GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 13 அக்டோபர், 2015

வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி

வங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன.
வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து, தற்போது இலவசமாக இருக்கும் வங்கிகளின் இணைய சேவைக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 1 முதல், வங்கி இணைய சேவைக்கு கட்டணம் வசூலிக்கும்படி, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, பல வங்கிகளில் அமலுக்கு வந்து விட்டது' என்றார்.