GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

கல்வி கண்காட்சி தொடர்பான விண்ணப்பங்களை, கலெக்டர்களே சரிபார்த்து அனுமதி வழங்கலாம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், தனியார்கள் நடத்தும் பொருட்காட்சி, கண்காட்சிக்கு, அரசிடம் உரிய அனுமதி பெற்றே நடத்த வேண்டும். கல்வி கண்காட்சி, விழாக்கள் போன்றவற்றுக்கு அனுமதி கேட்டு, அரசுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், காலதாமதம் ஏற்படுகிறது. விழாவுக்கு, பத்து நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்து, அனுமதி கேட்கும் சூழ்நிலை உள்ளது.இவற்றை தவிர்க்க, அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு, அரசு அனுமதி வழங்கி உள்ளது. கல்வி கண்காட்சி தொடர்பான விண்ணப்பங்களை, கலெக்டர்களே சரிபார்த்து அனுமதி வழங்கலாம். சம்பந்தப்பட்டவர்கள், அரசுக்கு விண்ணப்பித்து, கால நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த நடைமுறை, தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது