கடந்த 2009ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பல்வேறு சலுகைகளை அறிவித்து அரசு உத்தரவிட்டது.
Website for Enhancing Educational,Social and cultural development
லேபிள்கள்
- 8 th social science Q And A
- 8 th social science worksheet
- 8TH ENGLISH MIND MAP AND CONSOLIDATIONS
- 8th english term-3
- இனிய நாள்
- CARREER GUIDANCE
- ECO CLUB PUMS DEVANNAGOUNDANUR
- EDU NEWS
- Education
- ESSAYS
- EXAM NEWS
- EXAMS
- GSK VIDEOS
- HAVE A NICE DAY
- illam thedi kalvi
- JOB OFFERS
- Kalvi tv
- Kalvi tv 8th english
- NAS
- NEWS
- NMMS
- Quizizz-6th-maths
- SCERT MATHS QUIZ
- TET
- THIRUKKURAL
- TIPS
GSK FLASH NEWS
புதன், 13 ஆகஸ்ட், 2014
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பது மற்றும், பத்தாம் வகுப்பு கணிதப்பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கான, மூன்று நாள் பயிற்சி நேற்று துவங்கியது.
சேலம்: தமிழகத்தில், ஒவ்பது மற்றும், பத்தாம் வகுப்பு இடைநிலைக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வித்திறனை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
திங்கள், 11 ஆகஸ்ட், 2014
அரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அரசு கேபிள் டிவி மூலம் இன்டர்நெட் சேவை
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிகக் குறைந்த மாத சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.
ஒன்றாம் வகுப்பில் தமிழ் எழுத்துக்களை வாசிக்க வைத்துவிட்டால், இடைநிற்றலை தவிர்க்கலாம்
ஒவ்வொரு ஆண்டும் கோடையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் கணக்கெடுப்பு நடத்துகிறது. இதில், மாவட்டத்திற்கு, 1,000க்கும் குறையாமல் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் இடம் பெயர்வு என, இந்த எண்ணிக்கைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குடிசை பகுதி குழந்தைகளுக்கு கற்றல் ஆர்வம் இல்லாதது முக்கிய காரணம் என்கிறார், தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர் ஆசிரியை கனகலட்சுமி.
ராமநாதபுரத்தை சேர்ந்த இவர், சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். ஒன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனை தமிழ் எழுத்துகளை வாசிக்க வைத்துவிட்டால், பள்ளி இடைநிற்றலை தவிர்க்க முடியும் என்றும், கனகலட்சுமி உறுதிபட கூறுகிறார்.
அவரிடம் உரையாடியதில் இருந்து... : உங்கள் தமிழ் கற்பித்தல் ஆராய்ச்சி குறித்து...
ஒரு குழந்தைக்கு ஆறு வயதில் தான், மூளை முழுமை பெறுகிறது. துவக்க பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், இந்த வயது கொண்டவர்கள். இதனால், ஒன்றாம் வகுப்பில் ஒரு குழந்தைக்கு, 45 நாட்களில் தமிழை கற்றுக் கொள்ளும் வகையில் ஆய்வு செய்து, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் முறையை விளக்கி, ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளேன்.
ஒரு குழந்தைக்கு ஆறு வயதில் தான், மூளை முழுமை பெறுகிறது. துவக்க பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், இந்த வயது கொண்டவர்கள். இதனால், ஒன்றாம் வகுப்பில் ஒரு குழந்தைக்கு, 45 நாட்களில் தமிழை கற்றுக் கொள்ளும் வகையில் ஆய்வு செய்து, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் முறையை விளக்கி, ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளேன்.
தமிழ் கற்பித்தல் ஆராய்ச்சியை தவிர, துவக்க பள்ளி மாணவர்களுக்காக வேறு ஏதேனும் ஆய்வு செய்திருக்கிறீர்களா?
எப்படி, 45 நாட்களில் ஒரு மாணவன் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமோ, அதேபோல, 38 நாட்களில் பூஜ்யம் முதல் 100 வரை, எண்களை கற்றுக் கொள்ள முடியும் என்று நிரூபிக்கும் வகையில், கணக்கு கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளேன். வாய்ப்பாடு தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே, ஒரு மாணவன் தேர்வில் கணக்குகளை போடாமல் வந்துவிடக்கூடாது. இதற்காக எளிய முறையில் வாய்ப்பாடு கற்பிக்கும் முறை அந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014
தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
பள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2014ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குனரின் அறிவுரைகள்
வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014
சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பிடிவாதமாக இருக்கின்றனர்-பி.எட்., வகுப்பறை பயிற்சியில் சிக்கல் இடைநிலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
பி.எட்., வகுப்பறை பயிற்சியில் சிக்கல் இடைநிலை ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு, பி.எட்., முடிப்பது அவசியம். பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு, தபால் வழியில் பி.எட்., படிப்பு, அண்ணாமலை பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உள்ளிட்ட பல பல்கலையில் வழங்கப்படுகிறது.
வியாழன், 7 ஆகஸ்ட், 2014
வாழ்க்கை எப்போதும் ஒரே பாதையில், ஒரே மாதிரியாக செல்வதில்லை-முடிவெடுக்கக் கற்றுக்கொள்வோம்
வாழ்க்கை எப்போதும் ஒரே பாதையில், ஒரே மாதிரியாக செல்வதில்லை. புதிய புதிய நிகழ்வுகளும், தொடர்புகளும், இன்பமும், துன்பமும், குழப்பமும், மகிழ்ச்சியும் மாறி மாறி பின் தொடரும் நிலையில் தான் உள்ளது. புதிய இடங்கள், கடந்த கால நினைவுகள், நட்புகள் என வாழ்க்கை எதோ ஒன்றை எப்போதும் கற்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014
TRB கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் விபரம்
TRB கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் விபரம் அறிய கிளிக் செய்யவும் trb.B.T 2014AddendumNotification
திங்கள், 4 ஆகஸ்ட், 2014
பழமையைத் துளி கூட விரும்பாத ஆசிரியர் தேர்வு வாரியம்,
கடந்த
சில ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத் திறனோடு மிகவும் புரட்சிகரமான நிகழ்வுகளை
நிகழ்த்திக் காட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம். அத்தகைய புரட்சிகரமான மாற்றங்களை
போற்றிப் புகழ வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பயன் அடைந்தவர்களின் கடைமை,
அதைப் பொதுமக்களும் தெரிந்துப் போற்றிப் புகழ்ந்திடவே இக்கட்டுரை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
