GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 3 அக்டோபர், 2015

ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு -சேலம் மாவட்ட போராட்ட ஆயத்தக்கூட்டம் இன்று சேலம் சௌர்ணபுரியில் நடைபெறுகிறது .வரும், 8ம் தேதி,ஆசிரியர்கள், வேலைநிறுத்த போராட்டம்

. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28சங்கங்கள் சேர்ந்து, ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  
ஆசிரியர்களுக்கான, ஆறாவது சம்பள கமிஷனின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது; பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. வரும், 8ம் தேதி, தமிழகத்தில் உள்ள, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, 3.5 லட்சம் ஆசிரியர்கள், வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவாகியுள்ளது. இந்த போராட்டம், திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.
சேலம் மாவட்ட ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு போராட்ட ஆயத்தக்கூட்டம் இன்று சேலம் சௌர்ணபுரியில் நடைபெறுகிறது.இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளையும் வரும் 8 ஆம் தேதி பூட்டி முழுமையான வேலை நிறுத்தம் செய்வது குறித்து ஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழு - சேலம் மாவட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்தாலோசிக்க உள்ளனர்.

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.16 கோடி நிதியுதவி: கமலஹாசன்

இதுவரை தனியார் நிறுவனங்களுக்காக எந்த விளம்பரத்திலும் நடிக்காது கமலஹாசன்,வரும் தீபாவளி பண்டிகைக்காக போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். 2 நிமிடம் மட்டுமே திரையிடப்படக் கூடிய இந்த விளம்பரத்தில் நடிக்க கமலஹாசன் ரூ.16 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தங்களை மேற்கொள்ள, அக்டோபர் 4 சிறப்பு முகாம் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - திருத்தங்களை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.3-ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) தொடங்குகிறது.

 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) தொடங்குகிறது.

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்

அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசுப்பணிக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை

மத்திய அரசு இளநிலைப் பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரியவருகிறது.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

ரூ.2.50 கோடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (JEE.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (AIPMT.) பயிற்சி

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (JEE.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (AIPMT.) உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் ,உணவு தரமாக இருக்கிறதா என்பதை, உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் அவ்வப்போது சோதனை

பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும் என, புதிய, மதிய உணவு திட்ட விதிகள் தெரிவிக்கின்றன.

பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு ரூ.45.37 கோடி நிதியை அரசு சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.

சமூகநலத்துறை சார்பில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும். தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தையல் கூலியாக அரைக்கால் சட்டை, சட்டைக்கு தலா ரூ.22.05ம், முழு கால்சட்டை ஒன்றுக்கு ரூ.55.13ம், முழு நீள சட்டைக்கு (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ரூ.27.56ம், ஸ்கர்ட் ஒன்றுக்கு ரூ.16.54ம், மாணவிகளின் சட்டை ஒன்றுக்கு ரூ.19.85ம் சல்வார் கம்மீஸ் ஒன்றுக்கு ரூ.55.13ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் 32 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அங்கு முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலை உள்ளது.மாணவர்களின் கல்விப்பணி பாதிக்கப்படுகிறது.

விஸ்வபாரதி பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதன் துணைவேந்தர் சுஷாந்தா தத்தாகுப்தா தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாயினர். 22 பேர் காயமடைந்தனர்.

வியாழன், 1 அக்டோபர், 2015

டீசல் விலை லிட்டருக்கு ரூ.50 பைசா உயர்வு

டீசல் விலை லிட்டருக்கு ரூ.50 பைசா உயர்ந்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. விலை உயர்வு இன்றுநள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது