GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 11 மார்ச், 2019

வில்லங்க சான்றிதழ் பெற திடீர் கட்டுப்பாடு


வீடு, மனை வாங்குவோர், அதற்கான வில்லங்க சான்றிதழ் கோரி, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வீடு, மனை வாங்கியவர்கள், புதிதாக வாங்குவோர், சொத்தின் முந்தைய பரிமாற்ற விபரங்களை அறிய, வில்லங்க சான்றிதழ் பெறுவது அவசியம். 'வில்லங்க சான்றிதழ்களை பெற, பொது மக்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும்' என, பதிவுத்துறை அறிவித்தது.

ஆனால், ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை ஏற்பதில்,சார் பதிவக பணியாளர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தையே ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வகையிலான நடவடிக்கைகளில், பதிவுத்துறை இறங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: பதிவுத்துறை அறிவிப்பின்படி, 1975ம் ஆண்டு முதல் பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்கள், வில்லங்க சான்றிதழில் இடம் பெற வேண்டும். ஆனால், பெரும்பாலான பகுதிகளில், 1987 முதல் பதிவான பத்திரங்கள் குறித்த விபரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

இதிலும், சொத்தின் சர்வே எண், அதன் இருப்பிடம், விண்ணப்பதாரர் குறித்த விபரங்கள் தான் அவசியம். ஆனால், தற்போது, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போது, சொத்தின் பரப்பளவு குறித்த விபரம் கேட்கப்படுகிறது.இதுபோன்ற கட்டுப்பாடுகளால், சாதாரண மக்கள் குழப்பம் அடைகின்றனர். 

எனவே, ஆன்லைன் முறையில், வில்லங்க சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள், நேற்று அமலுக்கு வந்தன. நடத்தை விதிகள் விபரம்:

பல்வேறு இனம், ஜாதி, சமயம், சமூகத்தினர் மற்றும், மொழியினருக்கு இடையே இருந்து வரும் வேற்றுமைகள், வெறுப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளிலோ, பதற்றத்தை கூடுதலாக்கும் நடவடிக்கைகளிலோ, எந்த கட்சியும், வேட்பாளர்களும் ஈடுபடக் கூடாது


* அரசியல் கட்சிகள், மற்ற கட்சிகளை குறை கூறும்போது, அது, அக்கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள், முந்தைய சாதனைகள் மற்றும் பணிகள் குறித்ததாக மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை, தவிர்க்க வேண்டும்

* மற்ற கட்சிகள் மற்றும் தொண்டர்கள் மீதான, சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளையும், திரித்து கூறப்படும் செய்திகளையும், தவிர்க்க வேண்டும்

* தேர்தல் பிரசாரத்திற்கு, மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது

* ஊழல் நடவடிக்கை, வாக்காளர்களுக்கு லஞ்சம், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

* மற்ற கட்சிகளின் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில், தொண்டர்கள் ஈடுபடாமல் இருப்பதை, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு விதிகள்?

* அரசு அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக புகார் வராத வகையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்

* அமைச்சர்கள், தங்கள் அரசு அலுவல் பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது. அரசு இயந்திரத்தையோ, ஊழியர்களையோ, பயன்படுத்தக் கூடாது

* ஆளும் கட்சிக்கு ஆதரவாக அரசு விமானங்களையோ, வாகனங்களையோ, இதர அரசு இயந்திரங்களையோ, அரசு ஊழியர்களையோ பயன்படுத்தக் கூடாது

* ஓய்வு இல்லங்கள், விடுதிகள் மற்றும் இதர அரசு தங்கும் இடங்களை, எந்த கட்சியும் பிரசார அலுவலகமாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

தெரசா பல்கலையின் துணைவேந்தரை தேர்வு செய்ய, தனியார் கல்லுாரி முதல்வர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வி கட்டுப்பாட்டில், கொடைக்கானலில், தெரசா மகளிர் பல்கலை செயல்படுகிறது.இந்த பல்கலையின் துணைவேந்தர், வள்ளியின் பதவி காலம் முடிந்துள்ளது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, சென்னை, வேப்பேரியில் உள்ள சாந்தி விஜய் ஜெயின் கல்லுாரி முதல்வர், மாலதி தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில், கல்லுாரி கல்வி இயக்ககத்தின் ஓய்வு பெற்ற இயக்குனர், மஞ்சுளா; அழகப்பா பல்கலையின் முன்னாள் பேராசிரியர், பிரேமா ஆகியோர், உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.இந்த பல்கலையில் துணைவேந்தர் பதவிக்கு விருப்பம் உள்ள, தகுதியானவர்கள், ஏப்., 9, மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பங்களை தபாலிலோ, இ - மெயில் வழியாகவோ அனுப்பலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை சைனிக் பள்ளி, 2019 - 20ம் கல்வி ஆண்டில், சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் தற்காலிக தகுதி பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளிக்கு, 2019 - 2020ம் கல்வியாண்டில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல், நாடு முழுவதும் நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றும், உடல் நலத் தகுதியோடும், உடுமலை, அமராவதி நகர் சைனிக்பள்ளிக்கு தேர்வு செய்யபட்ட மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தற்காலிக தகுதி பட்டியல்,www.sainikschoolamaravathinagar.edu.inஎன்ற பள்ளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தகவலை, சைனிக் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, குறைந்தது, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேரும் அளவுக்கு, வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தரமான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக, ஒரு சிறிய பள்ளி கூட மூடப்படவில்லை.ஒரே ஒரு மாணவர் உள்ள பள்ளிகளாக, 33ம், ஒன்பதுக்கு கீழ் ஒற்றை படையில், மாணவர் எண்ணிக்கை கொண்டதாக, 1,234 பள்ளிகளும் உள்ளன. எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

சனி, 9 மார்ச், 2019

எஸ்.ஐ., தேர்வு அறிவிப்பு தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது


தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக காவல் துறையில், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் தாலுகா பிரிவுக்கு, போலீஸ், எஸ்.ஐ.,க்கள், 969 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, நேற்று, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள், மார்ச், 20 முதல், ஏப்., 19 வரை,www.tnusrbonline.orgஎன்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது

நாளை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும், நாளை, போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெறுகிறது. 


தமிழகம் முழுவதும், 70 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து போடப்பட உள்ளது. போலியோ தடுப்பு நடவடிக்கைகளில், அரசு சிறப்புக்கவனம் செலுத்தியதை தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, போலியோ பாதிப்பு இல்லாத நாடாக, இந்தியா உள்ளது. இந்த நிலையை தக்க வைக்கும் வகையிலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் முகாம், இரண்டு தவணைகளாக நடைபெற்று வந்தது.

இந்தாண்டு முதல், ஒரே தவணையாக, மார்ச், 10ல், முகாம்களை நடத்த, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ், ரயில் நிலையங்கள் உட்பட, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், போலியோ சொட்டு மருந்து போடும் முகாம், நாளை நடைபெற உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது. 'விடுபடும் குழந்தைகளுக்கு, அடுத்தடுத்த நாட்களில், வீடு வீடாக சென்று, போலியோ சொட்டு மருந்து போடப்படும்' என்றனர்.

வரும் கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டத்தை அமல்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வியில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்தது. மற்ற வகுப்புகளுக்கு, வரும் கல்வியாண்டில், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

ஆனால், 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இரண்டு, ஏழு, பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அறிமுகமாகும். மற்ற வகுப்புகளுக்கு, அதாவது, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, அடுத்த, 2020 - 21ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலாகும் என, கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புளுக்கும், ஜூன் மாதம் துவங்கும், கல்வி ஆண்டிலேயே, புதிய பாட திட்டம் அமலுக்கு வரும், பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.


தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது

வெள்ளி, 11 ஜனவரி, 2019

போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையின்போது, பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 
30 கண்காணிப்புக் குழுக்கள்: சென்னையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்பட்ட பழைய பொருள்களால் ஏற்பட்ட புகை காரணமாக அன்றைய தினம் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியின் 13 மண்டலங்களில் காற்றில் துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட 100 கன மீட்டரை விட 135 கன மீட்டர் முதல் 386 கன மீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது.
எனவே, இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 13) சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ள 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். 
சென்னை மாநகரத்தின் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் வகையில் போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளும், போகிப் பண்டிகை தினத்தன்றும் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று மாதிரி சேகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.


அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு

எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்காக உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது.இதையடுத்து அந்தந்த ஒன்றியங்களில் இளையோராக இருக்கும் உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பணிமாறுதல் உத்தரவு வழங்கும் பணி நடக்கிறது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு கண்டுகொள்ளாததால், ' அங்கன்வாடி மையத்திற்கு மாற்றும் பணி உத்தரவை கையெழுத்திட்டு வாங்குவதில்லை,' என ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். இப்பயிற்சி பெற்ற பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களை நியமிக்காமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத் தக்கது. இதனால் அங்கன்வாடிமையத்திற்கு மாற்றும் ஆணையை பெறுவதில்லை என முடிவு செய்தோம், என்றார்.

ஆதார்' பதிவில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆதார்' பதிவில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், 'ஆதார்' எனப்படும், தனிப்பட்ட அடையாள அட்டையை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது.ஆதார் மையங்களில், கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழி பதிவுடன், புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டை வழங்கப்பட்டது.

அரசு மானியம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசு சலுகைகளை பெறுவதற்கு, ஆதார் பதிவு கட்டாய மாக்கப்பட்டுள்ளது.இந்த பதிவில், முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், 25 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, இந்த கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.'

கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க, 100 ரூபாயும், ஆன்லைனில், இ - கேஒய்சி எனப்படும், தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை, 'கலர் பிரின்ட்' எடுப்பதற்கு, 30 ரூபாயும் செலுத்த வேண்டும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்குகிறது.

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்குகிறது.

தற்போதைய லோக்சபாவின் பதவிகாலம் நிறைவடையவிருப்பதையடுத்து பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாத இடைவெளியில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் லோக்சபா பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்துதல்,வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், ஓட்டுச்சாவடிகளில் முன்னேற்பாடுகள், யாருக்கு ஒட்டளித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு முறையை அமல்படுத்துதல், நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின் பெறப்பட்ட அனுபவங்களை இனி வரப்போகும் பொதுத்தேர்தலில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனை நடக்கிறது.

புதன், 9 ஜனவரி, 2019

அனைத்து, 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது

அனைத்து, 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.முறையான காலமுறை சம்பளம் பெறும், 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு, 2018ல், 3,000 ரூபாயை, உச்ச வரம்பாக நிர்ணயித்து, பொங்கல் போனஸ் வழங்கப்பட்டது. அதை பின்பற்றி, இம்முறையும் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.மாத அடிப்படையில், நிலையான ஊதியம் பெற்று வந்த, முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள்; தொகுப்பூதிய பணியாளர்கள்; சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; சிறப்பு காலமுறை ஊதிய ஊராட்சி செயலர்கள்; ஒப்பந்த பணியாளர்கள்; தினக்கூலி ஊழியர்கள் ஆகியோருக்கு, சிறப்பு போனசாக, 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்படும்.தமிழக அரசு பணியில் உள்ள, 'ஏ' மற்றும், 'பி' பிரிவு அலுவலர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலை மானியக் குழு, தொழில்நுட்ப உதவிக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது. ஓய்வூதியர்களுக்கு ரூ.500'சி' மற்றும், 'டி' பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐராவதம் மகாதேவன் புத்தகங்களை, நாட்டுடமையாக்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' _ முதல்வர் பழனிசாமி

ஐராவதம் மகாதேவன் புத்தகங்களை, நாட்டுடமையாக்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், ''கல்வெட்டு ஆய்வாளர், ஐராவதம் மகாதேவன் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை நாட்டுடமையாக்கி, அவை அனைவரையும் சென்றடைய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.அதற்கு முதல்வர், ''கோரிக்கையை, அரசு பரிசீலிக்கும்,'' என்றார்.