GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 7 ஜூன், 2025

ஐரோப்பியர்களின் வருகை -காலக்கோடு-time line

ஐரோப்பியர்களின் வருகை -காலக்கோடு-time line

போர்ச்சுக்கீசியர்கள்:

கி.பி. 1498 - வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
கி.பி. 1505-பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசியப் பகுதிகளுக்கு முதல் கவர்னரானார்.
கி.பி. 1510 -அல்புகர்க் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார்.
கி.பி. 1530-நினோ-டி-குன்கா தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
கி.பி. 1563-கோவாவில் 'இந்திய மருத்துவ தாவரங்கள்' என்ற நூல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

டச்சுக்காரர்கள்:

கி.பி. 1602-நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது.
கி.பி. 1605-போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவைக் கைப்பற்றினர்.
கி.பி. 1623-அம்பாய்னா படுகொலை
கி.பி. 1690-தலைநகரை பழவேற்காட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றினர்.
கி.பி. 1795-டச்சு தனது குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தது.

ஆங்கிலேயர்கள்:

கி.பி. 1600-ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் தோற்றம்.
கி.பி. 1611-ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் மசூலிப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.
கி.பி. 1615-ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவின் வருகை.
கி.பி. 1639-பிரான்சிஸ் டே என்பவர் மெட்ராசை (சென்னை) சென்னப்ப நாயக்கரிடமிருந்து
குத்தகைக்குப் பெற்றார்.
கி.பி. 1668-பம்பாய் தீவு (மும்பை) ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து இரண்டாம்
சார்லஸ் மன்னனிடமிருந்து பெறப்பட்டது.
கி.பி. 1757-பிளாசிப்போர்.
கி.பி. 1764-பக்சார் போர்.
கி.பி. 1858-இந்தியா ஆங்கில அரசின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.

டேனியர்கள்:

கி.பி. 1616-டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினர்.
கி.பி. 1620-தரங்கம்பாடியில் (தமிழ்நாடு) குடியேற்றம் அமைத்தல்.
கி.பி. 1676-செராம்பூர் (வங்காளம்) குடியேற்றம் அமைத்தல்.
கி.பி. 1845-இந்திய டேனிய குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கிலேய அரசுக்கு விற்றனர்.


8th social science lesson 1 ஐரோப்பியர்களின் வருகை


1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
அ) வாஸ்கோடகாமா            
ஆ) பார்த்தலோமியோ டயஸ்
இ) அல்போன்சோ-டி-அல்புகர்க்
ஈ) அல்மெய்டா
விடை: இ) அல்போன்சோ-டி-அல்புகர்

2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
அ) நெதர்லாந்து (டச்சு) 
ஆ ) போர்ச்சுகல் 
இ) பிரான்ஸ்
ஈ ) பிரிட்டன் 
விடை: ஆ ) போர்ச்சுகல் 

3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
அ) பிரான்ஸ் ஆ) துருக்கி
இ)  நெதர்லாந்து (டச்சு) 
ஈ) பிரிட்டன்
விடை: ஆ) துருக்கி

4. சர்வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டை சேர்ந்தவர் 
அ) போர்ச்சுக்கல்  
ஆ) ஸ்பெயின் 
இ) இங்கிலாந்து
ஈ) பிரான்ஸ்
விடை: இ) இங்கிலாந்து

5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
அ) வில்லியம் கோட்டை
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இ) ஆக்ரா கோட்டை
ஈ) டேவிட் கோட்டை
விடை: ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
அ) ஆங்கிலேயர்கள்
இ) டேனியர்கள்
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) போர்ச்சுக்கீசியர்கள்
விடை: ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி._______வர்த்தக மையமாக இருந்தது.
அ) போர்ச்சுக்கீசியர்கள் 
ஆ) ஆங்கிலேயர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) டேனியர்கள்
விடை: ஈ) டேனியர்கள்

11. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI)_________ ல் அமைந்துள்ளது.
புது டில்லி 
2.போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோடயஸ்   _________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.
இரண்டாம் ஜான் 
3. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல்_________அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.
போர்ச்சுகீசியர் 
4. முகலாயப் பேரரசர்_________ இந்தியாவில் ஆங்கிலேயர் வர்த்தகம்செய்ய அனுமதி அளித்தார்.
ஜஹாங்கீர் 
5. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்_________என்பவரால்  நிறுவப்பட்டது.
கால்பர்ட் 
6. _________என்ற டென்மார்க் மன்னர் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
நான்காம் கிறிஸ்டியன் 

III. பொருத்துக.

1) டச்சுக்காரர்கள்            -  1664         1602 
2) ஆங்கிலேயர்கள்          -  1602         1600  
3) டேனியர்கள்                   -  1600         1616 
4) பிரெஞ்சுக்காரர்கள்    -  1616         1664  

IV. சரியா, தவறா எனக் குறிப்பிடுக.

1. சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.  சரி 
2. நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும். சரி 
3. ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். தவறு 
4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது. சரி 

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க.

i) 1) கவர்னர் நினோ-டி-குன்ஹா கொச்சியிலிருந்து கோவாவிற்கு போர்ச்சுக்கீசிய தலைநகரை மாற்றினார்.
2) போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
3) டச்சுக்காரர்கள் சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
4) இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ் ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ்ரோவை அனுப்பினார்.
அ) 1 மற்றும் 2 சரி
இ) 3 மட்டும் சரி
ஆ) 2 மற்றும் 4 சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி

VI. தவறான இணையைக் கண்டறிக.

அ) பிரான்சிஸ் டே                    -            டென்மார்க் 
ஆ) பெட்ரோ காப்ரல்               -            போர்ச்சுகல் 
இ) கேப்டன் ஹாக்கின்ஸ்      -            பிரிட்டன் 
ஈ) கால்பர்ட்                                  -            பிரான்ஸ் 

VII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.
1. ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறு குறிப்பு தருக.

வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
* இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுடெல்லியில் அமைந்துள்ளது.
இது கடந்தகால நிர்வாக முறைகளைப் புரிந்து கொள்ள தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இது விளங்குகிறது.

2. நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

*நாணயங்கள் நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன.
* நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி. 1862 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சியால் வெளியிடப்பட்டது.
*கி.பி. 1935ல் ரிசர்வ் வங்கி முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.

3. இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?

* போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார். எனவே அவர் "மாலுமி ஹென்றி" என அழைக்கப்படுகிறார்.

4. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

i) பழவேற்காடு
ii) சூரத்
v) பாட்னா
vi) நாகப்பட்டினம்
vii) பாலசோர்
viii) கொச்சின்

5. இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக
மையங்களைக் குறிப்பிடுக.

i) சூரத்
ii) ஆக்ரா
v) மசூலிபட்டினம்
vi) சென்னை
iii) அகமதாபாத்
vii) பம்பாய்
iv) புரோச்
viii) கல்கத்தா
ix) ஹீக்ளி
X) சால்செட்

VIII.விரிவான விடையளி.

1. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.

நவீன இந்திய ஆதாரங்கள்:
* நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக
கலாச்சார முன்னேற்றங்களைப் பற்றி அறிய உதவுகின்றன.
பொருளாதார மற்றும் /தொடக்ககாலத்திலிருந்தே ஐரோப்பியர்கள் தங்களுடைய அலுவலகச் செயல்பாடுகளை தங்களது
அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர்.
இப்பதிவுகள் இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்புமிக்க ஆதாரங்களாக உள்ளன.
எழுதப்பட்ட ஆதாரங்கள்:
* ஆவணக்காப்பகங்கள் விலைமதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகங்களாகும்.
எழுதப்பட்ட ஆதாரங்களின் மூலம் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி மக்கள் எளிதாக அறிய முடிகிறது.
பயன்பாட்டுப் பொருள் ஆதாரங்கள்:
பல ஓவியங்கள் மற்றும் சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. அவை தேசியத் தலைவர்களின் சாதனைகளையும், வரலாற்றுப் பிரமுகர்கள் பற்றிய தகவல்களையும் நமக்குத் தருகின்றன.
*அருங்காட்சியகங்கள் நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்த உதவுகின்றன.
நாணயங்கள் நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாகத் திகழ்கின்றன.
2. போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

வாஸ்கோடகாமா:
1501ல் வாஸ்கோடகாமா 20 கப்பல்களுடன் இந்தியா வந்தடைந்து கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.
பின்னர் கள்ளிக்கோட்டை மற்றும் கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையங்களை நிறுவினார்.
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா:
இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505ல் முதல் கவர்னரானார்.
இவர் இந்தியாவின் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் பின்பற்றிய கொள்கை "நீலநீர்க்கொள்கை" எனப்பட்டது.
அல்போன்சோ-டி-அல்புகர்க்:
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்புகர்க் ஆவார்.
இவர் 1510ல் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவா மற்றும் 1515ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப்பகுதியில் அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.
நினோ-டி-குன்கா:
1534ல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதி மற்றும் 1537ல் டையூவைக் கைப்பற்றினார்.
1548ல் சால்செட்டை ஆக்கிரமித்தார்.
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், சௌல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர்.

3. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

இங்கிலாந்து இராணி எலிசபெத் அனுமதியுடன் கி.பி.1600ல் ஆங்கில வணிகக் கம்பெனி நிறுவப்பட்டது.

1613ல் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியுடன் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையம் அமைக்கப்பட்டது.

சூரத் ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் தலைமையகமாக இருந்தது.
சர் தாமஸ்ரோ பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்.

சர் தாமஸ்ரோ ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்.

ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை மசூலிபட்டினத்தில் 1611ல் நிறுவினர்.

1639ல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் சந்திரகிரி மன்னரான சென்னப்ப  நாயக்கரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்குப் பெற்றார்.
அங்கு புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.

1668ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து பம்பாய் தீவை மன்னர் இரண்டாம் சார்லஸிடமிருந்து பெற்றது.

1690ல் சுதாநுதி என்ற இடத்தில் ஒரு வணிக மையம் நிறுவப்பட்டது.
1700 சுதாநுதியில் (கல்கத்தா) வலுவான வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.

1757ல் பிளாசிப்போர், 1764ல் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.


8TH ENGLISH LESSON 1 THE NOSE JEWEL - C.RAJAGOPALCHARI MIND MAP AND CONSOLIDATION





 

வெள்ளி, 6 ஜூன், 2025

எம்பிபிஎஸ் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம் இந்த ஆண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் இல்லை

தமிழகத்தில் MBBS (இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான) விண்ணப்பப் பதிவு இன்று ஜூன் 6-ஆம் தேதி தொடங்குகிறது 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்குhttps://tnmedicalselection.net என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வு மதிப்பெண்கள் இல்லாமல் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமையிடமிருந்து மாநில மருத்துவ கல்வி இயக்ககம் மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவக் கல்லூரியில் 5200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன அதில் 88 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன இதைத்தவிர சுயநதி கல்லூரிகளில் 3450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 92 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது இதில் 496 இடங்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன பிடிஎஸ் இடங்களை பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1900 இடங்களும் உள்ளன இதில் ஆயிரம் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டிலும் 11,350 மாணவ மருத்துவர்  மாணவர சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் புதிதாக இடங்கள் அதிகரிக்கப்படவில்லை எனவும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

புதன், 28 மே, 2025

பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டால் ஓய்வு கால பலன்கள் கிடைக்காது ஓய்வூதிய விதிகளை திருத்தியது மத்திய அரசு

பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்கள் கிடைக்காது என்று ஓய்வூதிய விதிமுறைகளில் திருத்தம் மத்திய அரசு செய்துள்ளது 

2021 ஆம் ஆண்டில் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) விதிமுறைகள் 2003 ஆம் ஆண்டின் டிசம்பர் 2031-ம் தேதி அல்லது அதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும்.

பொதுத்துறை நிறுவனங்களில் தவறான நடத்தைக்காக பணி நீக்கமோ அல்லது ஆட்குறைப்போ செய்யப்படும் ஊழியர்கள் தங்களது ஓய்வு கால பயன்களை பலன்களை இழக்க வேண்டி இருக்கும் இருப்பினும் அவர்களது பணி நீக்கம் அல்லது ஆட்குறைப்பு ' அவர்களது பொதுத்துறை நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது 

இதற்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டாலும் ஓய்வு கால பலன்கள் பறிபோகாது என்ற நிலை இருந்தது 

மேலும் திருத்தப்பட்ட விதிமுறைகளில் ஓய்வூதிய மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதும் நீடிப்பதும் சம்மந்தப்பட்டவரின எதிர்கால நன்னடத்தையை பொறுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது 

அதே சமயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் கருணைப்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு

2025- 2026 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று அறிவித்தது தனி நபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள், கணக்கு தணிக்கை செய்ய தேவையில்லாத நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மேற்கண்ட கால நீட்டிப்பு பொருந்தும்

ஞாயிறு, 25 மே, 2025

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

2025 - 26 ஆம் கல்வி ஆண்டிற்கான BVSC &AH ,B.TECH உணவுத் தொழில்நுட்ப பட்ட படிப்பு,கோழி  தொழில் நுட்ப படிப்பு,பால்வளத் தொழில்நுட்ப படிப்பு இளநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து இணைய வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

விண்ணப்ப பதிவுகள் தொடங்கும் நாள்: 26/5/2025 காலை 10 மணி முதல் 

விண்ணப்ப பதிவு கடைசி நாள்: 20.6.2025

இணைய வழி விண்ணப்பங்கள், தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும்  விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணையதளத்தை கிளிக் செய்யவும்


புதன், 21 மே, 2025

ITI படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2025

2025 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 50 
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் :19 5 2025

 இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்ய பதிவு செய்ய கடைசி நாள் 13 6 2025


மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

 மேலும் தொழில் பயிற்சி நிலைய சேர்க்கை காண விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர் வில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Onlineitiadmission @ gmail.com
WhatsApp number: 9499 055 642 
                                   9499 055 628 


திங்கள், 19 மே, 2025

தமிழக அரசு ஊழியர் நலன் கருதி தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் (SBI, IOB, BOB, IB, UBI, AXIS, CANARA) வழங்கும் இலவச விபத்து காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை பெற,

 உங்கள் வங்கி கணக்கு ஊதிய கணக்காக (Salary Account) குறியிடப்பட்டுள்ளதா? என சரிபார்க்கவும். மேலும் விவரங்களுக்கு: https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/cabpb - இயக்குநர் (கருவூல கணக்குத் துறை)

சனி, 17 மே, 2025

பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர பின்வரும் இணையதளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உயர் கல்வி சேர்க்கை விபரங்கள் அறிய! 

1. TNEA – Engineering Admission
துறை: தமிழக அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்கடைசி தேதி: 06.06.2025
இணையதளம்: https://www.tneaonline.org

2. TNGASA – Arts & Science Colleges Admissionதுறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்கடைசி தேதி: 27.05.2025இணையதளம்: https://www.tngasa.in

3. TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheriesதுறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்)கடைசி தேதி: 31.05.2025இணையதளம்: https://tnau.ac.in

4. Government Polytechnic Colleges Admissionதுறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்கடைசி தேதி: 06.06.2025இணையதளம்: https://tnpoly.in/

5. TNDALU – Law Colleges Admissionதுறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்கடைசி தேதி: 31.05.2025https://www.tndalu.ac.in6, 
கடைசி தேதி: 31.05.2025
https://artandculture.tn.gov.in🐟 


B.Pharm/ Paramedical/ Nursing... போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள்.

www.tnhealth.tn.gov.inwww.tnmedicalselection.net 

வேளாண், மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம்
www.tnagfi.ucanapply.com

அ) வேளாண்மைப் பல்கலைக்கழகம்
www.tnau.ac.in Last Date : 08/06/2025

ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம்
www.tnjfu.ac.in

I.T.I படிப்புகளுக்கு விண்ணப்பிக்க.
.www.skilltraining.tn.gov.in

10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.


 *ஜூலை 4 முதல் ஜூலை 10 வரை துணைத் தேர்வுகள் நடக்கும்,* 

 துணைத் தேர்வு. 
10ம் வகுப்புக்கு 
4.7.2025 - தமிழ், இதர மொழிப் பாடங்கள், 
5.7.2025 விருப்ப மொழிப் பாடத் தேர்வு நடக்கிறது.
7.7.2025 ஆங்கிலம், 
8.7.2025 கணக்கு
9.7.2025 அறிவியல் 
10.7.2025 சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.

வெள்ளி, 16 மே, 2025

தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கடைசி நாள் 27. 5 .2025

தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏழாம் தேதி தொடங்கியது. 
176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது 
அதன்படி விண்ணப்ப பதிவு தொடங்கியதிலிருந்து மாணவ மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர் இதுவரை ஒரு லட்சத்து 21,19 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27ஆம் தேதி ஆகும் 
விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்.


வியாழன், 15 மே, 2025

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு வெளியீடு


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை 
இணையதளம் 
மொபைல் செயலி மற்றும் 
எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தங்கள் மொபைலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள Mobile App &Result Link clik செய்து  மாணவர்கள்  தங்களுடைய பதிவெண் மற்றும்  பிறந்த தேதி  ஆகியவற்றை  பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி சார்பில்  இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக(SMS) அனுப்பப்படும்.
             
  



Mobile App Link



💐💐💐

கல்லூரிகளில் சேர தமிழ்நாடு அரசின் 7.5 % இட ஒதுக்கீடு யார் யாருக்கெல்லாம் பொருந்தும்? என்பது குறித்த தெளிவான விளக்கம்


விளக்கம் 1 

7.5 % இட ஒதுக்கீட்டில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்

விளக்கம் 2

 தனியார் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்(RTE) இட ஒதுக்கீட்டின்படி படித்த குழந்தைகள் 9 ,10, 11, 12 வகுப்புகள் அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்திருக்க வேண்டும். அவ்வாறு படித்தவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு உண்டு.

விளக்கம் 3

அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த குழந்தைகளுக்கு 7.5 % இட ஒதுக்கீடு உண்டு.

விளக்கம் 4

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு பொருந்தாது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை எந்த ஒரு வகுப்பில் சேர்ந்து மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்ந்தாலும் 7.5% இட ஒதுக்கீடு இல்லை. 6 முதல் 12 வரை அனைத்து வகுப்புகளிலும்  அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
நன்றி: தினமணி 

ஞாயிறு, 11 மே, 2025

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் சென்னை.ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான(B.A.LL.B) மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் 12.5.2025 விண்ணப்பிக்க கடைசி நாள் 31.5.2025

மூன்றாண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் 


For more details: