GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பள்ளி கல்லூரிகளில் நவ., 26ம் தேதி அரசியல் அமைப்பு தினம்

 அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பல்கலை, கல்லுாரிகளில் அரசியல் அமைப்பு பற்றிய கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,)அறிவுறுத்தியுள்ளது.
அம்பேத்கரின், 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, பல்கலை, கல்லுாரிகளில் அரசியல் அமைப்பு பற்றிய கருத்தரங்கு நடத்த வேண்டும்; தனியார் பல்கலைகள் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டும் என, யு.ஜி.சி.,அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இன்றைய குடிமக்கள் இடையே, குறிப்பாக மாணவர்கள் இடையே அரசியல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஆண்டு தோறும் நவ., 26ம் தேதி அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும்; அன்றைய தினம், பள்ளி, கல்லுாரிகளில் அரசியல் அமைப்பு குறித்து கருத்துகள் தெரிவிக்க வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
இதுகுறித்த நடவடிக்கைகளை, ambedkar.ugc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு, அக்., 15ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என, அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கு யு.ஜி.சி., செயலர் ஜஸ்பல் சந்து கடிதம் அனுப்பியுள்ளார்.