GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 16 மே, 2019

ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, ஜூன், 8 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் பணியில் சேரக்கூடியவர்கள், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்களும்; ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.இந்த தேர்வு, 2010, ஆக., 23 முதல் அமலுக்கு வந்தது. 

தமிழகத்தில், 2011ல் துவங்கி இதுவரை, நான்கு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள், மார்ச், 15 முதல், ஏப்., 12 வரை, 'ஆன்லைன்' வழியே பதிவு செய்யப்பட்டன. இதில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தேர்வு நடக்கும் தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று அறிவித்தது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு, முதல் தாள் தேர்வு, ஜூன், 8ல் நடத்தப் படுகிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையில், ஆசிரியர் பணிக்கான இரண்டாம் தாள் தேர்வு, ஜூன், 9ல் நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வுகளும், காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.

இதன் விபரங்களை,www.trb.tn.nic.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்ட, நான்கு ஆசிரியர் தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாமல், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்களை தகுதியற்றவர்களாக, சமீபத்தில், பள்ளி கல்வித் துறை அறிவித்தது.'அவர்கள், இந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கீகாரம் இல்லாத பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தமிழக உயர் கல்வித் துறை

தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படு கின்றன.இந்த கல்லுாரிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின் படி, மத்திய அரசு சார்பில், அங்கீகார நீட்டிப்பு உத்தரவு வழங்கப்படும்.இந்த உத்தரவு இருந்தால் மட்டும், அந்த கல்லுாரி களில் மாணவர்களை சேர்க்க, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கும். 

இந்த ஆண்டு, பல பாலிடெக்னிக் கல்லுாரிகள், அங்கீகார நீட்டிப்பு பெறவில்லை என, தமிழக அரசுக்கு தெரிய வந்துள்ளது.இதையடுத்து, அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும், புதிய உத்தரவை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ளது.'அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின், அங்கீகார நீட்டிப்பு பெறாத கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில், முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்க்க வேண்டாம்; அதையும் மீறி சேர்த்தால், அந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்காது' என, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது

கோடை வெயிலில், மாணவர்களை அழைத்து, பேரணி செல்லக் கூடாது' என, பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.


தொடக்கக் கல்வித் துறை இயக்குனர், ஏ.கருப்பசாமி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை உயர்த்த, நடவடிக்கைகளை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.அங்கன்வாடி மையங்களில் உள்ள, மழலையர் வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை பணிகளை, விடுமுறையிலேயே முடிக்க வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால்,விழிப்புணர்வு பேரணிகளில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, பங்கு பெற செய்யக் கூடாது.இதுதொடர்பான அறிவுரைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

புதன், 15 மே, 2019

நேரடி நியமனம் வாயிலாக 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்பும் தேர்வுக்கான அறிவிப்பை வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நிறுத்தி வைத்துள்ளது.


தமிழக வனத்துறையில் வனவர் வனக்காப்பாளர் பணியிடங்கள் ஆன்லைன் தேர்வு வாயிலாக நிரப்பப்பப் பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 564 வனக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் முடிவு செய்தது.இதற்கான ஆன்லைன் தேர்வு கால அட்டவணை மற்றும் அறிவிப்பை மார்ச் 7ல் வெளியிட்டது. இதன்படி மே முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் பெறும் பணியை துவங்க வேண்டும். இதுவரை தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால் விண்ணப்பிக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் 'நிர்வாக காரணங்களால் வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான கால அட்டவணை ஒத்திவைக்கப்படுகிறது. திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்' என வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்து
உள்ளது.வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிவோர் வனக்காவலர்களாக பதவி உயர்வு வழங்க கோருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதே தேர்வு அறிவிப்பை ஒத்தி வைக்க காரணம் என தெரிய வந்துஉள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு வரும் ஜூன் 3ல் துவங்கவுள்ளதால், பள்ளிகள்தோறும் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதுநாள் வரையில் இவர்களுக்கான வருகை பதிவேடு நோட்டு புத்தகங்களிலே பராமரிக்கப்படுகிறது.
இதனால் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவும், பணியாளர்களை கண்காணிக்க ஏதுவாகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு தொழில்நுட்பத்தை அமலாக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.இதன்கீழ், பெரும்பாலான அரசு பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' மெஷின் வினியோகித்து, சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இந்நிலையில், வரும் ஜூன் 3 முதலே ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  முதற்கட்டமாக, கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டும் பயோமெட்ரிக் மெஷின் வழங்கப்பட்டுள்ளன.பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டும் கைவிரல் ரேகைகளை பதிந்து வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக பயோ மெட்ரிக் கருவி பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், ஜூன் 3ல் முழுமையாக, அமல்படுத்த இருப்பதால், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் விரைவாக பதிவேற்றம் செய்யுமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: ஆசிரியர்கள் காலை 9:00 மணிக்குள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். 
ஒரு வினாடி தாமதித்தாலும், மெஷினில் பதிவு செய்ய முடியாது. மீண்டும் பிற்பகல் 12:00 மணிக்கே மெஷின் செயல்பாட்டிற்கு வரும். அதன்பிறகு வருகையை பதிவு செய்யலாம். ஆனால், அரைநாள் ஆப்சென்ட் ஆகும்.மேலும், ஆசிரியர்கள் மதியம் 1:30 மணிக்குள் மதியம் வேளைக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். 
மீண்டும் மாலை, 4:30 மணிக்கே மீண்டும் மெஷின் செயல்படத்துவங்கும். அதன்பிறகே ஆசிரியர்கள் பணியை நிறைவு செய்ய முடியும்.தற்போது, காலை, 9:00 முதல், மாலை, 4:10 மணி வரையில் ஆசிரியர்களின் பணிநேரமாக உள்ளது. பள்ளி நேரத்தில் மாற்றம் உள்ளதா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

எட்டாம் வகுப்பு வரை சீருடை மாற்றமா: பெற்றோர் குழப்பம்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளி சீருடைகள் மாற்றப்படுகிறதா என்பது குறித்து, அரசு தெளிவாக அறிவிக்காததால், பெற்றோர் குழப்பம்அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், பள்ளி கல்வித்துறை பாடத் திட்டம், தேர்வு முறை, ஆசிரியர்கள் நியமனம், மாணவர்கள் சேர்க்கை உட்பட, பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.இதன் ஒரு கட்டமாக, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு ஒரு வகையாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு ஒரு வகையாகவும், சீருடைகள் மாற்றப்பட்டன

அதேபோல, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கும், சீருடையின் நிறம் மற்றும் வடிவம் மாற்றப் பட்டது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாற்றப்பட்ட சீருடை, அரசு பள்ளி மாணவர்களுக்கு கவுரவமாக இல்லை என்ற, புகார் எழுந்தது.'ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு, மீண்டும் சீருடை மாற்றப்படும்; அதேபோல, ஆறு முதல் எட்டாம் வகுப்புக்கும் சீருடை மாற்றப்படும்' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார்.

இந்த புதிய சீருடைகளை, சில மாணவ - மாணவியர் அணிந்து, அந்த புகைப்படத்தையும் அமைச்சர் வெளியிட்டு, சீருடை மாற்றத்தை அறிவித்தார்.பள்ளிகள் திறப்பதற்கு, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புதிய சீருடை குறித்து,அரசாணை எதுவும் வெளியிட ப்பட வில்லை. எந்த சீருடையைவாங்குவது எனத் தெரியாமல், பெற்றோர்தவிக்கின்றனர்.

பள்ளிகளுக்கு சென்று, பெற்றோர் விசாரித்தால், 'துணி கடையில் கேட்டுக் கொள்ளுங்கள்' என, தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.'சிலர், இன்னும் அரசு அறிவிக்கவில்லை' என்கின்றனர். பள்ளிகள் திறக்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், எப்படி துணி வாங்கி தைப்பது எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.

'பள்ளி மாற்று சான்றிதழில், ஜாதி பெயர் குறிப்பிடப்படாது' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

'பள்ளி மாற்று சான்றிதழில் ஜாதி பெயர் கிடையாது'


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கும் போது, அதில் மாணவர்களின் ஜாதி, இனம், மதம் போன்றவை இடம்பெறும். இதில், ஜாதியை குறிப்பிடும் பகுதியில், பல ஆசிரியர்கள், ஜாதியை தவறாக குறிப்பிடுவதால், எதிர்காலத்தில் மாணவர்களின் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு சிக்கல் ஏற்படுகிறது

இதை தவிர்க்கும் வகையில், பள்ளி மாற்று சான்றிதழில், ஜாதியை குறிப்பிட வேண்டாம் என, தமிழக அரசு, 2014ல், அரசாணை வெளியிட்டது. இதை பின்பற்றி, மாற்று சான்றிதழில், ஜாதியை குறிப்பிடும் முறை, ஐந்து ஆண்டுகளாக ஒழிக்கப்பட்டு விட்டது. மாறாக, '*வருவாய் துறை சான்றிதழை ஆய்வு செய்யவும்* 'என, அதில் குறிப்பிடப்படும்

என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள, 82 இடங்களில் சேர விரும்புவோர், மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் வரலாம்' என, தேர்வுக்குழு அறிவித்துள்ளது.


முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 1,761 இடங்களும் நிரம்பின. ஆனால், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 'நான் கிளினிக்கல்' எனப்படும், மயக்கவியல், உடற்கூறியல் போன்ற படிப்புகளுக்கான, மாநில அரசு ஒதுக்கீட்டில், 48; நிர்வாக ஒதுக்கீட்டில், 34 என, 82 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வின், 'கட் - ஆப்' மதிப்பெண்ணை, மத்திய அரசு குறைத்துள்ளது. அதனால், பலருக்கு முதுநிலை மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வாய்ப்புள்ள மாணவர்கள், இந்தாண்டே முதுநிலை மருத்துவத்தில் சேர, ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 339 முதல், 313 வரை, கட் - ஆப் பெற்றுள்ள பொதுப்பிரிவினர்; 294 - 270 வரை, கட் - ஆப் பெற்றுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர்; 316 - 291 வரை,கட் - ஆப் பெற்ற மாற்றுத்திறனாளிகள்,இன்றும், நாளையும், உரிய ஆவணங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு, நேரில் வரலாம்.மேலும் விவரங்களை,www.tnhealth.org, www.tnmedicalselection.orgஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

ஊழியர்களுக்கான, துறை தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன

 அரசு ஊழியர் களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, தர நிலை தொடர்பாக, துறை தேர்வுகள் நடத்தப் படுகின்றன. வரும், 24 முதல், 31ம் தேதி வரை, இந்த தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால், இந்த தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார். துறை தேர்வுகள், ஜூன், 8 முதல், 15 வரை நடத்தப்படும்.புதுடில்லி உட்பட, 33 தேர்வு மையங்களுக்கு, இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, ஜூன், 3 முதல், 15ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யலாம் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலருக்கு, தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை

தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், ஏற்கனவே நடந்து முடிந்து உள்ளது.இன்னும் நான்கு சட்ட சபை தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு பதிவுக்கான வாய்ப்புகள் தரப்பட்டன.

தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளின் போது, இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு, அவற்றை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். பின், அவர்களுக்கு, தபால் ஓட்டுகளை பதிவு செய்யும் விண்ணப்பம் தனியாக வழங்கப்பட்டது.ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பத்தை மட்டும் பெற்று, அவற்றை பதிவு செய்யாமல், பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து ள்ளது. 

தபால் ஓட்டுகளை பதிவு செய்ய, மே, 22 வரை அவகாசம் உள்ளதால், கடைசி நேரத்தில், அதற்கான பெட்டியில் போடலாம் என, வைத்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலருக்கு, தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை. பலரிடம், சுய விபரங்கள் மட்டும் பெற்று, ஓட்டு போடும் விண்ணப்பங்களை, ஒரு தரப்பினர், தாங்களே நிரப்பி போட்டு விட்டதாக, ஆசிரியர் - அரசு ஊழியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

சனி, 11 மே, 2019

தகுதி தேர்வில் தோற்ற, 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களுக்கு கூடுதல் அவகாசம் தரவும், பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான சட்டம், 2010 ஆக., 23ல், அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் படி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஒன்பது ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது.

கடந்த, 2010 முதல், பணியில் சேர்பவர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, அரசின் சார்பில், நான்கு முறை, டெட் தேர்வு நடத்தப்பட்டது. இப்படி, ஒன்பது ஆண்டுகளாக அவகாசம் வழங்கப்பட்டும், தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டது.இவர்கள் அனைவரையும், வேலையை விட்டு அனுப்பவும், பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. 

இதற்கு எதிரான வழக்கிலும், அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஆசிரியர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளனர்.இந்நிலையில், 1,500 ஆசிரியர்களுக்கும் நிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதற்காக, 1,500 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 10 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு பெயர் பதிவு செய்து, தகுதி தேர்வுக்கு தயாராகுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது

வியாழன், 9 மே, 2019

தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் 46 ஓட்டுச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளது

தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் 46 ஓட்டுச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில் ஐந்து மாவட்டங்களில் 13 சாவடிகளுக்கு மட்டும் வரும் 19ல் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வேலுார் தொகுதி தவிர 38 லோக்சபா தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப். 18ல் நடந்தது. சூலுார், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு, திரும்ப பெறப்படும் தொகை குறித்து, 'இ - மெயில்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக, இணைய இணைப்பு link அனுப்பப்படுவதில்லை' என, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது

போலி, 'இ - மெயில்' வருமான வரி எச்சரிக்கை


'வருமான வரி செலுத்துவோருக்கு, திரும்ப பெறப்படும் தொகை குறித்து, 'இ - மெயில்' மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக, இணைய இணைப்பு link அனுப்பப்படுவதில்லை' என, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:திரும்ப பெறப்படும் தொகை குறித்து, வருமான வரி செலுத்துவோருக்கு, இ - மெயில் மற்றும் மொபைல் போன் குறுந்தகவல் வாயிலாக, இணைய இணைப்பு அனுப்பப்படுவதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்று வரும், இ - மெயில் மற்றும் குறுந்தகவல்கள் போலியானவை. 

அவற்றை, வருமான வரித் துறை அனுப்பவில்லை.மேலும், 'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு' ஆகியவற்றின் ரகசிய எண்கள் அல்லது ஆதார் எண் போன்றவற்றை, இ - மெயில், குறுந்தகவல் மற்றும் தொலைபேசி வாயிலாக, வருமான வரித் துறை கேட்பதில்லை.வருமான வரி செலுத்துவோர், தங்களது முகவரி, வங்கி கணக்கு எண் போன்ற தனிநபர் தகவல்களை, வருமான வரித் துறையின், www.incometaxindiaefiling.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், வருமான வரி செலுத்துவோருக்கு, துறை வழியாக அனுப்பப்படும், இ - மெயில் மற்றும் குறுந்தகவல் பட்டியலும், இதே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே, வருமான வரி செலுத்துவோர், போலி, இ - மெயில் மற்றும் குறுந்தகவல்களை நம்பாமல், எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கரூர், அரசு மருத்துவக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது

.கரூர் அருகே, கொளந்தானுாரில், மருத்துவக் கல்லுாரி கட்டப்படுகிறது. பிரமாண்டமான கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மருத்துவக் கல்லுாரியின், நிர்வாக அலுவலக கட்டடம் கட்டும் பணி நிறைவு பெற்று தயாராக உள்ளது.கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டில், 150 மாணவ - மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர். 
இதற்கான ஒப்புதலை, இந்திய மருத்துவ கவுன்சில் நேற்று முன்தினம் இரவு வழங்கியது. மருத்துவ கல்லுாரி டீன், ரோஸி வெண்ணிலா கூறுகையில், ''கரூர் மருத்துவக் கல்லுாரி, நடப்பு ஆண்டு முதல் செயல்படும். அதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ளது. கவுன்சிலிங்கில், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி பெயர் இடம் பெறும்,'' என்றார்.

வேளாண் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் கணினி அறிவியல் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்'

'வேளாண் படிப்புகளில் சேர, பிளஸ் 2வில் கணினி அறிவியல் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்' என, வேளாண் பல்கலை அறிவித்துள்ளது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 'ஆன்லைன்' பதிவு பணிகளுக்கான இணையதளத்தை, நேற்று காலை, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் துவக்கி வைத்தார். மூன்று மணி நேரத்தில், 5,000 மாணவர்கள், விண்ணப்பங்களை பதிவு செய்தனர். ஜூன், 7 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை, தேவையான சான்றிதழ்கள், முக்கிய தேதிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை, மாணவர்கள், http://www.tnau.ac.in/ugadmission.html என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.கடந்த எட்டு ஆண்டுகளாக, பிளஸ் 2வில் கணினி அறிவியல் படித்த மாணவர்களுக்கு, வேளாண் படிப்புகளில் சேர முடியாத நிலை இருந்தது. தற்போது, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்துடன் கணினி அறிவியல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என, பல்கலை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.