GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவைத் தேர்தலில் தகுதியான அனைவருக்கும் வாக்குரிமையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் வரும் இன்று முதல் தொடங்குகிறது.
 1.1.2016-ஐ தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் நடைபெறவுள்ளது.  
  வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 15-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயரை நீக்கம் செய்ய, திருத்தங்கள் செய்ய சட்டப்பேரவை தொகுதிக்குள் மாற்றம் செய்ய உரிய படிவங்களை வாக்குச் சாவடி மையங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை அளிக்கலாம்.
இதற்காக வரும் 16 மற்றும் 30-ஆம் தேதிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் படித்துக் காட்டப்பட உள்ளது.
படிவங்களைப் பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அளிக்கவும் வரும் 20 மற்றும் அக்டோபர் 4-ஆம் தேதி வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
  1.1.2016 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு  இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இச்சிறப்பு சுருக்க முறைத் திருத்தக் காலத்தில் பெறப்படும் படிவங்களின் பேரில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2016 ஜனவரி 11 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் என்ற வாய்மொழி உத்தரவின்படி,கட்டாய வசூல் வேட்டை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாக மாணவர்களிடம், குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் என்ற வாய்மொழி உத்தரவின்படி,கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர் குமுறுகின்றனர். 6- 8ம் வகுப்பு வரை, 35 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 45 ரூபாய்; பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 55 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.

தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்

தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது,மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. 
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 19ல் முதல் பருவ தேர்வு துவங்குகிறது; தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவியருக்கு தர வேண்டிய சூழலில்,ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஏ., சார்பில், கணித உபகரண பயிற்சி, 9, 10, 11ம் தேதிகளில் நடத்தப்பட்டது; இரண்டாம் கட்டமாக, 14, 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15, 16, 18ம் தேதிகளிலும், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
பள்ளிகளில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுகின்றனர்; சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பள்ளியில் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆண்டுக்கு, 20 நாட்கள் தர வேண்டிய பயிற்சியை, ஒரே சமயத்தில் பருவ தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பது, கேள்விக்குறியாக உள்ளது; இதனால், பள்ளி களில் ஆசிரியர் பணியை பாதிக்கிறது. 
முதல் பருவ தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது, மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி   நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., இறுதி கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல்

சீட் அதிகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ கல்லுாரியிடம் கூடுதல் எம்.பி.பி.எஸ்.,சீட்கள் பெறாமல் அரசு மவுனமாக உள்ளதால் இறுதி கட்ட கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில், அகில இந்திய பொறியியல் தொழில் நுட்ப கவுன்சிலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நாடு முழுவதும் கவுன்சிலிங் நடக்கும் தேதி ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டது.
இதன்படி, எம்.பி.பி.எஸ்.,பல் மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 25ம் தேதிக்குள் முதற்கட்ட கவுன்சிலிங்கும், ஜூலை 27ம் தேதிக்குள் 2ம் கட்ட கவுன்சிலிங்,செப்டம்பர் 10ம் தேதிக்குள் 3ம் கட்ட கவுன்சிலிங், செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
பொறியியல் படிப்பை பொருத்தவரை ஜூன் 30ம் தேதிக்குள் முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை 10ம் தேதிக்குள்2ம் கட்ட கவுன்சிலிங், ஜூலை 20ம் தேதிக்குள் 3ம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட் 15ம் தேதி இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு இறுதி கட்ட கவுன்சிலிங் சென்டாக் நடத்தி முடித்து, இடம் கிடைத்த அனைத்து மாணவர்களும் கல்லுாரியில் சேர்ந்து விட்டனர்.
ஆனால், மருத்துவ படிப்பிற்கு இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்த முடியாமல் சென்டாக் திணறி வருகிறது. எஸ்.சி., பிரிவினர் பெற்ற தடை உத்தரவினால் ஏற்கனவே கவுன்சிலிங் தள்ளி போனது. தற்போது மாணவர்கள், பெற்றோர்களின் கூடுதல் சீட் கேட்டு துாக்கியுள்ள போர்க்கொடியால் நான்காம் கட்ட கவுன்சிலிங் ரத்து செய்யும் அளவிற்கு பூதாகரமாகி உள்ளது.

இந்தியாவில், 50 பள்ளிகளில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் கணினி கல்வி

இந்தியாவில், 50 பள்ளிகளில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் கணினி கல்வி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இதற்காக பள்ளி அள வில், மைக்ரோசாப்ட் ஐ.டி., அகாடமியை துவக்க,இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வெலாசஸ் கன்சல்டிங் என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், வெலாசஸ் கன்சல்டிங் தலைமை நிர்வாக அதிகாரி சங்கரன்செட்டூர், இத்திட்டத்தை துவங்கி வைத்தார்.அவர் கூறியதாவது: உயர்க்கல்வியில் கற்கும் கணினி தொடர்பான பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். நாம் கணினி, சாப்ட்வேர்களை பயன்படுத்தி வருகிறோம்; ஆனால், அவற்றை உருவாக்குவோராக இருப்பதில்லை. சாப்ட்வேர் உருவாக்குபவர்களாக மாணவர்களை மாற்ற உள்ளோம். 

திங்கள், 14 செப்டம்பர், 2015

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பயிற்சி




மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர் பயிற்சி செப்டம்பர் 16-ஆம் தேதியும், மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி செப்டம்பர் 21-ஆம் தேதியும் வழங்கப்பட உள்ளது.
அந்தந்த ஒன்றியங்களில் அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு குழுவுக்கு 50 ஆசிரியர்கள் என்கிற விகிதத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றியத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

CCERT PUPPET TRAINING


இல்லம்தோறும் இன்டர்நெட் சேவை

கிராமங்கள் மற்றும், நகரங்களில் இல்லம்தோறும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெ., இன்று அறிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் ஜெ,. 110 விதியின் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:
* தகவல் தொழில் நுட்பத் துறையில், தமிழ்நாடு பைபர் நெட்வொர்க் கார்ப்பரேசன் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
* கிராமங்களில் இல்லம்தோறும் நெட் தொடர்பு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ,
* 12, 524 ஊராட்சி கிராமங்கள் இணையம் மூலம் இணைக்கப்படும் . அரசு சேவைகள் இணையம் மூலம் பெற முடியும் .
* இதற்கென ஆப்டிகல் பைபர், கிராமங்களில் பதிக்கப்படும். மத்திய அரசு உதவியுடன் 3 ஆயிரம் கோடி செலவில், மாநில அரசு நிறைவேற்றும் . அனைத்து கிராமங்கள், நகரங்கள் தோறும் இணைய சேவை இணைப்பு வழங்கப்படும் .
* இணையதள வழி டிவி கொண்டு வரப்படும் .
* இ - சேவை மையங்கள் வழியாக அரசு உதவி பெறும் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10 034 இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 70 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் . மேலும் இணையம் மூலம் கூடுதலாக 300 சேவைகள் வழங்கப்படும் .
* புதுக்கோட்டை காது கேளாதோர் பள்ளிக்கு ஒரு கோடி செலவில் புதி கட்டடம் .
* முதுகு , தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெ., அறிவித்தார் .

சானிய மிர்சா ஜோடி சாதனை வெற்றி


கூடுதலாக செலுத்தப்பட்ட வருமான வரி 10 நாள் களில் கிடைக்க ஏற்பாடு

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி அட்டவணை

சேலம் மாவட்ட நடுநிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி  அட்டவணை 

Name of the RP
A.Selvakumar SL DIET Salem
I.Xavier Durai
Lec  DIET Salem
G.Suresh, BRTE Thalaivasal






Date of Training
Block
Number of Middle School in Block
Training Timing
Venue
CYCLE-1
14/09/2015
15/09/2015     (2 days)
Panamarthupatti
19
9.15 am
to
5.00pm

CSI Polytechnic College,
Opp Salem Central Jail, Yercaud Main Road, Salem-636008
Veerapondi
15
Magudanchavadi
13
Valapadi
11
Idappadi
12
Konaganapuram
23
Sankagiri
17
Tharamangalam
25





CYCLE-2
16/09/2015
18/09/2015     (2 days)
Gangavalli
14


9.15 am
to
5.00pm
CSI Polytechnic College,
Opp Salem Central Jail, Yercaud Main Road, Salem-636008
Thalaivasal
16
Attur
16
Pethanaickepalayam
17
Nangavalli
24
Kolathur
18
Mecheri
17





CYCLE-3
21/09/2015
22/09/2015     (2 days)
Salem(urban)
21

9.15 am
to
5.00pm
CSI Polytechnic College,
Opp Salem Central Jail, Yercaud Main Road, Salem-636008
Salem(Rural)
24
Yercaud
10
Ayothiapattinam
15
Omalur
32
Kadayampatti
25

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் இளநிலை சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை சிவில் இன்ஜினியரிங், எம்.பி.ஏ., அல்லது ஏதேனும் ஒரு மேலாண்மைப் பட்டம் பெற்றிருத்தல் வரவேற்கத்தக்கது.
எழுத்து தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 18
மேலும் விவரங்களுக்கு: www.nhai.org

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, எல்.ஐ.சி., கோல்டன் ஜூபிலி பவுண்டேஷன், உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, எல்.ஐ.சி., கோல்டன் ஜூபிலி பவுண்டேஷன், உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவம் / பொறியியல் / ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ., படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 2014-15  கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 23
மேலும் விவரங்களுக்கு: http://www.licindia.in/GJF_scholarship.htm

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை.

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை.
இந்த ஆண்டு, தேர்வு முடிவுகளையும் முறையாக வெளியிடாததால்,மத்திய அரசின் திட்டம் கிடப்புக்கு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊக்கத்தொகைகிராமப்புற மாணவர்கள், பள்ளி கல்வியை இடையில் நிறுத்தி விடாமல், பிளஸ் 2 வரை படிக்கும் வகையில்,மத்திய அரசு சார்பில், பல்வேறு திட்டங்களில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

கற்றலில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும்

பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு கற்றலில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும் என சென்னையில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
 "பள்ளி மாணவர்களுக்கு சிறந்த பலனைத் தரும் கல்வித் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் தேசிய மாநாடு சென்னையில்   நடைபெற்றது.   
 இதில், சென்னை ஐஐடி மேலாண்மைத் துறையின் பேராசிரியர் எல்.எஸ்.கணேஷ் பேசியதாவது: 
 தனிநபர், தொழில் வெற்றிக்கு தொடக்கக் கல்வியே அடித்தளமாக அமைகிறது. அந்த நிலையில்தான் குழந்தைகளிடம் புரிந்து கொள்ளும் திறன், கேட்டல் திறன், தெளிவாக காட்சிப் படுத்துதல், தகவல் பரிமாற்றம், கேள்விகள் எழுப்புதல் போன்ற திறமைகளை வளர்க்க வேண்டும்.
 மனப்பாடக் கல்விமுறை: பிரச்னைகளைத் தீர்ப்பது, சவால்களை ஆற்றலுடன் சமாளித்தல் போன்றவற்றில் அவர்கள் குழுக்களாகச் செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் கல்வியால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கக் கூடாது. 
 எனவே, மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் கற்றலில் நவீன தொழில்நுட்பம், உத்திகளைப் புகுத்த வேண்டும் என்றார் அவர்.