நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்டமாக சுய கணக்கெடுப்பு, வீட்டு பட்டியல் தயாரித்தல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் ஜூலை 17-ஆம் தேதி தொடங்க உள்ளன.
இந்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதுடன், அவர்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கக் கூடாது என மத்திய அரசு ஏற்கனவே மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் சுமுகமாக நடைபெறுவதற்காக, ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 31 வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், கணக்கெடுப்புப் பணிகளில் எந்தவித நிர்வாகச் சிக்கலும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.