அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதுநாள் வரையில் இவர்களுக்கான வருகை பதிவேடு நோட்டு புத்தகங்களிலே பராமரிக்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவும், பணியாளர்களை கண்காணிக்க ஏதுவாகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு தொழில்நுட்பத்தை அமலாக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.இதன்கீழ், பெரும்பாலான அரசு பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' மெஷின் வினியோகித்து, சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இந்நிலையில், வரும் ஜூன் 3 முதலே ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டும் பயோமெட்ரிக் மெஷின் வழங்கப்பட்டுள்ளன.பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டும் கைவிரல் ரேகைகளை பதிந்து வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக பயோ மெட்ரிக் கருவி பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், ஜூன் 3ல் முழுமையாக, அமல்படுத்த இருப்பதால், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் விரைவாக பதிவேற்றம் செய்யுமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: ஆசிரியர்கள் காலை 9:00 மணிக்குள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
ஒரு வினாடி தாமதித்தாலும், மெஷினில் பதிவு செய்ய முடியாது. மீண்டும் பிற்பகல் 12:00 மணிக்கே மெஷின் செயல்பாட்டிற்கு வரும். அதன்பிறகு வருகையை பதிவு செய்யலாம். ஆனால், அரைநாள் ஆப்சென்ட் ஆகும்.மேலும், ஆசிரியர்கள் மதியம் 1:30 மணிக்குள் மதியம் வேளைக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும்.
மீண்டும் மாலை, 4:30 மணிக்கே மீண்டும் மெஷின் செயல்படத்துவங்கும். அதன்பிறகே ஆசிரியர்கள் பணியை நிறைவு செய்ய முடியும்.தற்போது, காலை, 9:00 முதல், மாலை, 4:10 மணி வரையில் ஆசிரியர்களின் பணிநேரமாக உள்ளது. பள்ளி நேரத்தில் மாற்றம் உள்ளதா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- THIRUKKURAL
- TIPS