GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 3 ஜூலை, 2016

மத்திய அரசு விருது விண்ணப்பம் வரவேற்பு

'மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, தகுதியானவர்கள், ஜூலை, 31க்குள்
விண்ணப்பிக்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

பி.எட்., செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு கட்டுப்பாடு

மூன்று ஆண்டு அனுபவம் உடைய ஆசிரியர்கள் மட்டுமே, பி.எட்., செய்முறை தேர்வு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.

'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?

தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

சனி, 2 ஜூலை, 2016

காந்திகிராம திறந்தநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை

காந்திகிராம பல்கலை தேசிய திறந்தநிலை பள்ளி மூலம் 10௦ம் வகுப்பு, பிளஸ்2மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. காந்திகிராம பல்கலையின் வாழ்நாள் கல்வித்துறை சார்பில்,தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுகிறது. 

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்!

பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது&' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெயரளவில் ஆங்கில வழி கல்வி; அரசின் நோக்கம் வீண்

 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பெயரளவில் மட்டும் நடைபெறுவதால், தகுதியான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஆங்கில புலமை கிடைக்கும் விதமாக கல்வி முறையை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர்.
ஆங்கில வழி கல்வியை ஊக்குவிப்பது நல்லதல்ல, தாய்மொழி கல்வியே சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறிவந்தாலும், காலத்தின் மாற்றத்தால் ஆங்கில புலமை இன்றியமையாததாக மாறிவிட்டது. தாய் மொழியில் கல்வி கற்றாலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெறாமல் இருப்பின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான நடப்பு கல்வியாண்டிற்கான முதல் பணியிடை பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டமும் இணைந்து, நடுநிலை ஆசிரியர்களுக்கான நடப்பு கல்வியாண்டிற்கான முதல் பணியிடை பயிற்சி அறிவித்துள்ளது.

வெள்ளி, 1 ஜூலை, 2016

Tnpsc vao results

http://googleweblight.com/?lite_url=http://www.tnpsc.gov.in/ResultGet-VAO2015.html&lc=en-IN&s=1&m=181&host=www.google.co.in&ts=1467385239&sig=AKOVD66esKMC_rb5sOgmdmtPg-BXEHxa0Q

Tnpsc vao results announced

ன்று (30.6.2016)மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

இன்று (30.6.2016)மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

முகநூல் பக்கத்தை பாதுகாப்பாக வைப்பது, முடக்குவது எப்படி? - பெண்கள் படத்தை பரப்பினால் 7 ஆண்டு சிறை

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப் படத்தை தவறான நோக்கத்துடன் பரப்பினால் 7 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

'காக்கும் தெய்வங்களே':-இன்று தேசிய டாக்டர்கள் தினம் -

உயிர் காக்கும் பணியைசெய்வதால், கடவுளுக்குஇணையாக மதிக்கப்படுபவர்கள்டாக்டர்கள். உடலில் ஏதாவதுஒரு பிரச்னை ஏற்பட்டால்,நாம் நாடிச் செல்வது டாக்டரை தான். நேரம், காலம் பார்க்காமல் சேவைசெய்வது இவர்களின் பணி.

இவர்களது சேவைகளுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாகவும்,டாக்டர்கள் மருத்துவத் துறைக்கு செய்யும் அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் ஜூலை 1ம் தேதி, டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

தமிழக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதில் சிக்கல்

தமிழக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இனி 8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' இல்லை

மத்திய அரசு சார்பில், இரண்டு ஆண்டுகளாக புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு, இறுதி செய்யப்பட்ட வரைவு கொள்கையை முதன் முதலாக, மத்திய அரசு, பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,188 பேர் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெற முடியாமல் தவிப்பு

தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,188 பேர் புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் பெற முடியாமல் தவிப்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 4.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த புதிய பென்ஷன் திட்ட சந்தா, அரசு பங்கு தொகை என, மொத்தம் ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணம் பலன் வழங்கப்படவில்லை.