பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, எல்.ஐ.சி., கோல்டன் ஜூபிலி பவுண்டேஷன், உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவம் / பொறியியல் / ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ., படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 2014-15 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 23
மேலும் விவரங்களுக்கு: http://www.licindia.in/GJF_scholarship.htm