GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 30 செப்டம்பர், 2015

அம்மா இலக்கிய விருது'

பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம் பேதைமை யற்றிடும் காணீர்! - என்ற பாரதியாரின் அமுத மொழிக்கேற்ப, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'அம்மா இலக்கிய விருது' என்ற புதிய விருது சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வழங்கப்படும். "அம்மா இலக்கிய விருது" பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும், தகுதியுரையும் வழங்கப்படும்.

பாரதிதாசன் பிறந்த நாள்,'தமிழ்க் கவிஞர் நாள்'

தமிழ்க் கவிஞர் நாள்'
பாவேந்தர் பாரதிதாசன் புகழைப் பரப்பிடும் வகையில் அவரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும். மேலும், இந்த ஆண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்,'தமிழ்க் கவிஞர் நாள்' என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு.

தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்தி மொழித்திறன் பெற்ற இளம் தலைமுறையினர் வட மாநிலங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எளிதில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

பாரதியார் பல்கலை விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி துறை சார்பில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புக்கான பயிற்சி

மாநகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள், அடுத்த மாதம் வளாக நேர்காணல் வாயிலாக மாணவர்களை தேர்வுசெய்ய அதிக முனைப்பு காட்டிவருவதால், கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், வரும், 8ம் தேதி, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும்-ஜாக்டோ அறிவிப்பு.

தமிழகத்தில், வரும், 8ம் தேதி, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என, ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ அறிவித்து உள்ளது.

சி.பி.எஸ்.சி. தனித்தேர்வு விண்ணப்பிக்கலாம்

: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2தேர்வுகளை, 2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள்,சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில், தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும். தவறான தகவல்கள் தருவோர், உரிய கட்டணம் செலுத்தாதோர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை 3.5 இலட்சம் ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுய உதவிக் குழுக்களுக்கு "அம்மா கைப்பேசி திட்டம்'

சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, "அம்மா கைப்பேசி திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவு.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், தங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாஸா விண்வெளி அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது.

2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும்

அனைத்து மாநிலங்களிலும் 2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிறுவர்களுக்கு பாடம் போதிக்கும் அதிசய காவல் நிலையம்

 மக்கள், பாதுகாப்பிற்காக நாடும் காவல் நிலையம், ஆதரவற்ற சிறுவர்கள் பலருக்கு, பாடம் போதிக்கும் பள்ளிக்கூடமாகவும் திகழ்கிறது. டில்லி ரயில் நிலையத்தில் தான், இந்த அதிசய காவல் நிலையம் உள்ளது.