GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 19 மே, 2026

+2 முடித்த மாணவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் எம்.ஏ. தமிழ் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு (எம்.ஏ. தமிழ்) ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு (எம்.ஏ. தமிழ்), தமிழ் மொழியியல் பட்ட வகுப்பு (பி.எச்.டி.) ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2026–2027 கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைத் தமிழ் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்கள் சேரலாம்.

இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தேர்வின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்நிறுவனத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. மேலும், நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இணையதள வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை 

www.ulakaththamizh.in

CLICK HERE  

என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதுநிலை தமிழ் பட்டப்படிப்புக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.