GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 8 ஜூலை, 2016

வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலால், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம்

வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலால், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1,500 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 3ம் தேதி, பிளஸ் 1, பிளஸ் 2

மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு, பின் கோஷ்டி மோதலாக மாறியது.

இதற்கு சம்பந்தமே இல்லாத, செங்கல்பட்டு கலைக்கல்லுாரி மாணவர் கணபதி என்பவர், பிளஸ் 2 மாணவர்கள் மூவரை தாக்கியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, கணபதியை கைது செய்தனர். மோதலில் ஈடுபட்ட மாணவர்களை, ஆசிரியர்கள் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இருப்பினும், மாணவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து, நடுரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; பின், அவர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, 4ம் தேதி, மீண்டும் இருதரப்பு மாணவர்களும், வகுப்புகளை புறக்கணித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால், கோஷ்டி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்த தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் போலீசார், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், இருதரப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.இதைத்தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார், தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், மற்ற ஒன்பது ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கும், இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளதாக, தி.மலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பொன்.குமார் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 1,000 மாணவியரை தேர்வு செய்து, மத்திய அரசின்'உதான்' என்ற திட்டம்

பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 1,000 மாணவியரை தேர்வு செய்து, அவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., படிப்புகளில் சேர்ந்து, இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்காகவே, மத்திய அரசில், 'உதான்' என்ற திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

இதில், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் மாநில அரசு பாடத்திட்ட மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். பிளஸ் 1 படிக்கும் போதே, இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும், மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இரு ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது. அவர்கள், உதான் திட்ட வகுப்புகளில், கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். ஆன்-லைன் வழியாகவும், நேரடியாகவும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி புத்தகம், 'டேப்லெட்' இலவசமாக வழங்கப்படும். சந்தேகங்களை தெளிவுபடுத்த, 'ஹெல்ப் லைன்' வசதியும் உண்டு.

இதில் பயன்பெற விரும்பும் மாணவியர், 10ம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம், 70 சதவீத மதிப்பெண்; கணிதம், அறிவியல் பாடங்களில், 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு சேர விரும்பும் மாணவியருக்கான ஆன்லைன் பதிவு, கடந்த, 4ம் தேதி துவங்கியுள்ளது.

வரும் 13ம் தேதி வரை, www.cbseacademic.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி ஜூலை15 ல் துவக்கம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது.

அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தவறுகளை களைய வேண்டும்; ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் நீக்க வேண்டும்; இடம் மாறி சென்றவர், இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்; புகைப்படம் தெளிவானதாக இருக்க வேண்டும்; பெயர், குடும்ப விபரம், முகவரி சரியாக இருக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே பெயரில் உள்ள வாக்காளர்கள், தனியே பிரிக்கப்படுகின்றனர். இதுவரை, 70 லட்சம் வாக்காளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தந்தை பெயர், புகைப்படம் ஆகியவை ஒப்பிடப்படுகிறது. அப்போது, ஒரே நபரின் பெயர், பல இடங்களில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் விபரம் தனியே பட்டியலிடப்படுகிறது. அதேபோல், முகவரி மாறி சென்றவர்கள், இறந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இப்பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், வரும், 15ம் தேதி ஒப்படைக்கப்படும். அவர்கள் வீடு வீடாகச் சென்று, அப்பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்துவர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், பெயர் இருப்பது உறுதியானால், வாக்காளர் விரும்பும் இடம் தவிர, மற்ற இடங்களில் பெயரை நீக்குவர்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மெட்ரிக் பள்ளி இயக்ககம், முறைசாரா கல்வி ஆகியவற்றுக்கு, இயக்குனர் பணியிடங்கள், நான்கு மாதங்களாக காலியாக இருந்தன. முறைசாரா கல்வியை, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவனும், மெட்ரிக் இயக்ககத்துக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகனும் கூடுதல் பொறுப்பில் கவனித்தனர். இந்நிலையில், மேல்நிலைப் பள்ளி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி, பணியாளர் நிர்வாகம் இணை இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில், கருப்பசாமி மெட்ரிக் பள்ளி இயக்ககத்துக்கும், பழனிச்சாமி முறைசாரா கல்வி இயக்ககத்துக்கும் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி கல்வித்துறை கையாளும் பிரிவுகள் : தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ், பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிக் பள்ளி, முறைசாரா கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேர்வுத்துறை இயக்ககம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய துறைகள், ஒவ்வொரு இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

அவர்களுக்கு கீழ் இணை இயக்குனர்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் இயங்குகின்றனர்.

வியாழன், 7 ஜூலை, 2016

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட
சட்டத்திருத்தம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல், அக்., 24ம் தேதிக்குள் நடந்தாக வேண்டும். 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், வார்டுகளை நிர்ணயம் செய்வது, கால தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், தற்போதுள்ள எல்லை மற்றும் வார்டுகள் அடிப்படையில், தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மாநகராட்சிகளில் மேயருக்கு, மாநகர உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால், மாநகராட்சிகள் முறையாக செயல்படுவதில்லை என்று, அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, நேரடி மேயர் தேர்தலை ரத்து செய்து விட்டு, மாநகராட்சி கவுன்சிலர்கள் மறைமுக தேர்தல் மூலம், மேயரை தேர்வு செய்யும் முறையை கொண்டு வர, அரசு முடிவு செய்தது.

இதற்காக, சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டத்திருத்தம் விவரம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது

பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது'

பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்தால், கொசு உற்பத்தியும், நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், திடீர் மழை மற்றும் அதனால் தேங்கும் நீரால், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

இதற்கு முன்னெச்சரிக்கையாக, தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

 பள்ளி வளாகத்தில், நீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்

 குடிநீர் பானைகள், குடங்கள், பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை கண்டிப்பாக மூடி வைக்க வேண்டும்; வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை சுற்றி, தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

 பள்ளி மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்

 எந்த சூழ்நிலையிலும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் செய்யக் கூடாது. அவர்களும் சுயமருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்

 டெங்கு, சிக்குன் குனியா நோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணிப்பு

தமிழக அரசு பள்ளிகளின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விவரங்களை, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட வாரியாக கணக்கு எடுத்துள்ளது. இந்த விவரங்கள், பள்ளிக்கல்வி துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டு, 'சாப்ட்வேர்' மூலம், கணினியில் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த, 'சாப்ட்வேர்' மூலம், அனைத்து கல்வி மாவட்டங்களின் தேர்ச்சி விவரங்களும் புள்ளி விவரத்துடன் பதிவு செய்யப்படுகின்றன. பள்ளி வாரியாக, ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் பின், எந்த பள்ளியில், எந்த பாடத்தில் தேர்ச்சி விகிதம் கடுமையாக குறைந்துள்ளது; ஒரு மாணவனின் தேர்ச்சி குறைய எந்த பாடம் காரணம்; அதற்கான ஆசிரியர் யார் என்ற விவரங்கள்,

கணினியில் சேகரிக்கப்படுகின்றன.

இந்த பட்டியலின் படி, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு, அவரின் பணிகள், வகுப்பு நடத்தும் முறை, கற்பித்தல் ஈடுபாடு ஆகியவையும் ஆய்வு செய்யப்படும். அந்த ஆசிரியர் சரியாக பணி செய்யாவிட்டால், அவருக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து விளக்கம் கேட்கவும்; ஆர்வமான ஆசிரியராக இருந்தால் அவருக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், விரிவுரையாளர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கவும், பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகள், 50 சதவீதத்தை தாண்டியுள்ளன. மேலும், தற்போது முதலே ஆசிரியர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு, நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு, நேரடி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் இயங்கும் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில், பி.ஏ., மற்றும் பி.காம்., ஆகியவற்றுடன், எல்.எல்.பி., படிப்பு, ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பாக கற்று தரப்படுகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், தேசிய பொது சட்ட மாணவர் சேர்க்கை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தால், தற்போது விண்ணப்பிக்கலாம்.

தேசிய சட்டப் பள்ளியின், www.tnnis.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை நிரப்பி தேசிய சட்டப்பள்ளிக்கு, வரும், 18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்காப்பீடு திட்டம் 2020 வரை நீட்டிப்பு

தமிழக அரசு ஊழியர்காப்பீடு திட்டம் 2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. Govt employees NHIS new health insurance scheme extended up to 2020

ஞாயிறு, 3 ஜூலை, 2016

கல்விக் கடனுக்காக மாணவியின் படத்தை ஒட்டிய விவகாரம்: ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

கல்விக் கடனை வசூலிக்க பொது இடத்தில் மாணவியின் புகைப்படத் துடன் ஃபிளெக்ஸ் போர்டு வைத்து மன உளைச்சலை ஏற்படுத்திய தற்காக ஒரு லட்சம் ரூபாய் இழப் பீடு வழங்க சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கவுன்சிலிங் ஜூலை 13 முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கவுன்சிலிங் ஜூலை 13 முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பி.இ., தமிழ் வழியில் சேர்க்கை அதிகம் : தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தகவல்

“கிராமப்புற மாணவர்கள் பி.இ., தமிழ் வழியில் சேருவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது,” என காரைக்குடியில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையை
பார்வையிட்ட தொழில் நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி தெரிவித்தார்.

'இக்னோ' கட்டண சலுகை

இக்னோ மதுரை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்துள்ளதாவது:
உயர் கல்வியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த, அப்பிரிவு மாணவர்களுக்கு கட்டண சலுகை அறிவித்துள்ளது.

மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தலைமை ஆசிரியை மட்டும் ஆஜர்

வேடசந்துார் அருகே, இரண்டு ஆண்டுகளாக மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு, தலைமை ஆசிரியை மட்டும் தினமும் வந்து செல்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஒன்றியம், சித்துார் ஊராட்சியைச் சேர்ந்தது கெட்டியபட்டி. 50க்கும் குறைவான வீடுகளே உள்ளன. இங்கு, 1961 முதல், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில், 80 மாணவர்கள் இருந்தனர். சில ஆண்டுகளாக மாணவர் வருகை குறைந்து, இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட இல்லாமல் பள்ளி காற்றாடுகிறது. சுற்றுப்பகுதியில் மூன்று அரசு, ஒரு தனியார் பள்ளி துவங்கப்பட்டதே இந்நிலைக்கு காரணம்.

பி.எட்., படிப்பு கட்டணம் எகிறும்

நாட்டில் உள்ள அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், மத்திய அரசின் என்.சி.டி.இ., நிறுவனத்திடம் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. தமிழகத்தில் பி.எட்., கல்லுாரிகள், என்.சி.டி.இ., அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்புடன் செயல்படுகின்றன.
கடந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு காலம் ஓராண்டில் இருந்து, இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. ஆனால், கல்லுாரிகளில் இரண்டு ஆண்டு படிப்புக்கான உள்கட்டமைப்புகள் உள்ளதா என, என்.சி.டி.இ., ஆய்வு நடத்தவில்லை. நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வர காலதாமதம் ஆனதால், வாய் வழி அங்கீகாரம் வழங்கி, கல்லுாரிகளை கண்டும் காணாமல் விட்டு விட்டது.