GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 23 ஜனவரி, 2015

தவறான வார்த்தை..! தடுமாறும் வெற்றி!!

சொன்னாலும் கேட்பதில்லை இளைய மனசு. கோபம், கர்வம், அகங்காரம் கலந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது.
பெரும்பாலும் பிறரைத் தாக்கி, நக்கல் செய்து பேசுவதே பலரின் பழக்கமாக மாறிவரும் இந்நாளில், அந்தப் பேச்சு எப்படி நமது வாழ்வினை முடக்குகிறது என்பதை உணர முடிவதில்லை.
புண்படுத்தும் பேச்சுக்கள்
கச்சேரி சூப்பர்தான், கூட்டம்தான் இல்லை. பார்ட்டி அருமை, வந்த பார்ட்டிகள் எல்லாம் மொக்கை. பேச்சு நன்றாக இருந்தது, கேட்கத்தான் ஆளில்லை. எக்கச்சக்க ஐடெம்ஸ், எதுவும் வாயில வைக்க முடியல.
இப்படி நிறைய பேரின் பேச்சில் ஒரு குத்தல் இருக்கிறது. கேட்கும்போது பலர் சிரிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால் நிச்சயம் மனம் புண்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
சிலருக்கு தனது பதவி, அதிகாரம் காரணமாக ஏற்படும் ஒரு உடல் விறைப்பு, கடிந்து பேசும் தன்மை என்று எல்லாமே ஞானச் செறுக்கு எனலாம். புறச்சூழலுக்கு அட்ஜஸ்ட் செய்யமுடியாதபோது ஏற்படும் ஒரு சலிப்பு, கவலை, பொறுமையின்மை வார்த்தையாக வெளிப்படும்போது, பல இதயங்கள் நொறுங்கிப் போகின்றன.
‘வலி’ தரும் வார்த்தைகள்
வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை மட்டுமல்ல, வலி தருவதும்கூட. சில தவறான வார்த்தைகள், கேட்டவுடனேயே இதயத்தை நொறுக்குகிறது. தாமதமாக வரும் ஒரு கல்லூரிப் பெண்ணைப் பார்த்து ‘யாருடன் சுற்றிவிட்டு வருகிறாய்‘ என்றால் போச்சு. ‘யாரை மயக்க இவ்வளவு மேக் அப்?‘ என்ற கேள்வி பல நேரம் ஆறாத காயங்களை உண்டாக்கும்.
பேசினால் வாயாடி என்பர். பேசாவிட்டால் திமிரு என்பார்கள். என்னதான் செய்வது?
கேட்டால் நிறைய கற்கலாம். பேசினால் நமது அறியாமையை வெளிப்படுத்தலாம் என்பார் ஒரு அறிஞர்.
எதற்கெடுத்தாலும் குற்றம், குறை, குத்திக் காட்டுவது பேச்சில் அழகு ஆகாது. பலர் இன்று வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும்போது, விட்டுக் கொடுத்தல், மன்னித்து ஏற்றுக்கொள்ளல் மிக மிக அரிதாகிவிட்டது. அவநம்பிக்கையுடன் பேசுவது, நெகடிவ் ஆக பேசுவது சிலரின் வாடிக்கையாக உள்ளது.
எது சிறந்த மனநிலை
சிலர் கண்டிக்கும் பெற்றோர் மனநிலையில், சிலர் அரவணைக்கும் பெற்றோர் மனநிலையில், சிலர் பக்குவ மனநிலையில், சிலர் இயல்பான மனநிலையில், சிலர் குட்டிப் பண்டிதர் மனநிலையில், சிலர் வளைந்து கொடுக்கும் மனநிலையில், சிலர் முரண்டு பிடிக்கும் குழந்தை மனநிலையில் இருந்தும், தமது பேச்சுவார்த்தையினை மேற்கொள்கின்றனர்.
குழம்ப வேண்டாம்... இதில், பக்குவ மனநிலைதான் சிறந்தது.
- டாக்டர்.பால சாண்டில்யன்

வியாழன், 22 ஜனவரி, 2015

கல்விமுறை செல்ல வேண்டிய திசை எது?

‘அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான் மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது’ என்று பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் கூறுவது சாதாரணமான விஷயமல்ல.
2014-ம் ஆண்டுக்கான இந்தியக் கல்வித் தரத்தின் ஆய்வறிக்கையை (ASER.) அந்தப் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியவரும். கல்வி கற்றுத்தருவது தொடர்பான கருதுகோள்களும் நடைமுறைகளும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதை அறிக்கை உணர்த்துகிறது.
மாணவர்கள் எளிதில் மதிப்பெண்களைப் பெற வேண்டும், அதிக மாணவர்கள் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திலான பாடத்திட்டம்தான் மாணவர்களின் திறன் குறைவுக்கு முக்கியமான காரணம். பாடத்தைப் புரிந்துகொண்டு படிப்பது, கணிதத்தின் நான்கு முக்கிய அம்சங்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றை எளிதாகக் கற்றுக்கொள்வது ஆகிய வற்றைவிட, தேர்ச்சி விகிதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஐந்தாம் வகுப்பு மாணவரால் இரண்டாம் வகுப்பு மாணவரின் பாடங் களை எளிதாகப் படிக்க முடியவில்லை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் முக்கால்வாசிப் பேருக்குச் சாதாரண கழித்தல் கணக்கு தெரியவில்லை. இந்த மாணவர்கள் மேல் வகுப்புகளுக்குப் போன பிறகு இந்தத் திறன் அதிகரிப்பது ஓரளவுக்குத்தான் நடைமுறை சாத்தியமாக இருக்கிறது என்பது நமது கல்வி முறையின் தோல்வியைச் சுட்டிக்காட்டுகிறது.
577 மாவட்டங்களில் 5,70,000 மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றுASER அறிக்கை தயாரிக்கப்பட்டி ருக்கிறது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியரைப் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதில் 96% வளர்ச்சி ஏற்பட்டிருப்பது மட்டுமே இதில் ஆறுதலான விஷயம்.
மாணவர்களின் திறன் குறைவுக்குப் பாடத்திட்டங்களும் பயிற்று விப்பு முறைகளுமே முக்கியமான காரணங்கள். அன்றாட வாழ்வில் மக்களுக்குத் தேவைப்படும் கணிதம் என்பது எண்களைப் பற்றியதும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களும்தான். அது இப்போது 9, 10-வது வகுப்பு பாடங்களிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கப்போகும் மாணவர்களுக்காக இதர மாணவர் களுக்குக் கணிதப் பாடங்களைக் கடினமாக்குவதால் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்விச்சுமைதான் கூடும்.

திங்கள், 19 ஜனவரி, 2015

வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்

அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இதுதொடர்பாக, அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் கு. பாலசுப்பிரமணியன், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், தற்போது, அகவிலைப்படி மட்டும் 107 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. எனவே, அனைத்துத் துறை அரசு ஊழியர்களின் 50 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்கு பாதுகாப்பானது அல்ல. அந்தப் பணம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்படுகிறது.

அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 80 சதவிகிதம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார். பேட்டியின்போது, சங்க மாநிலத் தலைவர் கு. பால்பாண்டியன், தேசியக் குழு உறுப்பினர் ம. பரமசிவம், மாவட்டத் தலைவர் மு. கவியரசன் ஆகியோர் இருந்தனர்.

விளையாட்டு பாடவேளை அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில்!!

கோவை மாவட்டத்தில், தேர்வு சமயம் என்பதால், 95 சதவீத பள்ளிகளில் விளையாட்டு பாடவேளை அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் காணப்படுவதாக, உளவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரையாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், மாதிரி தேர்வுகளும், பயிற்சிகளும் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
தினமும் படிப்பு, படிப்பு என்றிருக்கும் மாணவர்களுக்கு, மன உளைச்சல், அதீத கோபம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, கவனச்சிதறல் ஏற்பட்டு தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்படலாம்.
பள்ளிகளில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் வீதம் உள்ள, விளையாட்டு பாடவேளையும் புறக்கணிக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. சில பள்ளிகளில் விளையாட்டு பாடவேளை, தற்போது மாதிரி தேர்வுகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
கோவையை சேர்ந்த உளவியல் நிபுணர் மகேஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு சமயங்களில், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை அதிகமாக, சந்திக்க நேரிடுகிறது. எவ்வித பொழுதுபோக்கும் இல்லாமல், படிக்க வற்புறுத்துவதால், மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பை உண்டாகி விடுகிறது. விளையாட்டு என்பது மாணவர்களுக்கு கவனத்தை அதிகரிக்க உதவும் ஆயுதமாகும். அதை பல ஆசிரியர்கள் உணர்வதில்லை. நன்றாக விளையாடிய பின், புத்துணர்ச்சியை மாணவர்கள் பெறுகின்றனர்.
இச்சமயங்களில், கடினமாக கருதும் பாடங்களையும் எளிதாக புரிந்து கொள்வர். பள்ளிகளில், விளையாட்டு பாடவேளையை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்ககூடாது. மாணவர்களின் மன உளைச்சலை விளையாட்டால், அகற்றிவிடலாம். தொடர்ந்து படிக்க கட்டாயப்படுத்தும்போது, சராசரி மாணவர்களும் கவனச்சிதைவால், பின்தங்கி விடுகின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும்

பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என, மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறைக்கு என தனியாக வடிவமைக்கப்பட்ட, மாநில கல்வி மேலாண் தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.,) என்ற வலைதளத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் விவரம் சேகரிக்கும் திட்டம், கடந்த 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது.
குறிப்பாக, 14 வயதுக்குட்பட்ட மாணவர் படிக்கும் பள்ளி பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டது. அதனால், மாணவரின் இடைநிற்றல், இடம் பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால், மாணவரின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க தொடர் கண்காணிப்பு செய்ய முடியும்.
இ.எம்.ஐ.எஸ்., பதிவில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவரின், பெயர், பெற்றோர் பெயர், வகுப்பு, முகவரி, ரத்த வகை, உடன் பிறந்தோர், அவர்களின் கல்வி விபரம், தொழில், பெற்றோர் மாத வருமானம், மொபைல் போன் எண், மாற்றுத்திறன் தகுதி, ஆதார் அடையாள எண் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
கடந்த 2013-14ம் கல்வியாண்டில், ஆன்லைன் மூலம் பதியப்பட்ட விவரங்களில், பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், பள்ளி செல்லா மாணவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், மீண்டும் இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின்படி, மாணவரின் எடை, உயரம் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை வெல்ல கோச்சிங் வகுப்புகள் அவசியமா?




ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வெல்ல, கோச்சிங் வகுப்பிற்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? அல்லது சுயமாகவே திட்டமிட்டுப் படித்து தேர்வை வென்றுவிட முடியுமா? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் உள்ளது.
2014ம் ஆண்டு புள்ளி விபரக் கணக்குகளை எடுத்துப் பார்க்கும்போது, ஆச்சர்யப்படும்படியான தகவல்கள் கிடைக்கின்றன. அந்தாண்டு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேறியவர்களில், கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றவர்களைவிட, தானாகவே திட்டமிட்டுப் படித்தவர்கள்தான் அதிகம் என்பதுவே அந்த தகவல்.
மும்பை, டில்லி, கான்பூர், குவகாத்தி, காரக்பூர், சென்னை மற்றும் ரூர்கி ஆகிய IIT மண்டலங்களின் வாரியாக புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது, சென்னை மண்டலத்தைத் தவிர, இதர அனைத்து மண்டலங்களிலும், கோச்சிங் சென்றவர்களைவிட, சுயமாக படித்தவர்களே அதிகம் வென்றிருக்கிறார்கள்.
Joint Implementation Committee 2014 என்ற அமைப்பு, ஐ.ஐ.டி.,களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விபரங்களை சேகரித்து வெளியிட்ட அறிக்கையின்படி, JEE Advanced 2014 தேறியோரில், 52% பேர் சுயமாக திட்டமிட்டுப் படித்தவர்களாகவும், 48% பேர் கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றவர்களாகவும் இருக்கிறார்கள்.
சுயமாக திட்டமிட்டு படித்து, தேர்ச்சி பெற்றவர்களை அதிகம் கொண்ட ஐ.ஐ.டி. மண்டலங்களாக, காரக்பூர்(60.14%) மற்றும் குவகாத்தி(63.08%) போன்றவை விளங்குகின்றன. இதர 4 மண்டலங்களிலும், சுயமாக திட்டமிட்டுப் படித்தவர்கள், 50%க்கும் மேலானவர்களாக உள்ளனர்.
மொத்தம் 7 மண்டலங்களுள், சென்னை மண்டலம் மட்டுமே விதிவிலக்காக உள்ளது. இங்கு மட்டுமே, சுயமாக திட்டமிட்டுப் படித்தவர்களைவிட, கோச்சிங் சென்றவர்கள் அதிகம்பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு பதிவு செய்தவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், அவர்களில் 63% பேர், சுயமாக திட்டமிட்டுப் படித்தக் குழுவை சேர்ந்தவர்கள். வெறும் 37% பேர் மட்டுமே கோச்சிங் வகுப்புகளை நாடியவர்கள்.
ஏறக்குறைய 14 லட்சம் மாணவர்கள் JEE Main 2014 தேர்வை எழுதியதில், வெறும் 27,152 மாணவர்கள் மட்டுமே Advanced தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 சுயமாக திட்டமிட்டுப் படித்தல் மற்றும் கோச்சிங் வகுப்புகளுக்கு செல்லுதல் ஆகிய இரண்டிலுமே, பல நன்மைகள் உள்ளன. ஒரு மாணவர், கோச்சிங் வகுப்புக்கு செல்வதும், செல்லத் தேவையில்லை என்று முடிவு செய்வதும் அவரின் உள்ளுணர்வு சார்ந்த விஷயம்.
பொதுவாக, கோச்சிங் வகுப்புகளை மாணவர்கள் நாடுவதற்கு காரணம், போட்டித் தேர்வு என்பது ஒரு ஒப்பீட்டுத் தேர்வாக இருப்பதால்தான். உங்களின் சக தோழர்களைவிட, நீங்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் வெற்றியடைவீர்கள் என்ற ஒப்பீடு அங்கே செய்யப்படுகிறது. கோச்சிங் நிறுவனங்கள், அகடமிக் மேலாளர்களாக செயல்பட்டு, போட்டித் தேர்வுகளுக்கேற்ப, மாணவர்களின் படித்தலை திட்டமிட்டு, அவர்களை தயார்படுத்துகின்றன.
சுயமாக படித்தல் மற்றும் கோச்சிங் மூலமாக படித்தல் ஆகிய இரண்டு முறைகளிலுமே, மாணவர்கள் தங்களை ரெகுலர் முறையில் சுயமதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர், JEE pattern -ல், சில மாதிரித் தேர்வுகளை கட்டாயம் எழுதிப் பார்க்க வேண்டும். இந்த மாதிரித் தேர்வுக்கான சூழல், நிஜத் தேர்வைப் போன்றே இருக்க வேண்டும்.
 கோச்சிங் வகுப்பு செல்வது தவறில்லை என்றும், அதேசமயம், அதுமட்டுமே வெற்றிக்கு காரணமாகி விடாது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் தேர்வில் வென்றவர்கள்.
தேர்வுக்கு தயாராகும் செயல்பாட்டை சரியான முறையில் பேலன்ஸ் செய்து தொடர்வதற்கு கோச்சிங் வகுப்புகள் துணைபுரிகின்றன. அதேசமயம், கோச்சிங் வகுப்புக்கு செல்லாமலேயே, ஒருவர் தனது கடின மற்றும் திட்டமிட்ட முயற்சியின் மூலமாக மட்டுமே கூட, தேர்வை வெல்ல முடியும். அர்ப்பணிப்பு மற்றும் அக்கறை இல்லாமல், தேர்வை நிச்சயம் வெல்ல முடியாது.
ஒருவர் கோச்சிங் வகுப்பிற்கு சென்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி, கடின உழைப்பை நம்ப வேண்டும். கோச்சிங் வகுப்பில் சேர்ந்துவிட்டால் மட்டுமே ஒருவரால் வென்றுவிட முடியாது. இது அனைத்து வகை போட்டித் தேர்வுகளுக்குமே பொருந்தும்.
கோச்சிங் வகுப்புகள் தேவையான ஆலோசனைகளையும், ஆதரவையும் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், கண்டிப்பாக கோச்சிங் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சுய தயாரிப்பு என்பது மிகவும் முக்கியமானதொரு அம்சம். ஒருவரின் கடின உழைப்பு, அவருக்கு இறுதியாக வெற்றியைத் தரும்.
சுயமாக படித்தல் என்பது, உங்களது தயாரிப்பு செயல்பாட்டை அளவிடவும், உங்களது கருத்தாக்கங்களை மறுப்பதிவு செய்துகொள்ளவும் உதவுகிறது. கோச்சிங் வகுப்புகள், ஒருவருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, சுயமாக படிக்கும்போது எழுகிற சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் உதவுகிறது.

அதிகாரிகள் சொத்துக்கணக்கு காட்டவேண்டுமா ?

 சகாயம் ஐ ஏ எஸ் அவர்களின் பேட்டி  click here

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக எச்.எஸ்.பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இப்போது அந்த பதவியிலிருக்கும் வி.எஸ்.சம்பத் நாளை ராஜினாமா செய்ய உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

64 வயதான பிரம்மா அஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு 65 வயதாக இன்னும் 3 மாதங்களே உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி இந்த பதவியில் அமர அதிகபட்சம் 65 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  1975-ம் ஆண்டு பேட்ச்சில் ஆந்திர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் பிரம்மா. மேலும், மத்திய அரசின் பவர் செக்ரட்டரியாகவும் இருந்திருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் பிரம்மா வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நியமிக்கப்படும் 2-வது தலைமை தேர்தல் ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திங்கள், 12 ஜனவரி, 2015

குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தை வளர்ப்பதில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது

குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தை வளர்ப்பதில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான் 1 மற்றும் 2 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தால் நடத்தப்படும் 38-ஆவது புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
விண்கலங்கள் இலக்கை சரியாக அடையவேண்டும் எனில் சரியான வேகம், திசை, நேரம் ஆகியவை திட்டமிட்டதாக இருக்கவேண்டும். ஆகவே மனிதர்களும் இலக்கை அடைய திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இதையே சுவாமி விவேகானந்தரும் குறிப்பிடுகிறார். அறிவியலும், ஆன்மிகமும் திட்டமிடலையே வலியுறுத்துகின்றன.
சந்திரனை நோக்கிச் செலுத்திய சந்திரயானும், செவ்வாயை நோக்கிச் செலுத்திய மங்கள்யானும் வெற்றி பெற பலர் தியாகங்களைச் செய்துள்ளோம். அடுத்து ஆதித்யா விண்கலத்தை செலுத்தவும் தயாராகி வருகிறோம்.
எனது தந்தை எனது படிப்பு ஆர்வத்தை வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்தார். சிறுவயதில் என்னை புத்தகம் படிக்க வைக்க, சிறுவர்களுக்கான புத்தகங்களை அவரும் படித்தார். படி,படி என எனது தந்தை என்னைத் தூண்டியதாலே நான் படிப்படியாக முன்னேற முடிந்தது.
கண்டதை படித்தால் பண்டிதனாவான் என்று பயனற்றவற்றைப் படிப்பது சரியல்ல. படிக்கவேண்டிய நூல்களையே படிக்கவேண்டும். உலகில் ஒவ்வொரு உயிரினமும் தோற்றத்திலிருந்து மாறாதிருóகக, மனிதன் மட்டுமே பல கட்டங்களாக மாறி பரிணாம வளர்ச்சியைப் பெற்றிருக்கிறான். அதற்குக் காரணம் அவனது படிப்பறிவேயாகும்.
நான் ஆய்வில் அங்கீகாரம் பெற்ற நிலையில், கடும் முயற்சியால் பேச்சு, எழுத்திலும் தற்போது முயன்று அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். படிப்பதால் மட்டுமே நாம் சமூகத்தில் சிறப்பிடம் பெறமுடியும்.
தமிழகத்தில் படைப்பாளர், பதிப்பாளர், வாசகர்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் நாம் முன்னேறலாம் என்றார்

புதன், 7 ஜனவரி, 2015

2014: கரை சேர்ந்ததா கல்வி? ‘எல்லோருக்கும் கல்வி’ என்ற குறிக்கோளை, உலகம் நிறைவேற்ற முடியாமல் முடங்கி கிடப்பதற்கு இந்தியாதான் முக்கிய காரணம் என்கிறது யுனெஸ்கோ

2014: கரை சேர்ந்ததா கல்வி?

இரண்டு, உயர் கல்வி வழங்குகிற நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. சமீபத்திய எர்னஸ்ட் - யங் அறிக்கையின்படி நம் நாட்டில் 44,668 கல்வி நிலையங்கள் உயர்கல்வி வழங்குகிறதாம். சீனாவில் 4192 என்றால் அமெரிக்காவிலேயே 6,500 தான் உள்ளதாம்.
சரி, இந்த முரண் நிஜங்களை விவாதிப்பதற்கு முன் இன்னொரு முக்கிய புள்ளிவிவரத்தையும் பார்த்துவிடலாமே!
கல்வி மற்றும் பயிற்சிக்கான முக்கியமானச் சந்தையாக இந்தியா இருக்கிறது என்கிறது இன்வெஸ்டர் ரிலேஷன் சொசைட்டி. தொடர்ந்து வருடா வருடம் வேலை வாய்ப்புகள் பெருகும் துறை கல்வித்துறையே என்கிறது இண்டியன் ஜாப் அவுட்லுக் சர்வே.
என் பார்வையில் 2014- ல் கல்வியின் முக்கிய போக்குகள் இவை தான்:
# ஆரம்பக் கல்வி சவலைப்பிள்ளையாய்தான் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இன்ன பிற அரசாங்க, தனியார் மற்றும் அயலார் முயற்சிகள் சில நகர்வுகளை ஏற்படுத்தினலும் வீச்சும் தரமும் இன்னமும் போதுமானதாக இல்லை. அரசாங்கத்திடம் அதிக ஆதாயம் பெறும் கார்ப்பரேட்டுகள் கருணை காண்பித்தால் சி.எஸ்.ஆர் புண்ணியத்திலும் சில மாறுதல்கள் கொண்டு வரலாம்.
# அதே போல ஆசிரியர் பயிற்சிக்கும், கல்வி முறை புதுப்பித்தலுக்கும் இன்னமும் நிறைய முதலீடுகள் தேவை. 2014 ஆம் ஆண்டில் இவை சொல்லிக்கொள்ளும் அளவு நடைபெறவில்லை.
# பள்ளிகளில் தாய்மொழி, கைத்தொழில், விளையாட்டு, கலை, நீதி போதனை போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கணிதமும் அறிவியலும் ஆங்கிலமும் முன்னிறுத்தப்படும் போக்கு வலுத்துள்ளது. நகரங்களை மிஞ்சும் வண்ணம் கிராமங்களிலும் இவை தீவிரமாக வளர்ந்து வருகின்றன.
தனியார் பள்ளி மோகமும் ஆங்கிலம் பற்றிய அச்சமும், பிற்கால வேலைக்கு இவை மட்டும்தான் பயன்படும் என்கிற நுகர்வோர் மன நிலையும் முக்கியமான காரணங்கள்.
# திறன் பற்றாக்குறைதான் இந்தியாவின் பேராபத்து. 130 கோடிகள் கொண்ட மக்கள் தொகையில் 80 கோடி மக்கள் வேலை பார்க்கக்கூடியவர்கள். திறனற்ற மாணவர்களை உருவாக்கியதால் உலகம் முழுக்க நம் நாட்டவர் சென்று பணியாற்றக் கூடிய அற்புத வாய்ப்பை தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.
பொறியியல் மாணவர்களில் வெறும் 17 சதவீதமும், நிர்வாக மாணவர்களில் வெறும் 10 சதவீதமும்தான் வேலைக்குத் தகுதியானவர்கள் என்ற அதிர்ச்சியான புள்ளிவிவரத்தை 2014- ல் சி.ஐ.ஐ நிறுவனம் ‘இண்டியா ஸ்கில் ரிப்போர்ட்’ டில் சுடச்சுட வெளியிட்டுள்ளது. கல்வித்துறையைச் சாராமல் திறன் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என அது சொல்வதைக் கவனிக்க வேண்டும். பள்ளிகளில் கைத்தொழில்கள் கற்றுத் தரும் காலம் தான் வருங்காலத்தைக் காப்பாற்றும்.
# கடந்த 20 வருடங்களாக பொறியியல் பட்டதாரிகள் தேவைக்கும் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் பொறியியல் பட்டதாரிகள் அந்த வேலை கிடைக்காமல் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் அதிகரிப்பது மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல, வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலும் இதுவே நிலை. ஒரு Default Degree அந்தஸ்தை பி.ஈ துறப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு. கலைக் கல்லூரிகளையும் மக்கள் சற்று ஏறெடுத்துப் பார்க்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன.
# இந்தியாவின் 10 சதவீத மக்களுக்குத்தான் உயர்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உயர்கல்விக்காக இங்கு ஒரு பெரிய சந்தை உருவாகியுள்ளது. பல வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் மெல்ல இங்கு கடை விரிக்கும் போக்கு பெருகியுள்ளது. “மேக் இன் இண்டியா” கல்வித்துறையில் பலமாக வெற்றிப் பெறும் எனத் தோன்றுகிறது. அது இந்தியர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதுதான் என் அவா.
# வெளி நாட்டுக் கல்வி வாங்க விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வெளி நாட்டு பல்கலைக் கழகங்களும் இங்கு தொடங்கப்படுவதால் அயல் நாட்டு கல்வி அனுபவங்கள் இங்கு கிடைப்பதன் பலன் கல்விக்காக வெளிநாடுகளுக்குப் போவதைத் தடுக்குமா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
# ஆன்லைன் கல்வி முறை பிரபலமாகி வருகிறது. 2014- ல் மட்டும் இந்தியாவின் பல பெரிய பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் உலகமெங்கும் மாணவர்களை சேர்க்க ஆரம்பித்துள்ளன. Coursera போன்ற பன்னாட்டு முயற்சிகள் உலகின் எந்த பல்கலைக்கழக படிப்பையும் உங்கள் மடிக்கணினியில் இலவசமாகத் தருவது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
எந்த அடிப்படையும் இல்லாமல் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம் எனும் வசதிதான் இதன் வெற்றிக்குக் காரணம். பாரம்பரியக் கல்வியின் குரல்வளையை ஆன்லைன் கல்வி நெரிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
#பெரியார் மிச்சம் வைத்த சீர்திருத்தத்தைத் தொழில்நுட்பம் செய்து முடிக்கும். சாதி, மத, வர்க்க பேதமின்றி அவர்கள் வசதிக்குக் கல்வி கற்கும் வசதி எல்லோருக்கும் வாய்க்கும் எனத் தோன்றுகிறது. கைப்பேசியில் மொபைல் கல்வி வலைதளங்கள் 2015-ல் பிரபலமாகலாம்.
# இன்றைய பள்ளி மாணவர்கூட “மாதா பிதா கூகுள் தெய்வம்” என்கிறார். பத்தாவது டியூஷன் போகும் மாணவர்கள் வலைதளங்கள் சென்று அதிலும் படிக்கிறார்கள். ஆசிரியரை மீறி கற்கும் வாய்ப்பும் விபரீதமும் உள்ளன.
# பழைய அதிகாரங்கள் இழந்த நிலையில் தன் பங்களிப்பையும் மதிப்பை யும் தக்க வைக்கும் முனைப்புகள்தான் தற்கால ஆசிரியர்களின் சவால்கள்.
# கடைசியாக, இந்தியா இந்த நிலையில் கல்வியை நிர்வகித்தால் 2060-ல்தான் 100 சதவீத எழுத்தறிவு சாத்தியப்படும் என்கிறது யுனெஸ்கோ. மக்கள் தொகை இருந்தும் கல்வி, திறன் வளர்ப்பு மற்றும் வேலைப்பயிற்சியில் நாம் தவறவிட்டால் அதன் அதிர்வுகள் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் தெறிக்கும்.

திங்கள், 5 ஜனவரி, 2015

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று

திங்கள்கிழமை (ஜன. 5) வெளியிடப்பட்டது.

வாக்காளர் அட்டை மூலம் உங்கள் பாகம் எண் 

வரிசை எண் அறிய கிளிக் செய்யவும் CLICK HERE

வியாழன், 25 டிசம்பர், 2014

குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன?T


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
இத்தேர்வில், எழுத்துத் தேர்வு முடிந்து அதில் தேர்வு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு என்பதால், அதிக ஆர்வம் இருக்கலாம். தவிரவும், ’அரைக்காசு என்றாலும் அரசு வேலை’ என்ற பழைய தமிழ் பழமொழி, எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் மனதில் நிலைத்து நிற்கிறது. இத்தேர்வு முடிவுகள் இன்னும் மூன்று மாத கால அவகாசத்தில் வெளியாகும். வழக்கப்படி உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் அடுத்த கட்டமாக அமையும். இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் உட்பட சில பதவிகள் கொண்ட இந்த குரூப் - 4 பணியாளர்களுக்கு, மாதச் சம்பளம் முதலில், 17 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பணியும் நிரந்தரமாகும். இத்தேர்வுக்கு, கல்வி அடிப்படை வரம்பு 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முன்னணி யில் இருக்கிறது. ஆகவே, பட்டதாரிகள், மற்ற தொழிற்கல்வி, கணினி கல்வி படித்த பட்டதாரி கள், அரசு வேலை என்பதால் ஆர்வமாக முயற்சித்திருக்கலாம். இத்தேர்வில், பெண்கள் ஆர்வமாக பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இனி, விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆயிரக்கணக்கானோர், கூடுதல் சதவீத மதிப்பெண் பெற்றோர் வரிசையில் இடம்பெற்று, கடைசி கட்ட பணியாளர் தேர்வு பரபரப்பாக அமையும். இன்று, அரசு நிர்வாக நடைமுறைகள் அதிகமாக மாறி, பணியாளர்கள் தங்களது பணியில் புதிய நடைமுறைகளை பின்பற்றியாக வேண்டிய நிலை உருவாகி வருகிறது. குறிப்பாக, உயர்மட்ட மேலதிகாரிகள் அதிக அளவில் பணி நேரத்தை செலவழித்து, கோப்பு களை முடிக்க வேண்டிய கட்டாயம் அமலாகிறது. அந்த பாதிப்பு, இவர்கள் மீது அதிகமாக இருக்கும். தமிழகத்தில் குரூப் - 4 பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் தேவை இருக்கிறது என்பதும், அதில் ஆர்வமாக பணியாற்ற, அதிக அளவு முதற்கட்ட தகுதியுள்ளவர்கள் உள்ளனர் என்பதையும் இத்தேர்வு காட்டுகிறது. இத்தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்கவில்லை. அவர்களில் பலருக்கு இப்பணியில் கிடைக்கும் மாத சம்பளத்தைவிட, தற்போது அதிகமாக இருக்கலாம் அல்லது அடுத்த பதவி உயர்வு மூலம் அதிக வேலைவாய்ப்பை பெறலாம் என்ற கண்ணோட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம். மேலும், வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு, முடிவின்றி பல ஆண்டுகள் காத்திருக்கும் நடைமுறை மாறி, எழுத்து தேர்வு, அதற்குப்பின் ஒளிவு மறைவற்ற நேரடித் தேர்வு, தகுதி அடிப்படையில் அரசு வேலை என்பது நல்ல அம்சமாகும். இத்தேர்வு முடிவுகளால், திறன்மிகுந்த பலர் அரசுப்பணியில் சேர்ந்தால், அரசு இயந்திரம் சற்று வேகமாக செயல்பட உதவிடும்.

ஜெயிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான். ஆனால், ஜெயிப்பதற்கு தேவையான முயற்சி எடுக்கிறோமா?

ஜெயிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான். ஆனால், ஜெயிப்பதற்கு தேவையான முயற்சி எடுக்கிறோமா?
‘முடிந்தவரை முயற்சிப்பது அல்ல முயற்சி‘ முடிக்கும்வரை முயற்சிப்பதே முயற்சி‘ உங்களிடமிருந்து வெளியே வாருங்கள்; நம்மில் பலர், நமக்குள்ளேயே வாழக் கற்றுள்ளோம். அதிலிருந்து வெளிவந்தால் வாழ்வில் சிறப்படையலாம், வெற்றி பெறலாம். முதலில் முயற்சி செய்யுங்கள். பிறகு, கடினமாக முயற்சி செய்யுங்கள். அதைவிட இன்னும் கடினமாக முயலுங்கள். அப்போது முயற்சியின் பயன் கூடும். கூடிக்கொண்டே போகும்... கூட்டு வட்டி எவ்வாறு அதிகமாக பெருகுகிறதோ, அதுபோல தொடர்ந்து செயல்படும் முயற்சியின் பயன்களும், அதிவிரைவில் அதிகரித்துக் கொண்டே போகும். முயலுதல் என்பது தொடர் பயணம். தொடர்ந்து பயணம் செய்தால், அதுதான் நமது வெற்றிப் பயணம். எது மகிழ்ச்சி? ‘ஒரு திறமை கூட இல்லாத மனிதன் யாரும் உண்டா?‘ இல்லை! ஒவ்வொரு மனிதனிடமும் விலைமதிக்க முடியாத வைரம் போன்ற சில திறமைகள் உள்ளன. நம் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்த வேண்டும். அதோடு நிற்காமல், அத்திறமைகளை சரியான நேரத்தில், சரியான இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். இன்றைய உலகம் ஒரே கிளர்ச்சிமயமாக இருக்கிறது. நாடுகளிடையே பிரச்சனைகள், மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள், இப்படி உலகம் முழுவதும் பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. பிரச்சனை இல்லாத உயிரினம் இருக்க முடியாது. பிரச்சனைகள்தான், நமது முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமைகிறது! பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்பதில்லை. கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதுதான் மகிழ்ச்சி. தீர்வு என்ன? எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. உங்களுக்குள் என்ன இருக்கிறது? ஆராய்ந்து பாருங்கள். கல்வி என்பது ஆராய்ந்து அறியும் திறனை உங்களுக்கு கொடுக்கும். எனவே, கல்வியில் உயருங்கள். கல்வி உங்களை உயர்த்தும். உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை உணர்வுகளை எடுத்து குப்பையில் போடுங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை ஆராய்ந்து பாருங்கள். அந்த ஆற்றலைப் பெரிதாக வளருங்கள். உங்களுக்குள், தன்னம்பிக்கையும், தனித்திறமையும் அடங்கி இருந்தால், நிச்சயம் நீங்கள் மேலும் மேலும் உயருவீர்கள்! நீங்கள் விரும்பாததைப் பற்றி சிந்தித்து, ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள். தொடர் தோல்வி வந்தாலும் களங்காதீர்கள். ‘மிகவும் இருண்டு விடுகின்றபோது, நட்சத்திரங்கள் வெளிவருகின்றன. காரியத்தை செய்யுங்கள், சக்தி தானாக வரும். வானத்தில், வல்லூறுகளுடன் வட்டமிட்டுப் பறக்க ஆசைப்பட்டால், வான்கோழிகளோடு ஒட்டிக்கொண்டு இருக்காதீர்கள். உயரமாக நில்லுங்கள்... 

புதன், 24 டிசம்பர், 2014

வாஜ்பாய், மாளவியாவிற்கு பாரத ரத்னா : மத்திய அரசு கவுரவம்

வாஜ்பாய், மாளவியாவிற்கு பாரத ரத்னா




முன்னாள் பிரதமர் அடல் பீகாரி வாஜ்பாய் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் இந்து சமாஜ் இயக்க தலைவருமான மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வாஜ்பாயின் 90வது பிறந்த நாள் நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு இந்த விருதினை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
வாஜ்பாய், இரண்டு முறை பிரதமராக இருந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக சிறந்த பார்லிமென்ட்டேரியனாக பரிமளித்தவர். அரசியல் துறையில் அவர் ஆற்றிய சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் பா.ஜ., தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத ரத்னா விருது பெறும் 42வது நபர் வாஜ்பாய். இவரது 90வது பிறந்த நாளை நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வாஜ்பாயை மேலும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு பாரத ரத்னா வழங்க, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டு வந்தது.
வாஜ்பாய்க்கு பாரதரத்னா வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாய் மற்றும் மாளவியாவிற்கு பாரதரத்னா வழங்க ஒப்புதல் தெரிவித்தார்.
மதன் மோகன் மாளவியா, சுதந்திர போராட்ட வீரர் மட்டுமின்றி, இந்து மகாசபாவை தோற்றுவித்தவரும் ஆவார். 'மகாமன்னா' என அனைவராலும் போற்றப்பட்ட புகழ்பெற்ற கல்வியாளரும் கூட. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் இருக்கும் பானாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவரும் மாளவியா தான். இதனால் ஆட்சி பொறுப்பேற்றதும் இவருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளிவித்திருந்தார். இதன்படி தற்போது மாளவியாவி்ற்குள் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் வரவேற்பு : வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாரபட்சமின்றி ஒருமித்த குரலாக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். தங்கள் குடும்பத்திற்கு கிடைத்துள்ள கவுரவம் என வாஜ்பாயின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.-பிரச்சனை பாடமொழியல்ல!


ஜி. ராமகிருஷ்ணன்
அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.மராட்டிய மாநிலத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலே, அதே மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க முன் னோடியான கோதாவரி பர்லேக்கர் ஆகியோர் எளிய குடும்பங்களின் குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நிறுவினார்கள்.மகாகவி ரவீந்திரநாத் தாகூர் துவக்கிய சாந்தி நிகேதன் கல்வி நிலையம் தற்போது இந்தியாலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.