GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 14 செப்டம்பர், 2015

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை.

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை.
இந்த ஆண்டுதேர்வு முடிவுகளையும் முறையாக வெளியிடாததால்,மத்திய அரசின் திட்டம் கிடப்புக்கு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊக்கத்தொகைகிராமப்புற மாணவர்கள்பள்ளி கல்வியை இடையில் நிறுத்தி விடாமல்பிளஸ் 2 வரை படிக்கும் வகையில்,மத்திய அரசு சார்பில்பல்வேறு திட்டங்களில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இவற்றில்நன்றாக படிக்கும் மாணவர்களுக்குதிறனறித் தேர்வு அடிப்படையில்கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமும்மத்திய அரசால்மாநில அரசின் மூலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படிஎட்டாம் வகுப்பில்அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள்மாநில அளவில் நடத்தப்படும்திறனறித் தேர்வை எழுதுவர். ஒவ்வொரு ஆண்டும்,நான்கு லட்சம் பேர்தேர்வில் பங்கேற்பர். அவர்களில், 6,995 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்குபிளஸ் 2 வரைமாதம் தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இந்நிலையில்கடந்த இரண்டு ஆண்டுகளாகதேர்ச்சி பெற்ற மாணவர்கள், 14 ஆயிரம் பேருக்குஇன்னும் உதவித்தொகை வழங்கவில்லை. மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம்இந்தப் பணம்மாணவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும். 
ஆனால்இதுவரை உதவித்தொகை வழங்கபள்ளிக்கல்வி துறைஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவிப்பு: இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டிய, 8.40 லட்சம் ரூபாய்மத்திய அரசிடமிருந்து வந்தும்என்ன ஆனது எனத் தெரியாமல்மாணவர்களும்பெற்றோரும் தவிக்கின்றனர்.
இதற்கிடையில்இந்த ஆண்டுக்கான திறனறித் தேர்வு முடிந்துஆறு மாதங்களுக்கு பின்தேர்வு முடிவை,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுத்துறை அனுப்பியது. ஆனால்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலிருந்துபள்ளிகளுக்கு தேர்வு முடிவுகளையும்தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலையும் இன்னும் அனுப்பவில்லை.