GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் தொடங்க இந்திய பிரதர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் தொடங்க இந்திய பிரதர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவில் ரயில்வே தொடர்பான படிப்புகளின் மாதிரிகளை, இந்திய ரயில்வே பல்கலைக்கழகத்திற்கும் பின்பற்றலாம் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து ஏற்கெனவே தேசிய ரயில்வே நிர்வாகத்திடம் கலந்தாலோசிக்கப்பட்டது. ரயில் தொடர்பான பிரச்னைகளை ஆராய்தல், ரயில் அமைப்பின் சவல்களை எதிர்கொள்ளுதல் குறித்து ரயில்வே பல்கலைக்கழகத்தில் பாடமாக எடுக்கப்பட உள்ளது.
இளங்கலை பட்டப் படிப்பில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளாக பிரித்து பாடங்களை வழங்க உள்ளது. மேலும் ரயில்வே பற்றி திறன்களை மேம்படுத்துதலும் இப்படிப்பில் இடம்பெறும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா ரயில்வே பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.
ஐஐடி-கராக்பூர் மற்றும் ரயில்வே அமைச்சகம் இணைந்து ரயில்வே தொடர்பான பொறியியல் படிப்புகளை தொடங்க உள்ளது.