GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 20 ஆகஸ்ட், 2016

குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்ற, 79 பேருக்கு, நேற்று பணி நியமன உத்தரவு

குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்ற, 79 பேருக்கு, நேற்று பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அரசு துறையில் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிகவரி துணை கமிஷனர் போன்ற, குரூப் - 1 பதவிகளில், 79 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், முதல்நிலை தேர்வில், 70 ஆயிரம் பேர் பங்கேற்று, 4,282 பேர் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர்; அவர்களில், 163 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்; 79 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

இதில், சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த வித்யா, ஜெயப்ரீதா மற்றும் சதீஷ்குமார் உள்ளிட்டோர் முதல், 10 இடங்களை பிடித்தனர்.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி

 ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு இலவச பயிற்சி பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., பதவிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற, சென்னை ராணிமேரி கல்லுாரி மற்றும் மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில்,

இலவச பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களில், நடப்பாண்டு பயிற்சி பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஆக., 8 என, அறிவிக்கப்பட்டிருந்தது; தற்போது, 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விபரம் அறிய, 044 - 2844 4995; 0452 - 2534 988 ஆகிய டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள் : டி.இ.டி., தேர்வு நடக்காத பின்னணி என்ன

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள் : டி.இ.டி., தேர்வு நடக்காத பின்னணி என்ன
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.

தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது. 2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்தி விரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்: 23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்

என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.

சிக்கலுக்கு தீர்வு என்ன: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:

சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.

23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும், என்றார்.

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி 

புதன், 17 ஆகஸ்ட், 2016

உள்ளாட்சி தேர்தல், உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தேர்தல் ஆணையர்

உள்ளாட்சி தேர்தல், உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் கூறினார்.

நிருபர்களிடம் சீத்தாராமன் கூறியதாவது: உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. தேவையான போலீசாரை நியமிப்பது, பதற்றமான ஓட்டுச்சாவடிகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான வார்டுகளை பிரிக்கவும், வரையறை செய்யவும், இம்மாத இறுதிக்குள் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி வாக்காளர்களை கண்டறிந்து களைய தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், பணிகள்


குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், பணிகள் மேற்கொள்ளுதல்

சுலப வர்த்தகத்திற்காக, தொழிலாளர் நல சட்டங்களை எளிதாக்குவதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்

மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்து, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை, சமூக பாதுகாப்பு திட்டங்களில், அதிக எண்ணிக்கையில் கொண்டு வருதல்

தொழிலாளர் நலச் சட்ட வழக்குகளை கண்காணிக்க, 'இணையதள வழக்கு மேலாண்மை' முறையை அறிமுகப்படுத்துதல்

தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் மூலம், கட்டு மானத் தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளித்தல், திறன் மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே அறிந்திருக்கும் திறன்களை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்குதல் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு

அரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் முக்கிய கட்டமான, பணி நிரவல் என்ற கட்டாய இடமாற்றம், நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், நாளையும், நாளை மறுதினமும், பணி நிரவல் கவுன்சிலிங் நடக்கிறது. தொடக்க பள்ளிகளில், ஆசிரியர் - மாணவர் விகிதத்திற்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிக்கு மாற்றுவர். இந்த கட்டாய இடமாற்றத்தில், ஒவ்வொரு ஆண்டும், பல தில்லுமுல்லுகள் நடப்பது உண்டு. அதனால், பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும். இந்த ஆண்டு, எந்த பிரச்னைக்கும் வழியின்றி, பணி நிரவலை நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

செவ்வாய், 19 ஜூலை, 2016

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.

 பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களுக்கு, ஏற்கனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று பள்ளிகளில் துவங்கியது. மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்ட பள்ளிகளிலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில், 130 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல், ஆக., 3ம் தேதி நடைபெறும்'

'தமிழகத்தில், 130 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல், ஆக., 3ம் தேதி நடைபெறும்'

'உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்'

'உயர்கல்வி முடித்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடி 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணை

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில், குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக, 500 ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 12 ஜூலை, 2016

அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



அரசுத் தேர்வுகள் துறை அலுவலகத்தில் காலியாகவுள்ள 3 ஓட்டுநர் பணியிடத்துக்குத் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. பொதுப் பிரிவினர், பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 4 சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்ற, பார்வைத் திறன் 6-க்கு 6 பெற்ற 30 வயது நிரம்பிய பொதுப் பிரிவினர், 35 வயது நிரம்பிய பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), 32 வயது நிரம்பிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

தகுதியுடைய விண்ணப்பதாரர் தங்களின் பெயர், கல்வித் தகுதி, முகவரி, மருத்துவச் சான்று, புகைப்படத்துடன் கூடிய சுயவிவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை, சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையில் ""அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் செயலாளர், அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம், டிபிஐ வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6'' என்ற முகவரிக்கு வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சட்டப்படிப்புக்கு கவுன்சிலிங் அறிவிப்பு

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், ஏழு அரசு சட்ட கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், எல்.எல்.பி., படிப்புடன் இளங்கலை பட்டப்படிப்பும் சேர்த்து, ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாக நடத்தப்படுகிறது.

மொத்தம், 1,050 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதற்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, அம்பேத்கர் சட்டப்பல்கலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓ.சி., என்ற பொதுப்பிரிவினரின், 'கட் ஆப்' மதிப்பெண், 89.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு, 80.375; பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், 76.125; மிக பிற்படுத்தப்பட்டோர், 79.875; பட்டியலினத்தவர், 81; அருந்ததியர், 78.250; பழங்குடியினருக்கு, 68.750 என, 'கட் ஆப்' நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை, 21ம் தேதி முதல் கவுன்சிலிங் துவங்கி, 24ம் தேதி முடிகிறது. இதற்கான பட்டியல், பல்கலையின் http:/tndalu.ac.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது