GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 18 மே, 2019

கல்வி சேனல் ஒளிபரப்பிற்காக 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு இணை இயக்குனர் நாகராஜமுருகன் தகவல்



"தமிழக கல்வித்துறை சார்பில் துவங்கப்படும் கல்வி சேனல் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவுற்று, 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது" என இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:மாநிலத்தில் 'எமிஸ்' (கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு) பதிவேற்றப் பணிகள் 90 சதவீதம் முடிவுற்றது. இக்கல்வியாண்டு முதல் எமிஸ் மூலமே பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பள்ளி மற்றும் மாணவர் விவரம் தொடர்பான புதிய தகவல்களை தலைமையாசிரியர் அவ்வப்போது பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவரின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் துவக்கவுள்ள கல்வி சேனல் பணிகள் நிறைவுற்றன. சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் எட்டாவது தளத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தேவையான காட்சியரங்கு, ஒளிப்பதிவு கூடம் மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் தயார் நிலையில் உள்ளன.இதன் மூலம் கற்றல் மற்றும் மாணவர் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படும். காலை 5:30 மணிக்கு 'குறளின் குரல்' என்ற தலைப்பில் திருக்குறள் பற்றிய விளக்கவுரையுடன் நிகழ்ச்சி துவங்கி பாடங்கள் தொடர்பான அனிமேஷன் விளக்கப் படம், கல்வித்துறை முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடும் 'நாள் குறிப்பு', உலக நிகழ்வை தொகுத்து வழங்கும் 'இந்த நாள் இனிய நாள்', சாதனை ஆசிரியர்களை கவுரவிக்க 'குருவே துணை' உட்பட 30 தலைப்புகளில் முதற்கட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படும்.அரசு செட்டாப் பாக்ஸில் 200வது சேனலாக உள்ளது. தமிழகத்தில் 53 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் இச்சேனலை மாணவர் பார்க்கும் வகையில் கேபிள் இணைக்கும் பணிகள் நடக்கின்றன. மாவட்டங்கள் தோறும் மீடியா ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மே 23 ம் தேதிக்கு பின் சேனல் துவக்க விழா நடக்கும் என்றார்.


கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கிய எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை) பதிவேற்றம் இன்னமும் முடிந்தபாடில்லை.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு 'அப்டேஷன்' கொடுக்கப்படுவதால், கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கிய எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை) பதிவேற்றம் இன்னமும் முடிந்தபாடில்லை.மாணவர் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து விபரங்களும் அடங்கிய 'எமிஸ்' பதிவேற்றத்தில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பதிவேற்றம் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. திட்டம் தொடங்கியபோது கணினி, இணைய வசதி இல்லாததால், பள்ளிகள் இதில் அதிகம் அக்கறை காட்டவில்லை.தற்போது மாணவர்களுக்கு 'டிசி', ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, நலத்திட்டங்கள் என அனைத்தும் 'எமிஸ்' வழியே மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நடப்பாண்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது பள்ளி கல்வி துறை.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 2011-ம் ஆண்டு எமிஸ் பதிவேற்றம் தொடங்கினாலும், 2013-ம் ஆண்டில்தான் ஆசிரியர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் பெயர், பள்ளி, வகுப்பு என ஒரு சில விபரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு 'அப்டேஷன்களை' கொடுத்து கொண்டே இருப்பதால் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. மாவட்ட அதிகாரிகள் 90 சதவீத பணிகள் முடிந்ததாக கூறினாலும், 70 சதவீத பணிகளே முடிந்துள்ளன.தற்போது மாணவர்களின் ஆதார் எண், அங்க அடையாளங்கள், தாயார் பெயர், ரத்த வகை என பல்வேறு வகை விபரங்களை பதிவேற்றம் செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர். இன்னும் எதையெல்லாம் 'அப்டேஷன்' செய்ய சொல்ல போகின்றனரோ தெரியவில்லை, என்றார்.

கோடை விடுமுறை முடிய, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

'.தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் பொது தேர்வுகள் முடிந்தன; ஏப்ரலில் பள்ளி இறுதி தேர்வுகள் நடந்தன. ஏப்., 12 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்னும் இரண்டு வாரங்களில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:கோடை விடுமுறை முடிந்து, புதிய கல்வி ஆண்டில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை, சீர் செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், பராமரிப்பு பணிகளுடன், சுத்தப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.பள்ளிகள் திறக்கப்படும் போது, மாணவர்களுக்கு உகந்த சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில், மாணவர்களின் வகுப்புகள் துவங்கும் அளவுக்கு, அனைத்து முன் ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அரசு வழங்கிய இலவச, 'லேப் டாப்'களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா; விற்று விட்டனரா' என, கணக்கெடுக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, 14 வகையான நலத்திட்ட உதவிகளை, தமிழக அரசு வழங்குகிறது.அதில் ஒன்றாக, பிளஸ் 2 முடிக்கும் மாணவ - மாணவியர் மற்றும் பாலிடெக்னிக் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப் டாப் வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் இறுதியாண்டு தேர்வு முடிந்த பிறகும், பாலிடெக்னிக்குகளில் செமஸ்டர் தேர்வு முடிந்த பின்பும், லேப் டாப்கள் வழங்கப்படுகின்றன. இதன் வினியோகத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.லேப் டாப் பெறும் மாணவ - மாணவியரின் சுய விபரங்கள், ஆதார் எண், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தள சிறப்பு எண் போன்றவை பெறப்படுகின்றன.இந்த லேப் டாப்களை, மாணவர்களை தவிர, வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டு உள்ளது.எட்டு ஆண்டுகளாக அமலில் உள்ள இந்த திட்டத்தால், மாணவர்களுக்கு ஏதாவது பயன் கிடைத்துள்ளதா என்பதை, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, லேப் டாப் வாங்கிய மாணவர்களிடம், 15 வகையான தகவல்களை பெற, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களின் பெயர், பள்ளி விபரங்கள், லேப் டாப் வாங்கிய ஆண்டு, மாணவர் தற்போது படிக்கிறாரா, சுய தொழில் செய்கிறாரா, வேலை செய்கிறாரா என்ற விபரம் கேட்கப்பட்டுள்ளது.பள்ளியில் எப்போது, லேப் டாப் வழங்கப்பட்டது; பள்ளியில் படிக்கும் போது வழங்கப்பட்டதா அல்லது படிப்பு முடிந்த பின் வழங்கப்பட்டதா என, கேட்கப்பட்டு உள்ளது.லேப் டாப்பை பயன்படுத்தி பாடம் நடத்தப்பட்டதா; படிப்புக்கு தேவையான சாப்ட்வேர் வழங்கப்பட்டதா; லேப் டாப்பில் உள்ள தகவல்கள் படிப்புக்கு பயன்பட்டதா என்பதையும், மாணவர்கள் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.ஓராண்டுக்குள், லேப் டாப்பில் பழுது ஏற்பட்டதா; மாணவர்கள் தற்போது லேப் டாப்பை வைத்துள்ளனரா; வேறு யாருக்கும் விற்று விட்டனரா அல்லது பழுதாகியுள்ளதா என்ற விபரங்களையும், பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுகள் குறித்த முழு விபரங்களையும், இரண்டு நாட்களில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த, கே.சாந்தகுமார் தாக்கல் செய்த மனு:தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், ஓட்டளிக்க உரிமை உள்ளது.
தபால் ஓட்டு சீட்டு பெற, அதற்கான படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.தேர்தல் பயிற்சி மையத்திலேயே, தபால் ஓட்டுகளை பதிவு செய்ய தகுதியானவர்களுக்கு, படிவம் வழங்கப்படும்.அந்த படிவத்தில், தேர்தல் பணியில் இருப்பவரின் பெயர், எண், தொகுதி பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் போன்ற விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.தபால் ஓட்டு பதிவு செய்ய, எனக்கு உரிய படிவம் வழங்கப்படவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேலான, அரசு ஊழியர்களுக்கு, தபால் ஓட்டு உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக, செய்தி வந்துள்ளது.எனவே, தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, உரிய படிவங்களை வழங்கும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.வெளியிட வேண்டும்தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, தபால் ஓட்டு பதிவு செய்ய வேண்டியவர்களின் எண்ணிக்கை விபரங்களை வெளியிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர், வி.அருண், தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன்ஆஜராகினர்.தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:தேர்தல் பணியில், ௪.௩௫ லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு உரிய படிவங்கள் வழங்கப்பட்டன. ௪.௧௦ லட்சம் பேர், படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.சமர்ப்பித்ததுமொத்தம், ௩.௯௭ லட்சம் பேருக்கு, தபால் ஓட்டு சீட்டு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.இவ்வாறு, தேர்தல் ஆணைய மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு தள்ளுபடிமனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும், படிவங்கள் வழங்கப்பட்டதாக, ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்களில், நாங்கள் திருப்தி அடைகிறோம். படிவங்களைசமர்ப்பிக்காததற்கும், தவறான விபரங்களுடன் படிவங்களை சமர்ப்பித்ததற்கும், தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பல்ல.அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் பணியில் ஈடுபடும், அதிகாரிகளின் ஓட்டுப் பதிவு குறித்த விதிமுறைகள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டுள்ளது.கையேட்டில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் கண்டிப்பாக பின்பற்றும். எனவே, இந்தகட்டத்தில், நீதிமன்றம் குறுக்கிட தேவையில்லை; மனு, தள்ளுபடிசெய்யப்படுகிறது.தபால் ஓட்டு குறித்த விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இரண்டு நாட்களில், அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு குறித்த முழுவிபரங்களையும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

வெள்ளி, 17 மே, 2019

2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5) வெளியாகும்


2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5)  வெளியாகும்

கணக்கீட்டு தாளை
http://www.agae.tn.nic.in/onlinegpf/ என்ற இணையதளத்தில் தங்கள் சேமநலநிதி கணக்கு எண்
Gpf /Tpf No
Date of birth
suffix (EDN/PTPF/MTPF)
உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

AIMSஎம்.பி.பி.எஸ்.நுழைவு தேர்வு .'ஹால் டிக்கெட்' வெளியிடப் பட்டது

எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வுக்கு ஒன் றரை மணி நேரத்திற்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும்' என கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.மத்திய அரசின் மருத்துவ உயர்கல்வி நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர வரும் 25 26ம் தேதிகளில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்த வர்களுக்கு நேற்று முன்தினம் 'ஹால் டிக்கெட்' வெளியிடப் பட்டது. இந்த தேர்வு கணினி முறையில் நடத்தப்பட உள்ளது.தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.இதில் மாணவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப் பாட்டுகள்:l தேர்வுக்கு வருவோர் அடையாளத் துக்கான ஆவணங் களை எடுத்து வர வேண்டும். ஆதார் அட்டை பாஸ்போர்ட் வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்துடன் கூடிய வருமான வரித்துறை அட்டை அசல் ஓட்டுனர் உரிமம் 12ம் வகுப்பு தேசிய அல்லது மாநில பாட திட்டத்தில் தேர்வுக்கான புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசல் ஆவணத்தை கட்டாயம் எடுத்து வர வேண்டும்l இந்த தேர்வு காலை 9:00 மற்றும் பகல் 3:00 மணி என இரண்டு ஷிப்டுகளாக நடக்கிறது. மாணவர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். பின் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிக உயரம் உள்ள காலணிகள், ஷூ போன்றவற்றை அணிந்து வர அனுமதியில்லைl ஹால் டிக்கெட்டின் ஜெராக்ஸ் அல்லாத அசல் அச்சு பிரதி எடுத்து வர வேண்டும். அதில் மாணவரின் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி அதில் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இன்னொரு புகைப்படத்தை தேர்வு மையத்துக்கு எடுத்து வரவேண்டும்l தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப ஆடை அணியலாம். தலை முக்காடு தொப்பி வாட்ச் ஆபரணங்கள் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. மதம் கலாச்சாரம் தொடர்பான உடைகள் அணிந்தவர்கள் முன் கூட்டியே வர வேண்டும். பெரிய பொத்தான் உள்ளஉடை களுக்கு அனுமதியில்லை.இவ்வாறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

50க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதல்ல என அறிவிப்பு

தமிழகத்தில் சில பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50க்கும் மேற்பட்ட பட்டங்கள் அரசு வேலைவாய்ப்பிற்கு ஏற்றவை இல்லை' என தமிழக அரசு அறிவித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் செயலர் மற்றும் சமநிலைக் குழு நிர்வாகிகள் பங்கேற்ற 60வது சமநிலைக் குழு கூட்டம் பிப். 11ல் நடந்தது. இக்கூட்டத்தில் சில பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் சில பட்டப் படிப்புகள் அரசு வேலை பெறுவதற்குரிய பட்டப்படிப்புகளுக்கு சமமாக இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.இதை அரசாணையாக வெளியிடும்படி அரசுக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்தது. அதை ஏற்று தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பெரியார் பல்கலை வழங்கும் பி.சி.ஏ. பட்டப்படிப்பு அரசு வேலைவாய்ப்பிற்கான பி.எஸ்சி. கணித படிப்பிற்கு நிகரல்ல.பாரதியார் பல்கலை திருவள்ளூவர் பல்கலை பெரியார் பல்கலை காமராஜர் பல்கலை வழங்கும் எம்.எஸ்சி. அப்ளையிடு சயின்ஸ் எம்.எஸ்சி. அப்லைடு நுண்ணுயிரியல் எம்.எஸ்சி. நுண்ணுயிரியல் பட்டப்படிப்பு எம்.எஸ்சி. விலங்கியல் படிப்பிற்கு நிகராகாது.இதுபோல் 50க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் அரசு பணிக்கு தேவையான பட்டப்படிப்பிற்கு நிகராக இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33 பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றதல்ல என்று அறிவிக்கப்பட்டது.


இ-சேவை மைய நேரம் நீட்டிப்பு

மே, ஜூன் மாதங்கள் மாணவர்களுக்கானவை. பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரியில் சேர பல சான்றிதழ்கள் தேவைப்படும். இந்த நேரத்தில், சேவை கிடைக்காமல் மாணவர்கள் திணறக்கூடாது என்பதால், இ - சேவை மையங்களை, கூடுதல் நேரம் திறந்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.சேவை மையங்கள் வழக்கமாக, காலை, 10:00 முதல், மாலை, 5:45 மணி வரை செயல்படும். ஜூன் வரை, காலை, 9:30க்கு திறந்து, மாலை, 6:30 மணி வரை செயல்பட, ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளோம். இந்த நேரங்களில், மாணவர்கள் உட்பட அனைவரும், இ - சேவை மையங்களை பயன்படுத்தி, தங்கள் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்

பி.எட்., தேர்வு தேதியை மாற்றி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதுவதற்காக, பி.எட்., தேர்வு தேதியை மாற்றி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நேற்று முன்தினம் அறிவித்தது.ஜூன், 8, 9ம் தேதிகளில், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு, தமிழகத்தில் உள்ள, பி.எட்., கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ - மாணவியர், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், ஜூன், 8,9ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தும், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.மாணவ - மாணவியர் படிக்கும், பி.எட்., படிப்புக்கான இறுதியாண்டு தேர்வு, மே, 29 முதல், ஜூன், 13 வரை நடத்தப்படுகிறது.தகுதித் தேர்வு நடத்தப்படும், ஜூன், 8ல், பி.எட்., மாணவர்களுக்கு முக்கிய பாடத்துக்கான தேர்வு நடைபெற இருந்தது. இந்த தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய நிலை உள்ளதால், டெட் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை உருவானது.இது குறித்து, மாணவர்கள் தரப்பில், கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால், பி.எட்., தேர்வு தேதியை, 8ம் தேதியில் இருந்து, 13ம் தேதிக்கு மாற்றி, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சி.டி.இ.டி., எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ.,க்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

சி.டி.இ.டி., எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ.,க்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

சி.டி.இ.டி., எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி, சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளனர்.மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில், பொதுப் பிரிவில் இருந்து, 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது; அது, தற்போது நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கவில்லை. இந்த ஒதுக்கீட்டை அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், சமீபத்தில் அளித்த உத்தரவில், 'இது தகுதித் தேர்வு தான். இதற்கு, எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது

.'பணி நியமனத்தின் போது தான், இட ஒதுக்கீடு பிரச்னை வரும்' என, குறிப்பிட்டிருந்தது.இந்த வழக்கு, நீதிபதிகள், இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா அடங்கிய, உச்ச நீதிமன்றத்தின் கோடைக் கால விடுமுறை அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த பிரச்னை குறித்து, ஜூலை, 1ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு, நோட்டீஸ் அனுப்ப, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 16 மே, 2019

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கு, ஜூன், 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6ல் விண்ணப்பம்

தமிழகத்தில், 23 மருத்துவ கல்லுாரிகளில், 3,150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னை பல் மருத்துவ கல்லுாரியில், 100 இடங்கள் உள்ளன.இதில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு செல்கின்றன. மீதமுள்ள, 85 சதவீத இடங்கள், மாநில கவுன்சிலிங்கில் இடம்பெறுகின்றன. இதை தவிர, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., 700; பி.டி.எஸ்., 1,100 இடங்கள் உள்ளன.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 2019 - 20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு, ஜூன், 6ம் தேதி முதல்,www.tn.health.org,www.tnmedicalselection.orgஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். ஜூன், 26ம் தேதி, முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது:'நீட்' நுழைவுது்தேர்வு முடிவுகள், ஜூன், 5ம் தேதி வெளியாக உள்ளன. ஜூன், 6ம் தேதி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். இந்தாண்டு முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது.விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழக அரசின் நிதி துறை இணையதளம், ஜவ்வாக இழுப்பதால், ஊதிய விபரங்களை பதிவு செய்ய முடியாமல், ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பாக, புதிய ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பல நுாறு கோடி ரூபாய் செலவில், 'விப்ரோ' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுஉள்ளது.இந்த தளத்தில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சுயவிபரங்கள் மற்றும் ஊதிய விபரங்களை பதிவு செய்ய, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த தளத்தில் விபரங்கள் பதிவு செய்யப்படாத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, வரும் மாதங்களில் சம்பளம் கிடைக்காது என்றும், நிதித் துறை நிபந்தனை விதித்துள்ளது.

இதற்காக, கோடை விடுமுறையில் உள்ள ஆசிரியர்களை அழைத்து, ஆசிரியர்களின் விபரங்களை, 'ஆன்லைன்' வழியே பதிவு செய்யும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டுஉள்ளனர்.ஆனால், இந்த நிதி மேலாண்மை இணையதளம், சரியான தொழில் நுட்பத்துடன் இல்லாததால், ஜவ்வாக இழுப்பதாக, புகார் எழுந்துள்ளது. 

பெரும்பாலான நேரங்களில், 'எரர்' என்ற பிழை பக்கத்தை காட்டும், இந்த தளத்தின் செயல்பாடு, ஆசிரியர்களின் பெரும்பாலான பணி நேரத்தை வீணடித்து விடுவதாகவும், புகார் எழுந்துள்ளது.'விப்ரோ' நிறுவனம்ஒவ்வொரு ஆசிரியர்களின் விபரங்களையும் பதிவு செய்ய, பல நாட்கள் ஆகின்றன. பள்ளிகள் திறந்த பின்பும், இதே நிலை நீடித்தால், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:நிதி துறை இணைய தளத்தில், ஊதிய விபரங்களை கட்டாயம் பதிய வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இது குறித்து, சரியான தொழில்நுட்ப வழிகாட்டுதலோ, உதவிகளோ இல்லை.ஏதாவது பிரச்னை என்றால், இணையதளத்தை பராமரிக்கும், 'விப்ரோ' நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறுகின்றனர்.