GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 4 மே, 2024

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வு எழுத வருகை தராத மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முடிவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் துணை தேர்வுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன 
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் 'தொடர்ந்து கற்போம்' என்னும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு துணை தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வாராந்திர தேர்வுகளை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மூலமாக சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

 பொது தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் வருவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.