கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவியரின் தேவைக்காக, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், 300 இன்டர்நெட் கேபிள் இணைக்கும் பணி துவங்கியுள்ளது.
Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- CARREER GUIDANCE
- ECO CLUB PUMS DEVANNAGOUNDANUR
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- TET
- THIRUKKURAL
- TIPS
GSK FLASH NEWS
செவ்வாய், 29 செப்டம்பர், 2015
அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து உள்ளதா?
அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இக்னோ (IGNOU )ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகமான இக்னோ (IGNOU )ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
திங்கள், 28 செப்டம்பர், 2015
எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆம் கட்டக் கலந்தாய்வில், 148 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆம் கட்டக் கலந்தாய்வில், 148 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
ஞாயிறு, 27 செப்டம்பர், 2015
பள்ளி கல்லூரிகளில் நவ., 26ம் தேதி அரசியல் அமைப்பு தினம்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பல்கலை, கல்லுாரிகளில் அரசியல் அமைப்பு பற்றிய கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,)அறிவுறுத்தியுள்ளது.
அம்பேத்கரின், 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, பல்கலை, கல்லுாரிகளில் அரசியல் அமைப்பு பற்றிய கருத்தரங்கு நடத்த வேண்டும்; தனியார் பல்கலைகள் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவு மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டும் என, யு.ஜி.சி.,அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இன்றைய குடிமக்கள் இடையே, குறிப்பாக மாணவர்கள் இடையே அரசியல் அமைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, ஆண்டு தோறும் நவ., 26ம் தேதி அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும்; அன்றைய தினம், பள்ளி, கல்லுாரிகளில் அரசியல் அமைப்பு குறித்து கருத்துகள் தெரிவிக்க வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
இதுகுறித்த நடவடிக்கைகளை, ambedkar.ugc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு, அக்., 15ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என, அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கு யு.ஜி.சி., செயலர் ஜஸ்பல் சந்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
: அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 14 ஆசிரியர்கள், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; சில பள்ளிகளில், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நிலையில்,அதிக ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சில பள்ளிகளில், அதிக மாணவர் இருந்தும், போதிய ஆசிரியர் இல்லாமல், கல்வித்தரம் பாதிக்கிறது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஆசிரியர் பற்றாக்குறை பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
மருத்துவக் கல்லுாரி திறக்கப்பட்டாலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஓமந்துாரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லுாரி திறக்கப்பட்டாலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 200 கோடி ரூபாயில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. புதிய மருத்துவக் கல்லுாரியை, முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம், 7ம் தேதி துவக்கி வைத்தார். அப்போது, ஒரு வாரத்தில் வகுப்புகள் துவங்கும் என,அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இன்னும் வகுப்புகள் துவங்கவில்லை.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, நாளை (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, நாளை (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
சுயநிதி தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் இணைய தளத்தில் வெளியான போலி தேர்ச்சி பட்டியலை காட்டி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.
இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை
இந்தியாவில், 100க்கு 13 பேர், பள்ளிக்கு சென்றதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது; படிப்பு அவசியம் இல்லை என, இவர்கள் கூறுவதாக, ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளி, 25 செப்டம்பர், 2015
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வருகிற டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து, 10 வகையான தொழிற் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து, 10 வகையான தொழிற் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கால்நடை மற்றும் கோழியின அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் கருதி, உற்பத்தி திறனை பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் விதமாகவும், சென்னையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை நிறுவப்பட்டது. இந்த பல்கலை சார்பில், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியிலும், நெல்லை, மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும், 10 வகையான குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்ககம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து வரும், 2016, மார்ச் மாதம் வரை மாதந்தோறும் நடத்தப்படும், பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம், திருச்சியில் நடந்த பல்கலை நிறுவன நாள் விழா மற்றும் கால்நடை,கோழிப்பண்ணையாளர்கள் தின விழாவில் வழங்கப்பட்டது.
கலை, அறிவியல் படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிலிங் நாளை25ம் தேதி நடக்கிறது.
கலை, அறிவியல் படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிலிங் நாளை25ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங் பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கடந்த ஜூலை மாதம் முதல் நடந்தது. இது வரை பத்து கவுன்சிலிங் நடந்துள்ளன. மொத்தமுள்ள 2118 இடங்களில்2103 இடங்கள் நிரம்பின. மூன்று கல்லுாரிகளில் 15 சீட்டுகள் காலியாக உள்ளன.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, வெற்றி பெறும் வகையில், பிரத்யேக கணினி பயிற்சி கூடம்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, வெற்றி பெறும் வகையில், பிரத்யேக கணினி பயிற்சி கூடம், உப்பிலிபாளையம், தேசிய பார்வையற்றோர் இணைய வளாகத்தில் துவங்கப்பட்டது.
சீனாவில் செயல்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
சீனாவிலுள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்து அறிந்து கொள்ள, இந்தியாவில் இருந்து, 19 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில்,கரூர் மாணவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)