GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 11 மார்ச், 2019

அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, குறைந்தது, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேரும் அளவுக்கு, வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தரமான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக, ஒரு சிறிய பள்ளி கூட மூடப்படவில்லை.ஒரே ஒரு மாணவர் உள்ள பள்ளிகளாக, 33ம், ஒன்பதுக்கு கீழ் ஒற்றை படையில், மாணவர் எண்ணிக்கை கொண்டதாக, 1,234 பள்ளிகளும் உள்ளன. எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

சனி, 9 மார்ச், 2019

எஸ்.ஐ., தேர்வு அறிவிப்பு தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது


தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழக காவல் துறையில், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை மற்றும் தாலுகா பிரிவுக்கு, போலீஸ், எஸ்.ஐ.,க்கள், 969 பேர் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, நேற்று, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள், மார்ச், 20 முதல், ஏப்., 19 வரை,www.tnusrbonline.orgஎன்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் எனவும், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது

நாளை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும், நாளை, போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெறுகிறது. 


தமிழகம் முழுவதும், 70 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து போடப்பட உள்ளது. போலியோ தடுப்பு நடவடிக்கைகளில், அரசு சிறப்புக்கவனம் செலுத்தியதை தொடர்ந்து, 15 ஆண்டுகளாக, போலியோ பாதிப்பு இல்லாத நாடாக, இந்தியா உள்ளது. இந்த நிலையை தக்க வைக்கும் வகையிலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடும் முகாம், இரண்டு தவணைகளாக நடைபெற்று வந்தது.

இந்தாண்டு முதல், ஒரே தவணையாக, மார்ச், 10ல், முகாம்களை நடத்த, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ், ரயில் நிலையங்கள் உட்பட, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில், போலியோ சொட்டு மருந்து போடும் முகாம், நாளை நடைபெற உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில், 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து போடப்பட உள்ளது. 'விடுபடும் குழந்தைகளுக்கு, அடுத்தடுத்த நாட்களில், வீடு வீடாக சென்று, போலியோ சொட்டு மருந்து போடப்படும்' என்றனர்.

வரும் கல்வியாண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டத்தை அமல்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வியில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்தது. மற்ற வகுப்புகளுக்கு, வரும் கல்வியாண்டில், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

ஆனால், 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இரண்டு, ஏழு, பத்து மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, வரும், 2019 - 20ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அறிமுகமாகும். மற்ற வகுப்புகளுக்கு, அதாவது, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, அடுத்த, 2020 - 21ம் கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம் அமலாகும் என, கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புளுக்கும், ஜூன் மாதம் துவங்கும், கல்வி ஆண்டிலேயே, புதிய பாட திட்டம் அமலுக்கு வரும், பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.


தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள் - எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த வகையில், மூன்று துறைகளுக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் என, இரண்டாம் நிலை போலீசாக, 8,826 பேரை தேர்வு செய்ய உள்ளதாக, மார்ச், 6ல், அக்குழுமம் அறிவித்தது

வெள்ளி, 11 ஜனவரி, 2019

போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையின்போது, பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 
30 கண்காணிப்புக் குழுக்கள்: சென்னையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்பட்ட பழைய பொருள்களால் ஏற்பட்ட புகை காரணமாக அன்றைய தினம் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியின் 13 மண்டலங்களில் காற்றில் துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட 100 கன மீட்டரை விட 135 கன மீட்டர் முதல் 386 கன மீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது.
எனவே, இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 13) சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ள 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். 
சென்னை மாநகரத்தின் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் வகையில் போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளும், போகிப் பண்டிகை தினத்தன்றும் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று மாதிரி சேகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.


அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு

எல்.கே.ஜி.- யு.கே.ஜி., துவங்கப்படும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான உத்தரவை வாங்குவதில்லை என, ஜாக்டோ-ஜியோ ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்காக உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது.இதையடுத்து அந்தந்த ஒன்றியங்களில் இளையோராக இருக்கும் உபரி பெண் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பணிமாறுதல் உத்தரவு வழங்கும் பணி நடக்கிறது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு கண்டுகொள்ளாததால், ' அங்கன்வாடி மையத்திற்கு மாற்றும் பணி உத்தரவை கையெழுத்திட்டு வாங்குவதில்லை,' என ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகி ஒருவர் கூறியதாவது: எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிச்சோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். இப்பயிற்சி பெற்ற பல ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களை நியமிக்காமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத் தக்கது. இதனால் அங்கன்வாடிமையத்திற்கு மாற்றும் ஆணையை பெறுவதில்லை என முடிவு செய்தோம், என்றார்.

ஆதார்' பதிவில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆதார்' பதிவில் உள்ள விபரங்களில் திருத்தம் செய்வதற்கு வசூலிக்கப்படும் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும், 'ஆதார்' எனப்படும், தனிப்பட்ட அடையாள அட்டையை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது.ஆதார் மையங்களில், கைவிரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழி பதிவுடன், புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்கள் வசிக்கும் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் அட்டை வழங்கப்பட்டது.

அரசு மானியம், கல்வி உதவித் தொகை உள்ளிட்ட அரசு சலுகைகளை பெறுவதற்கு, ஆதார் பதிவு கட்டாய மாக்கப்பட்டுள்ளது.இந்த பதிவில், முகவரி அல்லது தொலைபேசி எண்ணில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், 25 ரூபாய் கட்டணத்துடன், ஜி.எஸ்.டி., சேர்த்து, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, இந்த கட்டணம், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.'

கைவிரல் ரேகை பதிவுகளை புதுப்பிக்க, 100 ரூபாயும், ஆன்லைனில், இ - கேஒய்சி எனப்படும், தங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கும், ஆதார் அட்டையை, 'கலர் பிரின்ட்' எடுப்பதற்கு, 30 ரூபாயும் செலுத்த வேண்டும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்குகிறது.

லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமைதேர்தல் ஆணையத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று துவங்குகிறது.

தற்போதைய லோக்சபாவின் பதவிகாலம் நிறைவடையவிருப்பதையடுத்து பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாத இடைவெளியில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் லோக்சபா பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்துதல்,வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், ஓட்டுச்சாவடிகளில் முன்னேற்பாடுகள், யாருக்கு ஒட்டளித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு முறையை அமல்படுத்துதல், நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின் பெறப்பட்ட அனுபவங்களை இனி வரப்போகும் பொதுத்தேர்தலில் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனை நடக்கிறது.

புதன், 9 ஜனவரி, 2019

அனைத்து, 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது

அனைத்து, 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸ் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.முறையான காலமுறை சம்பளம் பெறும், 'சி' மற்றும், 'டி' பிரிவு, அரசு பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு, 2018ல், 3,000 ரூபாயை, உச்ச வரம்பாக நிர்ணயித்து, பொங்கல் போனஸ் வழங்கப்பட்டது. அதை பின்பற்றி, இம்முறையும் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.மாத அடிப்படையில், நிலையான ஊதியம் பெற்று வந்த, முழு நேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள்; தொகுப்பூதிய பணியாளர்கள்; சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; சிறப்பு காலமுறை ஊதிய ஊராட்சி செயலர்கள்; ஒப்பந்த பணியாளர்கள்; தினக்கூலி ஊழியர்கள் ஆகியோருக்கு, சிறப்பு போனசாக, 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்படும்.தமிழக அரசு பணியில் உள்ள, 'ஏ' மற்றும், 'பி' பிரிவு அலுவலர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலை மானியக் குழு, தொழில்நுட்ப உதவிக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது. ஓய்வூதியர்களுக்கு ரூ.500'சி' மற்றும், 'டி' பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐராவதம் மகாதேவன் புத்தகங்களை, நாட்டுடமையாக்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' _ முதல்வர் பழனிசாமி

ஐராவதம் மகாதேவன் புத்தகங்களை, நாட்டுடமையாக்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசுகையில், ''கல்வெட்டு ஆய்வாளர், ஐராவதம் மகாதேவன் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை நாட்டுடமையாக்கி, அவை அனைவரையும் சென்றடைய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.அதற்கு முதல்வர், ''கோரிக்கையை, அரசு பரிசீலிக்கும்,'' என்றார்.

பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய முரண்பாடு தொடர்பான அறிக்கையை, அரசு பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுக்கும்

பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய முரண்பாடு தொடர்பான அறிக்கையை, அரசு பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சட்டசபையில், அவர் கூறியதாவது:லோக் ஆயுக்தா சட்டம், 2018ல் நிறைவேற்றப்பட்டு, நவ., 13 முதல், நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவில், தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க, தேவையான நடவடிக்கைகள் முடிந்து, விரைவில், செயல்பாட்டிற்கு வரும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். குரூப் 1, குரூப் 1 ஏ, குரூப் 1 பி, பணியிட தேர்வுகளுக்கு, தற்போதுள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., பிரிவினருக்கான வயது உச்சவரம்பு, 35ல் இருந்து, 37 ஆகவும், இதரப் பிரிவினருக்கு, தற்போதுள்ள வயது உச்சவரம்பு, 30ல் இருந்து, 32 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, பழைய ஓய்வூதிய திட்டத்தையே, நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், கோரிக்கை விடுத்தன. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தன் அறிக்கையை, நவ., 27ல், அரசிடம் சமர்ப்பித்தது. இதை பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் ஆகியோருக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, அரசு அமல்படுத்தியது. அதன்பின், ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக, ஒரு நபர் குழுவை, அரசு அமைத்தது. அந்த குழு விசாரணையை முடித்து, அரசுக்கு, 5ம் தேதி அறிக்கை அளித்தது. அதன் மீதும், அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை, எளிமையான முறையில் பராமரிக்கவும், நிதி மற்றும் மனித வள மேலாண்மையை மேம்படுத்திடவும், ஒருங்கிணைந்த திட்டத்தை அமல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், திட்டம் துவக்கி வைக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.தேர்வுகள், பிப்., 2 முதல், 24ம் தேதி வரை நடக்க உள்ளன.சென்னை தரமணி வணிக கல்வி நிறுவனத்தில், பிப்., 2, 3ல், ஆங்கில அதிவேக சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்படும். மற்ற இடங்களில், பிப்., 9ல், தமிழ் சுருக்கெழுத்து; பிப்., 10, ஆங்கில சுருக்கெழுத்து; பிப்., 11ல், கணக்கு பதிவியல் தேர்வு நடக்கும்.ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்வுகள், பிப்., 23, 24ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி நடத்தப்பட்ட தனியார் மையங்களில் படித்தவர்களுக்கு, கோவை பாரதியார் பல்கலையின் பட்ட சான்றிதழ்கள் ரத்தாகலாம்

விதிகளை மீறி நடத்தப்பட்ட தனியார் மையங்களில் படித்தவர்களுக்கு, கோவை பாரதியார் பல்கலையின் பட்ட சான்றிதழ்கள் ரத்தாகலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.கோவை பாரதியார் பல்கலை சார்பில், 300க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், வெளி மாநிலங்களில் படிப்பு மையங்கள் நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அவற்றில், பகுதி நேரமாகவும், வார இறுதியிலும் வகுப்புகள் நடத்தி, அதற்கு, 'ரெகுலர்' மாணவர்களுக்கான பட்ட சான்றிதழை, பாரதியார் பல்கலை வழங்குகிறது.கடும் எதிர்ப்புஇந்த நடவடிக்கைக்கு, பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யு.ஜி.சி., விதிப்படி, உள்கட்டமைப்பு வசதியுடனும், தரமான ஆசிரியர்களால் நடத்தப்படும், கலை, அறிவியல் கல்லுாரிகளில் மட்டுமே, ரெகுலர் பட்ட படிப்புகள் நடத்த முடியும்.மேலும், ஒவ்வொரு பல்கலையும், அந்தந்த மாநிலங்களுக்குள் மட்டுமே, படிப்பு மையம் அமைக்கலாம்.அதை, தனியாரிடம் விடக் கூடாது. 'ரெகுலர்'வகுப்புகள் நடத்தக் கூடாது; தொலைநிலை கல்வி மட்டுமே நடத்தலாம் என, கட்டுப்பாடுகள் உள்ளன. இதையும், பாரதியார் பல்கலை பின்பற்றவில்லை என்ற,குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து, தனியார் கல்லுாரிகள் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, 'இனி, தனியார் படிப்பு மையங்களை அனுமதிக்க மாட்டோம்' என, பல்கலை நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.ஆனால், பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், உயர்கல்வி செயலர் மங்கத்ராம் சர்மா தலைமையில், நவம்பர், 28ல் நடந்தது. இதில், 165 தனியார் படிப்பு மையங்களுக்கு, மீண்டும் அனுமதி அளிக்க முடிவானது.இதுகுறித்து, நமது நாளிதழில், நவ., 29ல் விரிவான செய்தி வெளியானது. உடன், கல்லுாரிகள் தரப்பில், பாரதியார் பல்கலை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிமன்றம் விசாரித்து, ஜன., 7ல், சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலை நிர்வாகிகள் நேரில் ஆஜராக உத்தர விட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்கல்வி செயலர் மங்கத்ராம் ஷர்மா, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவரை கைது செய்து ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பிரச்னை, பாரதி யார் பல்கலைக்கும், உயர்கல்வி துறையின் அலட்சியமான நிர்வாகத்துக்கும், பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பேராசிரியர்கள் முடிவுஇந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் தனியார் படிப்பு மையம் தொடர்பான, இந்தபிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.யு.ஜி.சி., விதியை மீறிய படிப்பு மையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவற்றின் வழியாக வழங்கப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்களை ரத்து செய்யவும், கவர்னருக்கும், யு.ஜி.சி.,க்கும் புகார் அனுப்ப, பேராசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.இதனால், படிப்பு மையங்களுக்கு, மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜன. 14 தமிழகம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

ஜன. 14 தமிழகம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதியன்று (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.