GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 28 ஏப்ரல், 2021

அலுவலகத்தில் பணி புரிவோர்; தடுப்பூசி போட்டவர்கள் விபரத்தை, வரும், 30ம் தேதிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும். தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன்-கடிதம்

 அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை தலைவர்களுக்கும், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், கடிதம் அனுப்பி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

 1.அலுவலகத்தில் பணிபுரிவோர் இடையே, 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

2.அனைவரும் எப்போதும் முக கவசம் அல்லது முக தடுப்பு அணிந்திருக்க வேண்டும்.

3. அடிக்கடி கைகளை, 40 முதல், 60 வினாடிகள் சோப்பால் கழுவ வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தினால், குறைந்தது, 20 வினாடிகள் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

4.தும்மல், இருமல் வந்தால், டிஷ்யூ பேப்பர், கைகுட்டை பயன்படுத்த வேண்டும். துப்புவது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.

5. அனைவரும் தங்கள் மொபைல் போனில், 'ஆரோக்கிய சேது' செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டும், அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

6.உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே, அனுமதிக்க வேண்டும்.மதிய உணவின் போதும், ஊழியர்கள் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

7.ஏசி' அறையில், 24 டிகிரி முதல், 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பராமரிக்கப்பட வேண்டும். அறைகள் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.

8.பணி செய்யும் இடத்தை, தொடர்ச்சியாக கிருமி நாசினியால் சுத்தம் செய்யவேண்டும்.

9 அதிகம் பேர் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

10 யாருக்கேனும் நோய் அறிகுறி இருந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு நோய் தொற்று உறுதியானால், அவர்கள் பணிபுரிந்த அறை முழுவதையும், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

11.தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.

12 .அலுவலகத்தில் பணி புரிவோர்; தடுப்பூசி போட தகுதியானோர்; முதல் டோஸ், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் விபரத்தை, வரும், 30ம் தேதிக்குள், அரசுக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் வாரந்தோறும், தடுப்பூசி போட்டவர்கள் குறித்த விபரத்தை அனுப்ப வேண்டும்.இவ்வாறு ராஜிவ்ரஞ்சன் கூறியுள்ளார்.

*மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு*



 

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ஆக்சிஜன் பற்றாக்குறை, தமிழக மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள் உடனடியாக, '104' சேவை எண்ணில், உதவிக்கு அழைக்கலாம்.

 தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில்,ஆக்சிஜன் வழங்கலில் சிக்கல் ஏற்பட்டால் தீர்வு காண, 'கால் சென்டர்' துவக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.எனவே, மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள்,கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில், மருத்துவ ஆக்சிஜன் தேவை இன்னும் அதிகரிக்கும்.மாநிலத்தில் உள்ள, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள், விரைவாக மருத்துவமனைகள் வந்தடைய, தேவைப்படும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்களில், மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பாக, சிக்கல் ஏற்பட்டால், அதை தீர்க்க, மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் கீழ், 24 மணி நேரமும் இயங்கும், கால் சென்டரை, தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்கிற, தமிழக மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள் உடனடியாக, '104' சேவை எண்ணில், உதவிக்கு அழைக்கலாம்.