GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 21 ஜூன், 2025

பி எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் ஜூலை 18ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள் 21 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன இதற்கான 2025- 26 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. பட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் ஜூலை 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பி.எட் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 18ஆம் தேதி வெளியாகிறது. கலந்தாய்வு ஜூலை 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி பிஎட் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.