ஆதார் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.மொபைல் போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன், ஆதார் எண் இணைப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், ஆதார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், இந்த மசோதா உள்ளதாக, காங்., - எம்.பி., சசி தரூர், திரிணமுல், காங்., - எம்.பி., சவுகதா ராய் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நடவடிக்கைசசி தரூர் கூறுகையில், ''ஆதார் சட்ட திருத்த மசோதா, எல்லா பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்படாமல் உள்ளது. தகவல் பாதுகாப்புக்கென, சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை,'' என்றார்.இதற்கு பதில் அளித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், இந்த சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்படவில்லை. வங்கி கணக்கு, மொபைல் போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது, கட்டாயம் ஆக்கப்படவில்லை.ஆதார் மசோதா, தனிநபர் ரகசிய உரிமையை மீறும் வகையில் இல்லை. தனிநபர் ரகசியம் பாதுகாக்கும் அம்சங்கள், சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.தகவல் பாதுகாப்புக்கென, தனி சட்டத்தை அரசு தயாரித்துள்ளது. அதற்கான மசோதா, விரைவில் பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்படும்.ஆதார் திட்டத்தால், பயனாளர்களின் வங்கி கணக்குகளில், நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளதை மறக்கக் கூடாது. இந்த திட்டத்தை, உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட உலக அமைப்பு கள் பாராட்டி உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்
Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- CARREER GUIDANCE
- ECO CLUB PUMS DEVANNAGOUNDANUR
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- TET
- THIRUKKURAL
- TIPS
GSK FLASH NEWS
வியாழன், 3 ஜனவரி, 2019
பொங்கல் திருநாளை, அனைவரும் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய், அரசால் வழங்கப்படும்
பொங்கல் திருநாளை, அனைவரும் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, சிறப்பு தொகுப்பை அரசு வழங்க உள்ளது. இது தவிர, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், திருவாரூர் மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய், அரசால் வழங்கப்படும்
தமிழக சட்டசபை கூட்டம், 8ம் தேதி வரை நடக்க உள்ளது
தமிழக சட்டசபை கூட்டம், 8ம் தேதி வரை நடக்க உள்ளது.தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன், நேற்று துவங்கியது. உரை முடிந்த பின், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது; 8ம் தேதி வரை, சட்டசபை கூட்டத் தொடரை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபை துவங்கியதும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன், சென்னையைச் சேர்ந்த, 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரன், 'கஜா' புயலில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ், முன்னாள் முதல்வரும், திருவாரூர், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிவார். அந்த தீர்மானத்தின் மீது, தலைவர்கள் பேசுவர். அத்துடன், இன்றைய சபை நிகழ்வு முடிவுறும்.நாளை மற்றும் நாளை மறுதினம், கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விவாதம் நடக்கும்; 6ம் தேதி அரசு விடுமுறை. மீண்டும், 7ம் தேதி, விவாதம் நடக்கும். 8ம் தேதி, கவர்னர் உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதல்வர் பதிலுரை வழங்குவார்.அன்று, 2018 - 19ம் ஆண்டிற்கான, முதல் துணை நிதிநிலை அறிக்கை, சபைக்கு அளிக்கப்படும். சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தல், நிறைவேற்றுதல் போன்ற நிகழ்வுகளும் நடக்கும். தினமும் காலை, கேள்வி நேரம் உண்டு.இத்தகவல்களை, சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடங்கள் துவங்கியுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தவும், கட்டணம் நிர்ணயிக்கவும், பல பள்ளிகள் முடிவு செய்துள்ளன.எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற, மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதேநேரம், அரையாண்டு தேர்வில், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, டி.சி., கொடுத்து வெளியேற்ற, சில பள்ளிகள் முயல்வதாக, புகார்கள் எழுந்துள்ளன. அவர்களை, பொதுத் தேர்வு எழுத விடாமல் முடக்கவும், சில பள்ளிகள் முயற்சிக்கின்றன.கடந்த ஆண்டுகளில், பல பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படாமல் பிரச்னை ஏற்பட்டது. இந்த ஆண்டு, அது போல பிரச்னை ஏற்படாமல், தனியார் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மாணவருக்கும், டி.சி., கொடுத்து, கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான, ஆன்லைன் அடிப்படை பதிவுக்கான நாள், இன்றே கடைசி. கால அவகாசம் நீட்டிக்கப்படாது'
எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான, ஆன்லைன் அடிப்படை பதிவுக்கான நாள், இன்றே கடைசி. கால அவகாசம் நீட்டிக்கப்படாது' என, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துஉள்ளது.புதுடில்லி, ஜோத்பூர், பாட்னா, நாக்பூர் உட்பட, நாடு முழுவதும் உள்ள, 15 எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு, மே, 25, 26ல் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே பிளஸ் 2 முடித்த மற்றும் தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.தேர்வு எழுதும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும், தலா, 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவது கட்டாயம். குறைந்தபட்ச மதிப்பெண்ணை பெறாவிட்டால், அவர்கள், நுழைவுத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்றாலும், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.இந்தாண்டு, நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோருக்கு, நவ., 30ல் ஆன்லைனில் அடிப்படை தகவல் பதிவு துவங்கியது. இன்று மாலை, 5:00 மணிக்குள் பதிவுகளை முடிக்க வேண்டும். பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்ற விபரம், வரும், 7ம் தேதி தெரிய வரும்.அடிப்படை பதிவுக்கு, கூடுதலாக தேவைப்படும் விபரங்களை பதிவு செய்ய, வரும், 8ம் தேதி முதல், 18ம் தேதி வரை அவகாசம் தரப்படும். இறுதி செய்யப்பட்ட மாணவர்களின் விபரம், வரும், 22ல் வெளியாகும். நுழைவுத் தேர்வுக்கான தகவல் கையேடு, வரும், 29ம் தேதி வெளியிடப்படும்.தேர்வுக்கான கட்டணம் செலுத்துவது; தேர்வு மையங்களுக்கான விருப்பம் தெரிவிக்கும் பதிவு, வரும், 29ம் தேதி முதல், பிப்., 17 மாலை, 5:00 மணி வரை நடக்கும். தேர்வுக்கான ஹால் டிக்கெட், மே, 15ல் வெளியிடப்படும் என, எய்ம்ஸ் நுழைவு தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது.
புதன், 2 ஜனவரி, 2019
உட்பிரிவு பட்டா வழங்க, நில அளவை செய்யும் போது, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
உட்பிரிவு பட்டா வழங்க, நில அளவை செய்யும் போது, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், நிலங்களை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்ற, கிராம நிர்வாக அலுவலர்களான, வி.ஏ.ஓ.,க்கள் வாயிலாகவும், அரசின் பொது சேவை மையங்கள் வாயிலாகவும், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.விண்ணப்பங்களை பரிசீலித்து, நிலத்தை அளந்து, வரைபடம் தயாரிக்கும் நிலையிலும், உட்பிரிவு பட்டா வழங்கும் நிலையிலும், வி.ஏ.ஓ.,க்கள் இருப்பதில்லை. இவர்களின் கருத்துகளை மேலதிகாரிகள் கேட்பதில்லை. இதனால், நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா வழங்கியதில், ஏதாவது தவறு இருப்பதாக வழக்கு விசாரணை வந்தால், வி.ஏ.ஓ.,க்களால், உரிய பதில் அளிக்க முடிவதில்லை.இது குறித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் ஆகியவை, அரசுக்கு கருத்துரைகள் வழங்கின. இந்த விஷயத்தில், நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர், அரசுக்கு சில பரிந்துரைகள் அனுப்பினார்.இதன் அடிப்படையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:வருவாய் சார்ந்த பணிகளில், வி.ஏ.ஓ.,க்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். உட்பிரிவு பட்டா வழங்குவதற்காக, நிலங்களின் எல்லையை அளக்க, குறுவட்ட சர்வேயர், புல தணிக்கை செய்யும் தேதியை, வி.ஏ.ஓ.,க்களுக்கு தெரிவிக்க வேண்டும்.நில அளவை செய்யும் போது, அதில், வி.ஏ.ஓ.,க்களும் பங்கேற்க செய்ய வேண்டும். இதை, நில அளவை துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை, நேற்று அமலுக்கு வந்தது.
ஒரு முறை பயன்படுத்தியதும், துாக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு விதித்துள்ள தடை, நேற்று அமலுக்கு வந்தது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தத் தடையை, அரசு விடாப்பிடியாக அமல்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும், மாசை தவிர்க்கும் முயற்சியில், அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில், உணவகங்களில், 'பார்சல்' வழங்குவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, 12 பாரம்பரிய பொருட்களை, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அரசு அறிவித்தபடி, பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், 'பிளாஸ்டிக் தடையை தள்ளி வைக்க வேண்டும்' என, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த எதிர்ப்பை மீறி, அரசு தடையை அமல்படுத்தியது. இந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசு தவிர்க்கும் முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது.
'பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், 'நோட்டீஸ்'
'பிளஸ் 1 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டில், பூஜ்யம் மதிப்பெண் அளித்தது ஏன்' என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க, இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.தமிழகத்தில், 2018 மார்ச்சில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வு அமலுக்கு வந்தது. இந்த தேர்வில், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் என்பது, 100 ஆக குறைக்கப்பட்டது.மேலும், பாடவாரியாக, 10 மதிப்பெண் அகமதிப்பீடாக வழங்கப்படுகிறது. தொழிற்கல்வியில், செய்முறை இருக்கும் பாடங்களுக்கு மட்டும், தலா, 25 மதிப்பெண், அகமதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது.இந்நிலையில், 2017 - 18ம் கல்வியாண்டில் படித்த, பிளஸ் 1 மாணவர்களில், 20 சதவீதம் பேருக்கு, அகமதிப்பீட்டு மதிப்பெண், ஒன்று கூட வழங்காமல், பூஜ்யமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனால், மாணவர்களின் மொத்த மதிப்பெண் குறைந்ததும், தேர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது.பள்ளி வருகை பதிவு, 75 சதவீதம் இருந்தால், அந்த மாணவருக்கு, ஒரு மதிப்பெண்ணை, அகமதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கலாம் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஒரு மதிப்பெண்ணையும், பல மாணவர்கள் பெறவில்லை. அப்படியென்றால், 20 சதவீத மாணவர்கள், 75 சதவீத நாட்கள் பள்ளிக்கு வராமல், தேர்வை எழுதினார்களா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்வாயிலாக, தலைமைஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனரகம், நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.அதில், பல மாணவர்களுக்கு, பிளஸ் 1 தேர்வில், அக மதிப்பெண் பூஜ்யம் என, நிர்ணயித்தது ஏன்; 75 சதவீதம் வருகை பதிவு இல்லாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்களா; பூஜ்யம் வழங்கிய ஆசிரியர்கள் யார் என்ற விபரத்தை தாக்கல் செய்யும்படிகூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு 'குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட, 29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது
இந்தாண்டு
'குரூப் - 1, குரூப் - 2, வி.ஏ.ஓ., உட்பட, 29 வகை தேர்வுகள், இந்த ஆண்டு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டி தேர்வுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 4,365 காலியிடங்களை நிரப்பும் வகையில், 29 போட்டி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.அவற்றில் சில தேர்வுகள்:துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கான, குரூப் - 1 தேர்வு, சமூக நலத்துறை பள்ளிகளுக்கான, உதவி கண்காணிப்பாளர் தேர்வு. இளநிலை ரசாயன வியல், உதவி ரசாயனவியலாளர் பதவிக்கான தேர்வு என, நான்கு தேர்வுகள், இந்த மாதம் அறிவிக்கப்படும்மீன்வள துறை ஆய்வக உதவியாளர், வேலைவாய்ப்பு துறையில், சுருக்கெழுத்து உதவி பயிற்சி அதிகாரி, நெடுஞ்சாலை துறை இளநிலை வரைவு அதிகாரி, இன்ஜினியரிங் பணி போன்றவற்றுக்கு, பிப்ரவரியில் தேர்வு அறிவிக்கப்படுகிறதுஅண்ணா நுாலக உதவி நுாலகர், அரசு சட்ட கல்லுாரி நுாலகர், மருத்துவ பணிகள் கழகத்தில் மருந்தாய்வாளர், இளநிலை ஆய்வு அலுவலர் பதவிகளுக்கு, மார்ச்சில் தேர்வு அறிவிக்கப்படும்தலைமை செயலக பணியில், மொழி பெயர்ப்பாளர், இன்ஜினியரிங் பணி. அருங்காட்சியக காப்பாட்சியர், உதவி சுற்றுலா அதிகாரி போன்ற பதவிகளுக்கான தேர்வுகள்,ஏப்ரலிலும் நடக்கும்.குரூப் - 2, தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள், மே மாதமும் அறிவிக்கப்படுகின்றனகிராம நிர்வாக அலுவல ரான, வி.ஏ.ஓ., உதவி புவியியலாளர், கெமிக்கல் இன்ஜினியர் பதவி களுக்கு, ஜூன் நடக்கும்.தமிழக தொழில்துறையில் கண்காணிப்பாளர் பதவிக்கு, ஜூலை; தமிழக சட்ட கல்வி துறையில், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஆகஸ்டிலும் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது தமிழக கருவூல துறையில் கணக்கு அதிகாரி பதவிக்கு, நவம்பர்; வன துறை உதவி வன காப்பாளர் பதவிக்கு, டிசம்பரிலும் தேர்வுகள்அறிவிக்கப்பட உள்ளன.தேர்வு இணைப்பு இல்லைடி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒரே மாதத்தில் குறிப்பிட்டிருப்பது, தேர்வர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு, குரூப் - 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் ஒருங்கிணைத்து நடத்தியதும், இக்குழப்பத்துக்கு முக்கிய காரணம்.இது தொடர்பாக, சமூக வலைதளங்களில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் இணைக்கப்பட்டு விட்டதாகவும், முதன்மை தேர்வுகளுக்கு பதிலாக இரண்டுக்கும் பொதுவாக முதல்நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் தகவல் பரவியுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''இரண்டு தேர்வுகளையும் ஒரே மாதத்தில், நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால், தேர்வுகளை ஒருங்கிணைக்கும் எவ்வித திட்டமும் தற்போது இல்லை. மாற்றம் இருப்பின், முன்கூட்டியே தெரிவிப்போம்,'' என்றார்.
பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 'தெர்மாக்கோல்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
.தமிழகம் முழுவதும் நேற்று முதல், பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலித்தீன், பிளாஸ்டிக், தெர்மாக்கோல் உட்பட, மொத்தம், 14 வகை பொருட்களை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என, உள்ளாட்சி அமைப்புகள் வழியாககண்காணிக்கப்படுகிறது.இந்த தடைப்படி, எளிதில் மக்காத தெர்மக்கோல் அட்டைகளையும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள், கல்லுாரிகளில், பாடங்களின் செய்முறை பயிற்சிகளுக்கு, தெர்மாக்கோல் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆர்கிடெக்ட் படிக்கும் மாணவர்களுக்கு, தெர்மாக்கோல் அதிகம் பயன்படுகிறது.தற்போது தடை சட்டம் அமலாகியுள்ளதால், வரும் நாட்களில், பள்ளி, கல்லுாரிகளின் செய்முறை திட்டங்களுக்கு, கனத்த காகிதம், தடிமனான அட்டைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், பள்ளிகளின் செய்முறை பயிற்சிகளுக்கு மட்டும், தெர்மாக்கோல் பயன்பாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க, ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தெளிவான வழிகாட்டுதல் தேவை என, கல்வி நிறுவனங்கள் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது.அதேநேரம், தெர்மாக்கோலுக்கு விலக்கு அளித்தால், அந்த சலுகையை, அலங்கார பொருட்களுக்கான வணிக பயன்பாட்டுக்கு, தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வாய், 1 ஜனவரி, 2019
குரூப் - -1' பிரதான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
குரூப் - -1' பிரதான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
குரூப்- - 1 பதவிகளில் காலியாக உள்ள, துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி துறை உதவி கமிஷனர் உட்பட, 85 பணியிடங்களுக்கு, அக்., 13 முதல், 15 வரை பிரதான தேர்வு நடந்தது. இதில், 4,199 பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வும், ஜன., 21 முதல், 25 வரை, தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளில், திருவாரூருக்கு மட்டும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளில், திருவாரூருக்கு மட்டும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், திருவாரூர்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ் மறைவால், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாகின. 'தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், மேலும், 18 தொகுதிகளும் காலியாகி உள்ளன.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக, பேராசிரியர் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தராக, பேராசிரியர் கிருஷ்ணன், 60, நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவர், இப்பதவியில் மூன்று ஆண்டுகள் இருப்பார். பேராசிரியர் பணியில், நீண்டகால அனுபவம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலையில், 27 ஆண்டுகள் பணியாற்றி, 2016, டிச., முதல், ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள மத்திய பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.மதுரை காமராஜ் பல்கலை இருக்கும், நாகமலை புதுக்கோட்டையை சொந்த ஊராக கொண்டவர். பல்வேறு வெளிநாட்டு பல்கலைகளில், கவுரவவிரிவுரையாளராக பணியாற்றி உள்ளார். மூலக்கூறு உயிரியல்தொடர்பாக, 128 ஆராய்ச்சி கட்டுரைகள், இரண்டு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
உணவு பாதுகாப்பு குறித்த போட்டியில், வெற்றி பெறும் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி பரிசுகள் வழங்க உள்ளார்.
மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக அரசின், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில், செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணர்வு போட்டிகள், சென்னையில் நடக்க உள்ளன.சுவரொட்டி வரைதல், சுவர் சித்திரம் வரைதல், டிஜிட்டல் படைப்பாற்றல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன.பங்கேற்க விரும்பும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள் Fssai.gov.in/creativitychallengeல், ஜன.,3ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும்.மாவட்ட அளவிலான போட்டியில், வெற்றிபெறும் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு, ஜன.,27ம் தேதி, டில்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் நரேந்திரமோடி, பரிசுகள் வழங்க உள்ளார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததால், பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், இரண்டாம் பருவத் தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு, டிச., 10 முதல், 22 வரை நடந்தன. இதையடுத்து, டிச., 23 முதல், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை, இன்றுடன் முடிகிறது. நாளை, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த தும், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத் தேர்வு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள் வழியாக, புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நாளை பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கி, தாமதமின்றி பாட வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்