GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 14 செப்டம்பர், 2015

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி அட்டவணை

சேலம் மாவட்ட நடுநிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி  அட்டவணை 

Name of the RP
A.Selvakumar SL DIET Salem
I.Xavier Durai
Lec  DIET Salem
G.Suresh, BRTE Thalaivasal






Date of Training
Block
Number of Middle School in Block
Training Timing
Venue
CYCLE-1
14/09/2015
15/09/2015     (2 days)
Panamarthupatti
19
9.15 am
to
5.00pm

CSI Polytechnic College,
Opp Salem Central Jail, Yercaud Main Road, Salem-636008
Veerapondi
15
Magudanchavadi
13
Valapadi
11
Idappadi
12
Konaganapuram
23
Sankagiri
17
Tharamangalam
25





CYCLE-2
16/09/2015
18/09/2015     (2 days)
Gangavalli
14


9.15 am
to
5.00pm
CSI Polytechnic College,
Opp Salem Central Jail, Yercaud Main Road, Salem-636008
Thalaivasal
16
Attur
16
Pethanaickepalayam
17
Nangavalli
24
Kolathur
18
Mecheri
17





CYCLE-3
21/09/2015
22/09/2015     (2 days)
Salem(urban)
21

9.15 am
to
5.00pm
CSI Polytechnic College,
Opp Salem Central Jail, Yercaud Main Road, Salem-636008
Salem(Rural)
24
Yercaud
10
Ayothiapattinam
15
Omalur
32
Kadayampatti
25

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் இளநிலை சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை சிவில் இன்ஜினியரிங், எம்.பி.ஏ., அல்லது ஏதேனும் ஒரு மேலாண்மைப் பட்டம் பெற்றிருத்தல் வரவேற்கத்தக்கது.
எழுத்து தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 18
மேலும் விவரங்களுக்கு: www.nhai.org

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, எல்.ஐ.சி., கோல்டன் ஜூபிலி பவுண்டேஷன், உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, எல்.ஐ.சி., கோல்டன் ஜூபிலி பவுண்டேஷன், உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவம் / பொறியியல் / ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ., படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 2014-15  கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 23
மேலும் விவரங்களுக்கு: http://www.licindia.in/GJF_scholarship.htm

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை.

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை.
இந்த ஆண்டு, தேர்வு முடிவுகளையும் முறையாக வெளியிடாததால்,மத்திய அரசின் திட்டம் கிடப்புக்கு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊக்கத்தொகைகிராமப்புற மாணவர்கள், பள்ளி கல்வியை இடையில் நிறுத்தி விடாமல், பிளஸ் 2 வரை படிக்கும் வகையில்,மத்திய அரசு சார்பில், பல்வேறு திட்டங்களில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

கற்றலில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும்

பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கற்றலில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
 "பள்ளி மாணவர்களுக்கு சிறந்த பலனைத் தரும் கல்வித் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் தேசிய மாநாடு சென்னையில்   நடைபெற்றது.   
 இதில், சென்னை ஐஐடி மேலாண்மைத் துறையின் பேராசிரியர் எல்.எஸ்.கணேஷ் பேசியதாவது: 
 தனிநபர், தொழில் வெற்றிக்கு தொடக்கக் கல்வியே அடித்தளமாக அமைகிறது. அந்த நிலையில்தான் குழந்தைகளிடம் புரிந்து கொள்ளும் திறன், கேட்டல் திறன், தெளிவாக காட்சிப் படுத்துதல், தகவல் பரிமாற்றம், கேள்விகள் எழுப்புதல் போன்ற திறமைகளை வளர்க்க வேண்டும்.
 மனப்பாடக் கல்விமுறை: பிரச்னைகளைத் தீர்ப்பது, சவால்களை ஆற்றலுடன் சமாளித்தல் போன்றவற்றில் அவர்கள் குழுக்களாகச் செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் கல்வியால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கக் கூடாது. 
 எனவே, மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் கற்றலில் நவீன தொழில்நுட்பம், உத்திகளைப் புகுத்த வேண்டும் என்றார் அவர்.

சனி, 12 செப்டம்பர், 2015

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் அரசு கேபிள் டிவி மூலம் இணையதள வசதி

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் மூலமாக இணையதள வசதி செய்து தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாநில தொடக்கக் கல்வி இயக்ககம், அலுவலகங்களில் இணையதள வசதிகளை செயல்படுத்தத் தேவையான தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டுமென்று அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

பி.எட். கலந்தாய்வு குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்

பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

 இதில் தகுதியுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 16, 18 தேதிகளில் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன. மேலும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமும் தகவல் அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. வருகிற 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. மொத்தம் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் தகுதியுள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு தபால் மூலம் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

 மாணவர்கள் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணக்கலாம். மறு மதிப்பீடுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 400 வீதமும், மறுகூட்டலுக்கு தாள் ஒன்றுக்கு ரூ. 100 வீதமும், விடைத்தாள் நகலுக்கு ரூ. 250 என கட்டணம் செலுத்த வேண்டும்.


 பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த உரிய படிவத்தில் "தேர்வுக் கட்டுப்பாட்டாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015' என்ற முகவரிக்கு 21 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும்.


 மேலும் விவரங்களுக்கு, பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைகளின் மனதில் பதிய வைக்கும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா புதுடில்லியில் கூறியதாவது: 
கலாச்சார சீரழிவுகளால் நம்நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சார பெருமைகளை இளம் தலைமுறைகள் உணர வேண்டும் என்பதற்காக, நம் பழம்பெரும் இதிகாசங்களான ராமாயணம்,மகாபாரதம் மற்றும், புனிதநுாலான பகவத்கீதையை, பள்ளி கல்லுாரி பாடத்திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. 
நமது கலாச்சாரத்தின் ஒரு அம்சமாகவே இத்திட்டம்  என்று இணைஅமைச்சர் தெரிவித்தார்.

பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துமாவு போன்றவற்றை கண்காணிக்க, உணவு பாதுகாப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துமாவு போன்றவற்றை கண்காணிக்க, உணவு பாதுகாப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓட்டல், உணவு நிறுவனங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி கண்காணிக்கின்றனர். பள்ளி, அங்கன்வாடி மையம், மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை அந்தந்த துறை அதிகாரிகளே ஆய்வு செய்கின்றனர்.
இருந்தபோதும் தரமற்ற உணவு வழங்குவதாக புகார்கள் எழுகின்றன. இதையடுத்து பள்ளி, அங்கன்வாடி மையம், விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துணவு, சத்துமாவு போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 

பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு, இலவச பால்

பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு, இலவச பால் அளிக்கும் திட்டத்துக்கு உதவுமாறு, தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 
இதுகுறித்து, என்.டி.டி.பி., எனப்படும், தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரிய தலைவர் நந்தகுமார்,டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பால் வழங்க, என்.டி.டி.பி., ஊட்டச்சத்து அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, பால் கூட்டுறவு சங்கங்களுடன், ஒருங்கிணைந்து செயல்படும். 
இதன் மூலம்,கார்ப்பரேட் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., எனப்படும், கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு பால் வழங்கலாம். நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு,முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

முதல்வரின் பரிசு தொகை வழங்கும் திட்டத்திற்கு, மாணவ,மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல்வரின் பரிசு தொகை வழங்கும் திட்டத்திற்கு, மாணவ,மாணவியரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு முதல்வரின் பரிசு தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு, ஒரு மாணவருக்கு 3,000 ரூபாய் வீதம், தொடர் கல்வி படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

செப்-11 பாரதி நினைவு நாள்




















தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி –மனம்
வாடித் துன்பமிகவுழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?


மாணவ, மாணவிகள் சட்ட பாதுகாப்பு பெறலாம்-நீதிபதி விஜயகாந்த்

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்கு இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று சார்பு நீதிபதி விஜயகாந்த் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த சட்ட உதவி விழிப்புணர்வு முகாமில் சார்பு நீதிபதி விஜயகாந்த் பேசியதாவது: சட்டம் என்பது மற்றவர்களை பயமுறுத்துவதற்கு கிடையாது. நமது பாதுகாப்பிற்காக சட்டங்கள் இயற்றப்படுகிறது. ஒவ்வொரு சட்டமும் எதற்காக இயற்றப் படுகிறது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தை அமைதி படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், விதிமுறைகளுடன் கடைபிடிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும். அவற்றிற்கு சட்டத்தின் மூலமே தீர்வு காண முடியும்.
எவ்வித பிரச்னையாக இருந்தாலும், நாம் கையில் எடுக்க கூடாது. சட்டத்தின் (கோர்ட்) மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். மாணவ, மாணவிகள், தங்களின் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எவ்வித பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு சட்டத்தின் மூலம் தீர்வு காண்பதற்கு கள்ளக்குறிச்சி வட்ட சட்ட பணிகள் குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் மனித நேயம் மிக்கவர்களாக தங்களை உருவாக்கி கொண்டு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். இவ்வாறு சார்பு நீதிபதி விஜயகாந்த் பேசினார்.