*கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.*
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் *ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன.* கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதேவேளையில் பள்ளிகள் *வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.*
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- CARREER GUIDANCE
- ECO CLUB PUMS DEVANNAGOUNDANUR
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- TET
- THIRUKKURAL
- TIPS
GSK FLASH NEWS
வியாழன், 31 மே, 2018
கோடை விடுமுறைக்குப்பின் நாளை பள்ளிகள் திறப்பு
திங்கள், 15 ஜனவரி, 2018
மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள்
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில், அறிவிப்புகள் இருக்கும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வருமான வரி சட்டம், 1961, பிரிவு 80சி,யின் கீழ், தற்போது வழங்கப்படும் வரி சலுகையை, 1.5 லட்சம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சமாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெள்ளி, 3 நவம்பர், 2017
Nmms exam
NMMS 2017 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை Online ல் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
NMMS ONLINE REGISTRATION STARTS FROM 02/11/2017 முதல்
08/11/2017 வரை.
தேதி நீட்டிக்கப்படமாட்டாது.
தற்போதே துவங்கலாம்
NMMS 2017 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை Online ல் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் Online Entry Page link
🌟 *HMs & TEACHERS,*
🌟தற்போது NMMS APPLICATION பதிவேற்றம்செய்ய PORTAL OPEN ஆகிஉள்ளது.
மாணவர்களின்சரியான விவரங்களோடுபதிவேற்றம் செய்யலாம்.
🌟 ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே Username password. கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சிரமமின்றி பதிவேற்றம் செய்யலாம்.
✍ dge.tn.gov.in வெப்சைட்சென்று
🌟 ONLINE PORTAL கிளிக்செய்யவும்.
🌟NMMS-2017- APPLICATION REGISTRATION UPTO 9/11/2017
என வரும், அதனை கிளிக்செய்தால்
🌟 USERNAME AND PASSWORD. கேட்கும்.
*USERNAME DE_ _ _ _ எனவும்*
*PASSWORD 58_ _ _ _ எனவும்துவங்கும்.*
🌟 *அதனை கொடுத்துLOGIN செய்யவும்.*
🌟 *மீண்டும் ஒருமுறை* *CAPTACHA வுடன்*
*USERNAME* *PASSWORD*கொடுத்தால் உங்கள்பள்ளியின் பெயரோடு
*APPLICATION SHEET OPEN ஆகும்.*
🌟 *அதில் விவரங்களை கொடுத்து SUBMIT கொடுக்கவும்.*
*NMMS Online link*
CLICK HERE-TO NMMS ONLINE ENTRY
மேற்குறிப்பிட்டுள்ளலிங்கை Google ல் copyசெய்து Enter கொடுத்தால்நேரடியாக NMMS Online entry page க்கு செல்லும் அங்கு Username , password enter செய்து உள்நுழையலாம்
📙📙📙📙📙📙📙📙📙📙
சனி, 7 அக்டோபர், 2017
08.10.2017 அன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
08.10.2017 அன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் (special camp) அந்த அந்த வாக்குச் சாவடி மையங்களில் காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 நடைபெறஉள்ளது. 18 வயது முடிந்தவர்கள் வாக்காளராக சேர தகுதியுடையவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்க FORM - 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க FORM - 7, வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம் மற்றும் புகைபடம் மாற்றம் போன்ற திருத்தங்கள் செய்ய FORM - 8. ஓரே தொகுதியில் பாகம் மாற்ற FORM - 8A, கொடுத்து மாற்றம் செய்து கொள்ளலாம், R. முருகன் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பாகம்-51 தேவண்ணகவுண்டனூர்.
சங்ககிரி
இணைக்க பட வேண்டிய ஆவணங்கள்,
FORM - 6 1. குடும்ப அட்டை நகல், 2. ஆதார் அட்டை நகல், 3. மாற்று சான்றிதழ் (TC) நகல் வயதிற்கு. மாற்றுச் சான்று இல்லாதவர்கள் மருத்துவர் சான்று நகல் 4. கடவு சீட்டு (Pass port)நகல்,
FORM - 8, 1. பெயர் திருத்தம் எனில் - மாற்று சான்று நகல், ஆதார் அடையாள அட்டை நகல், 2. பெயர் மாற்றம் எனில் அரசு இதழின் நகல், 3. முகவரி திருத்தம் மற்றும் மாற்றம் - அ) வீட்டு வரி ரசீது நகல் ஆ) கடவு சீட்டு நகல் இ) கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு அசல் சான்று புகைபடத்துடன், ஈ) அஞ்சலக அலுவலகத்தில் விலாச அட்டை. (Post Office Address Card). இவற்றில் ஏதோ ஒன்று, 4. பிறந்த தேதி திருத்தம் எனில் - அ) மாற்று சான்று (TC) நகல், மாற்று சான்று இல்லாதவர்கள் மருத்துவர் சான்று ஆ) கடவு சீட்டு (Pass port) நகல். இவைகளில் ஏதோஒன்று, 4) பாலினம் மாற்றம் - அடையாள அட்டை நகல் 5. புகைப்படம் மாற்றம் - சமீபத்தில் எடுத்த புகைப்படம் கொடுத்து திருத்தம் செய்து கொள்ளலாம்
FORM - 7. 1. இறந்தவரை நீக்க வேண்டும் எனில் இறப்பு சான்று நகல் மற்றும் குடும்ப உறுப்பினரின் விண்ணப்பம், 2. இரட்டை பதிவு இருப்பின் நீக்க வேண்டிய வாக்காளர் அட்டை அசல்
FORM - 8A பாகம் மாற்றம் இருப்பின் - அ) தற்பொழுது குடியிருக்கும் வீட்டு வரி ரசீது (அ) கிராமநிர்வாக அலுவலர் குடியிருப்பு சான்று அசல் புகைப்படத்துடன் ஆ) மாற்றம் செய்ய வேண்டிய பாகத்தை (part no) சரியாக குறுப்பிட வேண்டும். கொடுத்து பாகம் மாற்றிக் கொள்ளலாம்
மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
*மத்திய அரசின், 'துாய்மை பள்ளி' திட்டத்துக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.* இத்திட்டத்தில், துாய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், துாய்மை பள்ளி விருது பெற, செப்., 1ல், 'ஆன் - லைன்' பதிவு துவங்கியது. அக்., 31 வரை, பதிவு செய்யலாம் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, 'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், துாய்மை பள்ளி விருதுக்கு, புகைப்பட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்ட இயக்குனர், நந்தகுமார் அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 13 கட்டளைகளை, பொதுப்பணித்துறை பிறப்பித்து உள்ளது
வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 13 கட்டளைகளை, பொதுப்பணித்துறை பிறப்பித்து உள்ளது.இது தொடர்பாக, முதன்மை பொறியாளர், மண்டல தலைமை பொறியாளர் அலுவலங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கட்டடங்களை, உதவி பொறியாளர்கள் உடன் சென்று, உதவி செயற்பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும்
அரசு கட்டடங்களில், தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அங்கு, மழைநீர் தேங்காத அளவில் பணிகளை செய்ய வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும். தண்ணீர் வழியாக நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டும்
கட்டடங்களின் மேற்கூரைகளிலும், டைல்ஸ் மீதும் மழைநீர் தேங்குவதை தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
பருவ மழைக்காலம் முடியும் வரை, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இருக்க வேண்டும்
கடற்கரை பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். இது போன்று, 13 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
புதன், 15 மார்ச், 2017
தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல்
தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி முகாம் இன்று முடிகிறது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஐந்து மாதங்களாக, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்
வெள்ளி, 10 மார்ச், 2017
கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலிப் பணியிடங்களுக்கு தேர்வர்களை தேர்வு செய்வதற்கான இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்குகிறது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விஏஓ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியானது.
இந்த நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 147
’டெட்’ தேர்வுக்கு, ’தாட்கோ’ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது
தமிழகத்தில் புதிய ஓய்திய திட்டத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் காலம், பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தலைவர் யார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் செயல்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 4.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்துள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா, அரசு பங்கு தொகை என, ஒன்பதாயிரம் கோடி ரூபாயை, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம், அரசு செலுத்தவில்லை. இதனால், ஓய்வூதிய பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை, எஸ்.பி.ஐ., 2012ல் ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை, ஏப்., 1 முதல் அமல்படுத்த உள்ளதாக, எஸ்.பி.ஐ., கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி, பெருநகரங்கள், நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக, முறையே, 5,000, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் இருப்பை, தங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டும்
