GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 7 ஜனவரி, 2019

தமிழக அரசு அறிவித்துள்ள, பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய், இன்று(ஜன.,07) முதல், ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது.


அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், 1,000 ரூபாயும், பொங்கல் பரிசாக வழங்கப்படும் என, சட்டசபையில், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது.

பரிசுப்பொருள் வினியோகத்தை, முதல்வர், பழனிசாமி, சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும், 1,000 ரூபாய், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இன்று முதல் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கார்டுகள் கிடைக்காதோர் மற்றும் தவற விட்டோர், ஆதார் அட்டையை காட்டி பெற்றுக் கொள்ளலாம்.

சனி, 5 ஜனவரி, 2019

ஜன. 21ல் இறுதி வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல், வரும், 21ம் தேதி வெளியிடப்பட உள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 3 முதல், அக்., 31 வரை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்கள் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அவற்றை பரிசீலனை செய்து, இறுதி வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் புயல் பாதித்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அவகாசம் கேட்டதால் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.'திருவாரூர் சட்டசபை தொகுதி தவிர அனைத்து சட்டபை தொகுதிகளிலும் வரும், 21ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மேல்நிலை எச்.எம்., நிலைக்கு உயரும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம்


வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தொடக்கக் கல்வித்துறை முடிவுக்கு வருகிறது.

பள்ளி கல்வித்துறையில் 2017 மே மாதத்தில் இருந்து தொடர்ந்து பல சீர்த்திருத்தங்கள் நடந்து வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூடப்பட்டன. நர்சரி முதல் மேல்நிலைப் பள்ளி வரை கவனிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டன. இதற்காக கூடுதலாக மாவட்ட கல்வி அலுவலகங்கள் துவங்கப்பட்டன. தொடக்க கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டனர்.தற்போது தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் பணி நடக்கிறது. தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன. தற்போது தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும்  ஆசிரியர்களே வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் வட்டாரக் கல்வி அலுவலர்களாக மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதன்மூலம் அவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்ய முடியும். ஏற்கனவே வட்டாரக் கல்வி அலுவலர்களாக இருப்போர் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம் தொடக்கக் கல்வித்துறை முழுமையாக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும்

8ம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' : வரும் கல்வி ஆண்டில் ரத்து

எழுத படிக்க தெரியாதவர்களையும், எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டம், வரும் கல்வி ஆண்டில், ரத்து செய்யப்பட உள்ளது. இதற்கான சட்டப்பூர்வ ஆலோசனைகள் துவங்கியுள்ளன.மத்திய அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம், 2009ல், அமலுக்கு வந்தது. இதன்படி, அனைத்து மாணவர்களுக்கும், 14 வயது வரை, கட்டாயமாக இலவச கல்வி வழங்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நிபந்தனையை அடுத்து, அனைத்து மாநிலங்களும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களை இடைநிறுத்தம் இன்றி, 'ஆல் பாஸ்' செய்து வந்தன. இதனால், அனைத்து மாணவர்களும் படிக்காத நிலையிலும், அடுத்தடுத்த வகுப்புக்கு பாஸ் செய்யப்பட்டனர்.எழுத படிக்க தெரியாத மாணவர்களும், எட்டாம் வகுப்பை தாண்டி, ஒன்பதாம் வகுப்பு வரை முன்னேறினர். அதேநேரம், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில், தமிழிலோ அல்லது அவரவர் மாநில மொழிகளிலோ வாசிக்க தெரியாமல் திணறினர். இவர்களில் பலர், ஒன்பதாம் வகுப்புக்கு வந்த பின், பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முன், இடையில் கல்வியை நிறுத்தினர்.இதுகுறித்து, மத்திய அரசு கமிட்டி அமைத்து ஆய்வு செய்ததில், பெரும்பாலான பள்ளிகள் பாடமே நடத்தாமல், மாணவர்களுக்கு தேர்ச்சி மட்டும் அளித்தது தெரியவந்தது. எனவே, கல்வி தரத்தை பாழடிக்கும், ஆல் பாஸ் சட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு மசோதா உருவாக்கியது. அது, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், நேற்று முன்தினம் நிறைவேற்றியுள்ளது.எனவே, அனைத்து மாநிலங்களிலும், ஆல் பாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும். இதுகுறித்து, தமிழக பள்ளி கல்வி துறையும் ஆலோசனையை துவங்கியுள்ளது.இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய நடைமுறைப்படி, ஐந்து ஆண்டுகளில், பத்தாம் வகுப்புக்குள் இடைநிறுத்தம் செய்த மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, பட்டியல் எடுக்கப்படுகிறது. அதன்பின், இடைநிற்றலுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு, ஆல்பாஸ் வழங்குவதா அல்லது ஐந்தாம் வகுப்புடன் நிறுத்துவதா என, முடிவு எடுக்கப்படும். இந்த விஷயத்தில், மாநில அரசுகள் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெள்ளி, 4 ஜனவரி, 2019

8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’, 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.

இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உறுப்பினர்கள் கவலைப்படுவது சரியல்ல. போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்கல்விக்கு மாறிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல்

தொழிற்கல்விக்கு மாறிய மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல்

பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த 28 ஆயிரம் பேரில் பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,க்கு மாறியதால், அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தனித்தேர்வர்களை தவிர்த்து 8.47 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 7.74 லட்சம் பேர் தேர்ச்சி, 73 ஆயிரத்து 800 பேர் தோல்வி அடைந்தனர். தோல்வி அடைந்தவர்களும் தொடர்ந்து பிளஸ் 2 படிக்க கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் பல பள்ளிகள் பின்பற்றவில்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் 28 ஆயிரத்து 167 பேர் விடுபட்டனர். அவர்களை பள்ளிகளில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றியது தெரிந்தது.

இதையடுத்து, 'அனைவரையும் பள்ளி மாணவர்களாகவே பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எழுத வைக்க வேண்டும்' என தேர்வுத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் வெளியேறிய மாணவர்களில் சிலர் தனித்தேர்வர்களாகவும் மாறிவிட்டனர். பலர் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.,யில் சேர்ந்துள்ளனர். சிலர் வேலை செய்கின்றனர்.

இதில் தனித்தேர்வர்களையும், வேலைக்கு சென்றோரையும் அழைத்து பள்ளிகள் மூலம் தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., யில் படிப்போரை தேர்வு எழுது வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவர்களை பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுத வைப்பது குறித்து தேர்வுத்துறைதான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.

புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.

உயர் கல்வியின் தரம் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளின் நிலை குறித்து ஆராய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐதராபாத் ஐ.ஐ.டி.,யின் தலைவர், மோகன் ரெட்டி தலைமையிலான இந்தக் குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: பெரும்பாலான இன்ஜி., கல்லுாரிகளில், இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக கல்லுாரிகள் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு முதல், புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

வழக்கமான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற பாடங்களுக்கு, மாணவர் இடங்களை அதிகரிக்க வேண்டாம். மாறாக நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, முப்பரிமாண தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றுக்கு, புதிய பாடங்களை அனுமதிக்கலாம் என்றும், குழு பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனி தேர்வர்கள், வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனி தேர்வர்கள், வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளிகள் வழியாக அல்லாமல், தனி தேர்வராக எழுத விரும்புவோர், ஜன., 7 முதல், 14 வரை, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு தேர்வுத்துறையின், சேவை மையங்கள் வழியாக மட்டுமே, ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி, நிபந்தனை, தேவைப்படும் சான்றிதழ் மற்றும் சேவை மையங்களின் விபரங்களை,www.dge.tn.gov.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும், தேர்வு குறித்த விபரங்களை அறியலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்'

  இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. அதில், ஒரு வாரத்தில், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கான, பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்தும் கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும். மேலும், அந்தந்த மாநில பல்கலைகளில், பாடத் திட்ட இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்.தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில், 733 கல்லுாரிகள் செயல்படுகின்றன. 

இந்த கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது, சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு கல்லுாரியும், நிர்வாகம் சார்ந்த, 11 அம்சங்களை கல்லுாரி இணையதளத்தில் கட்டாயம் பதிய வேண்டும். அவற்றை உரிய நேரத்தில், புதுப்பிக்க வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, பெரும்பாலான கல்லுாரிகள் பின்பற்றாமல், அலட்சியமாக செயல்பட்டன. 

இது குறித்து, தேசிய கல்வியியல் கவுன்சிலுக்கு புகார்கள் வந்தன.அதனால், இணையதளத்தை பராமரிக்காத, 558 கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 'பல முறை அறிவுறுத்தியும், இணையதளத்தை பராமரிக்காதது ஏன் என்ற விளக்கத்தை, வரும், 11ம் தேதிக்குள், பல்கலைக்கு அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.

எந்தெந்த கல்லுாரிகள்?




*சென்னையில், லயோலா, மியாசி, முத்துக்குமரன், ராஜலட்சுமி, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின், 'நிப்மெட்' கல்லுாரிகள்; கோவையில், பிஷப் அப்பாசாமி, சி.எம்.எஸ்., ஹிந்துஸ்தான், கலைவாணி, கஸ்துாரி, பி.பி.ஜி., செயின்ட் மார்க் கல்லுாரிகள் இடம் பெற்றுள்ளன 

* கடலுார், மாதா, பிளஸ்ஸி, விருதாம்பிகை, பவானி, ஆற்காட் லுத்ரன் கல்லுாரிகள்; காஞ்சிபுரம், கிறிஸ்ட், முகமது சதக், காஞ்சி, ராஜலட்சுமி, லட்சுமி அம்மாள் கல்லுாரிகள்; மதுரை சி.எஸ்.ஐ., - கே.எஸ்.எம்., - ராயல் கல்லுாரி, அரோபிந்தோ மீரா, ஸ்டீபன், யாதவா, ஆசிபா கல்லுாரிகள்

* திருநெல்வேலி, ஸ்ரீராம் நல்லமணி யாதவ், யு.எஸ்.பி., செயின்ட் ஜான்ஸ், மகாத்மா காந்தி உட்பட, தமிழகம் முழுவதும், 558 கல்லுாரிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

வியாழன், 3 ஜனவரி, 2019

ஆதார் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.மொபைல் போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன், ஆதார் எண் இணைப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு

ஆதார் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.மொபைல் போன் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுடன், ஆதார் எண் இணைப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கு சட்ட ரீதியில் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், ஆதார் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், இந்த மசோதா உள்ளதாக, காங்., - எம்.பி., சசி தரூர், திரிணமுல், காங்., - எம்.பி., சவுகதா ராய் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நடவடிக்கைசசி தரூர் கூறுகையில், ''ஆதார் சட்ட திருத்த மசோதா, எல்லா பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்படாமல் உள்ளது. தகவல் பாதுகாப்புக்கென, சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை,'' என்றார்.இதற்கு பதில் அளித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், இந்த சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்படவில்லை. வங்கி கணக்கு, மொபைல் போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது, கட்டாயம் ஆக்கப்படவில்லை.ஆதார் மசோதா, தனிநபர் ரகசிய உரிமையை மீறும் வகையில் இல்லை. தனிநபர் ரகசியம் பாதுகாக்கும் அம்சங்கள், சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.தகவல் பாதுகாப்புக்கென, தனி சட்டத்தை அரசு தயாரித்துள்ளது. அதற்கான மசோதா, விரைவில் பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்படும்.ஆதார் திட்டத்தால், பயனாளர்களின் வங்கி கணக்குகளில், நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளதை மறக்கக் கூடாது. இந்த திட்டத்தை, உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட உலக அமைப்பு கள் பாராட்டி உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்

பொங்கல் திருநாளை, அனைவரும் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய், அரசால் வழங்கப்படும்

பொங்கல் திருநாளை, அனைவரும் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, சிறப்பு தொகுப்பை அரசு வழங்க உள்ளது. இது தவிர, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், திருவாரூர் மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய், அரசால் வழங்கப்படும்

தமிழக சட்டசபை கூட்டம், 8ம் தேதி வரை நடக்க உள்ளது

தமிழக சட்டசபை கூட்டம், 8ம் தேதி வரை நடக்க உள்ளது.தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன், நேற்று துவங்கியது. உரை முடிந்த பின், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது; 8ம் தேதி வரை, சட்டசபை கூட்டத் தொடரை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபை துவங்கியதும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன், சென்னையைச் சேர்ந்த, 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரன், 'கஜா' புயலில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ், முன்னாள் முதல்வரும், திருவாரூர், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிவார். அந்த தீர்மானத்தின் மீது, தலைவர்கள் பேசுவர். அத்துடன், இன்றைய சபை நிகழ்வு முடிவுறும்.நாளை மற்றும் நாளை மறுதினம், கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விவாதம் நடக்கும்; 6ம் தேதி அரசு விடுமுறை. மீண்டும், 7ம் தேதி, விவாதம் நடக்கும். 8ம் தேதி, கவர்னர் உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதல்வர் பதிலுரை வழங்குவார்.அன்று, 2018 - 19ம் ஆண்டிற்கான, முதல் துணை நிதிநிலை அறிக்கை, சபைக்கு அளிக்கப்படும். சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தல், நிறைவேற்றுதல் போன்ற நிகழ்வுகளும் நடக்கும். தினமும் காலை, கேள்வி நேரம் உண்டு.இத்தகவல்களை, சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடங்கள் துவங்கியுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தவும், கட்டணம் நிர்ணயிக்கவும், பல பள்ளிகள் முடிவு செய்துள்ளன.எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற, மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதேநேரம், அரையாண்டு தேர்வில், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, டி.சி., கொடுத்து வெளியேற்ற, சில பள்ளிகள் முயல்வதாக, புகார்கள் எழுந்துள்ளன. அவர்களை, பொதுத் தேர்வு எழுத விடாமல் முடக்கவும், சில பள்ளிகள் முயற்சிக்கின்றன.கடந்த ஆண்டுகளில், பல பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்கப்படாமல் பிரச்னை ஏற்பட்டது. இந்த ஆண்டு, அது போல பிரச்னை ஏற்படாமல், தனியார் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மாணவருக்கும், டி.சி., கொடுத்து, கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான, ஆன்லைன் அடிப்படை பதிவுக்கான நாள், இன்றே கடைசி. கால அவகாசம் நீட்டிக்கப்படாது'

எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான, ஆன்லைன் அடிப்படை பதிவுக்கான நாள், இன்றே கடைசி. கால அவகாசம் நீட்டிக்கப்படாது' என, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துஉள்ளது.புதுடில்லி, ஜோத்பூர், பாட்னா, நாக்பூர் உட்பட, நாடு முழுவதும் உள்ள, 15 எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு, மே, 25, 26ல் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே பிளஸ் 2 முடித்த மற்றும் தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.தேர்வு எழுதும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும், தலா, 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவது கட்டாயம். குறைந்தபட்ச மதிப்பெண்ணை பெறாவிட்டால், அவர்கள், நுழைவுத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்றாலும், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.இந்தாண்டு, நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோருக்கு, நவ., 30ல் ஆன்லைனில் அடிப்படை தகவல் பதிவு துவங்கியது. இன்று மாலை, 5:00 மணிக்குள் பதிவுகளை முடிக்க வேண்டும். பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்ற விபரம், வரும், 7ம் தேதி தெரிய வரும்.அடிப்படை பதிவுக்கு, கூடுதலாக தேவைப்படும் விபரங்களை பதிவு செய்ய, வரும், 8ம் தேதி முதல், 18ம் தேதி வரை அவகாசம் தரப்படும். இறுதி செய்யப்பட்ட மாணவர்களின் விபரம், வரும், 22ல் வெளியாகும். நுழைவுத் தேர்வுக்கான தகவல் கையேடு, வரும், 29ம் தேதி வெளியிடப்படும்.தேர்வுக்கான கட்டணம் செலுத்துவது; தேர்வு மையங்களுக்கான விருப்பம் தெரிவிக்கும் பதிவு, வரும், 29ம் தேதி முதல், பிப்., 17 மாலை, 5:00 மணி வரை நடக்கும். தேர்வுக்கான ஹால் டிக்கெட், மே, 15ல் வெளியிடப்படும் என, எய்ம்ஸ் நுழைவு தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது.