GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 7 அக்டோபர், 2026

9ஆம் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு 2026

அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
சென்னை, அக்.7-
அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஊரக பகுதிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படவிருக்கிறது. 2026-27-ம் ஆண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி நடக்கிறது.
இந்தத் தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு (ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள்) ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
சென்னை தவிர்த்து ஊரக பகுதிகளில் கிராம பஞ்சாயத்து மற்றும் நகர்ப்பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலம் தேர்வு கட்டணமாக ரூ.10 செலுத்தி இன்று (புதன்கிழமை) முதல் 13-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.