்தரம் பாதிக்கிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்திஆசிரியர் பற்றாக்குறை பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் எனமாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்குபள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

மருத்துவக் கல்லுாரி திறக்கப்பட்டாலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 ஓமந்துாரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லுாரி திறக்கப்பட்டாலும்முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னைஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 200 கோடி ரூபாயில்அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்கப்பட்டுள்ளது. 
இதில், 100 எம்.பி.பி.எஸ்.இடங்களில் மாணவர் சேர்க்கைக்குஇந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. புதிய மருத்துவக் கல்லுாரியைமுதல்வர் ஜெயலலிதாஇம்மாதம், 7ம் தேதி துவக்கி வைத்தார். அப்போதுஒரு வாரத்தில் வகுப்புகள் துவங்கும் என,அறிவிக்கப்பட்டது. ஆனாலும்இன்னும் வகுப்புகள் துவங்கவில்லை. 

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, நாளை (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுநாளை (28ம் தேதி) துவங்கிஅக்., 6 வரை நடைபெறுகிறது. 

மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

சுயநிதி தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் இணைய தளத்தில் வெளியான போலி தேர்ச்சி பட்டியலை காட்டி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.

இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை

இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; படிப்பு அவசியம் இல்லை என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
 வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து, 10 வகையான தொழிற் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து, 10 வகையான தொழிற் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கால்நடை மற்றும் கோழியின அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் கருதிஉற்பத்தி திறனை பெருக்கவும்விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் விதமாகவும்சென்னையில்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை நிறுவப்பட்டது. இந்த பல்கலை சார்பில்சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியிலும்நெல்லைமதுரைநாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும், 10 வகையான குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து வரும், 2016, மார்ச் மாதம் வரை மாதந்தோறும் நடத்தப்படும்பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம்திருச்சியில் நடந்த பல்கலை நிறுவன நாள் விழா மற்றும் கால்நடை,கோழிப்பண்ணையாளர்கள் தின விழாவில் வழங்கப்பட்டது. 

கலை, அறிவியல் படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிலிங் நாளை25ம் தேதி நடக்கிறது.

 கலைஅறிவியல் படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிலிங் நாளை25ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கலைஅறிவியல் படிப்புகளுக்கு 5 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங் பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கடந்த ஜூலை மாதம் முதல் நடந்தது. இது வரை பத்து கவுன்சிலிங் நடந்துள்ளன. மொத்தமுள்ள 2118 இடங்களில்2103 இடங்கள் நிரம்பின. மூன்று கல்லுாரிகளில் 15 சீட்டுகள் காலியாக உள்ளன.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, வெற்றி பெறும் வகையில், பிரத்யேக கணினி பயிற்சி கூடம்

 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றுவெற்றி பெறும் வகையில்பிரத்யேக கணினி பயிற்சி கூடம்உப்பிலிபாளையம்தேசிய பார்வையற்றோர் இணைய வளாகத்தில் துவங்கப்பட்டது.

சீனாவில் செயல்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்

சீனாவிலுள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அறிந்து கொள்ளஇந்தியாவில் இருந்து, 19 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில்,கரூர் மாணவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட, 1,054 பள்ளிகளுக்கு, 1,263 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

புதன், 23 செப்டம்பர், 2015

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது

 மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது

தரம் உயர்ந்தும் பயனில்லை

உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில்அதற்கான கூடுதல் வகுப்பறைசுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில்தாமதம் நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காந்திகிராம பல்கலையில் வேலைவாய்ப்புதரும் 2 புதிய தொழிற்சார் பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டன.

காந்திகிராம பல்கலையில் வேலைவாய்ப்புதரும் 2 புதிய தொழிற்சார் பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டன.
பல்கலை துணைவேந்தர் நடராஜன் கூறியதாவது: காந்திகிராம பல்கலையில் புதிதாக அறிவுசார் தொழில் மேம்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மையம் மூலம் 2015-16 க்கு புதிதாக இளநிலை தொழிற் பட்டப்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன. இதில் பண்ணை இயந்திரங்கள் இயக்குதல் மற்றும் பராமரித்தல்காலணிகள் மற்றும் துணைப்பொருட்கள் வடிவமைப்பு ஆகிய 2பட்டப்படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகள் பல்கலை மானியக்குழு நிதியுதவியில் துவங்கப்பட்டன. எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

டில்லி அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு கடும் கட்டுப்பபாடு

டில்லி அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கிருந்த மாணவிகள் நள்ளிரவை தாண்டியும் விடுதிக்கு திரும்பாமல் வெளியில் தங்கி இருந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 
இதனையடுத்து மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பல்கலை.நிர்வாகம் விதித்துள்ளது. பல்கலை.மாணவிகள் ஜீன்ஸ் அணிவதற்குஹேர்கலரிங் செய்வதற்குஹீல்ஸ் அணிவதற்குசமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின், புதிய இணைய தள சேவை நாளை துவக்கப்படுகிறது.

 அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின், புதிய இணைய தள சேவை நாளை துவக்கப்படுகிறது.
கலாமின்ஐந்து திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தி யோருக்கு அக்., 15ம் தேதி அப்துல் கலாம் சேவை ரத்னாவிருது வழங்கப்படுகிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ்சென்னையில்நேற்று கூறியதாவது: டாக்டர் அப்துல் கலாமின், 85வது பிறந்த நாள் அக்., 15ம் தேதி வருகிறது. 

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். படிப்பை பலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறுவதாகவும், இந்த நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். படிப்பை பலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறுவதாகவும், இந்த நிலை இப்போது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.
 இதைத் தடுத்து தரமான ஆசிரியர்கள் உருவாக, சுயநிதி கல்லூரிகளில் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 21 அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தவிர மற்ற அனைத்தும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்.
 இந்த சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் கல்லூரிக்கே வராமல் பட்டம் பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
 கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்திய திடீர் ஆய்வில், வெளிநாட்டில் இருந்தபடி, இங்குள்ள சுயநிதி கல்லூரியில் மாணவர் ஒருவர் பி.எட். படித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, நிகழாண்டில் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்வதால் கல்லூரிக்கு வராமல் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:
 சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். சேருபவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணமாக ரூ. 47,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகள் இந்தக் கட்டணத்தை ரூ. 65,000 ஆக வசூலித்து வருகின்றன.
 அதே நேரம், பல்வேறு காரணங்களால் கல்லூரிக்கு தினமும் வர முடியாது என்கிற நிலையில் உள்ள மாணவர்களுக்கு சில சுயநிதி கல்லூரிகள் சலுகைகளை அளித்து வருகின்றன. அதாவது ரூ. 10 ஆயிரம் கூடுதலாக ரூ. 75,000 கல்விக் கட்டணத்தை செலுத்திவிட்டால் போதுமானது. கல்லூரிக்கே வரத் தேவையில்லை. தேர்வு நேரத்துக்கு அல்லது கல்லூரி அழைக்கின்றபோது வந்தால் போதும் என்ற நிலை வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது.
 இப்போது பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதால், இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் தீவிர கண்காணிப்பை அமல்படுத்த வேண்டும்.
 அப்போதுதான் தரமான ஆசிரியர்கள் உருவாக வாய்ப்பு அமையும் என்றார் அவர்.
 இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியதாவது:
 சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சிலவற்றில், இதுபோல் மாணவர்கள் கல்லூரிக்கே வராமல் பி.எட். படிப்பை மேற்கொள்வது உண்மைதான்.
 இதைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறையை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது. அதாவது, அனைத்து கல்லூரிகளும் மாணவர் தினசரி வருகைப் பதிவேட்டை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என உத்தரவிட்டோம். அதனடிப்படையில் இங்கொன்றும், அங்கொன்றுமாக ஏதாவது ஒரு கல்லூரியை தெரிவு செய்து பல்கலைக்கழக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
 இந்த நடவடிக்கை மூலம் பல கல்லூரிகள் பிடிபட்டன. சென்னைக்கு அருகே உள்ள ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தபடி பி.எட். படித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் 15 கல்லூரிகள் இந்த சர்ச்சையில் சிக்கின. அந்தக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகமும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலும் (என்சிடிஇ) நடவடிக்கை மேற்கொண்டது.
 இந்த திடீர் ஆய்வு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க முடியும் என்றார்.

 

NET தேர்வு டிசம்பர் 27

இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
 இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.
 நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கும் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். 
 வரும் டிசம்பர் மாதத்துக்கான தேர்வை டிசம்பர் 27-ஆம் தேதி நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதியும் விரைவில் வெளியிடப்பட உள்ளது என சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஆதிவாசிமாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியும், எஸ்.எஸ்.ஏ.,சார்பில் கணினி மூலம் ஆங்கிலவழிக்கல்வியும் கற்றுத் தரப்படுகிறது.

 வால்பாறையில் அடிக்கும் குளிரிலும்கொளுத்தும் வெயிலிலும்கடுங்குளிரிலும் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல்,மழைக்கு கூட பள்ளி அருகில் ஒதுங்காத ஆதிவாசி மாணவர்கள்இன்று அரசு உயர்பதவி வகித்துஎங்களாலும் சாதிக்க முடியும் என்று வரிந்து கட்டிக்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடம் தொடர்பாக முறைகேடு

 அரசு உதவி பெறும் பள்ளிகளில்ஆசிரியர் பணியிடம் தொடர்பாக முறைகேடு நடப்பதாக எழுந்துள்ள புகாரால்கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

தொலைதுார கல்வியில் பட்டப்படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் கல்வி மையங்கள் அமைக்கவோ அல்லது தனியார் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு பயிற்சி அளிக்கவோ அனுமதி இல்லை

தொலைதுார கல்வியில் பட்டப்படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் கல்வி மையங்கள் அமைக்கவோ அல்லது தனியார் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு பயிற்சி அளிக்கவோ அனுமதி இல்லை என, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

TNPSCசான்றிதழ் சரிபார்ப்பில் நவீன முறை

தமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

எம்.பி.பி.எஸ்: செப்.,21ல் பொதுப் பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு

பொதுப்பிரிவினருக்கான எம்பிபிஎஸ் படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகின்றது.
தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டிற்கான 2,167 இடங்கள், இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் நிரம்பின. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் திரும்ப கிடைத்ததும், இம்மாத இறுதியில், இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது. சில மாணவர்கள் பொதுப் பிரிவில் 50 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர். இதற்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 21-ம் தேதி சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் நடக்கிறது.
மேலும், விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த பிரிவில், 27 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சனி, 19 செப்டம்பர், 2015

உலக விண்வெளி வார விழாவையொட்டி,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

உலக விண்வெளி வார விழாவையொட்டி, மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
 உலக விண்வெளி வார விழா அக். 4 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
  8ஆம் வகுப்பு வரை, "விண்வெளித் தொழில்நுட்பமும், அதன் பயன்களும்', 10ஆம் வகுப்பு வரை "பூமியைப் போன்ற உலகங்களைத் தேடுவோம்', பிளஸ் 2 வரை "விண்வெளி ஆய்வில் சந்திரன், செவ்வாயும் அதற்கு அப்பாலும்'. ஆங்கில வழிக் கல்விக்கும் இது பொருந்தும்.
ஏ 4 தாளில் பக்கத்துக்கு 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒரு பக்கம் முறையிலும் கட்டுரையை எழுதியிருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர், வயது, பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களும், தலைமையாசிரியரின் ஒப்புதல் கடிதமும் அவசியம்.
உறையில் "கட்டுரைப் போட்டி' எனக் குறிப்பிட்டு, நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன திரவ இயக்க அமைப்பு மையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி-627133 என்ற முகவரிக்கு இம்மாதம் 30-க்குள் அனுப்ப வேண்டும். வெற்றி பெறுவோருக்கு, மகேந்திரகிரியில் அக்டோபர் மாதம் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
பேச்சுப் போட்டி: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் 5 நிமிட பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
தலைப்பு விவரம்: 8ஆம் வகுப்பு வரை "நான் விண்வெளி விஞ்ஞானி ஆகினால்', 10ஆம் வகுப்பு வரை "விண்ணில் ஆய்வும் மண்ணில் பயன்களும்', பிளஸ்2 வரை "விண்வெளியின் விந்தைகளுக்கு விடையளிப்போம்' ஆகிய தலைப்புகளில் பேச வேண்டும்.
இப்போட்டி அடுத்த மாதம் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறும். ஒரு பிரிவுக்கு ஒரு மாணவர் வீதம் பள்ளிக்கு 6 மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். பள்ளிகள் மூலமாகவே அக். 7-க்குள் தங்கள் பெயரை மேற்கூறிய முகவரியிலேயே பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04637-281210, 281940 ஆகிய தொலைபேசி எண்கள், 94421-40183, 94866-92236 ஆகிய செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்,ஆன்லைன் மூலம் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், சனிக்கிழமை (செப்.19) முதல் ஆன்லைன் மூலம் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தது: எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு இம்மாதம் தொடங்க உள்ளது. இத்தேர்வு எழுத அரசு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில். அரசுத் தேர்வு சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் உள்பட அனைவரும் சனிக்கிழமை முதல் ஆன்லைன் மூலம் தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டினை  இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

திருச்செங்கோட்டில் ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் சாலை மறியல்

திருச்செங்கோட்டில் ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாமக்கல்லைச் சேர்ந்த மோகன்குமார் (30) பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
தற்போது தேர்வுகள் நடைபெறுவதால், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வினாத்தாள்களை பெற்றுக் கொண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக சென்று கொண்டிருந்தார்.

சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள் இந்தப் புதிய நடைமுறைக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

 ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
 பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பாட நூல் தேவைப்பட்டியல் வகுப்பு வாரியாக தயார் செய்து அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

தொடக்கக்கல்வித்துறையில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் மூன்றாம் பருவத்திற்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை  பாட நூல் தேவைப்பட்டியல் வகுப்பு வாரியாக தயார் செய்து 21.09.15க்குள்   அனுப்ப  மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு  தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தாற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும்

தாற்காலிகப் பணியிடங்களை நிரந்தரமாக்க வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.
இக் கழகத்தின் மாவட்டப் பொதுக்குழு   நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது.  இதில், இக் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தாற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்ற வேண்டும். மேல்நிலை வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

144 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செவிலிய மாணவிகள் கடும் எதிர்ப்பு

சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் 144 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாகக் கூறி, அதற்கு செவிலிய மாணவிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் செயல்படும் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகே உள்ள வளாகத்தில் 1871-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. முதன்முதலில் செவிலிய பட்டயப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு வகுப்புகள் மற்றும் விடுதியறைகள் அதே வளாகத்தில் கட்டப்பட்டன.
 இடப்பற்றாக்குறை: அதன் பின்பு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு பி.எஸ்.சி. செவிலியர், எம்.எஸ்.சி. செவிலியர், போஸ்ட் பி.எஸ்.சி மாணவர்களுக்கான விடுதிகள் செயல்பட்டு வந்தன. அதையடுத்து எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவிகள் அதே வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் செவிலிய மாணவிகள் போதிய இடமில்லாமல் சிரமப்பட்டனர். செவிலிய பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கு விடுதி அறைகளிலேயே வகுப்புகள் நடைபெற்று வந்தன. 

வியாழன், 17 செப்டம்பர், 2015

10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை வருகிற 19-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட்., தரவரிசை பட்டியல்; நாளை மறுநாள் வெளியீடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில்பி.எட்.,படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில்ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில்பி.எட்.மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்வரும் 28ம் தேதி நடக்கிறது. அரசு சார்பில்லேடி வெலிங்டன் கல்லுாரிமாணவர் சேர்க்கையை நடத்துகிறது. மொத்தமுள்ள, 1,800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம்

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள்அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்.படிக்கதமிழக அரசுஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில்ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில்பி.எட்., -எம்.எட்.படிப்புகள் உள்ளன. மொத்தம் உள்ள, 1,777 இடங்களுக்கு, 7,400 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வரும், 28ம் தேதிமாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கி,அக்., 5ம் தேதி முடிகிறது.

பொறியியல் படிப்பில் காலியிடம் நிரப்ப சிறப்பு கவுன்சிலிங் நடத்த கோரிக்கை

அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியிடங்களை நிரப்ப சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும் எனமாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:

மாணவியரிடம் மொபைல் போன்; பெற்றோரே உஷார்!

படிப்பில் முழு கவனம் செலுத்தும் வகையில்பள்ளி மாணவியர் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்கபெற்றோர் முன்வரவேண்டும்.
பள்ளிகளில் மாணவமாணவியர் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது;வகுப்பறையில் மொபைல் போன் வைத்திருந்தால்அவற்றை பறிமுதல் செய்யவகுப்பு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நலன் கருதிசில மாவட்டங்களில்மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்தினால்சஸ்பெண்ட் செய்யவும்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விடலை பருவம் எனப்படும் டீன்-ஏஜ் வயதில்மாணவியர் கையில் இருக்கும் மொபைல் போன் என்பது,குழந்தையின் கையில் இருக்கும் தீப்பந்தம் போன்றது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக மத்திய அரசின் விஞ்ஞானிகள்

பின் தங்கிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும் 100 மணி நேரம் வகுப்பு எடுக்கப் போகின்றனர்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர்., (கவுன்சில் ஆப் சயின்டிபிக் அன்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச்) செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் 38 ஆராய்ச்சி கூடங்கள் உள்ளன. இதில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கண்டு பிடித்து தொழில்துறை நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் வழங்கி வருகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்புகளை படித்தவர்களால் மட்டுமே அறிய முடிந்தது.  கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞான அறிவில் சிறந்து விளங்க வேண்டும்என்பதற்காகமத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தமிழக சட்ட கல்லூரிகளில் 400 இடங்கள் காலி!

அரசு சட்டக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முடிந்துள்ளது; 400 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த, சட்டப் பல்கலை முடிவு செய்துள்ளது.

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

உ.பி., மாநிலத்தில், காலியாக உள்ள, 368 பியூன் பணியிடங்களுக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 255 பேர், இன்ஜினியரிங், அறிவியல் படிப்புகளில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள்.
உ.பி.மாநிலத்தில்முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான,சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறதுஇங்குவேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ளது. சமீபத்தில்உ.பி.தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள, 368 பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்துஇந்த பணிக்கு, 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

புதன், 16 செப்டம்பர், 2015

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்குதொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் அடுத்த ஆண்டிற்கான சிறார்கள் சேர்க்கை

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் அடுத்த ஆண்டிற்கான சிறார்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பள்ளி ஆசிரியரின் இடமாறுதலை கண்டித்து, 8நாட்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில்பள்ளி ஆசிரியரின் இடமாறுதலை கண்டித்து, 8நாட்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு கிராம இளைஞர்கள் கோயில் மரத்தடியில் பாடம் நடத்துகின்றனர்.

பி.எச்டி (விலங்கியல்) படிப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தில்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் விலங்கியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.எச்டி (விலங்கியல்) படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தகுதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்களை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பலாம். அக்டோபர் 5 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு http://www.du.ac.in/du/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தமிழகத்தில் புதிதாக 5 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும்

தமிழகத்தில் புதிதாக 5 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அவர் கூறியதாவது: 
 தமிழகத்தில் இப்போது 77 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம், 45 பொறியியல், 20 பொறியியல் அல்லாத பிரிவுகளில் 28,259 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 3,000 மாணவர்கள் தொழில்பயிற்சி பெறும் வகையில் விடுதி வசதியுடன் கூடிய 15 புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. தொழில்பயிற்சி நிலையங்களில் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில், நடப்பாண்டில் 5 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். 
 அதன்படி, தஞ்சை மாவட்டம்- ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம்- விராலிமலை, விருதுநகர் மாவட்டம்- சாத்தூர், பெரம்பலூர் மாவட்டம்- ஆலத்தூர், விழுப்புரம் மாவட்டம்- திண்டிவனம் ஆகிய இடங்களில், 1,000 மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் விடுதியுடன் கூடிய புதிய தொழில்பயிற்சி நிலையங்கள் ரூ. 45.97 கோடியில் தொடங்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
 

செவ்வாய், 15 செப்டம்பர், 2015


இன்று -அறிஞர் அண்ணா பிறந்த நாள்




காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.    தமிழிலும்,ஹிந்தியும், ஆங்கிலத்திலும்,தெலுங்கு மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.