GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 6 அக்டோபர், 2015

காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு

காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப, தலைமை ஆசிரியர்கள் செயல்படவும், சக ஆசிரியர்களை வழி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடந்த நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ,மாணவியர் பெற்ற மதிப்பெண் விவரங்கள், மாதாந்திர தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணியில்,தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசு தரப்பில், ஆண்டுதோறும் மாணவ மாணவியருக்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, 16 வகையான கல்வி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற் கேற்ப, பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சி என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், மாணவ,மாணவியரை தேர்ச்சிக்கு தயார் செய்ய, தலைமை ஆசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும், கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 காலாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி என்பது, ஓரிரு மாணவர்களால் குறைந்து விடுகிறது. அவர்களை துவக்கத்தி லேயே கண்டறிந்து, முறையாக பயிற்சி தந்தால், தேர்ச்சி பெற வைக்கலாம். காலாண்டு தேர்வு முடிவில், படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிய, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படும், என்றார்.