GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 12 ஏப்ரல், 2025

NMMS 2025RESULTS ANMOUNCED

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வுகள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது

சேலம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 29

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 72 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான கடைசி நாள் 29ஆம் தேதி எனவும்  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களில் எண்ணிக்கை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், சேலம் மாநகராட்சி, ஆத்தூர் மற்றும் எடப்பாடி நகராட்சி அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தகவல் தெரிந்து கொள்ளலாம்.

 மேலும் சேலம் மாவட்ட இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 இந்த பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பொது பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரும்,
 18 முதல் 40 வயது வரை உள்ள பழங்குடியினரும்,
 20 வயது முதல் 40 வயது வரை உள்ள விதவை கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
 குறைந்தபட்ச கல்வி தகுதி :
பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரர்களின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் 3 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும் .
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 45 மணி வரை மட்டும் ஆகும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

2025 முழு ஆண்டு தேர்வு விடுமுறை எந்தெந்த வகுப்புகளுக்கு எப்போது ?தாரமங்கலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் தகவல்

அனைவருக்கும் வணக்கம்  

ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு இன்றுடன் 11-04-2025 தேர்வு முடிவடைகிறது. நாளை 12-04-2025 முதல் 1முதல் 3 வகுப்புவரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி தேர்விற்கு மறுநாளில் இருந்து விடுமுறை என்பதை தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆசிரியர்கள் கடைசி பணி நாள் வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். 

 மாவட்ட கல்வி அலுவலர் 
(தொடக்க கல்வி)
 தாரமங்கலம்

2025 NMMS தேர்வு முடிவுகள் நாளை குறித்து அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற NMMS தேர்வு முடிவுகள் நாளை 12.04.2025 பிற்பகல் வெளியிடப்படும் 
 மேற்படி தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ தினம் உறுதிமொழி

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 சமத்துவ தினமாக அனுசரிக்க அரசு உத்தரவிட்ட உள்ளது.
 கீழ்கண்ட உறுதிமொழியை இன்று காலை 11 மணியளவில் அனைவரும் மேற்கொள்ளுமாறு அரசு கடித குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிமொழி கிளிக் செய்யவும் 
சமத்துவ நாள் உறுதிமொழி
சமத்துவ நாள் உறுதிமொழிடவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்,  குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.